புலித்தோல் போர்த்திய பசு – குறளுரை

“வேங்கை” படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி வரும். கஞ்சா கருப்பு ஒரு பக்கம் விரைப்பாக நின்றுக் கொண்டு வீராப்பாக பேசிக் கொண்டு இருப்பார். காட்சி இறுதியில் தனுஷ் கேட்பார் “நீ உண்மையிலேயே வீரமா நிக்கறியா? இல்லை மோஷன் போய்ட்டு மூவ் பண்ண முடியாம நிக்கறியா?”

சில நாட்களுக்கு முன்பு இந்தியா, சீனா விவகாரத்தில் காக்கும் அமைதி, விடுக்கும் எச்சரிக்கைகளை பார்க்கையில் இந்த காட்சிதான் நினைவுக்கு வந்தது. பாகிஷ்தான் எல்லை மீறும் போது காட்டும் வீரம், சீனாவிடம் குறைவது போல் தெரியவில்லையா? உண்மைதான். உலகத்தில் பாதி நாடுகள் பயப்படும் அளவிற்கு வளர்ந்த நாடு மீது எடுக்கும் நடவடிக்கையை யோசிக்காமல் எடுக்க முடியாது தான். Continue reading “புலித்தோல் போர்த்திய பசு – குறளுரை”

உத்தம வில்லன் – கமல் படம்

என்னதான் ரஜினிகாந்த் மாதிரி ஒரு வட்டத்துக்குள்ள சிக்கலைன்னாலும் கமல் படம்னா இப்படித்தான் இருக்கும்னு சொல்ல சில க்ளிஷே கண்டிப்பா கமல் படத்துல இருக்கும், அதை யாராலயும் மறுக்க முடியாது, அதுல குறிப்பிட்டு சொல்லக் கூடிய விஷயம்னா அவரை புகழ் பாடும் காட்சிகளை செயற்கையாக திணித்தல், அதை யாரும் மறுக்கவில்லை, முன்பே அத்தகைய காட்சிகளை காண தயாராகி விட்டால் உங்களை வேறு எந்த விதத்திலும் படம் ஏமாற்றாது. அத்தகைய காட்சிகள் உங்களை எரிச்சலூட்டும் என்றால் வேண்டாம், உத்தம வில்லனை பார்க்காதீர்கள்.

மனோரஞ்சன் – நட்சத்திர அந்தஸ்தினை பெற்று உச்சத்தில் நிற்கும் நடிகன், உச்ச நடிகன் என்றாலே கடவுள் ஸ்தானத்தில் வைத்து பூஜை செய்வது பெரும் முட்டாள்தனம், அவர்களுக்கும் கெட்ட பழக்கங்கள் இருக்கும், அவர்கள் முறைகேடான உறவுகள் வைத்திருப்பதை விமர்சனம் செய்யும் உரிமை வெறும் 120ரூபாய் கொடுத்து படம் பார்ப்பதால் நமக்கு வந்து விடாது, அவர்களின் படைப்பினை மட்டும் எங்ஙனம் வேண்டுமேனாலும் விமர்சிக்கலாம். அதை குறிப்புணர்த்துவதர்கென்றே குடிப்பழக்கம் உள்ளவராகவும், கள்ள தொடர்பு உள்ளவராகவும் நடித்திருக்கிறார், ஏன் முழுக்க நல்லவன் வேடமிட்டு தாய் சொல்லை கேட்டு நடக்கும் வேடத்தை ஏற்று ஏமாற்றவும் கமலால் இயலும், நடிகர்களும் இப்படித்தான் இருப்பார்கள் என வெளிப்படையாக சொல்கிறார்.

விடாமல் ஓடி ஓடி நடித்து கொண்டிருக்கும் நடிகர் மனோ ரஞ்சனுக்கு சடன் பிரேக்காய் குறுக்கே வருகிறது மூளைக்கட்டி, அதன் பின் அவருக்கு இருக்கும் குறுகிய வாழ்நாளில் மக்கள் மனதில் நீங்காமல் இடம் பிடிக்க தனது குருநாதருடன் இணைந்து நகைச்சுவையாய் படம் எடுக்க முடிவெடுக்கிறார். அதாவது நிஜத்தில் சாவுடன் போராடிக் கொண்டே குடும்பம், முன்னாள் காதலி, அவளுக்கு பிறந்த மகள், கள்ளக்காதலி எல்லோருடனும் சமமாய் நேரத்தை செலவழித்து, கடைசி படத்திலும் மக்களை சிரிக்க வைக்க நடிக்கிறார்.

கமல் படத்தில் எந்த பக்கமிருந்து பார்த்தாலும் கமல் மட்டும் தான் தெரிவார், இந்த படத்தில் அப்படி இல்லை, மற்றவர்களின் திறமைகளும் வெளிப்படுகின்றன. முக்கியமாய் இயக்குனர் சிகரம் பாலச்சந்தரின் நடிப்பு திறமை, தனது சிஷ்யனுக்கு சாவு நெருங்குவதை முதலில் தெரிந்ததும் முழுதாய் நமப முடியாமல் “டேய், இந்த மாதிரிலாம் விளையாடாத சொல்லிட்டேன்”னு ஒரு படபடப்புடன் சொல்லும் போது அந்த குரலிலும் நடிப்பிலும் நாகேஷ் தெரிந்தார். அடுத்து M.S.பாஸ்கர், இவரது நடிப்பை மொழிப் படத்திலேயே அனைவரும் அறிவர், சரியான பாத்திரம், இன்னமும் இவரது திறமைக்கேற்ற படம் அமையவில்லை என்றுதான் சொல்வேன்.

நாசர்,ஊர்வசி,ஜெயராமுக்கெல்லாம் தனியாய் சொல்ல தேவையில்லை, அவர்களது பாத்திரத்தை சரியாகவே செய்துள்ளனர். ஆன்ட்ரியாக்குள்ளும் திறமை இருக்கத்தான் செய்கிறது, அதிலும் ஊர்வசி “எங்கே இன்னொரு அழகான பொண்ணு வந்து இவரை கொத்திகிட்டு போயிடுவாளானு எனக்கு பயமா இருக்கும்”னு சொல்லும் போது கமலை ஒரு பார்வை பார்ப்பாங்க பாருங்க, அம்சமா இருக்கும்.

பூஜாக்கு வயசு நாற்பதுன்னு சொன்னா நம்பறது கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு, உடல்கட்டை ரொம்ப கட்டுகோப்பா வச்சுருக்காங்க, முகம் ஒன்னும் அவ்வளவு முதிர்ச்சி அடைஞ்ச மாதிரி தெரியலை, காரணம் கூட வர கமல் முகத்தில் தெரியும் முதிர்ச்சி. 60 வயசு நாயகன், 20 வயசு பொண்ணு கூட டூயட் பாடுனாலும் திட்டுறிங்க, 40 வய்சு பொண்ணு கூட நடிச்சாலும் திட்டுனா என்னப்பா அர்த்தம்?

படத்துக்குள்ள எடுக்கப்படற படத்துல வர காமெடி அவ்வளவு ஒன்னும் சிறப்பா இல்லைன்னு சொல்றாங்க, எனக்கு அவ்வளவு ஒன்னும் மோசம் இல்லைன்னு தான் சொல்லத் தோணுது, எப்பவுமே படத்துக்குள்ள எடுக்கப்படற படத்தோட கதையா கொஞ்சம் மொக்கையானதா தான் சொல்லுவாங்க, உதாரணத்துக்கு கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம் படத்துல ஆர்யா,அமலா பால் வச்சு சொல்ல படற கதைய பாருங்க, என்ன அவ்வளவு நல்லாவா இருக்கு?

இந்த படத்தை பார்க்கும் போது எனக்கு கிங் படம் ஞாபகம் வந்தது. விகரமுக்கு ஆயுள் குறைவுன்னு தெரிஞ்சதும் கடைசி காலத்தை மகிழ்ச்சியா கழிக்க நாசர் தனக்குத்தான் அந்த வியாதின்னு சொல்லி, தன்னை மகிழ்ச்சியா வச்சுக்க பண்ற முயற்சில விக்ரம் மகிழ்ச்சியா இருப்பார்னு பொய் சொல்லுவார். அதே மாதிரி தன்னோட குருநாதரோட கடைசி படமா, அந்த “கடைசி”ங்கறத மையமா வச்சு எழுதப்பட்ட கதைல அவரையே நடிக்க வச்சது எதெச்சையோ,திட்டமிட்டதோ பெரிய விசயம் தான்.

இசை ஜிப்ரான், பின்னனி இசை நல்லா பண்ணிருக்கார். அந்த “பக்கும் பக பக” முதல்லை ஈர்க்கலை, ஆனா கடைசியா நிழல் உருவத்துல கமலுக்கு அவரோட மரணம் தெரியறப்ப வரும் பாருங்க அந்த “பக்கும் பக பக” செமயா இருக்கும். “உங்களுக்கு ஏன் இப்படி?”ன்னு கேட்கறப்ப “எனக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் வரும்”னு கமல் சொல்லும் போது “நம்மவர்” தெரிஞ்சார்.

நான் படத்துக்கு போலாம்னு தியேட்டருக்குள்ள போகும் போது, உள்ள இருந்து வெளியே வந்த பசங்க “போகாதிங்க, போகாதிங்க”னு சொன்னாங்க. ஏற்கனவே படத்தை பத்தி நிறைய பேர் மோசமாதான் சொல்றாங்கனு பயந்துகிட்டே தான் போனேன், படம் ஹவுஸ்ஃபுல். முடியும் போது பாதி பேர் எழுந்து நின்னு கை தட்டுனாங்க. என்ன சொல்ல வர்ரன்னா படம் எனக்கு பிடிச்சுருக்கு, இன்னொரு முறை பார்க்கற வாய்ப்பு வந்தா கண்டிப்பா பார்ப்பேன்.