FACEBOOK ல் ஒரு புதிய முயற்சி

 எகிப்து, துனிசியா, லிபியா போன்ற பல நாடுகளில் ஆட்சி மாற்றத்துக்கு காரணமாக இருந்தவை டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களே. ஆனால் ஈரான் மீது எந்த நேரத்திலும் இஸ்ரேல் போர்தொடுக்கக் கூடிய நிலையில் போர் முயற்சியை கைவிட வலியுறுத்தியும்கூட பேஸ்புக்கில் இஸ்ரேலியர்கள் பெருமளவு ஆதரவு தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்வில் வசித்து வரும் ரோனி எட்ரிஸ் மற்றும் மிசெல் தமிர் தம்பதியினர் கடந்த வாரம்தான்
“Iranians, we love you” என்று ஒரு பக்கத்தை தொடங்கியிருந்தனர்.
இப்போது “Iranians, we love you” என்ற பக்கத்தை “லைக்” செய்கிறோம் என்று கிளிக் செய்திருப்போரின் எண்ணிக்கை 18 ஆயிரம் என்பது புருவத்தை உயர்த்திப்பார்க்க வைக்கிறது!


எட்ரிஸ் தம்பதியினர் இது பற்றி கூறுகையில், நாங்கள் தனிப்பட்ட முறையில்தான் பேஸ்புக்கில் பதிவைத் தொடங்கினோம். “ஈரானியர்களே நாங்கள் உங்களை நேசிக்கிறோம்… நாங்கள் உங்கள் நாட்டின் மீது ஒருபோதும் குண்டுவீச மாட்டோம்” என்று அதில் பதிவு செய்திருந்தோம். இப்போது கற்பனையே செய்து பார்க்க முடியவில்லை. எங்களது பக்கம் இத்தனை ஆயிரம் பேரை ஈர்த்திருக்கிறது என்பது நிச்சயம் நம்ப முடியாத ஒன்றுதான்” என்கின்றனர்.


இருப்பினும் தொடக்கத்தில் தமது நண்பர்கள் பலரும் இது வேண்டாத வேலை என்று எச்சரித்ததாகவும் ஈரானியர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியாது எனவும் கூறினர். ஈரான் மீதான போரை உங்களால் தடுத்துவிட முடியாது என்றும் அறிவுறுத்தியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வலைதளத்தில் ஈரானைச் சேர்ந்தவர்களும் கூட “இஸ்ரேலியர்களை நாங்கள் எதிரியாகப் பார்க்கவில்லை…வி லவ் யூ” என்று பதில் பதிவை வெளியிட்டுள்ளனர்.

ஒரு போரை முன்னெடுத்துச் செல்ல சமூக வலைதளங்கள் ஆயுதமாகும்போது ஆயுதங்களை “மெளனிக்க” செய்யவும் வலைதளங்கள் ஆயுதங்களாகட்டுமே!

ஆசிரியர் உமாவை உண்மையில் கொன்றது யார்?

அருச்சுனன் விட்ட அம்புமழையில் கர்ணன் குற்றுயிரும் குலைஉயிரும் ஆகிவிட்டான். ஆனால், சாகவில்லை. அவனால், சாகமுடியவில்லை. தரும தேவதை அவன் சாவைத் தடுத்து அருச்சுனன் விடும் அம்புகளையெல்லாம் மலர்மாலையாக மாற்றி அவன் கழுத்தில் விழுமாறு செய்கிறாள்… அருச்சுனன் திகைக்கிறான்! கண்ணனோ சிரிக்கிறான். அப்போது அங்கே ஓடோடி வந்த தன் தாய் குந்திதேவி, “அய்யோ மகனே!” என்று கர்ணனைப் பார்த்துக் கதறித் துடிப்பதைப் பார்த்து, மேலும் அருச்சுனன் குழம்ப, கண்ணன், கர்ணன்தான் குந்திதேவியின் மூத்தமகன் எனும் கதையைச் சொல்ல, சிறிது நேரம் கழித்துக் கர்ணன் உயிர்விடுகிறான். இப்போது அருச்சுனனும் கதறியவாறு கர்ணன் அருகில் ஓடிச் சென்று “அய்யோ அண்ணா! நானே உன்னைக் கொன்று விட்டேனே! நானே உன்னைக் கொன்று விட்டேனே” என்று சொல்லி அழுதபோது, கண்ணன் அவனைக் கிண்டலாகப் பார்த்துச் சொன்னானாம் –
“நான் கொன்றேன் நான் கொன்றேன் என்கிறாயே! அருச்சுனா! நீ மட்டுமா கர்ணனைக் கொன்றாய்? அவனது குருநாதர் “சரியான நேரத்தில் உன் அம்புக்குறி தவறட்டும்” என்று கொடுத்த சாபம்தான் முதலில் அவனைக் கொன்றது. பின்னர், மாறு வேடத்தில் சென்ற இந்திரன், கவச குண்டலங்களைத் தானம்கேட்டு வாங்கிக்கொண்ட போது கர்ணன் மீண்டும் கொல்லப்பட்டு விட்டான். பிறகு உங்களின் தாய் குந்தி, “போரின்போது இரண்டாவது முறையாக நாகபாணத்தை அருச்சுனன் மீது ஏவுவதில்லை” எனும் வரத்தைக் கேட்டு அவனை இறுதியாகவும் கொன்று முடித்தாள். பிறகுதான் இந்த பாரதப் போரே தொடங்கியது. போதாத குறைக்கு இதோ நானும் இப்போது அவனது புண்ணியத்தையெல்லாம் தானமாகக் கேட்டு வாங்கிய பிறகே அவனது உயிரைத் தரும தேவதை விட்டுத்தந்தாள். இப்படி ஏற்கெனவே மாதா-பிதா-குரு-தெய்வம் ஆகிய நான்குபேருமே அவனைக் கொன்று முடித்த பிறகுதான் உன் அம்பு அவனைத் துளைத்தது. என்னவோ நீயே உன் வீரத்தால் அவனைக் கொன்றுவிட்டதாக நினைத்துக் கொண்டு, “நான் கொன்றேன் நான் கொன்றேன்” என்று பிதற்றுகிறாய்! செத்தபாம்பை அடித்த உன்னாலா அவன் கொல்லப்பட்டான்?” என்று சொன்னதாக ஒரு பாரதக் கதை உண்டு.
இப்போது சொல்லுங்கள் –
ஆசிரியர் உமாமகேஸ்வரியை வகுப்பறையிலேயே குத்திக் கொன்றது யார்?
இர்பான் வெறும் அருச்சுனன் மாதிரி செத்த பாம்பை அடித்தவன் தான்!
அந்தச் சகோதரியின் உடலில் கத்திக் குத்து மீண்டும் மீண்டும் விழ விழக் கத்திக் கதறிய கதறலில், பொங்கிப் பெருகிய ரத்தத்துளியின் கறைபட்டு யார் யாரெல்லாம் குற்றவாளிகளாகி நிற்கிறார்கள் தெரியுமா?
நாம் எல்லாரும்தான்! இது, உண்மை வெறும் இகழ்ச்சி இல்லை!
இந்தக் கட்டுரையை எழுதுகிற நானும், இதை வெளியிடும் இதழாசிரியரும், படிக்கும் நீங்களும் என இந்தச் சமூகத்தில் வாழும் நாமெல்லாருமே ஆளுக்கு ஒரு வகையில் குற்றவாளிகள் தாம்!
“யு டூ புரூட்டஸ்?” என ஒருவரை ஒருவர் கேட்டுக்கொள்ளத்தான வேண்டும். ஏனெனில் –
அனைத்து ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும், அதிர்ந்து கூடப் பேசத் தெரியாத புதுக்கோட்டை ஆசிரியர் சாரதாவை முதல் களப்பலியாக்கி, தமிழகம் முழுவதும் 36 ஆசிரியர்களை இழந்து பல லட்சம் ஆசிரியர்- அரசு ஊழியர் அதிகபட்சமாக 56 நாள் வரை சிறையிருந்து, –1986இல் “ஜேக்டீ”என்றும் 1989இல் “ஜேக்சாட்டோ” என்றும்– கத்திக் கதறிப் பெற்றதுதான் இன்று கைநிறைய வாங்கும் மத்திய அரசுக்கு நிகரான சம்பளம் என்று, இன்று வேலைக்கு வரும் எத்தனை பேருக்குச் சொல்லியிருக்கின்றன நம்ஆசிரியர்-அரசுஊழியர் இயக்கங்கள்? வரலாற்றை மறந்தவர் அதில் திரும்பவும் வாழ சபிக்கப்படுவர் என்பது உண்மைதானே? நாம் சபிக்கப்பட்டு விட்டோம்! இப்போது சம்பளம் கிடைக்கிறது! மரியாதை போய்விட்டது!
போராடக் கற்றுத்தந்த சங்கம், பாடம் நடத்தவும் பள்ளிக்கு வரும் பிள்ளைகளை நம் சொந்தப் பிள்ளைகளாகப் பார்த்துக் கொள்ளவும், அலுவலகத்திற்கு வரும் பாமரனை மரியாதையாக நடத்தி அவனது நியாயமான கோரிக்கைகளைப் பரிவோடு பரிசீலிக்கவும் கற்றுத் தந்திருந்தால் இன்றைய ஆசிரியர்கள் மதிப்பிழந்து, வெண்ணிறஆடை மூர்த்தி, லூசுமோகன்களாக நமது ஊடகங்களால் கிண்டலாகவும் கேலியாகவும் சித்திரிக்கப்படும் நிலைக்கு ஆளாகியிருப்பார்களா என்ன? “பணிப் பண்பு” (work culture) பற்றிய கவலை எந்த ஆசிரியர்-அரசு ஊழியர் அமைப்புகளுக்கு இருக்கிறது? பதவி உயர்வின்போதும், புதிய புத்தகம் வரும்போதும், பணியிடைப் பயிற்சியை அரசு மேற்கொள்வதை விட, அந்தந்தச் சங்கங்களே மேற்கொள்வது தானே சரி? இதை ஏன் எந்த ஆசிரியர் சங்கமும் செய்வதில்லை? புதிய புதிய விஷயங்களில் –அது பாடப்பகுதியாக இருந்தாலும் சரி, மாணவர் உளவியல்சார்ந்ததாக இருந்தாலும் சரி- ஆசிரியர்களுக்குச் சந்தேகம் வந்தால் கேட்டு, பொறுப்பான பதில்பெறும் இடம் என்று ஏதாவது உண்டா? உமாவுக்கு இரங்கல் ஊர்வலம் நடத்தினால் மட்டும் போதாது, இனி உமாக்கள் கொல்லப்படாமல் தவிர்க்கவும் யோசிக்க வேண்டும்.
அதிகாரிகளைக் கால்கை பிடித்தால் போதும், பாடங்களைப் பள்ளிக்கூடத்தில் நடத்துவதை விட ஏழை மாணவர்களானாலும் தன் வீட்டில் நடத்தும் தனிப்பயிற்சிக்கு எப்படியாவது இழுத்து மாணவனின் தன்மானத்தை சிதைத்து, எதையும் செய்து கொள்ளலாம் எனும் துணிச்சலை வளர்த்ததும் சங்கங்கள் தானே?
கடமை பற்றிப் பாடம் நடத்தும் ஆசிரியர், தன் கண்ணெதிரில் நடந்து கொள்வதைப் பார்த்துத் தானே மாணவர் கற்றுக் கொள்வர்? மனச்சாட்சிக்கு மட்டுமே பயந்து பணியாற்ற வேண்டிய ஆசிரியர்களுக்குள் சாதி-மத-குழுபேதம், பணிமூப்பு-பதவிபேதம், பள்ளிக்கு வந்தும் சொந்தவேலை பார்ப்பது, வகுப்பு நேரத்தில் கதைபேசுவது, பெரிய இடத்துப் பழக்கம் தரும் துணிவில் பொறுப்பின்றி நடந்துகொள்வது, புதிதாக வந்திருக்கும் கல்வி முறை தொடர்பான செய்திகளைப் பேசும் “பிழைக்கத் தெரியாத” ஆசிரியரை அணிசேர்ந்து கொண்டு கிண்டல்செய்வது இவ்வளவையும் மாணவர் முன்பே அரங்கேற்றுவது என எத்தனை எத்தனை அசிங்கம்! இவற்றைக் களைவதில் ஆசிரியர் அமைப்புகளுக்குப் பொறுப்பில்லையா?
இவ்வளவு ஏன்,,. “ஏதாவது ஒரு செய்தித் தாளையாவது காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் ஆசிரியர் எத்தனை பேர்?” என்று புள்ளிவிவரம் எடுத்தால் கதை கந்தல்தான்! இதில் நல்ல மனசோடும், ஈடுபாட்டோடும் தன் கைக்காசு போட்டுப் பணியாற்றும் ஆசிரியர்களை நீண்ட நாளாகவே அரசுகள் கண்டு கொள்வதில்லை. ஆசிரியர் அமைப்புகளோ தவறு செய்பவரைக் காப்பாற்ற மட்டுமே இருப்பதாகத் தோன்றுகிறது!
நூறு விழுக்காடு தேர்ச்சிக்காகப் பல தனியார் பள்ளிகளும் சில அரசுப்பள்ளிகளும் கூட எடுக்கும் நடவடிக்கைகளை மனச்சாட்சியுள்ள ஆசிரியர் எவரேனும் தட்டிக் கேட்டால் கல்வித்துறை பேரைச் சொல்லியே அவர்களை ஓரங்கட்டி விட்டு மாணவர்களைப் படுத்தும்பாடு கொஞ்சமா நஞ்சமா? காலை 4மணிக்கே எழுப்பி விட்டு வீட்டுப்பாடம், பிறகு தனிப்பயிற்சிக்கு ஓடி, பிறகு வந்து பள்ளிக்கூடம் ஓடி, பிறகு மாலை பள்ளியிலிருந்து வந்ததும் எதையோ வாயில் கொட்டிக் கொண்டே உடைமாற்றிக் கொண்டு, மீண்டும் தனிப் பயிற்சிக்கு ஓடி, இரவு 8மணிக்கு மேல் வீட்டுக்கு வந்து மீண்டும் –மாடுபோல அன்று நடந்த, முந்திய நாள்களில் படிக்க விட்டுப்போன பகுதிகளை அசைபோட்டு- இரவு படுக்க 11மணி யாகிவிடும் குழந்தைக்கு வயது 15! “ஓடி விளையாடு பாப்பா” என்ற பாரதி பாட்டைப் படித்து ஒப்பிக்காமல் விளையாடப்போன குழந்தைக்கு கடுமையான தண்டனை தரும் நமது பள்ளிக் கூடங்களால் மனஅழுத்தம் வராதா என்ன? அந்த அழுத்தம் கட்டாயப் படுத்தி –சிரித்துக்கூடப் பேசாத ஆசிரியரால்- அதிகமாகாதா என்ன?
இதில் பெற்றோர் வந்து பார்க்கக் கூட அனுமதி கேட்டு அரை மணிநேரம் நின்றபின் அனுமதி மறுக்கப்படும் “ஸ்ட்ரிக்ட்”ஆன பள்ளிக்கூடம்தான் சிறப்பான பள்ளிக்கூடம் என்று பெற்றோரே பீற்றிக்கொள்ளும் மனநிலையை எங்குபோய்ச் சொல்வது? கவிஞர் நந்தலாலா சொல்வதுபோல- “மாணவர்களிடம் வெளியே விட்டுவிட்டு வரச்சொல்லும் தின்பண்டத்தையும் தண்ணீர் பாட்டிலையும் எப்போது உள்ளே மாணவரோடு வைத்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, உள்ளே அவர்கள் சுமக்கும் புத்தகக் கட்டைத் தூக்கி வெளியே வீசுகிறார்களோ அப்போது தான் மாணவர்கள் சுதந்திரமாய் உணர்வார்கள்” என்பது நூறு விழுக்காடு உண்மை அல்லவா?
நான் ஒருமுறை மாணவரிடம் பேசும்போது, “புத்தகம் நோட்டே இல்லாத, வீட்டுப் பாடம் இல்லாத, பரிட்சை இல்லாத பள்ளி வகுப்பறை எப்படி இருக்கும்?” என்று கேட்க, அவர்கள் ஓவென்ற சத்தத்துடன் “ரொம்ப நல்லா இருக்கும் சார், ஆசிரியரும் இல்லை என்றால் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும் சார்” என்றது இன்னும் காதில் ஒலிக்கிறது! பள்ளி விடுமுறை என்றால் மாணவர் எழுப்பும் மகிழ்ச்சிக் கூச்சல் கூட ஒருவகையில் கல்விமுறை மீதான மாணவர் விமர்சனம்தானே?
பாடத்திட்டத்தில் மதிப்பெண்ணை மட்டுமே விரட்டும் போட்டியில், மாணவரின் மற்ற பல திறமைகள் கண்டுகொள்ளப் படாததில் விரக்தி அடைவது இயல்பு அல்லவா? “மாணவர் முன்னேற்ற அறிக்கை” (Progress Card) இல் அவனது பாடும் திறமை, பேசும் திறமை, ஓவியத் திறமை, விளையாட்டு, சேர்ந்து செயலாற்றுவது, முக்கியமாக அடுத்தவருடன் அன்பாக இருப்பது என, இதர பல பண்பு-திறமைகளையும் பாராட்டி அவற்றுக்கும் மதிப்புப் போட்டு, பெற்றோர்க்கு அறிக்கை தருவதாக இருந்தால், “இதில் நான் இல்லை, இதோ இதில் நான் இருக்கிறேன்” என்னும் நிறைவு மாணவர்க்குக் கிடைக்கும். இப்போது மதிப்பெண்ணை மட்டும் காட்டும் முறையை நிச்சயமாக மாற்றியாக வேண்டும். அங்கீகாரம் தரப்படும் ஒவ்வொரு திறமையும்-பண்பும் மற்ற திறமைகளையும் வளர்க்கும் என்பதைக் கல்வித்துறை நிச்சயமாகப் பரிசீலிக்க வேண்டும்!
நமது தேர்வுமுறை தோல்வியடைவதை மையமாகக் கொண்டிருப்பதாகவே எனக்குப் படுகிறது. தாள் திருத்தும் மையங்களில் தரப்படும் மாதிரி விடைத்தாள் (key)களைக் கட்டிக்கொண்டு அழாமல், சிந்தித்து எழுதும் மாணவர்க்கே சிறந்த மதிப்பெண் கொடுக்கும்படி ஆசிரியர்களுக்கும் பயிற்சிதர வேண்டும். மாணவர் எழதியதை தரப்பட்ட விடைக்குறிப்போடு ஒப்பிட்டு “சரியாக இருக்கிறது” என்று எந்தவித சிந்தனையும் இல்லாமலே திருத்தப்படும் தேர்வுக்குத்தான் நோட்ஸ் தேவைப்படும். சிந்தித்து எழுதப்படும் விடைக்கு நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்றால் ஆசிரியர்களையே அசர அடிக்கும் விடைகளை மாணவர் தருவார் என்பதில் நம்பிக்கை வேண்டும்.
தேர்வு முறை மட்டுமல்லாமல், திருத்தும் முறையும் மாறவேண்டும். அல்லது, ஒவ்வொரு மாணவருக்கும் கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான வினாத்தாள்களில் ஒன்றைத் தந்து, அவரே விடையை இட்டு, கணினியால் உடனுக்குடன் திருத்தப்படும் விடைத்தாள் மதிப்பெண் படியை அவரே எடுத்துக்கொண்டு செல்லும் தேர்வு முறையை அறிமுகப் படுத்தலாம். இப்போது நடக்கும் தேர்வுகளால் மனித உழைப்பு விரயம் மட்டுமல்ல, மனஅழுத்தம், தேர்வு அறைக் கண்காணிப்பாளர்-மாணவர் மோதல் களையும் தவிர்க்கலாம். இதில் தனியார் பள்ளி நிர்வாகங்களின் நேரடிப் பங்களிப்பும் உண்டு! சொல்லும்விதம் நடந்துகொண்டால் தனிக்கவனிப்பும், நேர்மையுடன் நடந்து கொண்டால் அவரது வாகனம் சேதப்பட்டுக் கிடக்கும் பரிதாபத்தையும் தவிர்க்கலாம்.
தாய்-தந்தை இருவரில் ஒருவராவது தன் குழந்தையின் மீது அன்பு செலுத்த நேரம் ஒதுக்கி அதை வெளிப்படையாகக் காட்டவும் வேண்டும். இரண்டுபேரும் கண்டிப்பாக இருக்கும் இடம் குழந்தையின் கல்வி குறித்தே என்பதை மாற்றியாக வேண்டும். மருத்துவராகவும், பொறியாளராகவும், வழக்குரைஞராகவும் வரவேண்டும் எனும் கனவில் அவன் மனிதனாகவும் இருக்க வேண்டும் என்பதை மறந்து விடுகிறார்களே! பணம் கறக்கும் படிப்பாகப் பிள்ளை படிக்கவேண்டும் என்ற ஆசையில் 9ஆம் வகுப்பிலிருந்தே அந்தக் குழந்தையின் தலையில் தன் பேராசையை ஏற்றிவிட்டு, பாடாய்ப் படுத்தும் பெற்றோர், என்ன சம்பாதித்தாலும் அவன் வாழும் முறையைக் கற்றுக்கொள்ளாமல் எப்படி வாழ்வான் என்பதை எப்போதுதான் யோசிப்பார்கள்?
குழந்தை பள்ளிக்கு வருவது நல்ல மதிப்பெண் வாங்குவதற்காக மட்டுமல்ல. இதை வீட்டிலிருந்து தனிப்பயிற்சி வழியாகவும் கற்றுக்கொள்ள முடியும். பலருடன் பழகி இந்த உலகத்தோடு ஒட்டி வாழக் கற்பதுதான் உண்மையான கல்வி! ஆசிரியர்கள்- பள்ளியில் இருக்கும் பெற்றோராகவும், பெற்றோர்- வீட்டிலிருக்கும் ஆசிரியராகவும் நடந்து கொள்வதுதான் ஒரு குழந்தையை அறிவோடும் பண்போடும் வளர்க்கும் ஒரே வழி!
கண்டிப்பும் கனிவும் சரிவிகித்த்தில் காட்டவேண்டிய பெற்றோர் இரண்டில் ஒன்றை மட்டுமே காட்டுவதில் குழந்தையின் மன அழுத்தம் நிச்சயமாகப் பாதிக்கப்படும். இது வெளிப்படும் இடமாக வகுப்பறை இருக்கும்போது, மனப்பிறழ்ச்சி அதிகமாகி தோல்விகளைத் தாங்காத மனநிலை இயல்பாகச் சிந்திக்க விடுமா?
அரசுகளின் முதல்பார்வை படவேண்டிய கல்விக்கு ஓரப்பார்வையே கிடைக்கிறது! ஒவ்வோராண்டும் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி விழுக்காடு குறைந்துகொண்டே வருவதை கல்வியாளர் மட்டுமல்ல, நாட்டு வளர்ச்சியில் அக்கறை கொண்ட யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தின் பலனை முதலில் கல்வித்துறைக்கல்லவா வழங்க வேண்டும்? அதுதானே உடனடித் தேவை! ஆனால், நமது நாட்டில் தலைகீழாக அல்லவா நடக்கிறது?
சுவையாக இனிக்க வேண்டிய பாடம் கசப்பதும், வெறுக்கத் தகுந்த சீரழிவு ஊடகங்கள் பலவண்ணத்திலும்-பலமடங்கு முன்னேறிய வாய்ப்பு-வசதிகளோடும் பல்லை இளிப்பதில் பலியாவது நம் சந்ததிகள் தானே என அரசுகள் கவலைப்பட வேண்டாமா?
மக்களுக்கு இலவசமாகத் தரப்படவேண்டிய கல்வியும் –மருத்துவமும்தானே நம்நாட்டில் ஏழைக்கு எட்டாக் கனியாக இருக்கிறது?! மற்ற இலவசங்களையெல்லாம் நிறுத்திவிட்டு அனைவருக்கும் உயர்கல்வி வரை இலவசம், அனைத்து மருத்துவமும் இலவசம் என்று கொண்டுவரட்டும், கல்விவள்ளல்கள் கடையை மூடி-ஓடிவிட மாட்டார்களா? மற்றவற்றை இலவசமாகக் கொடுக்க முன்வரும் அரசுகள், ஏழைக்கு எட்டாக் கனியாகிவிட்ட கல்வி-மருத்துவம் இரண்டையும் எப்படியாவது வாங்கிவிடும் போட்டியில்தான் இளைய தலைமுறை பலியாகிறது என்பதை உணர வேண்டாமா?
திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடரிலும் வரும் குழந்தைகள் “பிஞ்சிலே பழுத்தது”போலப் பேசும்பேச்சுகளைப் பார்த்தால், வியப்புக்குப்பதிலாக நமக்கு வேதனை தான் மிஞ்சுகிறது. அதிலும் சில காட்சிகளில் நகைச்சுவை எனும் பெயரில் குழந்தைகள் பேசும் சிலவசனங்கள் எரிச்சலையும் ஆற்றாமையையும் அல்லவா எழுப்புகின்றன?
“தமிழகத்தின் தங்கக் குரல்” “செல்லக்குரல்” “குட்டிக்குரல் தேடல்” என்று ஒவ்வொரு தொலைக்காட்சியும ஒவ்வொரு பெயர் வைத்துக்கொண்டாலும் போட்டிக்கு வரும் குழந்தைகள் பாடும் பாடல் குழந்தைள் பாடக் கூடியதாக இருக்கிறதா என்று எந்த நடுவராவது கவலைப் படுகிறாரா? 5வயதுக் குழந்தை முக்கி முணகிப் பாடும் காமரசப் பாடல்களைப் பாடும் குழந்தையின் வயதுக்கு இது சரிதானா என்று யோசிக்க வேண்டாமா? இவர்களின் வணிக நோக்கத்திற்கு, பாடிக்கொண்டிருக்கும் சில நூறு குழந்தைகள் மட்டுமல்லாமல், பார்த்துக் கொண்டிருக்கும் பல கோடிக் குழந்தைகளும் பலியாகி ஒரு தலைமுறையே “குழந்தைமை”யை இழந்து பிஞ்சிலே பழுத்து உதிரவேண்டியதுதான் விதியா?
பேச்சு பாட்டு நடிப்பு மூன்றையும்தான் கேட்கிறேன்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், “வாடா மாப்பிள வாழப்பழத் தோப்புல வாலிபால் ஆடலாமா?” என்பன போலும் பாடல்களை ஏராளமான முகபாவங்களுடனும் தாராளமான இடுப்பாட்டத்தோடும் ஐந்து வயதுக் குழந்தை அனுபவித்துப் பாடுவதைப் பார்வையாளர்கள் பார்த்து ‘பரவச’ப்படுவதும், நடுவர்கள் பார்த்துப் பாராட்டுவதும் சரியானதுதானா? இர்பான் கூட இப்படி ஒரு இந்தி திரைப்படம் பார்த்த்தாகச் சொன்னானே?
ஒரு சிலர் மிகச் சரியான விமரிசனங்களோடு அந்த ‘மீத்திற’க் குழந்தைகளின் அபாரத் திறமையை மனம்விட்டுப் பாராட்டும்போது நமக்கும் ஏற்படும் மகிழ்ச்சி, இதுபோன்ற வயதை மீறிய விஷயங்களோடு வரும்போது –அதற்குப் பயிற்சி கொடுக்கும் பெற்றோரிடம் “இப்படிச் செய்வது தவறு, இது குழந்தைகளுக்கும் நல்லதல்ல” என்று எடுத்துக் கூறித் திருத்துவதல்லவா கலைத் தாய்மையின் கடமையாக இருக்கும்? அவர்களே இதைப் பாராட்டிவிட்டால் பிறகு பெற்றோர்களின் குழந்தைப் பயணம் அந்தத் திசையில் தானே அதிவேகமாக இருக்கும்!
இப்போது சொல்லுங்கள் –
ஆசிரியர் உமாமகேஸ்வரியை வகுப்பறையிலேயே குத்திக் கொன்றது யார்?
கல்விமுறை, ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊடகங்கள், அரசுகள் ஆகிய நாம் எல்லாரும்தானே?
செத்துப் போன உமாவை உலகம் தெரிந்து கொண்டது.
குற்றுயிரும் குலை உயிருமாகத் திரியும் ஆயிரக்கணக்கான உமாக்களும் இர்பான்களும் சாகுமுன், நாமெல்லாரும் ஏதாவது செய்தாக வேண்டும். அதுதான் உமாவின் ரத்தம் நமக்குச் சொல்லியிருக்கும் செய்தி.

மறக்கப் பட்ட கவர்ச்சி கன்னி-சில்க் ஸ்மிதா

1926 சூன் 1 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமையில் பிறந்த குழந்தையின் பெயர் நார்மா ஜீன் மார்ட்டேன்சன் , இவர் உலக சினிமாவையே வரலாற்றில் மிக பெரிய கனவு தேவதையாக வலம் வருவார் என்று அன்று தெரியவில்லை, சிறு வயதில் பல்வேறு துன்பங்களுக்கும், பாலியல் வன்முறைக்கும், குடும்ப சூழல்களுக்கும் சிக்கக் கொண்டவர் இவர், பதினாறு வயதில் திருமணம் முடித்து, அதற்கு பின் மாடலிங் துறையில் காலெடுத்து, தன் அழகாலும், தோற்றத்தாலும், கவர்ச்சியாலும் இந்த உலகை புரட்டிப் போட்டு இறந்த பின்னும் இன்று வரை நம் மனதில் மாறாது இருப்பவர் மெர்லின் மன்றோ… இவரின் இறப்பு குறித்த மர்மங்கள் இன்றும் புரியாத புதிராகவே இருந்து வருகின்றது…

 


===========================================
1960 , மர்லின் மன்றோ இறப்பதற்கு சரியாக இரண்டு வருடங்கள், ஏலுறு , ஆந்திரா பிரதேசத்தில் விஜயலட்சுமி என்ற பெயரில் டிசம்பர் 2 ஆம் தேதி ஒரு பெண் குழந்தை பிறந்தது. சிறு வயதில் குடும்ப சுழல் காரணமாக பெற்றோரால் படிப்பை நிறுத்தப் பட்டு, அறியாத வயதில் திருமணமும் செய்து வைத்தனர், கணவன் மற்றும் மாமியார் கொடுமையால், அங்கிருந்து தப்பித்து சென்னைக்கு புறப்பட்டு வந்தார் விஜயலட்சுமி. அன்றிலிருந்து அவர் வாழ்கையில் ஒரு திருப்பு முனை ஏற்பட்டது. , தமிழகத்தை தன் கவர்ச்சியாலும், காந்த கண்களினாலும் சுண்டி இழுத்தவர் , அவர் தான் விஜயலட்சுமி என்கின்ற சில்க் சுமிதா.


ஆனால் இவரின் கவர்ச்சியான தோற்றத்திற்கும், கவர்ச்சியான நடிப்பிற்கும் முகம் சுழித்தவர்களும் இருந்தனர், ஐடம் கேர்ள் நடனம் மட்டும் ஆடும் பெண்களிடையே சில்க் தான் என்றும் டாப், அதோடு மட்டும் அல்லாமல் சில்க் பல படங்களில் நடித்தும் உள்ளார், அற்புதமான நடிகையும் கூட அவர்…

சுமித்தாவின் வாழ்க்கை புரியாத புதிராகவே இருந்து வந்தது, அவரின் தனிப் பட்ட வாழ்க்கை இன்று வரை மர்ம முடிச்சுகள் அவிழப் படாமல் இருகின்றது , அவர் தற்கொலை செய்துக் கொண்ட பின், ஏற தாழ அவரைப் பற்றி தமிழ் மக்களும் சினிமா துறையும் மறந்து போனது, தீடிரென பாலிவுட்டில் அவரின் சுய சரிதை படமாக்கப்படுவதாகவும், படத்தில் சோகம் தோய்ந்த முகத்துடன், ஒரு குடும்ப பெண்ணாக ( பரிநீதா ) போன்ற படங்களில் நடித்த வித்யா பாலன் நடிப்பதாகவும் சொன்னார்கள் , இது ஒரு நல்ல தேர்வே இல்லை, சில்கு எவ்வளவு அழகு, சில்கின் நடை, உடை, அவளின் தோற்றம், நிறம் எல்லாமே ஒரு அழகு, என்று பல பேர் தங்களின் கருத்தை முன் வைத்தார்கள்,


இது ஒரு புறம் இருக்கட்டும், இன்றைய நவீன காலத்து பெண்கள் ” Dusky ” என்று கூறப் படும் மாநிறத்தை விரும்புகின்றனர், தீபிகா படுகோனே, கஜோல், ராணி முகர்ஜி போன்றவர்கள் ” Dusky beauty ” என்றும் சிலரால் அழைக்கப் படுவது உண்டு. ஆனால், நம் தமிழ் சினிமா, இதை ஒரு தலை முறைக்கு முன்பாகவே அறிமுகப் படுத்திவிட்டது. சில்க் சுண்டி இழக்கும் நிறம் இல்லை, மாநிறம் தான், இப்பொழுதுக்கான சொல்லாடல்களில் சொல்லபோனால் ” Dusky Beauty :, இன்றைய நவீன பெண்கள் தங்களின் நாரிகம், உடை ஆகிய அனைத்தையும் தாங்கள் தேர்வு செய்வதற்கான சுதந்திரத்தைப் பெற்று இருகின்றனர், அதை அன்றே பெற்று இருந்தார் சில்கு, சில்கின் வாழ்க்கையிலிருந்து அறிவது என்ன வென்றால் அவர் நிச்சயமாக ஒரு தைரியமான, சுயமாக முடிவெடுக்கும் ,பெண்ணாக இருந்து இருத்தல் வேண்டும், மிக அழுத்தமான பெண்ணாகவும் இருந்திருத்தல் வேண்டும்.


யாரும் எளிதாக செய்ய தயங்கும் கவர்ச்சி வேடங்களில் சில்க் செய்தார் என்பதால் பல பேர் அவரை வெக்கம் இல்லாதவள் , மானம் கேட்டவள் என்றும் பட்டமளித்தனர், ஆனால் அப்படி அவர் செய்வதற்கு அவர் எத்தகைய துணிச்சலான பெண்ணாக இருந்து இருப்பார் என்பது வியப்பை அளிக்கின்றது. இதிலென்ன துணிச்சல் வேண்டும் ? என்பவர்களுக்கு, சில்க் சிறிய வயதில் பல்வேறு துன்பங்கள் அனுபவித்து அந்த அனுபவங்களின் தாக்கம் கலைத் துறையில் அவர் எந்த கதாப் பாத்திரத்தையும் ஏற்று நடிப்பதற்கான மன உறுதியை வெளிப்படுத்தியது,

இன்றைய சுழலில் நடிகைகளின் வாழ்க்கை வேறுவிதமாக அமைந்துள்ளது. பெற்றோர்களே அவர்களை ஊக்குவிக்கிறார்கள் , வித்யா பாலன் சில்கைப் போல் நடித்ததற்கு அவரை முதலில் பாராட்டியது வித்யா பலானின் தந்தை, ஆனால் சில்கிற்கு மிஞ்சியது வெறும் மரணம் என்னும் கோர பிடித்தான்.

அன்றைய காலகட்டத்தில் சில்க் சுமிதா அருவெறுப்புடனும் , சில்க் சுமிதாவை ரசிப்பவர்கள் எல்லாம் கெட்டவர்கள் என்றும் இருந்தது, அது இன்று வரை தொடர்கிறது, ஆனால் சில்க் சுமிதாவின் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்த ஒரு பெண்ணுக்கு பரிசும் பாராட்டும், பட்டங்களும், கோடிகளும்… பல பேர் வித்யா பாலனின் இந்த முயற்சிக்கு , ” She is courageous to take up this stand “, என்றனர் , நான் மறுக்கவில்லை, ஆனால் ஒருவராக நடிக்கும் ஒருவருக்கு இத்தனை புகழ் என்றால், வாழ்ந்தவருக்கு ஏன் அப்படி இல்லை? ஏன் சில்க்கை பார்க்கும் போது எல்லோருக்கும் பாலியல் குறித்த எண்ணமும், கேவலமான சிந்தனையும் மட்டும் தோன்றுகிறது ? என்றால் நாம் எதையும் எப்படி சொல்லப் பட்டதோ அப்படியே ஏற்கும் மனப் பான்மையில் உள்ளோம் என்பதற்கான அறிகுறியே ..

மெர்லின் மன்றோவிற்கும் ..சுமித்தாவின் வாழ்க்கையும் ஏற தாழ ஒரே சூழ்நிலைகள் தான். சிறு வயதில் வறுமை, புறக்கணிப்பு, திருமணம், திருப்புமுனை, மரணம். ஆனால் இடைப்பட்ட வாழ்க்கையில் மெர்லின் மன்றோவிற்கும் சில்க்குக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன,

மெர்லின் மன்றோ அமெரிக்காவின் ஒரு அழகு தேவதையாகவும், கவர்ச்சி கண்ணியாகவும் கருதப்பட்டார் , இன்றளவும் அவருக்கு பல கோடி பேர் ரசிகர்கள், ஆனால் சில்க் இன்று நம்மிடையே மறைந்து போய் விட்டார்… அவரின் ரசிகர் என்று சொல்வதற்கு கூட தயங்குகிறார்கள்….

சில்க் 1996 , தூக்கில் இட்டு தற்கொலை செய்துக் கொண்டார், இவர் மரணத்தில் மர்மங்களின் முடிச்சுகள் அவிழப்படாமல் உள்ளது, பலர் காதல் தோல்வியென்றும், பாலியில் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறுகின்றனர் , எது எப்படி இருந்தாலும் . ஆந்திராவில் பிறந்து தமிழகம் கண்டெடுத்த சில்க் சுமிதா தமிழ் நாட்டின் மெர்லின் மன்றோ….

சிதைய ஆரம்பித்திருக்கும் மாணவ சமுதாயம்

முன்பெல்லாம் எவ்வளவோ பராவாயில்லை, மாண்வர்களிடம் இருக்கும் தீராத பிரச்சனை என்றால் அது காதல் தோல்வியால் தற்கொலை அல்லது பெண்களை கேலி செய்வது போன்றவை தான். ஆனால் இப்போது தமிழ்னாட்டில் பெருகி வரும் முறைகேடான கள்ள காதலுக்கு மாணவர்களும் பலியாவது பற்றி நினைக்கும் போது மனதுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் கடந்த ஆறு ஆண்டுகளில் நடந்த மருத்துவ பரிசோதனையில் 320 மாணவிகள் கர்ப்பமாக இருப்பதாக அதிர்ச்சிகரமான உண்மை தெரியவந்துள்ளது. அதை விட அபாயகரமான அறிக்கை ஒன்றை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டு உள்ளது. இந்திய அளவில் கடந்த ஆண்டில் மட்டும் 7,379 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும், சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது அந்த அறிக்கை.
முன்பெல்லாம் இது போன்ற விசயங்களை கேள்வி படும் போது எங்கோ வெளி நாட்டிலோ அல்லது வடனாட்டிலோ நடக்கிறது என்று கதை பேசி கொண்டு இருப்போம், ஆனால் இது போன்ற ஒழுக்கங்கெட்ட விசயங்கள் இப்போது தமிழ் நாட்டில் பெருகி வருகிறது.
இதற்கெல்லாம் யாரை குற்றம் சுமத்துவது? எதை காரணமாக எடுத்துக் கொள்வது என்பது புரியாத புதிராக உள்ளது. அதிக பட்சம் மோசமான விசயங்களை கற்று கொடுக்கும் ஊடகங்களை குறை சொல்லாலாம். இன்றைய கால கட்டத்தில் பாடப்புத்தகங்களில் உள்ள சிரமங்களைவிட பாலியல் ரீதியான சிரமங்கள்தான் மாணவர்களுக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது.இதற்கு என்ன செய்ய போகிறோம்?
மாணவிகளுக்கு பாலியல் துன்பங்கள் தரும் ஆசிரியர்களைப் பற்றித்தான் அதிகம் வெளியாகிவந்தது. மாணவியை திருமணம் செய்து ஆசிரியர்களைப் பற்றித்தான் அதிகம் கேள்விப்பட்டிருந்த தமிழ்நாட்டில் ஆசிரியை ஒருவர் 17 வயது மாணவனை காதலித்து அவனை திருமணம் செய்துகொள்வதற்காக ஊரைவிட்டு ஓடிய சம்பவம் தமிழ்நாட்டு ஆசிரியைகளிடையே அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. 
தமிழ்நாட்டுக்கு இது புதுசு
மாணவனை காதலித்த ஆசிரியை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் அல்ல. அவர் வடநாட்டைச் சேர்ந்தவர். வடநாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கனவே நிகழ்ந்துள்ளன. 2010 ம் ஆண்டு 27 வயது ஆசிரியை ஒருவர் 16 வயது பள்ளி மாணவனை திருமணம் செய்து கொண்ட சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது. அதேபோல் ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்தில் 8 வது படிக்கும் மாணவனை ஆசிரியை ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவமும் நடந்துள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாக அரசல் புரசலாக நடந்த போது அதிர்ச்சியடையாத பெற்றோர்கள் தமிழ்நாட்டில் அதேபோல சம்பவம் நடந்த உடன் மாணவர்களைப் பற்றி கவலைப்பட ஆரம்பித்துவிட்டனர்.
மாணவனுடன் ஓடிய ஆசிரியை டெல்லியில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது கூட அவரது செயலை நினைத்து எந்த வித கவலையும் பட்டதாக தெரியவில்லை. மாணவனுடனான காதலை (!) வெளிப்படையாக தெரிவித்ததோடு அவனுடன் பழகும் போது பதினாறு வயது பெண்ணாக உணர்வதாக கூறியுள்ளார். இந்த காதலை எந்த வரிசையில் சேர்ப்பது?.
இந்த முறை தவறிய காதல் குறித்து கருத்து கூறியுள்ள ஆசிரியைகள், மாணவன்தான் முதலில் சபலப்பட்டான் என்று கூறினாலும் அவனை நல்வழிப்படுத்தவேண்டியது ஆசிரியையின் கடமைதானே ஒழிய அவனை பயன்படுத்திக்கொண்டது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்புகின்றனர்.
தெய்வத்திற்கு சமம்
ஆசான் என்பவர் தெய்வத்தை விட முதன்மையானவர். வாழ்க்கைக்குத் தேவையான கல்வியை கற்றுக்கொடுத்து நல்வழிப்படுத்துவதுதான் ஆசிரியர்களின் தலையாய பணி. அதை விடுத்து கற்றுகொடுக்க வேண்டிய ஆசிரியைகளே தடம்மாறிப் போவதனால்தான் மாணவர் சமுதாயமும் தடுமாறும் சூழல் ஏற்பட்டுள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
2011 ஆம் ஆண்டு இணையதளப் பயன்பாடு குறித்து நடைபெற்ற ஆய்வு ஒன்றில் உலக அளவில் இந்தியாவும், மாநில அளவில் தமிழ்நாடும் முதலிடத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது. அதேசமயம் மாணவர்கள் அதிக அளவில் இணையதளத்தில் தேடிய வார்த்தை செக்ஸ் என்பது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு யாரை குற்றம் சொல்வது?.
காதல் பற்றியும், செக்ஸ் பற்றியும் பேசக்கூடாது என்று நினைக்கும் சமூகத்தில் இருந்து வரும் மாணவர்கள்தான் இணையதளத்தின் வாயிலாகவும், ஊடகங்களின் வாயிலாகவும் அவற்றை கற்றுக்கொள்கின்றனர். அரைகுறையாக தெரிந்து கொண்டு காதல் வலையில் சிக்கும் மாணவிகள்தான் கர்ப்பமாகி தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். பாலியல் சுழலில் சிக்கி ஒரு சில மாணவிகள் மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றனர்.
மாணவ-மாணவிகளுக்கு பாலியல் குறித்த புரிதல் தேவையானதாக இருக்கிறது. எனவே பிரச்சினைகளை எவ்வாறு கையாளுவதை என்பதை கற்றுக்கொடுக்கும் கடமை ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
எங்கே போயின நீதி போதனைகள்?
பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புக்களை எடுத்தால் மட்டும் போதாது மாணவர்களுக்கு பாலின ஈர்ப்பு, ஹார்மோன்களின் செயல்பாடு, தொடுதல், நட்பு, காதல் பற்றியும் புரிகிற மாதிரி விளக்கவேண்டும் என்றும் அவர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.
பள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாலியல் கல்வி குறித்து கற்றுத் தர சில ஆசிரியைகள் தயாராக இல்லை என்றாலும் மாணவர்களின் நலன் கருதி படிப்படியாக தமிழ்நாட்டில் பாலியல் கல்வியை அறிமுகம் செய்யவேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக உள்ளது.
முதலில் பெற்றோர்களும், ஆசிரியர்களும் பாடப்புத்தகங்களைத் தாண்டி பள்ளி மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்தினால் மட்டுமே எதிர்கால சமுதாயம் வளமானதாக இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.

அடம்பிடிக்கும் ஆசிரியை, அவனுக்காக காத்திருப்பேன் – இதற்கு பெயரும் காதாலாம்?

இதுபோல் மைனர் பசங்களின் வாழ்க்கையை கெடுக்கும் பெண்களிடம் நான் கேட்க விரும்பும் கேள்வி “ஊர்ல பொன்னுங்க பின்னாடி சுத்தறதுக்குனு ஒரு கும்பல் இருக்கு, அதுல ஒருத்தனை கூட்டிட்டி போக வெண்டியதுதானே? யார் கேட்க போறாங்க? எதுக்கு இப்படி படிக்கற பையன் வாழ்க்கைல மண் அள்ளி போடனும்?” சரி நாம சொன்னா யார் கேட்க போறா? அந்த மரியதைக்குறிய ஆசிரியை என்ன சொல்றாங்கனு பார்ப்போம்.
என்னால் மாணவனைப் பிரிந்திருக்க முடியாது. அதேபோல அவனாலும் என்னை விட்டுப் பிரிந்து வாழ முடியாது. அவனுக்கு 21 வயது வரும் வரை காத்திருப்பேன். அதற்குப் பிறகு சேர்ந்து வாழ்வேன். அதுவரை அவனை எனது மகன் போல பார்த்துக் கொள்வேன் என்று முறை தவறிய உறவால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சென்னையைச் சேர்ந்த 37 வயது ஆசிரியை குமுது கூறியுள்ளார்.
சமீபத்தில் சென்னையை அதிர வைத்த சம்பவம் 17 வயது மாணவனுடன், 37 வயது ஆசிரியை வீட்டை விட்டு ஓடிப் போன விவகாரம். அந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியை குமுதுவையும், மாணவனையும், கடும் சிரமத்திற்குப் பின்னர் போலீஸார் டெல்லியில் வைத்து கைது செய்தனர்.
இருவரும் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டனர். பின்னர் குமுதுவை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாணவனை சிறார் சீர்திருத்த காப்பகத்தில் அடைத்தனர்.
மைனர் பையனை கூட்டிச் சென்றதால் ஆசிரியை குமுது மீது கடத்தல் வழக்கைப் போலீஸார் பதிவு செய்துள்ளனர். மாணவனுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் மாணவனைப் பிரிந்து பெரும் வேதனையில் இருக்கிறாராம் ஆசிரியை குமுது. இதுகுறித்து அவர் சிறை அதிகாரிகளிடம் கூறுகையில், நாங்கள் பழகுவதில் இத்தனை சட்ட சிக்கல் இருக்கும் என தெரியவில்லை. இருந்தாலும் மாணவனுக்கு 21 வயது ஆகும் வரை நான் காத்திருப்பேன்.
வாழ்ந்தால் அவனோடு தான் வாழ்வேன். மாணவனை என் மகன் போல் பார்த்து கொள்வேன். என்னை, மாணவன் நெடுநாள் பிரிந்து இருக்க மாட்டான் என்கிறாராம் ஆசிரியை குமுது.
குமுது வட மாநிலத்தைச் சேர்ந்தவர். சென்னையில் உள்ள பள்ளியில் இந்தி ஆசிரியையாக இருந்து வந்தார். அவர் வேலை பார்த்த பள்ளியில் பிளஸ் ஒன் படித்தவன்தான் அந்த 17 வயது மாணவன்.
மாணவனுடன் தனக்கு ஏற்பட்ட முறை தவறிய உறவு குறித்து முன்னதாக ஆசிரியை குமுது அளித்த வாக்குமூலத்தில்…
நான் வேலை பார்த்த பள்ளியில் 7 மற்றும் 8-வது வகுப்புகளுக்கு இந்தி பாடம் சொல்லிக்கொடுப்பேன். எனக்கு பெற்றொர் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தனர். எனக்கும், எனது கணவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை போட்டுக்கொள்வோம்.
கடந்த செப்டம்பர் மாதம் எனது கணவர் சிறிய மனத்தாங்கலில் என்னைவிட்டு பிரிந்து, அவரது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார். நான் தனிமையில் மிகவும் அவதிப்பட்டேன். அப்போதுதான் மாணவனுடன் அறிமுகம் ஏற்பட்டது. செப்டம்பர் மாதம் பள்ளியில் ஒரு கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் ஒரு நாடகம் நடத்தப்பட்டது. நாடகத்தில் மாணவனும் நடித்தான். நான்தான் நாடக ஒத்திகை சொல்லிக் கொடுத்தேன்.
எதேச்சையாக கட்டிப்பிடித்து காதல் வயப்பட்டோம்
அப்போது நாங்கள் இருவரும் ஏதேச்சையாக கட்டிப்பிடித்து விட்டோம். அந்த முதல் ஸ்பரிசம் என்னை மின்சாரம் தாக்கியதுபோல் தாக்கிவிட்டது. அதில் இருந்து நாங்கள் இருவரும் காதல் வயப்பட்டோம். இருந்தாலும், அவன்தான் முதலில் காதலை சொன்னான். எனது அழகை அவன் வர்ணிப்பான். அவன் வகுப்பில் முதல் மாணவர். நான் அதை பாராட்டுவதுபோல அவனை புகழ்ந்து பேசுவேன். இப்படியாக காதல் வளர்ந்தது.
16 வயது மாணவியாக உணர்வேன்
எனது கணவர் வீட்டில் இல்லாதது, எங்களுக்குள் காதல் மேலும் வளர ஒரு தூண்டுதலாக இருந்தது. நான் அவனை சந்திக்கும்போதெல்லாம் என்னை ஒரு 16 வயது மாணவியைப்போல மனதுக்குள் நினைத்துக்கொள்வேன். அவன் பிளஸ்-1 வகுப்பு என்பதால் எங்களால் அடிக்கடி பார்த்துக்கொள்ள முடியாது. பள்ளி முடிந்து வீடு செல்லும்போது, இருவரும் பார்த்து பேசிக்கொள்வோம். செப்டம்பர் மாத கடைசியில் ஒரு நாள் அவனை எனது வீட்டுக்கு வருமாறு அழைத்தேன். அந்த சந்திப்புதான் எங்களை காதலோடு, நிறுத்தாமல் உடல் ரீதியாகவும் இணைய வைத்தது.
அதன்பிறகு இருவரும் அடிக்கடி எனது வீட்டில் சந்தித்து உல்லாசத்தை பகிர்ந்து கொண்டோம். செல்போனில் இரவு நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருப்போம். எங்கள் காதல் விவகாரம் அவனது தந்தைக்கு தெரிந்துவிட்டது. அவர் என் மீது போலீசில் புகார் கொடுத்துவிட்டார். பின்னர் சமாதானமாக பேசி முடித்து விட்டனர். அதன்பிறகு அவனை பள்ளிக்குவர அவனது தந்தை தடை போட்டு விட்டார். அவனை செல்போனில் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை. நான் மிகவும் தவித்த நிலையில் இருந்தேன்.
இந்த நிலையில்தான், கடந்த பிப்ரவரி மாதம் 26, 27, 28 ஆகிய 3 நாட்களும், பள்ளி பிராக்டிக்கல் வகுப்பில் கலந்துகொள்ள வந்தான். அப்போது நாங்கள் மீண்டும் சந்தித்துக்கொண்டோம். மீண்டும் நாங்கள் காதல் வானில் சிறகடித்து பறந்தோம்.
எல்லாவற்றையும் மறந்தோம்..உல்லாசத்தை முடிவு செய்தோம்
இந்த சந்தர்ப்பத்தை நழுவவிட்டால், நாம் மீண்டும் சேர முடியாது, இதில் நாம் சேர்ந்து வாழ நல்ல முடிவு எடுத்தாக வேண்டும் என்று அவன் கூறினான். நாங்கள் அப்போது வயது வித்தியாசத்தை பார்க்கவில்லை. போலீஸ் மற்றும் சட்டம் பற்றி சிந்திக்கவில்லை. மாணவர்-ஆசிரியை என்ற மதிப்புமிக்க உறவு பற்றியும் நாங்கள் மறந்துவிட்டோம். சென்னையை விட்டு, வெளியேறி உல்லாச வாழ்க்கையில் மிதக்க முடிவு செய்தோம்.
நான் ரூ.60 ஆயிரம் செலவுக்கு பணம் எடுத்துக்கொண்டேன். இருவரும் கடந்த 4-ந் தேதி அன்று புதுச்சேரிக்கு பஸ்சில் சென்றோம். நாங்கள் செய்த காரியம் எவ்வளவு பெரிய தவறான காரியம் என்பது பற்றி நினைக்கவில்லை. அதன்பிறகு கோவை, சேலம் ஆகிய ஊர்களுக்கும் சென்றோம். அங்கு லாட்ஜுகளில் தங்கி சந்தோஷமாக இருந்தோம். அதன்பின் நாக்பூர், டெல்லி வழியாக ஜம்மு சென்றோம். ஜம்முவில் வைஷ்ணவி கோவிலில் தங்கி இருந்தோம்.
இதற்குள் செலவுக்கு நான் எடுத்துச்சென்ற பணம் தீர்ந்து போனது. சென்னையில் உள்ள எனது தங்கைக்கு போன் செய்து உதவி கேட்டேன். அவள் டெல்லியில் அவளது தோழி வீட்டுக்கு செல்லுமாறு கூறினாள். அதன்படி டெல்லி சென்றோம். அங்கு எனது தங்கையின் தோழி எங்களை ஏமாற்றி விமானத்தில் சென்னை அழைத்து வந்து விட்டார். இங்கு போலீசார் எங்களை பிடித்துவிட்டனர்.
எனக்கு எதை பற்றியும் கவலை இல்லை. எங்கள் காதலை வாழவிடுங்கள். இனி எனது கணவருடன் சேரமாட்டேன். வாழ்ந்தால் அவனோடு வாழ்வேன். அவன் கிடைக்காவிட்டால் நான் செத்து மடிவேன். அவனுக்கு 21 வயது முடியும்வரை நான் காத்திருப்பேன் என்றார் குமுது.
இதேபோலத்தான் அந்த மாணவனும் கூறி வருவதாக தெரிகிறது. மாணவனுக்கு தற்போது கவுன்சிலிங் கொடுத்து வருகின்றனராம். இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. நிஜத்தை உணர ஆரம்பித்துள்ளானாம் அந்த மாணவன்.
முன்னதாக நேற்று கோர்ட்டில் ஆசிரியை குமுதுவை ஆஜர்படுத்தினர் போலீஸார். அப்போது அவர் கதறி அழுதபடி இருந்தார். மயங்கியும் விழுந்தார். அவருக்கு சூடான டீ வாங்கிக் கொடுத்து போலீஸார் அமைதிப்படுத்தினர். அப்படியும் கூட அவர் அழுதபடிதான் இருந்தார்.
என்ன சொல்வதென்று தெரியவில்லை…!

chatting-ல் figure ஐ கரெக்ட் செய்வது எப்படி? “சொத்தை பொன்னு” குறும்படம்


அன்பு நண்பர்களே, நானும் ஏதாவது உருப்படியா சொந்தமா எழுதனும்னு தாங்க நினைக்கறேன், எதுவும் வர மாட்டெங்குது, ஏதாவது தோணும் போது கரென்ட் இருக்க மாட்டேங்குது, முதல்ல வீட்ல சொல்லி ups போடனும், உண்மைலியே நீங்க நம்பறிங்களோ இல்லையோ நான் கொஞ்சம் உருப்படியா பேசுவேன், எழுதுவேன்னு கொஞ்சம் பேரி சொன்னதை நம்பி  BLOG ஆரம்பிச்சுட்டேன், ஆனா எந்த மாதிரி விசயம் எல்லாருக்கும் பிடிக்கும் நு தெரியாமமுழிச்சுட்டு இருக்கேன், விடுங்க எப்படியாவது நல்ல நல்ல வலைப்பதிவர்களோட BLOG படிச்சு படிச்சாவது கத்துக்கறேன்,  நம்ம தலைவர் சந்தானம் சொன்ன மாதிரி “PRACTICE MAKE A MAN PERFECT”, சரி கதைக்கு போலாம்.
இன்னைக்கு ஒரு குறும்படத்தை பத்தி பார்ப்போம், பெருசா ஒன்னும் மெசேஜ் சொல்லலை, குறும்படம் னாலே ஒன்னு மெசேஜ் இருக்கும் இல்ல லவ் அ பத்தி இருக்கும்,’சொத்தை பொன்னு’ங்கற டைட்டில் கொஞ்சம் புதுசா இருந்தது, எப்படியும் காமெடியா ஏதாவது ட்ரை பன்னிருப்பானுங்கனு பார்த்தேன்.
எடுத்ததும் ஒரு காலேஜ் கேண்டின் ல ஒரு கேங் அ காட்றாங்க, ஒருத்தன் சாப்பாட்டு ராமன், இன்னோருத்தன் பொன்னுங்களை பார்த்ததுக்கே பொங்கறவன், இந்த கேங்ல ஒருத்தன் புதுசா ஒரு பொன்னை மடக்கி கடலை போட்டுட்டு இருக்கான், ‘எப்புடிறா புடிச்ச?’னா “FACEBOOK” மூலமானு சொல்லி என்னென்ன மாதிரி ஸ்டெப் எடுக்கனும்னு கரெக்ட் பன்ன சொல்லி குடுக்கறான்.

 இதை கேட்டு வீணாப் போகத்தான் என்னை மாதி அப்பாவி பசங்க ( நான் அப்பாவி தாங்க)நிறைய பேர் இருக்காங்களே, அந்த அப்பாவியும் ஃஃபேஸ்புக் ல தேடி தேடி ஒரு பொன்னை ஃப்ரெண்ட் பிடிச்சு இராப்பகலா கடலை போட்றான், நேர்ல பார்க்கவும் ஒத்துக்க வச்சுட்றான். போய் நேர்ல பார்க்கும் போது ஒரு ட்விஸ்ட், என்னங்கறத, நேர்ல பார்த்துக்கங்க.ரொம்ப பெரிய ட்விஸ்ட் லாம் எதிர்பார்த்துறாதிங்க, என்னை பொறுத்த வரைக்கும் உண்மைலியே கதையே இல்லாம, ஒரு குறும்படத்தை போர் அடிக்காம சொன்னதுக்கு பாராட்டியே ஆகனுங்க, நீங்க படம் பார்த்து திட்டறதுனா தாராளமா என்னையோ இல்லை இந்த படம் எடுத்தவனையோ திட்டிக்கலாம், தப்பு இல்லை,
உங்கள் திட்டுக்கள் வரவேற்க படுகின்றன, நானும் எப்படியாவது ஏதாவது எழுத கத்துக்கனும்னு நினைக்கறேன், முடிய மாட்டேங்குது, ஆனா கத்துக்காம விட மாட்டேன்.
அது வரைக்கும் என் மொக்கையான பதிவுகளை நீங்க படிச்சுதான் ஆகனும்.
இப்ப போறேன்.
ஆனா திரும்பி
………………..
…………………
……………………..
வருவேன்.
நன்றி

தாகத்தை தணிக்க மட்டுமல்ல தர்பூசணி… ஆண்களுக்கு அவசியமானது

கோடையில் தாகத்தை தணிக்க பலரும் தர்பூசணியின் தயவை நாடுவது வழக்கம். சாலையோர கடைகளிலும், கோடைகால சிறப்பு ஸ்டால்களிலும் காணக்கிடைக்கும் தர்பூசணி பழத்திற்கு தாகம் தணிக்கும் சக்தியோடு ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு என்பதை அமெரிக்காவில் உள்ள இந்திய மருத்துவர் ஒருவரின் தலைமையிலான மருத்துவக் குழு மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது. ஆண்மையை அதிகரிப்பதில் வயாகரா மாத்திரையின் சக்தியை விட அதிகமான சக்தி தர்பூசணி பழத்துக்கு உள்ளதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கோடைகாலமும் தர்பூசணியும்
இயற்கையானது அந்தந்த சீசனிற்கு ஏற்ப பழங்களையும், காய்கறிகளையும் விளைவிக்கிறது. கோடையில் உஷ்ணத்தை சமாளிக்க இயற்கை அளித்துள்ள மிகப்பெரும் கொடை தர்பூசணிப் பழம். இது உடலுக்குக் குளிர்ச்சியை தருவதோடு எண்ணற்ற நன்மைகளையும் தருகிறது.
தர்பூசணியில் உள்ள சத்துக்கள்
தர்பூசணி பழத்தில் இரும்பு சத்து அதிகம் காணப்படுகிறது. பசலைக்கீரைக்கு சமமான அளவு இரும்புச் சத்து அதிகம் உள்ளது. இதில் வைட்டமின் சி, வைட்டமின் ஏயும் காணப்படுகின்றன. வைட்டமின் பி6, வைட்டமின் பி1 உள்ளன. மேலும் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் காணப்படுகின்றன.
இயற்கை வயாக்கரா
தர்பூசணி பழம் ஓர் இயற்கையான ‘வயாக்ரா’ என்பது தான்.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் ஏ&எம் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் இம்ப்ரூவ்மெண்ட் மையத்தின் இயக்குனரான பீமு பாட்டீல் என்பவர் தர்பூசணி பழம் குறித்து மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு வியக்கத்தக்க தகவல்கள் தெரியவந்துள்ளன. அதாவது, ஒரு வயாக்ரா மாத்திரையில் அடங்கியுள்ள சக்தி, தர்பூசணி பழத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது.
தர்பூசணியில் வெறும் தண்ணீர் சத்துதான் உள்ளது. அதில் வேறு சத்து எதுவும் இல்லை என்று கூறி வந்தவர்களுக்கு இந்த புதிய தகவல் ஒரு இன்ப அதிர்ச்சியாகும். தர்பூசணிக்கு `ஆசையை’ அதிகரிக்கும் ஆற்றலும் கூட உள்ளதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
தர்ப்பூசணியில் உள்ள ஃபைட்டோ – நியூட்ரியன்ட்ஸ் என்ற சத்துக்கள், உடம்பை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றன. இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது.
தர்பூசணியில் உள்ள `சிட்ரூலின்’ என்ற சத்துபொருள், வயாகராவை போல் ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்குமாம்.
இதயநோயாளிகளுக்கும் நன்மை
தர்பூசணியை சாப்பிட்ட பிறகு, ஏற்படும் வேதியல் மாற்றம் காரணமாக `சிட்ரூலின்’, `அர்ஜினைனாக’ எனும் வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது. அது இதயத்துக்கும், ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த சிட்ரூலின்-அர்ஜினைன் வேதி மாற்றமானது, சர்க்கரை நோய்க்காரர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை செய்கிறதாம். இதில், முக்கியமானது என்னவென்றால், தர்பூசணியில் உள்ள மேல்பகுதி அதாவது, வெண்மை பகுதியில்தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
நம் ஊரில் தாகம் தணிக்க தர்பூசணி பழத்தின், சிவப்பு பகுதியை மட்டும், கத்தியால் செதுக்கி எடுத்து, விதைகளை நீக்கி விட்டு சாப்பிடுவார்கள். இல்லையெனில் பாழத்தை துண்டுகளாக்கி சிறிது உப்பும், மிளகுத்தூளும் அதன் மேல் தூவி சாப்பிடுவார்கள். மேலும் பழ ரசமாகவும் சாப்பிடுவார்கள். ஆனால் இந்த கட்டுரையை படித்த பின்னர் பழத்தின் சிவப்பு பகுதியை விட்டு விட்டு வெண்மை பகுதியைத்தான் அதிகம் சாப்பிடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

சாஃப்ட்வேர் பெண்கள் எதிர்பார்க்கும் மாப்பிள்ளைக்கான தகுதிகள்

சாப்ட்வேர்ல வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன்ல அவுங்க அப்பா, அம்மா கதி கலங்கி நம்ம நாரதர் நாயுடு கிட்ட கூப்பிட்டு வராங்க. அந்த பொண்ணுக்கு ஏதாவது பேரு வைக்கனுமே. வித்யா வெச்சிடுவோம்.நாரதர் நாயுடு: வாம்மா வித்யா. நீ போட்ட கண்டிஷன்ல உங்க அப்பா, அம்மாக்கு ஒரு மாசமா சாப்பாடே இறங்கலயாமே. எங்க அந்த கண்டிஷனெல்லாம் எங்கிட்ட சொல்லும்மா. நான் நல்ல பையனா பாக்கறேன்.

வித்யா: நான் MCA படிச்சிருக்கேன்.

நா.நா: அதுக்கென்னம்மா. ஒரு நல்ல இஞ்சினியர் படிச்ச பையனா பார்த்துடலாம்.
வித்யா: BE படிச்ச பையனா? அது UG தானே. நான் PG
படிச்சிருக்கேனே.

நா.நா: சரிம்மா. ME படிச்ச மாப்பிள்ளையா பார்த்துடுவோம்.

வித்யா: ME MCAவைவிட பெரிய படிப்புனு என்னை மட்டம் தட்டுவாரே.

நா.நா: சரிம்மா. அப்ப MCA படிச்சவரே பார்த்துடலாம்.

வித்யா: எனக்கு சமமா மாப்பிள்ளை பார்த்தா, என் மதிப்பு குறைஞ்சிடுமே.

நா.நா: என்னம்மா, BE படிச்ச மாப்பிள்ளைனா வேண்டாங்கற, ME, MCAவும் வேண்டாங்கிற.
அப்ப என்ன தான் படிச்சிருக்கனும்.

வித்யா: PG பண்ணிருக்கனும். ஆனா அது 6 வருஷ கோர்ஸா இருக்க கூடாது. MSc Software
Engineering இந்த மாதிரி ஏதாவது 5 வருஷம் படிச்சிருக்கனும்.

நா.நா: முதல் கண்டிஷனே சூப்பரா இருக்குமா. அடுத்து

வித்யா: எனக்கு என் கெரியர் தான் முக்கியம்?

நா.நா: டிபன் கெரியரா? அதுக்கென்னமா நல்லதா பார்த்து வாங்கி தர சொல்றேன்.

வித்யா: அங்கிள். நான் சொல்றது என்னோட ப்ரஃபஷன். எந்த காரணத்துக்காகவும் என்னை வேலையை விட சொல்லக்கூடாது.

நா.நா: சரிம்மா. அதுக்கென்ன, வேலைக்கு போற பொண்ணு வேண்டும்னு சொல்ற மாப்பிள்ளையை பார்த்துட்டா போகுது.

வித்யா: அப்படி கண்டிஷன் போடற மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம். இப்படி சொல்ற மாப்பிள்ளை நாளைக்கே மாற வாய்ப்பிருக்கு. அவர் இஷ்டப்படறார்னு எல்லாம் நான்
வேலைக்கு போக முடியாது. என் இஷ்டப்படி தான் நான்
வேலைக்கு போவேன்.

நா.நா: சரிம்மா. உன் இஷ்டப்படி விடற மாப்பிள்ளையே பார்த்துட்டா போச்சு.

வித்யா: கண்டிஷன் நம்பர் 3. பையன் என் கண்ணுக்கு பாக்கறதுக்கு சல்மான் கான் மாதிரி தெரியனும், பேசறதுல ஷாருக்கான் மாதிரி இருக்கனும், டேலண்ட்ல அமிர்கான்
மாதிரி இருக்கனும். ஆனா மத்தவங்க கண்ணுக்கு பார்க்கறதுக்கு விஜய் மாதிரி தெரியனும், பேசறதுல அஜித் மாதிரி தெரியனும், டெலண்ட்ல ரவி கிருஷ்ணா மாதிரி இருக்கனும்.

நா.நா : மொத்ததுல உன் கண்ணுக்கு ரெமோவா தெரியனும். மத்தவங்க கண்ணுக்கு மண்ணு லாரில ஆக்ஸிடெண்ட் ஆன சுமோவா தெரியனும். அப்படித்தானே?
வித்யா : ஆமாம். மாப்பிள்ளைக்கு குறைஞ்சது ஒரு 7-8 பேருக்காவது Non-Veg சமைக்க தெரியனும். ஏன்னா என் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் வீக் எண்ட் வீட்டுக்கு வருவாங்க. அவுங்களுக்கு எல்லாம் டேஸ்டா சமைக்க
தெரியனும். நானும் பக்கத்துல நின்னுட்டு
ரெசிப்பி எல்லாம் படிச்சி கைடன்ஸ் பண்ணுவேன். அதனால பயப்பட வேண்டாம்.

நா.நா: ஹிம்ம்ம்… கேஷ்மீரீ பிரியாணில இருந்து செட்டிநாடு சிக்கன் வரைக்கும் செய்ய தெரிஞ்ச பையனா பிடிச்சிடுவோம்.

வித்யா: கண்டிஷன் நம்பர் 5. பையனுக்கு அமெரிக்கன் அக்செண்ட்ல பேச தெரிஞ்சிருக்கனும்.

நா.நா: ஏம்மா. நீ என்ன கால் சென்டருக்கா ஆள் எடுக்கற? விட்டா மதர் டங் இண்ஃப்ளூவன்ஸ் எல்லாம் இருக்க கூடாதுனு சொல்லுவ போல.

வித்யா: அதெல்லாம் இல்லை அங்கிள். இந்த தடவை எப்படியும் எனக்கு விசா கிடைச்சிடும். அங்க போனா கம்பெனில நான் எப்படியும் சமாளிச்சிக்குவேன். ஆனா
பார்ட்டிக்கெல்லாம் கூப்பிட்டு போனா அக்சண்ட்ல பேசனா தான் பெருமையா இருக்கும்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்.

நா.நா: சரிம்மா. நம்ம சப்போர்ட்ல
இருக்கற பையனா பார்த்து பிடிச்சிடுவோம். அடுத்த கண்டிஷன சொல்லு.

வித்யா: கண்டிஷன் நம்பர் 6. எந்த காரணத்தை கொண்டும் என்னை டிபண்டண்ட் வீசால
கூப்பிட்டு போக முயற்சி பண்ணக்கூடாது. எனக்கு வீசா கிடைச்சா அவர் விருப்பப்பட்டா என் கூட டிபண்டண்ட் வீசால வரலாம். அதுல எனக்கு எதுவும் பிரச்சனையில்லை.

நா.நா: சரிம்மா. உனக்கு தான் விசா கிடைச்சிடுமே. அப்பறம் என்ன?

வித்யா: இப்பவெல்லாம் விசா, லாட்ல பிக் அப் பண்றாங்க. எனக்கு கிடைக்காம போகவும்
வாய்ப்பிருக்கு. அதான்.
நா.நா: சரிம்மா. உன் கூடவே வர மாப்பிள்ளையையா பார்த்துடுவோம்.
வித்யா: இது தான் ரொம்ப முக்கியமான கண்டிஷன். நான் கொஞ்ச ஜாலி டைப். அதனால என் டீம்ல இருக்கற ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எனக்கு அடிக்கடி கால் பண்ணுவாங்க. அதை தப்பா நினைக்கக்கூடாது.

நா.நா: உன் பிரெண்ட்ஸ் கூட நீ பேசறதால என்னமா பிரச்சனை. உன் பிரெண்ட்ஸ் கூட அவர் அதிகமா பேசினா தானே பிரச்சனை.

வித்யா: அங்கிள். நான் சொல்ற பிரெண்ட்ஸ் எல்லாம் பசங்க. என்னைக்கு பொண்ணுங்க, மத்த பொண்ணுங்களுக்கு செலவு பண்ணி ஃபோன்ல பேசுவாங்க. எப்பவும் பசங்க தான் செலவு பண்ணி ஃபோன் பேசி, ஜாலியா மொக்கை போடுவாங்க.

நா.நா: சரிம்மா. நீ உன் பசங்க பிரெண்ட்ஸ் கிட்ட பேசும் போது பிரச்சனை பண்ணாம, அந்த பையனை அவனோட பிரெண்ட்ஸ் கிட்ட பேச சொல்லிடுவோம்.

வித்யா : நாங்க இந்தியால இருக்கற வரைக்கும் அவுங்க அப்பா, அம்மா எங்க வீட்டுக்கு சனிக்கிழமை ஃபுல் டே வந்து தங்கிட்டு போகலாம். ஆனா என்னை சமைக்க
சொல்லக்கூடாது.

நா.நா : இது ஒரு கண்டிஷனாம்மா. முதல் வாரம் நீ சமைச்சு போட்டா அவுங்க உன் வீட்டு பக்கமே தலை வைக்க மாட்டாங்க. இன்னும் ஏதாவது இருக்கா?

வித்யா: இது தான் கடைசி கண்டிஷன். எங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆகிடுச்சினா

நா.நா: ஏம்மா இப்படி அபசகுனமா பேசற. வாய கழுவும்மா.

வித்யா: இருங்க அங்கிள் சொல்லி முடிச்சிடறேன். ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ்
ஆகிடுச்சுனா அவர் கண்டிப்பா வேற கல்யாணம் பண்ணிக்கனும்.

நா.நா: இங்க தாம்மா. இங்க தாம்மா. நீ தமிழ் பொண்ணுனு நிருபிக்கற.

வித்யா: அதெல்லாம் இல்லை அங்கிள். அதுக்கப்பறம் அந்த பையன் எப்படி சந்தோஷமா இருக்கலாம். அதான்

நா.நா மயக்கம் போட்டு விழுகிறார்..

கலர்புல் லவ் ஸ்டோரி ‘BACHNA AE HASEENO’ விமர்சனம்

அன்புள்ள நண்பர்களுக்கு, ஏதோ கடிதம் எழுதுவது போலத்தான் துவங்க வருகிறது, இன்னும் பயிற்சி தேவையோ? சரி விசயத்துக்கு வருவோம், மறுபடியும் விமர்சனம் தாங்க, என்னமோ தெரியல நான் விமர்சனம் எழுதனும் நினைக்கற படத்துல வர ஹீரோ பொம்பளை பொறுக்கியா தாங்க வரான், அதுவுமில்ல்லாம எனக்கும் இது மாதிரி படம்தான் பிடிச்சு தொலையுது.
படத்தோட பேர் “BACHNA AE HASEENO” அப்படினா என்ன அர்த்தம் னு கேட்காதிங்க, சத்தியமா எனக்கு தெரியாது. இந்த ஹீரோ, டைரக்டரோட இன்னோரு படம் “ANJAANA ANJAANI” பார்த்தேன், பிடிச்சுருந்தது, அத பத்தி அடுத்த பதிவு ல எழுதறேன்.முதல்ல இத பார்ப்போம்.
படத்துல எனக்கு பிடிச்ச முதல் விசயம் 3 ஹீரோயின்,  இந்த ஒரு காரணம் போதாதா எனக்கு முழு படமும் பார்க்க, நம்ம ஊர் “நான் அவன் இல்லை” மாதிரி படத்தோட ஆரம்பத்திலேயே 3 ஹீரோயின் கூடவும் சேர்ந்து ஒரு பாட்டு வச்சுட்டாங்க,
 எனக்கு 3 பேரையுமே பிடிச்சுருக்குங்க, அடுத்ஹு ஹீரோ கதை சொல்ல ஆரம்பிக்கிறார், முதல்ல அவர் ஆட்டோகிராஃப் போட்டது 1996 ல, ஒரு ஃபாரின் ட்ரிப் ல ட்ரேய்ன் ல கியூட் ஆ ஒரு பொண்ண மீட் பன்றார், அடுத்து ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து எப்படி அதை கரெக்ட் பன்றதுனு பிளான் போட்றார், இதுல இவங்களுக்கு ஒரு கொள்கை, கடைசி வரைக்கும் எந்த பொன்னையும் கல்யாணம் பன்னாம சும்மா கரேக்ட் மட்டும் பன்னிட்டு கழட்டி விட்டுடனும்னு, அவருக்கு அதிர்ஸ்டம் அடிக்குது.
 ஹீரோவும் ஹீர்ரொயினும் சேர்ந்தாப்ல ட்ரேய்ன் அ மிஸ் பன்னிடறாங்க, இந்த ஹீரோயின் பத்தி சொல்ல மறந்துட்டனே, இவங்களுக்கும் ஒரு லட்சியம் இருக்கு, “dhilwae dhulhania lee jaainge” படத்துல வர ஷாருக் மாதிரி ஒரு கேரக்டர் அ கண்டுபிடிச்சு லவ் பண்ணி கல்யாணம் பன்னனும்னு, இந்த மாதிரி ஒரு ஃபிகருக்கு இப்படி ஒரு லட்சியம் இருக்குனு தெரிஞ்சா எந்த பையங்க சும்மா இருப்பான், ஹீரோ அவனால முடிஞ்ச எல்லாத்தையும் செஞ்சு மடக்கி ஒரு லிப் கிஸ்ஸும் அடிச்சுர்ரார்,
 அடுத்த நாள் ஏர்போர்ட் ல அவர் ஃப்ரெண்ட் கிட்ட எல்லாத்தையும் ஷேர் பன்னும் போது பாத்துடற ஹீரோயினுக்கு ஹீரோ தன்னை உண்மையா லவ் பண்ணலைங்கறது தெரிஞ்சு அழுதுகிட்டே பிரிஞ்சு போயிடறாங்க பாவம்.
அடுத்த ஆட்டோகிராஃப் 2002, மும்பை ல, ஒரு பெரிய சாஃப்ட்வேர் கம்பெனி ல வேலை கிடைச்சு செட்டில் ஆகி புது ஃப்ளாட்க்கு குடி வர நம்ம ஹீரோக்கு ஒரு இன்ப அதிர்ச்சி, நமக்குளாம் பக்கத்து வீட்டுக்கு சம்மர் லீவ்க்கு சுமாரா ஒரு பொன்னு 2 மாசம் வந்து தங்கனாளே தாங்காது, இருக்கறதுலயே நல்ல துணியா போட்டு கரெக்ட் பண்ண பார்ப்போம், நம்மஹீரோக்கு பக்கத்து வீட்ல கும்முனு ‘பிபாஷா பாசு’ தனியா தங்கி இருக்கறது தெரிஞ்சா சும்மா இருக்க முடியுமா?
 வழக்கம் போலதான் சின்ன வீடு பாக்யராஜ் மாதிரி ‘நதுர்தனா தினனா நா’ னு தீம் மியுசிக் போட்டு அதையும் கரெக்ட் பண்ணி 1 வருசம் ஒண்ணா ஒரே வீட்ல ‘GET TOGETHER’ ஆ இருக்கற அளவுக்கு கொண்டு வந்துடறார்.
 இப்பதான் கதைல ட்விஸ்ட், ஹீரோக்கு சிட்னி ல பெரிய வேலை கிடைக்குது, கழட்டி விட்டுடலாம்னு நம்பிகிட்டு இருந்த காதலி கல்யாணத்த பத்தி பேச ஆரம்பிக்கறா, அதுல இருந்து தப்பிக்க என்னென்னமோ ட்ரை பன்னி, முடியாம கல்யாணத்தன்னைக்கு ஃப்ளைட் ஏறி சிட்னிக்கு ஓடி வந்துடறார்.
வழக்கம் போல தினம் ஒரு ஃபிகர் அ கரெக்ட் பண்ணி ஜாலியா சுத்திட்டு இருக்கறவர் கண்ல எதெச்சையா படறாங்க நம்ம தீபிகா படுகோன்(ஓம் சாந்தி ஓம்) டெய்லி நைட் டாக்சி ஓட்டி அதுல MBA படிக்கற நம்ம அம்மணி கொஞம் கொஞ்சமா நம்ம ஹீரோவோட மனச திருடிறாங்க, 
 இவ்வளவு அம்சமான ஃபிகர் வந்தா யார்தான் கவுறாம இருப்பாங்க, வழக்கம் போல நம்ம ஹீரோ மண்டி போட்டு கல்யாணம் பன்னிக்க கெஞ்சுரார்.
 தீபிகாவுக்கு கல்யாணத்துல நம்பிக்கை இல்லைனு சொல்லிடறாங்க, மனசு வெறுத்து போன நம்ம ஹீரோ ‘ஆகா நமக்கு வலிக்கற மாதிரிதானே நாம கழட்டி விட்ட ஃபிகருங்களுக்கும் வலிச்சுருக்கும்’-னு புத்தி தெளிஞ்சு புதுசா ஒரு விசயம் பன்றார், நம்ம சேரன் போய் பழைய லவ்வர்ஸ்க்கு பத்திரிக்கை வச்ச மாதிரி, இவர் முன்னாள் காதலிங்ககிட்ட மன்னிப்பு கேட்க போறார்.
முத்ல்ல கழட்டி விட்ட பஞ்சாப் காதலிக்கு கல்யாணம் ஆகி 2 பசங்க இருக்காங்க, போய் அவ புருசன்கிட்டயே தான் யார்னு சொல்லி வாங்கி கட்டிக்கறார், ஒரு பெரிய கல்யாண வீட்ல எல்லாரையும் மீறி யாருக்கும் தெரியாம எப்படி மன்னிப்பு கேட்டு வர்ரார்னு நீங்க படத்த பார்த்து தெரிஞ்சுக்கங்க,
 முதல் பஞ்சாயத்து முடிஞ்சு போனா கல்யாணத்தன்னைக்கு கழட்டி விட்டு போன பிபாஷா இப்ப நெ.1 சினிமா ஸ்டார்,
 அவங்களை மீட் பன்னி, மனச மாத்தி மன்னிக்க வைக்கறதுக்கு ரொம்ப கஷ்ட படறார்,
பிபாஷா பன்ற அலம்பலுக்கு நானா இருந்தா சரிதான் போடினு சொல்லிட்டு வந்துருப்பேன். அவ்வளவு கொடுமை, பாவம் ஹீரோ.
 எப்படி பிபாஷாகிட்டயும் மன்னிப்பு வாங்கிட்டு ரிட்டர்ன் வந்து தீபிகாவ கைப்பிடிச்சு லிப் கிஸ் அடிக்கறைங்கறதுதான் கிளைமாக்ஸ், படம் நல்லா கலர்ஃபுல்லா ஜில்லுன்னு இருக்கு
எனக்கு மன்னிப்ப பத்தி பேசிக்கற சீன் ரொம்ப பிடிச்சுருக்கு, படத்துல வர லிப் கிஸ் பிடிச்சுருக்கு, எதை எதையோ இந்த படம் என்னை யோசிக்க வச்சது, கொஞ்சம் பழைய படம்தான், பாருங்க நல்லருக்கும்.
கமெண்ட் பிளிஸ்