யாமிருக்க பயமே – Tamil Horror Comedy Film

அன்பர்களுக்கு வணக்கம், தமிழில் முதல் முறையாக வந்திருக்கும் Horror-Comedy படம், தமிழ் சினிமாவில் புதிய வகை படங்களை ரசிப்பவர்களுக்கு கண்டிப்பாக இப்படம் பிடிக்கும். படத்திற்குள் செல்வோம். 
 
கிருஷ்னா, ரூபா மஞ்சரி காதலர்கள் என்று சொல்லிக் கொண்டு திரிபவர்கள், ஊர் முழுக்க ஏமாற்றிவிட்டு தன் தந்தையிடம் இருந்து வந்திருக்கும் பாரம்பரிய சொத்தை பார்க்க கிளம்பி சென்றவர்களுக்கு பாழடைந்த பங்களா பலத்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
ஆனால் ஊர் முழுக்க கடன்காரர்கள் தொல்லை, தப்பிக்க வேறு வழியில்லாமல் பெரிதாக ஏமாற்றி கிடைக்கும் பணத்தை வைத்து அந்த பங்களாவை சீராக்குகிறார்கள்.
இதற்கு உதவியாய் கருனாகரன் (அருமை நாயகம்-சூது கவ்வும்), அவனது தங்கை ஓவியா, எல்லாரும் சேர்ந்து குளுகுளு ரெஸ்டாரண்ட்டினை ஆரம்பிக்கிறார்கள், அதன்பின் தான் திகில் ஆரம்பிக்கிறது, அங்கே தங்க வருகின்ற ஒவ்வொருவராய் இறக்கிறார்கள்.
எதற்காக இறக்கிறார்கள் என்று எல்லோருக்கும் குழப்பம், எல்லோரும் சரத்(கருனாகரன்) தினை சந்தேகிக்கின்றனர், அதற்கேற்றார் போல் எல்லோரும் சரத்தை பார்த்தவுடன் சொல்வது “உன்னை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?”, சரத் கண்ணாடியை பார்க்க பயப்படுவது, சரத் சொல்வது எல்லாம் நடப்பது போன்ற பல விஷயங்கள்
 
எதற்கும் சோதித்து பார்ப்போம் என்று ஓவியாவே தங்க வந்தவர்களை போல் வந்து சோதித்து பார்க்கையில் அவர் இறப்பதில்லை, ஆனால் அந்த நேரத்தில் தான் உண்மையான பேய் வருகிறது.
முதல் பாதி கொஞ்சம் இழுத்தாலும் நிறைய இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள், இரண்டாம் பாதி பேய் வந்தவுடன் நமக்கு சிரிப்புடன் திகிலும் வர ஆரம்பிக்கிறது.
யாரிடமும் படத்தை பற்றி எதுவும் கேட்காமல் முதல் நாள் போய் படம் பார்த்தது நான் செய்த நல்ல விஷயம், பல குறும்படங்கள்/ஹாலிவுட் படங்கள் பார்த்தவர்களுக்கு எளிதாய் திரைக்கதையில் அடுத்து என்ன நடக்கும் என யூகிக்க முடியும்.
படத்திற்கு செலவு ரொம்ப கம்மி, ஒரே பங்களாக்குள் முடித்து விட்டார்கள், கதாபாத்திரங்களும் குறைவு, ஓவியாவும் ரூபாவும் முடிந்த வரை காட்டு காட்டு என காட்டிருக்கிறார்கள், இரண்டாம் பாதியில் மயில்சாமி வந்த பின் ஆட்டம் இன்னும் களை கட்டுகிறது.
ஆவியாக வரும் பெண்  மஞ்சள் புடவையில் செமயாதான் இருக்காங்க.
PIZZA, CONJURING க்கு அப்புறம் கையை வச்சு கண்ணை மறைச்சுகிட்டு பார்த்த படம்….
இதற்குதான் ஆசைப்பட்டாய் பாலகுமாராவுக்கு பின் நிரம்ப சிரித்த படம்…
படத்தின் ட்ரெய்லர்
நல்ல முயற்சியை முடிந்த வரை ஊக்குவிப்போம்….

LUCIA – இந்திய சினிமாவின் மைல்கல்

அன்பர்களுக்கு வணக்கம், நீண்ட நாட்களுக்கு பின் விமர்சனம் எழுத வந்துள்ளேன், அதற்கு முக்கிய காரணம் இந்த படத்தினை பற்றி அனைவரும் அறிய வேண்டும் என்பதே. லூசியா- கன்னடத்தில் 2013 செப்டம்பரில் வெளியானது.
 
கேபிள் சங்கர், ஜாக்கி சேகர், கருந்தேள் மற்றும் பல பிரபல பதிவர்கள் போல என்னால் விமர்சனம் எழுத முடியாது, அவர்களில் யாராவது இப்படத்தினை பார்த்து விமர்சனம் எழுதி மக்களிடம் சேர்ப்பித்தால் மிகவும் மகிழ்வேன்.
வழக்கமாக மற்ற மொழிப் படங்களை விரும்பி பார்ப்பவர்கள் கூட கன்னட திரைப்படங்களை விரும்புவதில்லை, ஏனென்றால் அது 20 வருடம் பின் தங்கி உள்ளதாக கூறப்படுவதே. ஆனால் தற்போதைய நிலை வேறு.
இப்படத்தின் இயக்குனரின் முந்தைய படம் சரியாக போகாததால் இந்த படத்தினை தயாரிக்க யாரும் முன்வரவில்லை. கதைச்சுருக்கத்தை தனது வலைப்பக்கத்தில் வெளியிடவும் 110 பொதுஜனம் சேர்ந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர். சரி படத்திற்குள் செல்வோம்.
படம் ஆரம்பிக்கையில் கதையின் நாயகன் மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் கோமாவில் இருக்கிறார், அவரை கருனைக்கொலை செய்வது பற்றி நாடெங்கும் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
இப்படம் ஒரு Non-linear வகை, இப்படி கோமாவில் கிடப்பவர் தற்கொலை முயற்சியால் இப்படி வந்தாரா? இல்லை கொலை முயற்சியா? என்பதை விசாரிக்க CBI அதிகாரி ஒருவர் ஐன்ஸ்டைன் கெட் அப்பில் வருகிறார், அவரது விசாரணையில் “லூசியா” எனப்படும் தூக்க மாத்திரை பற்றி தெரிய வருகிறது.
அந்த மாத்திரையின் ஸ்பெசல் கனவு, தினமும் வரும் கனவு தொடர்ச்சியாக வரும் ஒரு மெகா சீரியல் போல. 
இன்னொரு புறம் ஒரு டூரிங் டாக்கிசில் லைட் மேனாக(டிக்கெட்டை பார்த்து இருக்கையில் அமர வைப்பவர்) வேலை பார்க்கும் நாயகன் தூக்கம் வராமல் தவிக்க, தூக்க மாத்திரை என நினைத்து “லூசியா”வை எடுத்து கொள்ள ஆரம்பிக்கிறார்.
 http://creofire.com/wp-content/uploads/2013/11/illusion.jpg
அதன் மூலம் வரும் கனவில் உச்சத்தில் இருக்கும் நடிகராக வருகிறார். என்ன சுவாரசியம் என்றால் நிஜ வாழ்வில் வரும் அனைவரும் கனவில் வருகிறார்கள் வெவ்வேறு பாத்திரங்களில்
தியேட்டர் ஓனர் – கால் ஷிட் மேனேஜர்
கனவுக்கன்னி நடிகை- உடன் நடிக்கும் நடிகை
ரூம் மெட்ஸ் – சினி டெக்னிஷியன்ஸ்
 காதலிக்கும் பெண்(Pizza park server) – Modeling Girl (காதலி)
லோக்கல் ரவுடி – கான்ட்ராக்ட் கில்லர்
கனவு வாழ்க்கை கருப்பு-வெள்ளையில் தெரிகிறது, கனவு-நிஜம் இரண்டு வாழ்க்கையிலும் நடக்கும் விஷயங்கள் சமமாக போய் கொண்டே இருக்கிறது, எங்கே போய் முடிகிறது? எதனால் நாயகன் கோமா ஸ்டேஜ்க்கு போனார்? போலிஸ் “லூசியா”வை பற்றி கண்டு பிடித்ததா என படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
படத்தில் நடித்திருக்கும் அனைவரிடமும் இயக்குனரின் உழைப்பு தெரிகிறது, ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் லோக்கலாகவும், ஹைஃபையாகவும் காட்டிருக்க அவர் பட்ட கஷ்டம் புரிகிறது. படம் ஜெயித்திருப்பதை நினைக்கையில் மகிழ்ச்சி.
படத்தின் ட்ரெய்லர்
அனைவரும் பார்க்க வேண்டிய படம், தமிழ் சினிமாவை விட 10 வருடம் முன்னேறி சென்று விட்டது கன்னட சினிமா.
இப்படத்தினை எனக்கு அறிமுகம் செய்த நண்பன் சரவணனுக்கு நன்றி.

Ee Adutha Kaalathu – திரை விமர்சனம்

அன்பர்களுக்கு வணக்கம், தமிழ் படங்களில் எடுக்க நினைக்காத சில எதார்த்த கதைகள் உண்டு, சில பாத்திரங்கள் உண்டு, இப்போது நிறைய வித்தியாசமான இயக்குனர்கள் வரவால் நிறைய மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நல்ல விஷயம் தான். மலையாள திரையுலகில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் நாயகர்களின் அர்ப்பணிப்பு, அங்கு சூப்பர் ஸ்டார்களாக இருப்பவர்கள் செருப்பு தைக்கும் பாத்திரத்திலும் நடிப்பார்கள், டாக்டராகவும் நடிப்பார்கள். அதில் வித்தியாசம் பார்ப்பதில்லை.
http://www.vinodnarayan.com/wp-content/uploads/2012/03/Ee-Adutha-Kaalath.jpg
ரொம்ப புகழ்வது போல் தோன்றுகிறதா? மன்னிக்கவும், நான் பார்த்த படங்களை வைத்து கூறுகிறேன், அந்த வகையில் நான் ரசித்த ஒரு படத்தினை பற்றி பகிர்ந்து கொள்கிறேன். இப்படத்தில் நடித்திருப்பவர்களை இதற்கு முன் சில படங்களில் பார்த்திருக்கிறேன். இந்தரஜித் – Happy Husbants படத்தில் காமெடி ரோல் செய்திருப்பார், அனூப் மேனன் – Traffic தமிழ் ‘சென்னையில் ஒரு நாள்’ சரத் குமார் ரோலில் பின்னிருப்பார்.
http://www.zonkerala.com/movies/gallery/ee-adutha-kalathu/ee-adutha-kalathu-463.jpg
இப்படத்தின் கதை, நான்காக பிரிக்கலாம், வறுமைக் கோட்டில் வாழும் நாயகன், எந்த வேலைக்கும் தொடர்ந்து செல்லாமல், குப்பை மேட்டில் இருந்து பொறுக்கி வரும் சாமான்களை வைத்து பொம்மை செய்து விற்கும் இந்தரஜித், கடன் காரர்களுக்கு பயந்து ஓடிக் கொண்டிருப்பவன் ஒரு புறம்.
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcR-GWMQj7pqCqwgAgx_KxB9MDsaZ2TsKg5HxJOFOeQVqr51usQ0Vw
நகரத்தில் தொடர்ந்து தனியாக தங்கி இருக்கும் வயதானவர்களை கொன்று நகைகளை கொள்ளையடிக்கும் கொலைகாரனை தேடி அலையும் கமிஷனர் அனூப் மேனன், அவர் இந்த கேஸை முடித்த பின் திருமணம் செய்து கொள்வார் என காத்திருக்கும் பத்திரிக்கையில் வேலை பார்க்கும் காதலி மறுபுறம்.
http://www.cinespot.net/gallery/d/839575-1/Ee+Adutha+kalathu+_1_.jpg
போட்டோஃகிராஃபியில் ஆர்வமிருக்கும் பெண்ணை ஒரு ஆண்மையில்லாத சைக்கோவிற்கு கல்யாணம் செய்து வைத்து அவன் செய்யும் டார்ச்சர் தாங்காமல் தினம் தினம் அழுது கொண்டிருக்கும் நாயகி, அவளது வயதான தனிமையில் வாழும் தாயார் மறுபுறம்,
http://www.metromatinee.com/live/wp-content/uploads/2011/12/Ee-Adutha-Kaalath24917.jpg
ஊர் முழுக்க வட்டிக்கு கடன் கொடுத்து வசூல் செய்யும் ரவுடி கும்பல், அதன் தலைவன், அந்த கும்பலில் இருந்து பிரிந்து போன ஒரு ரவுடி, குடும்ப பெண்களிடம் நல்லவன் போல் பழகி, படுக்கையில் ஏமாற்றி நீலப்படம் எடுக்கும் ஒரு வட நாட்டு ஆசாமி இவர்கள் ஒருபுறம்,
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcScpHf0JQlthEKSDCk0J-eL8SF32FJrCXd13rR8ozoGDaNDSIDN9Q
இந்த 4 கதையையும் ஒன்றினைக்கும் ஒரு சம்பவம், ஒரு நாள், ஒரு இரவு, அதன் பின் நடக்கும் பிரச்சனைகள், அதன் தீர்வு, பாதிக்கபட போவது யார், நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திரைக்கதை, சுபமான முடிவு என ஒரு நல்ல பொழுது போக்கான படமாக இப்படம் உள்ளது.
படத்தில் என்னை ரசிக்க வைத்த கதாபாத்திரம் சைக்கோ கணவன் தான், தனக்கு ஆண்மை இல்லாததை மறைக்க சம்பளத்திற்கு ஆள் வைத்து Romantic Sms அனுப்புவது, வசனம் எழுதி கொடுத்து தன்னை மன்மதன் போல் மனைவியிடம் சீன் போடுதல் என வெளுத்து வாங்கி இருக்கிறார், இப்படத்தின் கதை எழுத்தாளரும் இவரே.
படத்தை பாருங்கள், உங்களுக்கும் பிடித்திருக்கும், படத்தின் ட்ரெய்லர் இதோ….

உங்கள் கருத்துக்களை மறக்காமல் தெரிவியுங்கள்

404 Error not found – திரை விமர்சனம்

அனபர்களுக்கு வணக்கம், சில படங்களை பார்த்ததும் உடனே நம்மளை ஒத்த ரசனை உடையவங்களை தொடர்பு கொண்டு நாம ரசிச்சு பார்த்த படத்தை பார்க்க சொல்லுவோம், அந்த மாதிரி என்னை ரொம்ப பாதிச்ச படங்கள் கம்மிதான், அதுல இந்த படம் கண்டிப்பா ஒன்னு.
http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/e/e7/404_Movie_Poster.jpg/220px-404_Movie_Poster.jpg
இந்த படத்தோட பேரே வித்தியாசமா இருக்கு, ஒரு மருத்துவ கல்லூரி, ஹாஸ்டல், இராக்கிங் பிரச்சனை, முதல்ல சாதாரணமா ஆரம்பிக்கற திரைக்கதை, ஆனா அதுலயும் வித்தியாசமான கேமிரா கோணங்கள், நீங்க எதிர்பார்க்கற மாதிரி ஹீரோ, ஹீரோயின், வில்லன், காமெடியன்லாம் யாரும் கிடையாது.
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTYeJWlRQxZV3PKkxW9Et4ERuki6LyXwk8Vr1MLsr1bG6uxngmnfA
ஒரு நல்லா படிக்கற பையன் அபிமன்யு, அவனை ஊக்குவிக்கற புரொஃபசர், அவங்க அழகான மனைவி அவங்களும் புரோஃபசர் தான், தினமும் இராத்திரில முதல் வருசத்து பசங்களை இராக்கிங் பன்ற சீனியர் கும்பல், அவங்களை எதிர்க்கற நல்ல பையனை டார்ச்சர் பன்றதால, மத்த பசங்க தன்னால பாதிக்கப்பட கூடாதுனு வேற ரூம்க்கு போக நினைக்கறான் அபிமன்யு.
அவன் போகனும்னு நினைக்கற ரூம் நம்பர் 404, அதுதான் காலியா இருக்கு, ஆனா 3 வருசத்துக்கு முன்னாடி ஒரு ஸ்டூடன்ட் கௌரவ் அதுல தூக்கு போட்டு தற்கொலை பண்ணிகிட்டதால அதுல பேய் நடமாட்டம் இருக்குனு பூட்டியே இருக்கு, ஒரு வழியா அபிமன்யு போராடி அந்த ரூம்க்கு போறான்.
http://www.bollywoodtrade.com/News/Images/11/Jul/404-error-not-found-main.jpg
ஆனாலும் இராக்கிங் தொடருது, ராக் பன்ற சீனியர் நல்லவன்கிட்ட உன் ரூம்ல செத்து போன பையனை பத்தி எதுவும் தெரியாம எப்படி இருக்கலாம்னு மிரட்டி ஒரு நாள் டைம் கொடுத்து அவனை பத்தி எல்லாம் தெரிஞ்சுக்க சொல்றாங்க, அவனும் விசாரிக்க ஆரம்பிக்கறான், அப்பதான் எதிர்பாராத விஷயம் நடக்குது.
செத்துப்போன கௌரவ் இவனோட கண்ணுக்கு தெரிய ஆரம்பிக்கிறான், பயந்து நடுங்க ஆரம்பிக்கற பையனுக்கு ஆதரவா எல்லாரும் ராக்கிங் கூடாதுனு போராட ஆரம்பிக்கறாங்க, ஆனாலும் செத்தவனோட உருவம் இவனுக்கு தெரியறது தொடருது. ஆனா யாரும் நம்ப மாட்டேங்கறாங்க.
முதல்ல கௌரவ்வ பார்த்து பயந்த அபிமன்யு கொஞ்சம் கொஞ்சமா பயம் குறைஞ்சு அவன் கூட பழக ஆரம்பிச்சுடறான், தனியா பேசிகிட்டு அவன் சுத்தறதை எல்லாரும் பார்க்கறாங்க, அவனுக்கு டிஷ் ஆர்டர் குணப்படுத்தனும்னு நினைக்கறாங்க. இதுக்கு அப்புறம் தான் சஸ்பென்ஸ், நீங்க எதிர்பாக்காத பல விஷயங்கள் செகன்ட் ஆஃப்ல வரும்.
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcRXIyKGI-wS50v-X7PJ-xiXTkwMM1Bw1qVdndu6c70coLWOmBarzA
நிறைய படம் பார்க்கறவங்களுக்கு ஒரு திறன் இருக்கும், எவ்வளவு திகில் படமா இருந்தாலும் யார் காரணம்னு, என்ன காரணம்னு மனசு தானா கணக்கு போடும், அவங்களால கண்டிப்பா இந்த படத்தோட ட்விஸ்ட் அ யூகிக்க முடியாதுங்கறது என் எண்ணம்.
நான் நல்ல வேளை பகல்ல தான் பார்த்தேன், இருந்தாலும் க்ளைமாக்ஸ்ல உடம்பெல்லாம் புல்லரிச்சு, லேசா நடுங்க ஆரம்பிச்சுருச்சு, பயம் காரணம் இல்லை, ஒரு மாதிரியான திகிலை உடனே தெரிஞ்சுகிட்ட பதட்டத்தை நான் உணர்ந்தேன், கண்டிப்பா மிஸ் பன்னாம பாருங்க நண்பர்களே!!!
படத்தின் ட்ரெய்லர்
கருத்துக்களை தெரிவிக்கவும்