நீயிருக்கும் நெஞ்சமிது – குறள் கதை

முந்தைய பாகம்:-

“எனக்கு விருப்பமே இல்லை, ஏன் நான் இங்கே இருந்தா என்ன?”

“எனக்கு நீ இருக்கறது பிரச்சனைன்னா உன்னை கொண்டு போய் உங்க வீட்ல விடறேன், எல்லோரும் பேசறதை நீயும் தானே கேட்டுட்டு இருந்த?”

“ம் போடா, யாருமே என் பேச்சை கேட்க மாட்டேங்கறிங்க?”

“லூசு, நீதான் இங்க இருக்கறதலயே சின்னவ, நாங்க உன் பேச்சை கேட்கனுமா?”

“…..”

முகத்தை தூக்கி வைத்துக் கொண்ட மதுவினை என்ன சொல்லி சமாதான படுத்துவது என்று மகேசிற்கு தெரியவில்லை. சாதாரணாமாகவே அவளை காயப்படுத்தும்படி எதையும் பேசவோ, செய்ய மாட்டான். எவ்வளவு ஏங்கி பிரிந்து தவித்த பின் மிகவும் சுலபமாக நடந்த திருமணத்தின் மூலம் கிடைத்தவள். மனம் விரும்பிய காதலியே மனைவியை வரும் பாக்கியம் இங்கு அனைவருக்குமா கிடைக்கிறது? அத்துடன் வரும் போது அவள் மட்டும் தனியாகவா வந்தாள்? அத்தனை அதிர்ஷ்டத்தையும் அழைத்துக் கொண்டல்லவா வந்தாள். Continue reading “நீயிருக்கும் நெஞ்சமிது – குறள் கதை”

கூடிப் பிரிகையில் வாழ்ந்து இறக்கிறேன் – குறள்கதை

“சும்மா சும்மா முத்தம் கொடுக்காதடா”

“ஏன்டி, பிடிக்கலையா?”

“பிடிக்காமலா இப்படி வந்து பேசிட்டுருக்கேன்? நீ கடிக்கற மாடு “

“அப்புறம்?”

“நீ இதுக்கா என்னை வரச்சொன்ன? ஏதோ பேசனும் வான்னு சொல்லி கூப்ட்டு என்ன வேலை பார்க்கற நீ?”

“ம், ஒரு காரணமாதான் வர சொன்னேன், அதுக்குன்னு என் ரூம்க்கு வரவளை ஒன்னும் பன்னாம இருக்க முடியுமா?”

“ஏன் நான் இதுக்கு முன்ன வந்தது இல்லையா?”

“அப்ப வெறும் ஃப்ரெண்டா வந்த, இப்ப என் லவ்வர். ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறோம். கல்யாணத்துக்கு முன்ன என் ரூம்ல உன்ன ஒன்னுமே செஞ்சதில்லைன்னு சொன்னா வரலாறு என்னை துப்பாதா?”

“டேய் காஞ்சமாடு, வழியாத, என்ன விசயம்ன்னு சொல்லு?”

“சும்மாதான். லீவ்தானே, என் லைஃப் ஹிஸ்டரியை உன் கூட ஷேர் பண்ணிக்கலாம்னுதான். இதோ என்னோட சின்னவயசு ஆல்பம்ல இருந்து எல்லாத்தையும் வரிசையா எடுத்து வச்சுருக்கேன். ஒவ்வொன்னா காட்டலாம்னுதான்”

“ஏன்டா, எத்தனை நாள் இங்கே வந்துருக்கேன்? ஏன்டா முன்னமே காட்டலை?”

“சில விசயங்கள் வரப்போறவளுக்காகன்னு சேர்த்து வச்சுருப்போம் இல்லையா? இது அது மாதிரி” Continue reading “கூடிப் பிரிகையில் வாழ்ந்து இறக்கிறேன் – குறள்கதை”

ஃப்ரெஞ்ச் முத்தமும் வள்ளுவரின் காமத்துப்பாலும் – குறள்கதை

“முத்தம் கொடுப்பது எப்படி?” என்று சொல்லித்தர ஏதேனும் புத்தகம் உள்ளதா? எனக்கு இப்போது அவசியம் தேவை. என்ன விலை சொன்னாலும் வாங்க தயாராய் இருக்கிறேன். உடனடியாக சொல்லித்தர எனக்கு யாருமில்லை. முன் அனுபவமும் இல்லை. அதிர்ஷ்டவசமாக இன்று வாய்ப்பு அமைந்துள்ளது. சொதப்பிவிடுவோமோ என்று பயமும் இருக்கிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. இப்படியெல்லாம் தர்மசங்கடம் வருமென்று தெரிந்திருந்தால் முன் அனுபவமுள்ள நண்பர்களிடம் கேட்டு வைத்திருந்திருப்பேன்.

நான் காதலிக்கும் விஷயமே யாருக்கும் தெரியாது. என்னை பற்றி சொல்வதற்கு பெரிதாய் ஒன்றுமில்லை. ஒவ்வொரு நண்பர்கள் கூட்டத்திலும் என்னைப்போல் ஒருவனை நீங்கள் பார்க்கலாம். மிகவும் நல்லவனாக, அதுக்கு சரிபட்டு வரமாட்டான் என ஒதுக்கி வைப்பவனாக இருந்து, திடிரென மற்றவர்கள் பொறாமை படும்படியான பெண்ணை கவர்ந்து, பலரின் வயித்தெரிச்சலுக்கு ஆளாகுபவர்களில் நானும் ஒருவன். Continue reading “ஃப்ரெஞ்ச் முத்தமும் வள்ளுவரின் காமத்துப்பாலும் – குறள்கதை”

பல்வால்தேவனின் காதல் – இது பாகுபலி விமர்சனம் அல்ல

இந்த நூற்றாண்டின் தவிர்க்க முடியாத இந்திய சினிமாவாக பாகுபலி இடம் பிடித்தாகி விட்டது. யாரும் மறுக்க முடியாது. படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. பாகுபலியும் பல்வால்தேவனும் இயற்பியல் விதிகளை மீறும் வல்லமை படைத்தவர்கள் என்று முதல் பாகத்திலேயே தெரிந்து விட்டதால் அதை பற்றி பேசுவதும் வீண். திரைக்கதையில் எங்கெங்கே ஓட்டைகள் இருக்கிறது என்று கருந்தேளார் நன்கு அலசி விட்டார். நான் பேச விரும்புவது படத்தில் சரியாக சொல்லப்படாத விசயங்களை. “தாண்டவராயன் கதை” படித்ததில் இருந்து எனக்கு இப்படி ஆகிவிட்டது. புத்தகமோ, சினிமாவோ சொல்லப்பட்டதை விட சொல்லப்படாததில் தான் கதை இருக்கிறது என ஆழமாக நம்ப துவங்கி விட்டேன்.

பாகுபலி படத்திற்கு கதை விஜேயேந்திர பிரசாத். ராஜ்மவுலியின் தந்தை. சிறந்த கதை எழுத்தாளர். ஆனால் அது அனைத்தும் அவரது சொந்த சரக்காகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அதை அவரே சொல்லி இருக்கிறார். இவர் எழுதிய கதைதான் “பஜ்ரங் பாய்ஜான்”. சல்மான்கான் நடிப்பில் பெரிதாக வசூலித்த படம். அப்படத்தின் மூலக்கதை பாசில் இயக்கிய “பூவிழி வாசலிலே” படத்திலிருந்து எடுத்ததாக அவரே நாளிதழ் ஒன்றில் கூறியிருக்கிறார். அதே போல் மகாபாரதத்தில் சில பாத்திரங்களை எடுத்து, பெண்களுக்கு அதிகாரம் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்து எழுதியதுதான் பாகுபலி. இதோடு விஜேயேந்திர பிரசாத்திற்கு வேலை முடிந்தது. Continue reading “பல்வால்தேவனின் காதல் – இது பாகுபலி விமர்சனம் அல்ல”

எங்கிருந்தோ வந்த காதல் – 4

#கதையல்ல_என்_கதையுமல்ல

#எங்கிருந்தோ_வந்த_காதல்

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம்

ஒரு உண்மையை சொல்கிறேன். 4 பேர் சுற்றி வளைத்து தாக்கினால் அந்த நால்வரையும் வீழ்த்தும் அளவிற்கு நான் பலசாலி இல்லை தான். ஆனால் அந்த நால்வரில் ஒருவனைக் கூட வீழ்த்தாமல் ஓடுமளவிற்கு நான் கோழையும் அல்ல. எதற்காக இதை சொல்கிறேன் என்றால் என்னடா இவன் தலையில் அடிவாங்கியதை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் இயல்பாக அந்த வீட்டினுள் நுழைகிறானே என நீங்கள் நினைக்க கூடும். அதற்காகத் தான்.

நான் மீண்டும் அந்த வீட்டினுள் இயல்பாய் நுழைந்ததற்கான காரணத்தை நீங்கள் எளிதாய் யூகித்திருக்கலாம். முடியவில்லையா? முதல் அத்தியாயத்தில் கூறிய எனது அருமை பெருமைகளை மீண்டுமொருமுறை வாசிக்கவும். ஆம். எனக்கு அவளை பிடித்திருந்தது. பார்த்ததுமா? என்று வியக்க வேண்டாம். ஏனெனில் எனக்கு இது வழக்காமான ஒன்றுதான். பல நேரங்களில் என்னுடன் பேருந்தில் பயணிக்கும் பெண்களை நினைத்து அவர்கள் இறங்கி சென்ற பின்னரும் கனவு கண்டிருப்பேன். இப்படி ஒரு அழகியை விதி என் வாழ்க்கையில் கொண்டு வந்திருக்கும் பொழுது கண்டும் காணாமல் போக நான் என்ன முட்டாளா? குறைந்தது அவள் பெயரினை கூட தெரிந்து கொள்ளாமல் சென்றால் நிம்மதியாக உறங்க முடியுமா என்ன? Continue reading “எங்கிருந்தோ வந்த காதல் – 4”

எங்கிருந்தோ வந்த காதல் – 3

#கதையல்ல_என்_கதையுமல்ல

#எங்கிருந்தோ_வந்த_காதல்

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

வெறுமனே பெண்ணை பின்தொடர்ந்ததற்காகவா அடிக்கிறார்கள்? மோசமான ஆட்களாக இருக்கிறார்கள். முதலில் இங்கிருந்து கிளம்புவோம். வீட்டை பார்த்து வைத்துக் கொண்டு கிளம்புகையில் ஒருவன் வந்து உள்ளே இழுத்துப் போனான். சரி என்னதான் செய்து விடுவார்கள்? பார்த்து விடுவோம். நானும் அடித்தவன் முகத்தை பார்க்காமல் விட்டு விட்டேன். யார் அவன் என்று பார்த்து வைத்துக் கொள்ள வேண்டும். இது வரை நான் வாங்கியது ஒரு அடி, முன்தலையில். கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும். திருப்பிக் கொடுக்க… Continue reading “எங்கிருந்தோ வந்த காதல் – 3”

எங்கிருந்தோ வந்த காதல் – 2

#கதையல்ல_என்_கதையுமல்ல

#எங்கிருந்தோ_வந்த_காதல்

முதல் பாகம்

பேருந்து கிளம்பியது, அவ்வளவுதான். எல்லாம் முடிந்துவிட்டது. என்ன நடக்க போகிறது என்று நினைத்தாலே அடிவயிறு கலங்குவதை உணர முடிகிறது. ஒரு வகையில் பார்த்தால் எனக்கு இது தேவைதான். செய்தது தவறு தான் என் மனம் ஒப்புக் கொண்டாலும் அதற்கு கிடைக்க போகும் தண்டனையை தயங்காமல் ஏற்கும் நெஞ்சுரம் எனக்கு இல்லையே, என்ன செய்வேன்?

நான்தான் சுதாரிப்பாய் இருந்திருக்க வேண்டும். ஆண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? அவர்களுக்கு ஒரு விஷயம் தேவையெனும் பொழுது குறிப்பாய் பெண்கள் விஷயத்தில் எப்படி வேண்டுமானாலும் காய் நகர்த்துகிறார்கள். இதெல்லாம் தெரிந்தும் எப்படி ஏமாந்தேன்? சுஜாவை நம்பியிருக்க கூடாது. எப்படி நம்பினேன்? நம்பவில்லை. கிட்டத்தட்ட தெரிந்தே ஏமாந்தேன், அவள் பிறந்த நாள் என்பதால்… Continue reading “எங்கிருந்தோ வந்த காதல் – 2”

எங்கிருந்தோ வந்த காதல்

#கதையல்ல_என்_கதையுமல்ல

#இரண்டாம்கதை

காதலர்களிடம் எப்போதும் இரண்டு கேள்விகள் கேட்கப்படும்.

1. உங்களில் யார் முதலில் காதலை சொன்னது?

2. அவரை/ளை முதல்தடவை எங்கே பார்த்தீர்கள்?

பெரும்பாலான சமயங்களில் ஆண்களே முதலில் காதலை சொல்வதால் முதல் கேள்வியை விட்டு இரண்டாவதிற்கு வருவோம். காதலிப்பவர்/காதலித்தவர் யாரேனும் இதனை வாசித்துக் கொண்டிருந்தால் ஒரு நொடி உங்கள் துணையை முதலில் எங்கே பார்த்தீர்கள் என்று யோசித்து பாருங்கள். Continue reading “எங்கிருந்தோ வந்த காதல்”

அழகாய் பூத்ததே – 3

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

கையில் எடுத்த சிகரெட்டை அவளை நினைத்தவாறும் புன்னகைத்தவாறும் தூக்கி எறிந்தேன். அடுத்த நொடி அவளிடமிருந்து அழைப்பு வந்தது. பேச துவங்கினோம். மற்றவர்களிடம் சொல்லாத பல ரகசியங்களை பகிர்ந்து கொண்டோம். அடுத்த வந்த நாட்களில் நண்பர்களிடம் எங்கள் காதலை தெரிவித்தோம்.

எங்கள் குழுவில் பெரிதாய் எதுவும் மாறவில்லை. முன்பு போல்தான். மாறிய விஷயங்களென்றால் கொஞ்சம்தான். படத்திற்கு செல்கையில் அருகருகே அமர்ந்தோம். அவள் வராத போது மட்டும் சிவா என் வண்டியில் என்னுடன் பயணித்தான். எனக்கென சில நாட்கள் சமைத்து வருவாள். நான் அவளுக்கென்று பல ஆச்சர்யங்களையும் பரிசுகளையும் கொடுத்து கொண்டிருந்தேன். உதாரணத்திற்கு இரவு 2 மணிக்கு அவளை அழைத்துக்கொண்டு ஏற்காடு மலையேறி, விடிவதற்குள் வீட்டில் கொண்டு வந்து விட்டுவிடுவதை போல். Continue reading “அழகாய் பூத்ததே – 3”

அழகாய் பூத்ததே 2

முந்தைய பகுதி

“எங்கே போறோம்?” என்று கேட்பாள் என எதிர்பார்த்தேன். எதுவும் பேசாமல் வந்தாள். மிதமான வேகத்தில் அவளுடன் பறந்து சென்றேன்.

ஏற்காட்டில் பாதி மலையில் மூங்கில் தோட்டம் இருக்கிறது. அங்கு நிறுத்தினேன். இறங்கினாள். வண்டியை ஓரமாக நிறுத்தினேன். இறங்கி அங்கிருந்த திட்டில் அமர்ந்தேன். என்னருகே வந்து நின்றாள். நிமிர்ந்து பார்த்தேன். கைகளை கட்டிக் கொண்டு என்னையே பார்த்தாள்.

உண்மையில் எனக்குத்தான் கூச்சமாய் இருந்தது. சமாளித்து பாக்கெட்டில் இருந்து சிகரெட்டை எடுத்தேன். பார்த்தாள். என் உதட்டருகே கொண்டு சென்றேன். முறைத்தாள். அப்படியே என் தலையை சுற்றி பள்ளத்தில் எறிந்தேன். உதடுகளில் சிரித்தாள். என்னருகே அமர்ந்தாள். Continue reading “அழகாய் பூத்ததே 2”