களவல்ல மற்றைய தேற்றா தவர்

இராமாயணம் படிச்சுருப்பிங்க, அது ஒரு அருமையான வடமொழி காவியம். ஆமா அதை அப்படித்தான் பாக்கனும். நம்மளோடதுன்னு ஏத்துக்க முடியலை. மகாபாரதத்தை கூட ஒரு லிஸ்ட்ல வைக்கலாம். இராமாயணத்தை வைக்க முடியலை. ஏன் தெரியுமா? அதுலதான் விந்திய மலைக்கு மேல மனிதர்கள் வாழ்ந்ததாகவும் அவங்களுக்கு கடவுள்களே பிள்ளைகளாய் பிறந்ததாகவும், விந்திய மலைக்கு கீழ தெற்கு கடற்கரை வரை குரங்குக் கூட்டம் வாழ்ந்ததாகவும், அதுக்கும் கீழ போனா அசுரர்கள் வாழ்ந்ததாகவும் சொல்லப்பட்டுருக்கு.

வேத நாகரீகத்தை பின்பற்றினவங்களுக்கு இருந்த சோம்பானம், சுரா பான குடி பழக்கத்தை வச்சு குடிக்கறவங்க சுரர்கள்னும் அதை குடிக்காத மண்ணின் மைந்தர்களை அவங்க அசுரர்கள்னும் சொல்லப்பட்ட விசயத்துக்கு இப்ப வரலை. இப்போதைய கேள்வி மகாராஷ்ட்ரால இருந்து கீழ இருக்கவன் மூஞ்சுலாம் குரங்கு மாதிரி இருக்குன்னு சொன்னதோட, அவங்களுக்கு வால் இருக்குன்னு அசிங்கப்படுத்தி வச்சுருக்கறத எப்படிப்பா புனிதமா பார்க்க முடியும்?

இதே புனிதப்படுத்தாம கொடுத்தா ஆகா நல்ல காவியம்னு படிச்சுக்கலாம். விதவிதமான கதாபாத்திரங்கள் இருக்கற சுவாரசியமான கதைக்களமாச்சே. எதையோ சொல்ல வந்து எங்கெங்கேயோ போயிட்டேன்.

இராமாயணத்துல தவம் செய்து சிவனிடம் வரம் வாங்கி தேவலோகத்தை ஜெயிச்சுட்டு நவகிரகங்களையும் படிகட்டாக்கி இராவணன் அது மேல கெத்தா ஏறி இறங்கிட்டு இருப்பாரு. நாரதர் என்ன பன்னுவாரு? சனி பகவான் பார்வை படற மாதிரி எல்லாரையும் மல்லாக்க போட்டு மிதிக்க ஐடியா கொடுப்பாரு. அப்படி பன்றப்ப சனியோட பார்வை படும். அப்பதான் இராமர் பிறக்கறதா காட்டுவாங்க. ஒரு நல்ல ஹீரோ இன்ட்ரோக்கான சீன்தான் இது.

ஒரு கெட்டவனை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வளர்ந்து நிக்கறப்ப வழக்கமான எந்த முறைகள்லயும் அவனை தடுக்க முடியலைங்கற சூழ்நிலைல செய்ய வேண்டியது அவனை அவன் போக்குலயே தப்பு பண்ண விடனும். இனி நம்மை யாராலயும் எதுவும் பண்ண முடியாதுங்கற கர்வத்துல அவனுக்கு அவனே ஆப்படிச்சுக்குவான்.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லைன்னு சொன்னவங்க, வாயைக் கட்டி இருந்தாலே இன்னும் கொஞ்ச வருசம் நல்லபடியா இருந்துருப்பாங்கன்னு தான் கேள்விப்பட்டேன்.

தனக்குத்தானே ஆப்படிச்சுக்கிட்டு விசயத்துக்கு சரித்திரத்துல எவ்வளவோ உதாரணங்கள் இருக்கு. பிரிட்டன் உலகத்துல எல்லா நாட்டுலயும் தன்னோட ஏகாதிபத்தியத்தை பரிப்பிருச்சு. வெறும் 24 நாடு மட்டும்தான் பிரிட்டனுக்கு கீழ இல்லை. ஆனா தோற்கடிக்கவே முடியாதுன்னு இருந்த பிரிட்டனை முதல்ல தோற்கடிச்ச அமெரிக்கா யாரு? பிரிட்டன்ல இருந்து போய் குடியேறுனவங்கதானே? சொந்த மக்கள்கிட்டயே ஏகப்பட்ட வரி போட்டா வேற என்ன நடக்கும்?

நம்ம பங்காளி பாகிஸ்தான்? அழகா கிழக்கு பாகிஷ்தான்கிட்ட வரி வருவாய் வாங்கிட்டு சமர்த்தா இருந்தருக்கலாம். உருதுவ திணிக்கறதுல ஆரம்பிச்சது. தன்னோட சொந்த நாட்டுலயே திமிரைக் காட்டறது, அது வங்கதேசத்தை உருவாக்கறதுல போய் முடிஞ்சது.

இரஷ்யா உடைஞ்சத பத்தி பேசுனா பெரிய கதையா போகும்.இப்படி வேற யாராலயும் என்னை எதுவும் செய்ய முடியாதுங்கற உச்சத்தை அடைஞ்சவங்க கொஞ்ச நாள்ல தடுமாறி விழுந்து மண்ணுக்குள்ள போறதுக்கும் அவங்களேதான் காரணமா இருக்காங்க.

அதெப்படி ஒருத்தன் தனக்குத்தானே கெடுதல் பண்ணிக்குவான்னு கேள்வி வரலாம். நீ வருவாய் என படத்துல கஸ்டமர்ஸ் யாரும் இல்லைன்னு தன்னோட துணிய தானே ஒருத்தர் இஸ்திரி போட்டுட்டு இருப்பாரே, அது மாதிரிதான் இனி கெடுதல் பன்றதுக்கு யாருமே இல்லைங்கற அளவுக்கு எல்லா எதிரியவும் ஒழிச்சு கட்டுனவங்க அடுத்து தன்னைத்தானே ஒழிச்சுக் கட்டிப்பாங்க.

ஏன்னா அவங்களுக்கு வேற எதுவும் தெரியாது. அவங்களையே அறியாமல் தன்னோட நிலைய கெடுத்துப்பாங்க. இப்ப கள்ளத்தனம் பன்றதுக்கான அதோட அடிப்படை குணமே வஞ்சம்தான்னு போன குறள்ல பார்த்தோம்.

வஞ்சம்னாவே தன்னை சுற்றி இருக்கவங்க யாரும் தன்னை மீறி நல்லா இருக்க கூடாதுன்னு நினைக்கற எண்ணம்தான். அவங்க பொருளை திருட சொல்லும். அவங்க வாழ்க்கைல ஏதாவது கெடுதல் பண்ண சொல்லும்.

இப்படி களவுல மட்டுமே இருந்து பழகுனவனால எல்லார்கிட்டயும் திருடி முடிச்ச பிறகு, அதை விட்டுட்டு வேற வேலைக்கு போய் வாழ்ந்துட முடியுமா?

முடியவே முடியாது. அவன் திருடிட்டு வந்த பொருள்கள், அது மூலமாக சம்பாதிச்ச பணம்னு அவங்கிட்ட இருக்க வரைக்குமே அவனால திருட்டை தவிர்த்து வேற எதுவும் யோசிக்க முடியாது. அது மட்டுமில்லாம இப்படிப்பட்டவங்க வழக்கத்தை விட எந்த கட்டுப்பாடும் இல்லாத செயல்களா செஞ்சு தானே அழிஞ்சுருவாங்கறார் வள்ளுவர்

அதிகாரம்:கள்ளாமை குறள் எண்:289
அளவல்ல செய்துஆங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்

உரை:
களவு செய்தல் தவிர மற்ற நல்லவழிகளை நம்பித் தெளியாதவர், அளவு அல்லாத செயல்களைச் செய்து அப்போதே கெட்டழிவர்.