KAHAANI – பார்க்க வேண்டிய படம்- திரை விமர்சனம்

அன்புள்ள வாசகர்களுக்கு, இது வரை நான் ஒரு தமிழ் படத்திற்கு கூட விமர்சனம் எழுதியது இல்லை, ஏனென்றால் தமில் சினிமாக்களை நான் பார்ப்பதற்குள் குறைந்தது 50 பேராவது பார்த்து விமர்சனம் எழுதி விடுகிறார்கள், மற்ற மொழி படங்கள் அப்படி இல்லை, அதனால்தான் நான் எழுதும் விமர்சனங்கள் மற்ற மொழி படங்களை மட்டும் விமர்சிக்கின்றன.
இன்று நாம் பார்க்க இருக்கும் படம் “KAHAANI”. இந்த வார்த்தைக்கு அர்த்தம் எனக்கு தெரியவில்லை. தலைப்பா முக்கியம், நம்மள பொறுத்த வரைக்கும் வசனமே முக்கியம் இல்லை.

 அதாவது பார்த்திங்கனா நம்ம வித்யா பாலன் அதாங்க நம்ம ஊர் சில்க் ஸ்மிதா கேரக்டர்ல THE DIRTY PICTURE ல நடிச்சதே அந்த பொன்னுதான், உண்மைலேயே அழகான பொன்னுங்க, அதே நேரத்துல நல்லா நடிக்கவும் செய்யுது.கதைக்கு வருவோம்.
படத்தோட ஆரம்பத்துல ஒரு மெட்ரோ ட்ரேய்ன் ல ஒரு டெர்ரரிஸ்ட் கேஸ் பாம் போட்டு எல்லாரையும் கொல்றத காட்றாங்க, இந்த சீன்னுக்கும் க்ளைமாக்ஸ்க்கும் சம்பந்தம் இருக்கு, நல்லா பார்த்துக்கங்க,
ஒரு பொன்னு உண்மைலேயே கர்ப்பத்துலதான் அழகா தெரிவாங்கனு சொல்லுவாங்க, அந்த வகையில படம் ஆரம்பத்துல வித்யா ஏர்போர்ட்ல வந்து இறங்கும் போதே அழகா தெரியறாங்க, லண்டன் லருந்து நேரா கொல்கத்தா வந்து முதல் வேலையா போலிஸ் ஸ்டேசன் போய் ஒரு மாசத்துக்கு முன்னாடி இந்தியா வந்த தன்னோட புருசன்ன கானோம் நு கம்ப்ளெய்ன்ட் தராங்க, அந்த ஸ்டேசன்ல இருக்க ஒரு சப் இன்ஸ்பெக்டர் அவங்களுக்கு கூடவே இருந்து உதவி பன்றார். 
இதுல வித்யா தன்னோட வீட்டுக்காரர கண்டுபிடிக்க விடாம நிறைய பேர் தடுக்கறாங்க, போலிஸ்ல பல பெருந்தலைங்கலாம் தலையிடுது, இதுல தீவிரவாதிங்களும் சம்பந்த பட்றாங்க, இது எல்லாத்தையும் தாண்டி வித்யா தன்னோட வீட்டுக்காரர எப்படி கண்டு பிடிக்கிறாருங்கறதுதான் கதை.
தமிழ் படம் மாதிரி கதையோட ஒட்டாம காமெடி வச்சோ, ரசிகர்கள் கேட்கறாங்கனு குத்து பாட்டு வச்சோ, 20, 30 பேரை அடிக்கற மாதிரி ஃபைட் வச்சோ டைரக்டர் படத்தை நகர்த்தலை, கதைக்கு தேவை இல்லாம ஒரு சீன் கூட வைக்கலை, அதே மாதிரி கதைல வர ஒவ்வோரு கேரக்டரோட மென்டாலிட்டிய நாம பார்த்தாலே புரிஞ்சுக்கற மாதிரி ஆளுங்களை தேரிந்தெடுத்துருக்கார்.உதாரணத்துக்கு படத்துல வர காண்ட்ராக்ட் கில்லர்- அ பார்த்தா யாருக்கும் சந்தேகம் வர மாதிரி பன்னிருக்கார்.
 
எல்லா சீன்லயும் அழகா தெரியறது கொல்கத்தாவும் வித்யா பாலனும்தான், விதயா ஊருக்கு வரப்ப துர்கா பூஜைக்கு ஊரே தயாராகறதா சொல்லிட்டு துர்கா பூஜையன்னைக்கு கதைய முடிச்சுருக்காங்க,
கொல்கத்தால பாரம்பரியமா கட்டற வெள்ளை-சிகப்பு புடவைய கட்ட முயற்சி பன்னி அழும்போது நம்ம கண்லயும் மெதுவா ஈரம் எட்டி பார்க்குது. மசாலா படம் பார்த்து வெறுத்தவங்களுக்கு இந்த படம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்,
படத்துல எனக்கு நிறைய விசயம் பிடிச்சுருக்குங்க, 
 1. முதல் விசயம் எந்த மாஸ் ஹீரோவையும் நம்பாம படம் எடுத்தது
 2. க்ளாமர் கேர்ள்னு சொல்ற வித்யா பாலன் அ தைரியமா கர்ப்பினியா காட்டுனது
 3. முடிஞ்ச வரைக்கும் கொல்கத்தாவ அழகா காட்டுனது
 4. போலிஸ் ஸ்டேசன் அ அவ்ளோ இயல்பான இடமா நம்மள நம்ப வச்சது, முதல் முதலா வித்யா வந்தப்ப ஸ்டேசன்ல இருக்க எல்லா போலிஸிம் இங்கிலிஸ் ல பேச முயற்சி பன்னி முடியாம விட்டுட்றது
 5. வித்யா எல்லா குட்டி பசங்ககிட்டயும் அழகா பேசி ஃப்ரெண்ட் ஆகிடறது
 6. அது ஏன்னே தெரியலை, நம்ம ஹீரோ கொலை பன்னும் போது ஆண் கடவுள் யாரையாவது காட்றாங்களோ இல்லையோ ஹீரோயின்னுக்கு கோபம் வந்தாலே காளியம்மன காட்டிடறாங்க.ஆனாலும் நல்லாயிருந்தது.
 
படத்தை கண்டிப்பா பாருங்க, ஒரு அழகான பொன்னு ஒழுக்கமா நடிச்சுருக்கு, இதுக்காகவே பார்க்கனும். ஏற்கனவே படம் பார்த்தவங்க நான் ஏதாவது தப்பா சொல்லிருந்தா எனக்கு சுட்டிக் காட்டுங்க.
என்றும் அன்புடன் 
கதிரவன்.

இதுதான் காதல்-இறந்து போன காதலனை மணக்க காதலி முடிவு

துப்பாக்கி சண்டையில் மரணம் அடைந்த வீரரை, அவரது கர்ப்பிணி காதலி திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளது பிரான்சில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சில் கடந்த வாரம் முகமது மீரா(வயது 23) என்ற தீவிரவாதி பள்ளிக்கூடத்திலும், அதற்கு அருகில் உள்ள இடங்களிலும் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார்.
இதில் துணை இராணுவ வீரர் அபெல் சென்னூப், 3 பள்ளி குழந்தைகள், ஆசிரியை உள்பட 7 பேர் பரிதாபமாக இறந்தனர்.
இதன் பின்னர் அவரது வீட்டில் பதுங்கியிருந்த முகமதுவை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
இந்நிலையில் வக்கீல் கில்பர்ட் கொலார்ட் என்பவர் கூறியதாவது: துப்பாக்கிச் சூட்டில் இறந்த வீரர் அபெல் சென்னூப்பின் 21 வயது காதலி கரோலின் மோனெட்.
தற்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார். இறந்த தனது காதலனை சட்டப்படி திருமணம் செய்து கொள்ள அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
இறந்த ஒருவருடன் திருமணம் செய்து கொள்வது வழக்கத்தில் இல்லாதது. ஆனால் சில அசாதாரண சூழ்நிலையில் இதுபோன்ற திருமணத்துக்கு அனுமதி அளிப்பது ஜனாதிபதியின் முடிவை பொறுத்தது.
இதற்கு முன் இறந்த காவல்துறையினர் இருவரின் பேரின் காதலிகளுக்கு இதுபோல் திருமணம் நடந்துள்ளது. இதுபோன்ற திருமணத்தின் போது மணமகள் இருக்கைக்கு அருகில் மற்றொரு இருக்கை அமைக்கப்படும்.
அதில் மணமகன் இருப்பது போல் நினைத்து திருமண சடங்குகள் நடக்கும். இதன் மூலம் பிறக்க போகும் குழந்தைக்கு சட்டப்பூர்வமான தந்தையாக சென்னூப் கருதப்படுவார்.
 
எந்த தேசமானாலும் எந்த கலாச்சாரத்திலும் காதல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

உங்கள் பெறுமதி மிக்க கருத்துக்களை இட்டு செல்லுங்கள்…!

ரொம்ப பார்க்காதிங்க- முழுசா முடியாம போய்டுமாம்

ஆபாசப் படங்களைப் பார்ப்போரால் படுக்கை அறையில் சிறப்பாக செயல்பட முடியாதாம். ஒரு ஆய்வு இப்படி எச்சரிக்கிறது.

ஆண்கள்தான் பெருமளவில் ஆபாசப் படங்களை அதிகம் பார்க்கின்றனர். பெண்களிலும் ஆபாசப் படம் பார்ப்போர் உண்டு. அவர்களின் எண்ணிக்கை குறைவுதான். இப்படி ஆபாசப் படம் பார்க்கும், குறிப்பாக இன்டர்நெட்டில் ஆபாசப் படங்களை அடிக்கடி பார்ப்போரால், படுக்கை அறையில் நிஜமான செக்ஸ் நடவடிக்கையில் முழுமையாக செயல்பட முடியாமல் போகிறதாம்.
செக்ஸ் விஷயங்களை வீடியோவில் பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டும் நபர்களால் உண்மையில், நிஜமான செக்ஸ் விஷயங்களை முழுமையாக, சரியாக நிறைவேற்ற முடியாமல் போய் விடுகிறதாம். இதனால் பல பிரச்சினைகளுக்கு அவர்கள் ஆளாவதாக இந்த ஆய்வுகூறுகிறது.
வீடியோவில் செக்ஸ் உறவுகளைப் பார்ப்பதில் இருக்கும் ஆர்வத்தில் பாதியளவு கூட ஆண்களால் படுக்கை அறையில் காட்ட முடிவதில்லையாம்.
இதற்கு முக்கியக் காரணம், மூளையின் உற்சாக மையத்தை தூண்டி விடக் கூடிய ஹார்மோனான, டோபமைன் அபரிமிதமான அளவில் சுரப்பதே. அடிக்கடி ஆபாசப் படங்களைப் பார்த்து உணர்ச்சிவசப்படுவோருக்கு டோபமைன் அதிக அளவில் சுரந்து, சுரந்து கடைசியில், உண்மையான இன்பத்தை அனுபவிக்க நேரிடும்போது அதனால் பலன் இல்லாமல் போய் விடுகிறதாம்.
இப்படி ஆபாசப் படம் பார்த்து உண்மையான உற்சாகத்தையும், இன்பத்தையும் தொலைத்து நிற்கும் பலரும் தற்போது செக்ஸ் கவுன்சிலிங்குக்கு அதிக அளவில் வர ஆரம்பித்துள்ளனராம்.
இதுகுறித்து செக்ஸாலஜிஸ்ட் ஒருவர் கூறுகையில், ஆபாசப் படம் பார்ப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடிதான் உள்ளது. இன்டர்நெட் மூலம் ஆபாசப் படம் பார்ப்போர் பெருமளவில் பெருகி விட்டனர். இதனால் உண்மையான செக்ஸ் நடவடிக்கைகளில் இவர்களால் ஈடுபடுவதில் பல சிரமங்களைச் சந்திக்கின்றனர்.
அதிக அளவிலான செக்ஸ் நடவடிக்கைகளைப் பார்த்துப் பார்த்து இவர்கள் மன ரீதியாக களைத்துப் போய் விடுகின்றனர். அதில் ஒரு சலிப்பும், அலுப்பும் வந்து விடுகிறது. டோபமைன்தான் இதற்கு முக்கியக் காரணம் என்கிறார்.
இப்படிப்பட்ட செக்ஸ் பட அடிமைகள், படிப்படியாக ஆபாசப் படம் பார்ப்பதை நிறுத்திக் கொள்வது நல்லதாம். அதை நிறுத்த முடியாதவர்களுக்கு மருந்து, மாத்திரைகள், கவுன்சிலிங் போன்றவற்றைத் தருகிறார்களாம் செக்ஸாலஜிஸ்ட்டுகள்.
எனவே வாலிப வயோதிகர்களே, எப்போதும் நிழலை நம்பாதீர்கள், தேவைப்படும்போது நிஜத்தை நாடுவதே மன நலனுக்கும், உடல் நலனுக்கும் நல்லது…

தி புரோபசல்-சத்தமில்லாமல் பூக்கும் காதல்- திரை விமர்சனம்

அன்பு வாசகர்களே, நாளுக்கு நாள் எழுதுவதில் கொஞ்சமாவது கற்றுக் கொள்கிறேன் என்ற நம்பிக்கையுடன் இதோ நான் ரசித்த திரைப்படத்தினை பற்றிய விமர்சனம்….
விக்கிபிடியாவில் ரொமன்டிக் காமெடி ஃபிலிம் வரிசையில் சில படங்களை தேர்வு செய்து பார்த்துக் கொண்டிருக்கிறேன், இப்போதெல்லாம் ஆக்ஸன் படங்கள் என்னை ஈர்ப்பதில்லை.அந்த வகையில் சமிபத்தில் நான் ரசித்த படம் “தி புரோபசல்”
நாம் அனைவரும் வேலை பார்க்கும் இடத்தில் கண்டிப்பாக ஹிட்லர் என்று ஒருவருக்கு பெயர் வைத்திருப்போம். எல்லா அலுவலகங்களிலும் ஸ்ட்ரிக்டாக ஒருவர் இருப்பார்,அப்படி எல்லாராலும் “POISONOUS WITCH” என்று அழைக்க படுபவர்தான் ஹீரோயின் மார்க்கரேட்(சேன்ட்ரா பல்லாக்), அவருக்கு P.A வாக இருப்பவர்தான் ஹீரோ ஆண்ட்ரூ(ரியான் ரெனால்ட்ஸ்). படத்தின் ஆரம்பத்தில் மார்க்கரெட் எவ்வளவு கல் நெஞ்சக்காரி என்பதை ஒருவரை வேலையை விட்டு அனுப்பவதில் நமக்கு புரிய வைக்கிறார்கள், மார்க்கரேட்டுக்கு வீசா காலம் முடிவடைவதால் அவரை அரசாங்கம் திரும்ப கனடாவிற்கே போக சொல்கிறது. நம்ம ஊர் ‘நள தமயந்தி’ ஸ்டைலில் ஆண்ட்ரு வை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொண்டு பர்மனென்ட் சிட்டிசன் ஆகப் போவதாக அறிவிக்கிறார், அதிலிருந்து கதை சூடு பிடிக்கிறது. அந்த நேரத்தில் ஆண்ட்ருவின் முகம் போகிற போக்கை பார்க்கனுமே?
 பர்மனென்ட் சிட்டிசன் ஆவதற்கான விண்ணப்ப வேலைகளை முடித்துக் கொண்டு அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக ஆண்ட்ருவுடன் அவரது சொந்த ஊருக்கு செல்ல திட்டமிடுகிறார் நமது ஹீரோயின், இதில் மாட்டிக் கொண்டால் சிறைத்தண்டனை என்பதால் ஹீரோ மறுக்க அவரிடம் அவர் நீண்ட காலமாக எதிர்பார்க்கும் பதவி உயர்வை தருவதாக பேரம் பேச ஒருவழியாக டீல் ஓகே ஆகிறது, ஹீரோயினை மண்டி போட செய்து திருமணத்திற்கு சம்மதம் கேட்க சொல்லும்போதுதான் ஹீரோ உண்மையில் ஹீரோ ஆகிறார்.
ஹீரோவின் சொந்த ஊருக்கு போனால் தான் அவர் உண்மையில் பெரிய பணக்காரர் என்றும், அப்பாவோட தொழில் பிடிக்காமல் சண்டை போட்டுக்கொண்டு நியுயார்க்கில் வேலை பார்ப்பதும் தெரிகிறது. வந்திருக்கும் அனைத்து உறவினர்கள் மத்தியில் திருமணத்தை அறிவிக்க அவர்கள் கேட்கும் குறுக்கு கேள்விகளும் இவர்கள் சமாளிப்பதுமாக கதை நகர்கிறது, அவர்களின் திருப்திக்காக முத்தமிடும்போது ஒரு மாற்றத்தை இருவரும் உணர்கிறார்கள், இது மிக இயல்பான காட்சி, ஒரு முத்தம் சகலத்தையும் மாற்றி விடும்.
 இருவரும் ஒரே அறையில் தங்குவது, நாள் போக போக இருவரும் மனம் விட்டு பேச ஆரம்பிப்பது என்று மெலிதாக கதை நகர்கிறது, கொஞ்சம் கொஞ்சமாக இருவருக்குள்ளும் இருக்கும் இறுக்கம் தளர்கிறது, திடுக்கென்று வீட்டில் திருமணத்தை நாளைக்கேவைத்துக் கொள்ளலாம் எனும்போது மறுக்க முடியாமல் ஒத்துக் கொள்கிறார்கள்,
1) ஹீரோ வேறு பெண்ணுடன் பேசும் போது ஏற்படும் மெல்லிய பொறாமை
2) ஹீரோ குடும்பத்தின் நம்பிக்கையை தவறாக பயன் படுத்துவதாக உணரும் போது வரும் அழுகை


 ஒருக்கட்டத்திற்கு மேல் ஏமாற்ற விரும்பாமல் திருமணமேடையில் உண்மையை சொல்லி விட்டு ஊருக்கு கிளம்பி விடுகிறார் மார்க்கரேட், கிட்டத்தட்ட தமிழ் சீரியல் போல் இருந்தாலும், அந்த சீன் எனக்கு ரொம்ப பிடிச்சுருந்தது,


 கிளைமாக்ஸ் சுபம் தாங்க, அது எப்படிங்கறத நீங்க படத்தை பார்த்து தெரிஞ்சுக்கங்க,

 1. முதல்ல பார்க்கற எல்லாருக்கும் வெறுப்பு வர மாதிரி ஹீரரோயின்ன காட்டறது, அதுக்குனு தனி மேனரிசம் ட்ரெஸ்ஸிங்னு பார்த்து பார்த்து செஞ்சுருக்காங்க.
 2. ஹீரோயின் தன்னோட ஃப்ளாஸ்பேக் அ சொல்ற இடம், ரொம்ப சின்ன சீன் தான் , ஆனா நல்லாருக்கும்.
 3. போட் ல போகும் போது ஆக்சிடென்ட் ஆ தண்ணீர்ல விழுந்த ஹீரோயின் அ ஹீரோ காப்பாத்தும் போது அந்த ஈரத்தோட ஈரமா அழறது,
 4. ஹீரோவோட பாட்டி க்ளைமாக்ஸ் ல நெஞ்சு வலி நு நடிச்சு ஹீரோவ  ஹீரோயின்கிட்ட ப்ரோபோஸ் பண்ண அனுப்பறது
 5. ரொம்ப ரொம்ப பிடிச்ச சீன், ப்ரோபோஸ் பன்னும் போது எப்ப நமக்குள்ள லவ் வர ஆரம்பிச்சதுனு ஹிரோ வரிசையா சொல்றது

படம் தனியா பார்க்கும் போது எல்லாருக்கும் பிடிக்குங்க,

சரி என் பதிவ படிக்கற யாரும் கமெண்ட் பண்ண மாட்டெங்கறிங்களே ஏன்?

பாராட்டியோ திட்டியோ ஏதாவது கமெண்ட் பன்னுங்க ப்ளிஸ்.

என் பதிவு கடைசி வரைக்கும் படிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க

பூதத்தின் காதல்- அடல்ட் ஸ்டோரி

எச்சரிக்கை 1:

எப்பவோ ஈமெயிலில் வந்திறங்கிய கதை இது. முன்னமே நீங்க வாசித்திருக்கக் கூடும். இருந்தாலும் என்ன, வந்தது வந்தீர்கள் படித்து வையுங்கள்!

எச்சரிக்கை 2 :

இது அடல்ட் கதை. அதனால் அடல்ட் ஆனவர்களை விடவும் அடல்ட் ஆகவிருப்பவர்கள் முண்டியடித்துக் கொண்டு வந்து படிக்கலாம். தனியறிவு கூடும்.

அவர்கள் இளம் தம்பதியினர். கணவன் மனைவிக்கு கோல்ஃப் விளையாடக் கற்றுக் கொடுத்துக்கொண்டிருக்கிறான். மனைவி எக்குத்தப்பாய் ஓங்கி விட்ட ஒரு அடியில் பந்து பத்து ஃபர்லாங் பறந்து காணாமற் போகிறது. பந்தைத் தேடி இருவரும் அந்த நீண்ட கோல்ப் மைதானத்தில் நெடும்பயணம் புறப்படுகிறார்கள், கடைசியில் பாசி படிந்து பயமுறுத்தும் பழைய பாழடைந்த பங்களா ஒன்றை அடைகிறார்கள் இருவரும். (ப’னாவுக்கு ப’னாவுக்கு ப’னாவுக்கு ப’னாவுக்கு பா’னா- தமிழ் வாத்தியார் பேரன் நான்). அந்த வீட்டின் முன்புற மண்டபத்தின் ஜன்னல் கண்ணாடியில் கோல்ப் பந்து உள்ளே சென்ற அடையாளம் தெரிகிறது, ஒரு உடைசல்.

பயபக்தியோடு உள்ளே நுழைகிறார்கள். வீட்டில் யாரும் இருப்பதற்கான அடையாளம் தெரியவில்லை. வீட்டின் மண்டப அறையில் பொருட்கள் ஏதும் இல்லை. அறை மூலையில் இருக்கும் ஒரு கண்ணாடி அலமாரியின் கதவும் உடைந்திருக்கிறது. தரையில் ஒரு சிறு மண்குடுவை உடைந்து சிதறிக்கிடக்கிறது. ஒரு மூலையில் அவர்கள் தேடிவந்த அந்த கோல்ஃப் பந்து இன்னமும் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறது.

அந்த அறையில் இன்னொரு மூலையில் திடீரென்று ஒரு மனிதன் தோன்றுகிறான். ஏழு அடி உயரம், பார்க்கவே விசித்திரத் தோற்றம். இருவரையும் வெறித்த பார்வை பார்க்கிறான்.

“சார், மன்னிச்சிடுங்க! என் மனைவி இப்போதான் கோல்ஃப் கத்துக்கறா, தெரியாம பந்து உள்ளே வந்துடுச்சி!”, அத்தனை ஆஜானுபாகுவான ஒரு விந்தைத் தோற்றம் கொண்ட மனிதனைக் கண்டவுடன் கணவனுக்கு நா குழறத் தொடங்குகிறது.

“சாரி சார்!”, மனைவியும் கணவன் முடித்த இடத்தில் தொடங்கி தன் மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறாள்.

இருவரையும் ஏற இறங்கப் பார்க்கிறான் அந்த மனிதன். “ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா”, ஒரு நெடிய சிரிப்பு முதலில் பதிலாக வருகிறது. கணவனும் மனைவியும் ஒன்றும் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கின்றனர். எதற்குச் சிரிக்கிறான் என்று விளங்கவில்லையே!

“ஐயா, நீங்கள் எனக்கு நல்லதுதான் செய்திருக்கிறீர்கள்!”

“என்ன சொல்லறீங்க?”

“நான் ஒரு பூதம், இல்லை பயப்படாதீங்க! நான் நல்லது செய்யும் பூதம். ஒரு கெட்ட மந்திரவாதி ஐந்நூறு வருடங்களுக்கு முன்னால் என்னை இந்த மண் குடுவையில் அடிச்சி வெச்சிட்டுப்போயிட்டான். அந்த குடுவைக்குள்ளேயே எங்கெங்கயோ சுத்தி வந்த எனக்கு இன்றைக்கு உங்க மூலமாகத்தான் விடுதலை கிடைச்சிருக்கு”, இப்போது கணவனும் மனைவியும் சந்தோஷமாக ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கிறார்கள். பூத மனிதன் தொடர்கிறான்…

“என்னை விடுதலை செய்த உங்களுக்கு நான் ஏதாவது செய்தாகணும். ஏதேனும் மூணு வரம் கேளுங்க”

“அட! அப்படியா? ரொம்ப சந்தோஷம் பூதம். நீங்க எங்களோடையே இருந்துடுங்க அதுதான் முதல் வரம்”

“இல்லைங்க! அது நடக்காது! நான் என் மக்களைத் தேடித்போயாகணும். வேற ஏதும் கேளுங்க!”

முதலில் கணவன் கேட்கிறான், “எங்களுக்கு உலகத்துலேயே மிகப் பெரிய வீடு வேணும்”, மனைவி எக்ஸ்டென்ஷன் சேர்க்கிறாள் ”ஃபுல்லி ஃபர்னிஷ்ட்”.

“அப்படியே அப்படியே! நீங்கள் வீடு திரும்பிச் சென்று பார்க்கும்போது உங்கள் வீட்டை உலகின் மிகப் பெரியவீடாக, 䮅னைத்து வசதிகளும் பொருந்திய வீடாகப் பார்ப்பீர்கள். இரண்டாவது என்ன வேண்டும்?”

“அந்த வீடு முழுக்க போதும் போதும்ங்கற அளவுக்கு பணம் வேணும்”

“அப்படியே அப்படியே! என்றும் தீராத செல்வம் உங்கள் வீட்டு அறைகள் முழுக்க நிரம்பியிருக்கும். மூன்றாவது வரமாக நீங்கள் ஏதும் கேளுங்கள் அம்மணி”

“ஆ! இந்த ரெண்டையும் அனுபவிக்க எங்களுக்கு ஆரோக்யமான ஆயுள் வேணும்”

“அப்படியே அப்படியே! உங்கள் இருவருக்கும் நோயற்ற ஒரு வாழ்வை மூன்றாவது வரமாக வழங்கினோம்”

“ரொம்ப தேங்க்ஸ் பூதம்! ஒரு பந்து அடிச்சி கண்ணாடியும், குடுவையும் உடைஞ்சதுக்கு இப்படி ஒரு பரிசா?”

“நீங்கள் என்னை விடுதலை செய்தவர்கள்அல்லவா? உங்களுக்கு இதைக் கூட செய்யாவிட்டால் எப்படி?”

“சரி, நாங்க அப்போ போயிட்டு வர்றோம், ரொம்ப நன்றி பூதம்!”

“ஒரு நிமிடம் ஐயா! ஒரு நிமிடம் அம்மணி!”

“சொல்லுங்க பூதம்”

“உங்களுக்கு மூன்று வரங்கள் வழங்கிய எனக்கு நீங்கள் ஒரு வரம் அருள்வீர்களா?”

“நாங்களா? உனக்கு என்ன வரம் தரமுடியும் நாங்க?”

“நான் பூதம்தான் என்றாலும் எனக்குள்ளும் ஐந்து நூறு வருடங்களாக உறங்கிக் கிடந்த ஒரு மனிதன் இருக்கிறான்”

“சரி?”

“அவனுக்கும் அமிழ்த்தி வைக்கப்பட்ட காதற்பசியும் இருக்கிறது…”

“அதனால?”

“உங்கள் மனைவியும் மிகவும் அழகாக இருக்கிறார். நீங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால்…”

”…தவறாக நினைக்கவில்லை என்றால்…???”, அதிர்ச்சியும் கோபமும் சேர்ந்த கேள்வி கணவனிடமிருந்து…

”நான்….நான்…. அவருடன் சிறிது நேரம் செலவிடலாமா?”

“யோவ்! போய்யா, ஏதோ நல்ல பூதம்னு சொன்ன? நீயும் வேணாம் உன் வரமும் வேணாம். வாடீ….”, மனைவியின் கைபிடித்துத் தரதரவென்று வெளியே இழுத்தான் கணவன்”

ஆனால் இங்கே மனைவியின் தியரி வேறுவிதமாக இருக்கிறது. “எதுக்குங்க டென்ஷன் ஆகறீங்க?”

“ஏய்! என்ன பேசற நீ?”

“அவன் ஒண்ணும் மனுஷன் இல்லையே? அதுவும் இல்லாம இத்தனை வசதி வாய்ப்பு நமக்கு எப்படி திரும்ப அமையும்? நான் சின்ன காம்ப்ரமைஸ் பண்ணத் தயார்”

“செருப்பால அடிப்பேன். அப்படியே போயிடு அவனோட….”, என்று ஆரம்பித்த கணவன் கால்மணிநேர விவாதத்திற்குப் பிறகு சமாதானம் ஆகிறான். மனைவி அந்த பூதத்துடன் மேல்மாடி அறைக்குள் போகிறாள்.

அடுத்த ஒன்றரை மணிநேரம்…. ஆயகலைகள் எத்தனையோ நாமறியோம். ஆனால் “அந்த”க்கலையின் அறுபத்து சொச்ச வகைகளையும் ஒருங்கே அவளிடம் முயற்சிக்கிறான் அந்தப் பூதம்.

“இப்படி ஒரு பெண்ணை நான் கண்டதேயில்லை. யூ ஆர் ஸோ செக்ஸி….”,சிரித்துக் கொள்கிறாள் அவள்.

களைப்பின் உச்சத்தில் கடைசிக் கலையை அவளிடம் பழகிக் களைக்கிறான் அந்தப் பூதம். பெருமூச்சின் உச்சத்தில் அவளிடம் கேட்கிறான்…

“உனக்கு என்ன வயது?”
“முப்பத்து நான்கு”
”உன் கணவனுக்கு?”
“முப்பத்து ஆறு”

“ம்ம்ம்ம்… முப்பத்து ஆறு, முப்பத்து நான்கு…. இன்னமுமா இந்த பூதம், பிசாசுக் கதைகளையெல்லாம் நம்புகிறீர்கள் நீங்கள்?”

உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா….? ஒரு நிமிடம் இதை படியுங்கள்

உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா….?

அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்…!!!

எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது. எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள்.

பெட்ரோல் வணிகத்தில் வெப்ப அளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை. பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் இருந்தால் அது மிகப் பெரிய மாற்றம். ஆனால் பெட்ரோல் பங்கில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பார்க்கப்படுவதில்லை. அதேபோல உங்கள் வாகனத்தின் பெட்ரோல் தொட்டியை எப்பொழுதும் முழுமையாக நிரப்பாதீர்கள். அதனால் உங்களுக்கு நஷ்டமே ஏற்படும். பாதி மட்டுமே நிரப்புங்கள். அதிக எரிபொருள் இருந்தால், அந்தத் தொட்டியில் காற்று குறைவாகவே இருக்கும். நாம் நினைப்பதைவிட வேகமாக பெட்ரோல் ஆவியாகக் கூடியது. பங்கின் பெட்ரோல் சேமிப்புத் தொட்டிகளில் மிதக்கும் கூரைகள் இருக்கும். இதன் காரணமாக உள்ளே பெட்ரோலுக்கும் காற்றுமண்டலத்துக்கும் இடையே இடைவெளி இருக்காது. எனவே, ஆவியாதல் குறையும். வாகன பெட்ரோல் தொட்டியில் பாதி நிரப்பினால், பெட்ரோல் ஆவியாவதை ஓரளவு குறைக்க முடியும்.

அதேபோல நீங்கள் பெட்ரோல் நிரப்பப் போகும் போது தான், அந்த பங்கில் லாரியில் இருந்து பெட்ரோல் இறக்கப்படுகிறது என்றால், அப்போது வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள். கிடங்கின் அடியில் தேங்கியிருந்த கசடுகள் அப்போது கலங்கி இருக்கும். இது எஞ்சினை பாதிக்கும்…

FACEBOOK ல் ஒரு புதிய முயற்சி

 எகிப்து, துனிசியா, லிபியா போன்ற பல நாடுகளில் ஆட்சி மாற்றத்துக்கு காரணமாக இருந்தவை டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களே. ஆனால் ஈரான் மீது எந்த நேரத்திலும் இஸ்ரேல் போர்தொடுக்கக் கூடிய நிலையில் போர் முயற்சியை கைவிட வலியுறுத்தியும்கூட பேஸ்புக்கில் இஸ்ரேலியர்கள் பெருமளவு ஆதரவு தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்வில் வசித்து வரும் ரோனி எட்ரிஸ் மற்றும் மிசெல் தமிர் தம்பதியினர் கடந்த வாரம்தான்
“Iranians, we love you” என்று ஒரு பக்கத்தை தொடங்கியிருந்தனர்.
இப்போது “Iranians, we love you” என்ற பக்கத்தை “லைக்” செய்கிறோம் என்று கிளிக் செய்திருப்போரின் எண்ணிக்கை 18 ஆயிரம் என்பது புருவத்தை உயர்த்திப்பார்க்க வைக்கிறது!


எட்ரிஸ் தம்பதியினர் இது பற்றி கூறுகையில், நாங்கள் தனிப்பட்ட முறையில்தான் பேஸ்புக்கில் பதிவைத் தொடங்கினோம். “ஈரானியர்களே நாங்கள் உங்களை நேசிக்கிறோம்… நாங்கள் உங்கள் நாட்டின் மீது ஒருபோதும் குண்டுவீச மாட்டோம்” என்று அதில் பதிவு செய்திருந்தோம். இப்போது கற்பனையே செய்து பார்க்க முடியவில்லை. எங்களது பக்கம் இத்தனை ஆயிரம் பேரை ஈர்த்திருக்கிறது என்பது நிச்சயம் நம்ப முடியாத ஒன்றுதான்” என்கின்றனர்.


இருப்பினும் தொடக்கத்தில் தமது நண்பர்கள் பலரும் இது வேண்டாத வேலை என்று எச்சரித்ததாகவும் ஈரானியர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியாது எனவும் கூறினர். ஈரான் மீதான போரை உங்களால் தடுத்துவிட முடியாது என்றும் அறிவுறுத்தியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வலைதளத்தில் ஈரானைச் சேர்ந்தவர்களும் கூட “இஸ்ரேலியர்களை நாங்கள் எதிரியாகப் பார்க்கவில்லை…வி லவ் யூ” என்று பதில் பதிவை வெளியிட்டுள்ளனர்.

ஒரு போரை முன்னெடுத்துச் செல்ல சமூக வலைதளங்கள் ஆயுதமாகும்போது ஆயுதங்களை “மெளனிக்க” செய்யவும் வலைதளங்கள் ஆயுதங்களாகட்டுமே!

ஆசிரியர் உமாவை உண்மையில் கொன்றது யார்?

அருச்சுனன் விட்ட அம்புமழையில் கர்ணன் குற்றுயிரும் குலைஉயிரும் ஆகிவிட்டான். ஆனால், சாகவில்லை. அவனால், சாகமுடியவில்லை. தரும தேவதை அவன் சாவைத் தடுத்து அருச்சுனன் விடும் அம்புகளையெல்லாம் மலர்மாலையாக மாற்றி அவன் கழுத்தில் விழுமாறு செய்கிறாள்… அருச்சுனன் திகைக்கிறான்! கண்ணனோ சிரிக்கிறான். அப்போது அங்கே ஓடோடி வந்த தன் தாய் குந்திதேவி, “அய்யோ மகனே!” என்று கர்ணனைப் பார்த்துக் கதறித் துடிப்பதைப் பார்த்து, மேலும் அருச்சுனன் குழம்ப, கண்ணன், கர்ணன்தான் குந்திதேவியின் மூத்தமகன் எனும் கதையைச் சொல்ல, சிறிது நேரம் கழித்துக் கர்ணன் உயிர்விடுகிறான். இப்போது அருச்சுனனும் கதறியவாறு கர்ணன் அருகில் ஓடிச் சென்று “அய்யோ அண்ணா! நானே உன்னைக் கொன்று விட்டேனே! நானே உன்னைக் கொன்று விட்டேனே” என்று சொல்லி அழுதபோது, கண்ணன் அவனைக் கிண்டலாகப் பார்த்துச் சொன்னானாம் –
“நான் கொன்றேன் நான் கொன்றேன் என்கிறாயே! அருச்சுனா! நீ மட்டுமா கர்ணனைக் கொன்றாய்? அவனது குருநாதர் “சரியான நேரத்தில் உன் அம்புக்குறி தவறட்டும்” என்று கொடுத்த சாபம்தான் முதலில் அவனைக் கொன்றது. பின்னர், மாறு வேடத்தில் சென்ற இந்திரன், கவச குண்டலங்களைத் தானம்கேட்டு வாங்கிக்கொண்ட போது கர்ணன் மீண்டும் கொல்லப்பட்டு விட்டான். பிறகு உங்களின் தாய் குந்தி, “போரின்போது இரண்டாவது முறையாக நாகபாணத்தை அருச்சுனன் மீது ஏவுவதில்லை” எனும் வரத்தைக் கேட்டு அவனை இறுதியாகவும் கொன்று முடித்தாள். பிறகுதான் இந்த பாரதப் போரே தொடங்கியது. போதாத குறைக்கு இதோ நானும் இப்போது அவனது புண்ணியத்தையெல்லாம் தானமாகக் கேட்டு வாங்கிய பிறகே அவனது உயிரைத் தரும தேவதை விட்டுத்தந்தாள். இப்படி ஏற்கெனவே மாதா-பிதா-குரு-தெய்வம் ஆகிய நான்குபேருமே அவனைக் கொன்று முடித்த பிறகுதான் உன் அம்பு அவனைத் துளைத்தது. என்னவோ நீயே உன் வீரத்தால் அவனைக் கொன்றுவிட்டதாக நினைத்துக் கொண்டு, “நான் கொன்றேன் நான் கொன்றேன்” என்று பிதற்றுகிறாய்! செத்தபாம்பை அடித்த உன்னாலா அவன் கொல்லப்பட்டான்?” என்று சொன்னதாக ஒரு பாரதக் கதை உண்டு.
இப்போது சொல்லுங்கள் –
ஆசிரியர் உமாமகேஸ்வரியை வகுப்பறையிலேயே குத்திக் கொன்றது யார்?
இர்பான் வெறும் அருச்சுனன் மாதிரி செத்த பாம்பை அடித்தவன் தான்!
அந்தச் சகோதரியின் உடலில் கத்திக் குத்து மீண்டும் மீண்டும் விழ விழக் கத்திக் கதறிய கதறலில், பொங்கிப் பெருகிய ரத்தத்துளியின் கறைபட்டு யார் யாரெல்லாம் குற்றவாளிகளாகி நிற்கிறார்கள் தெரியுமா?
நாம் எல்லாரும்தான்! இது, உண்மை வெறும் இகழ்ச்சி இல்லை!
இந்தக் கட்டுரையை எழுதுகிற நானும், இதை வெளியிடும் இதழாசிரியரும், படிக்கும் நீங்களும் என இந்தச் சமூகத்தில் வாழும் நாமெல்லாருமே ஆளுக்கு ஒரு வகையில் குற்றவாளிகள் தாம்!
“யு டூ புரூட்டஸ்?” என ஒருவரை ஒருவர் கேட்டுக்கொள்ளத்தான வேண்டும். ஏனெனில் –
அனைத்து ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும், அதிர்ந்து கூடப் பேசத் தெரியாத புதுக்கோட்டை ஆசிரியர் சாரதாவை முதல் களப்பலியாக்கி, தமிழகம் முழுவதும் 36 ஆசிரியர்களை இழந்து பல லட்சம் ஆசிரியர்- அரசு ஊழியர் அதிகபட்சமாக 56 நாள் வரை சிறையிருந்து, –1986இல் “ஜேக்டீ”என்றும் 1989இல் “ஜேக்சாட்டோ” என்றும்– கத்திக் கதறிப் பெற்றதுதான் இன்று கைநிறைய வாங்கும் மத்திய அரசுக்கு நிகரான சம்பளம் என்று, இன்று வேலைக்கு வரும் எத்தனை பேருக்குச் சொல்லியிருக்கின்றன நம்ஆசிரியர்-அரசுஊழியர் இயக்கங்கள்? வரலாற்றை மறந்தவர் அதில் திரும்பவும் வாழ சபிக்கப்படுவர் என்பது உண்மைதானே? நாம் சபிக்கப்பட்டு விட்டோம்! இப்போது சம்பளம் கிடைக்கிறது! மரியாதை போய்விட்டது!
போராடக் கற்றுத்தந்த சங்கம், பாடம் நடத்தவும் பள்ளிக்கு வரும் பிள்ளைகளை நம் சொந்தப் பிள்ளைகளாகப் பார்த்துக் கொள்ளவும், அலுவலகத்திற்கு வரும் பாமரனை மரியாதையாக நடத்தி அவனது நியாயமான கோரிக்கைகளைப் பரிவோடு பரிசீலிக்கவும் கற்றுத் தந்திருந்தால் இன்றைய ஆசிரியர்கள் மதிப்பிழந்து, வெண்ணிறஆடை மூர்த்தி, லூசுமோகன்களாக நமது ஊடகங்களால் கிண்டலாகவும் கேலியாகவும் சித்திரிக்கப்படும் நிலைக்கு ஆளாகியிருப்பார்களா என்ன? “பணிப் பண்பு” (work culture) பற்றிய கவலை எந்த ஆசிரியர்-அரசு ஊழியர் அமைப்புகளுக்கு இருக்கிறது? பதவி உயர்வின்போதும், புதிய புத்தகம் வரும்போதும், பணியிடைப் பயிற்சியை அரசு மேற்கொள்வதை விட, அந்தந்தச் சங்கங்களே மேற்கொள்வது தானே சரி? இதை ஏன் எந்த ஆசிரியர் சங்கமும் செய்வதில்லை? புதிய புதிய விஷயங்களில் –அது பாடப்பகுதியாக இருந்தாலும் சரி, மாணவர் உளவியல்சார்ந்ததாக இருந்தாலும் சரி- ஆசிரியர்களுக்குச் சந்தேகம் வந்தால் கேட்டு, பொறுப்பான பதில்பெறும் இடம் என்று ஏதாவது உண்டா? உமாவுக்கு இரங்கல் ஊர்வலம் நடத்தினால் மட்டும் போதாது, இனி உமாக்கள் கொல்லப்படாமல் தவிர்க்கவும் யோசிக்க வேண்டும்.
அதிகாரிகளைக் கால்கை பிடித்தால் போதும், பாடங்களைப் பள்ளிக்கூடத்தில் நடத்துவதை விட ஏழை மாணவர்களானாலும் தன் வீட்டில் நடத்தும் தனிப்பயிற்சிக்கு எப்படியாவது இழுத்து மாணவனின் தன்மானத்தை சிதைத்து, எதையும் செய்து கொள்ளலாம் எனும் துணிச்சலை வளர்த்ததும் சங்கங்கள் தானே?
கடமை பற்றிப் பாடம் நடத்தும் ஆசிரியர், தன் கண்ணெதிரில் நடந்து கொள்வதைப் பார்த்துத் தானே மாணவர் கற்றுக் கொள்வர்? மனச்சாட்சிக்கு மட்டுமே பயந்து பணியாற்ற வேண்டிய ஆசிரியர்களுக்குள் சாதி-மத-குழுபேதம், பணிமூப்பு-பதவிபேதம், பள்ளிக்கு வந்தும் சொந்தவேலை பார்ப்பது, வகுப்பு நேரத்தில் கதைபேசுவது, பெரிய இடத்துப் பழக்கம் தரும் துணிவில் பொறுப்பின்றி நடந்துகொள்வது, புதிதாக வந்திருக்கும் கல்வி முறை தொடர்பான செய்திகளைப் பேசும் “பிழைக்கத் தெரியாத” ஆசிரியரை அணிசேர்ந்து கொண்டு கிண்டல்செய்வது இவ்வளவையும் மாணவர் முன்பே அரங்கேற்றுவது என எத்தனை எத்தனை அசிங்கம்! இவற்றைக் களைவதில் ஆசிரியர் அமைப்புகளுக்குப் பொறுப்பில்லையா?
இவ்வளவு ஏன்,,. “ஏதாவது ஒரு செய்தித் தாளையாவது காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் ஆசிரியர் எத்தனை பேர்?” என்று புள்ளிவிவரம் எடுத்தால் கதை கந்தல்தான்! இதில் நல்ல மனசோடும், ஈடுபாட்டோடும் தன் கைக்காசு போட்டுப் பணியாற்றும் ஆசிரியர்களை நீண்ட நாளாகவே அரசுகள் கண்டு கொள்வதில்லை. ஆசிரியர் அமைப்புகளோ தவறு செய்பவரைக் காப்பாற்ற மட்டுமே இருப்பதாகத் தோன்றுகிறது!
நூறு விழுக்காடு தேர்ச்சிக்காகப் பல தனியார் பள்ளிகளும் சில அரசுப்பள்ளிகளும் கூட எடுக்கும் நடவடிக்கைகளை மனச்சாட்சியுள்ள ஆசிரியர் எவரேனும் தட்டிக் கேட்டால் கல்வித்துறை பேரைச் சொல்லியே அவர்களை ஓரங்கட்டி விட்டு மாணவர்களைப் படுத்தும்பாடு கொஞ்சமா நஞ்சமா? காலை 4மணிக்கே எழுப்பி விட்டு வீட்டுப்பாடம், பிறகு தனிப்பயிற்சிக்கு ஓடி, பிறகு வந்து பள்ளிக்கூடம் ஓடி, பிறகு மாலை பள்ளியிலிருந்து வந்ததும் எதையோ வாயில் கொட்டிக் கொண்டே உடைமாற்றிக் கொண்டு, மீண்டும் தனிப் பயிற்சிக்கு ஓடி, இரவு 8மணிக்கு மேல் வீட்டுக்கு வந்து மீண்டும் –மாடுபோல அன்று நடந்த, முந்திய நாள்களில் படிக்க விட்டுப்போன பகுதிகளை அசைபோட்டு- இரவு படுக்க 11மணி யாகிவிடும் குழந்தைக்கு வயது 15! “ஓடி விளையாடு பாப்பா” என்ற பாரதி பாட்டைப் படித்து ஒப்பிக்காமல் விளையாடப்போன குழந்தைக்கு கடுமையான தண்டனை தரும் நமது பள்ளிக் கூடங்களால் மனஅழுத்தம் வராதா என்ன? அந்த அழுத்தம் கட்டாயப் படுத்தி –சிரித்துக்கூடப் பேசாத ஆசிரியரால்- அதிகமாகாதா என்ன?
இதில் பெற்றோர் வந்து பார்க்கக் கூட அனுமதி கேட்டு அரை மணிநேரம் நின்றபின் அனுமதி மறுக்கப்படும் “ஸ்ட்ரிக்ட்”ஆன பள்ளிக்கூடம்தான் சிறப்பான பள்ளிக்கூடம் என்று பெற்றோரே பீற்றிக்கொள்ளும் மனநிலையை எங்குபோய்ச் சொல்வது? கவிஞர் நந்தலாலா சொல்வதுபோல- “மாணவர்களிடம் வெளியே விட்டுவிட்டு வரச்சொல்லும் தின்பண்டத்தையும் தண்ணீர் பாட்டிலையும் எப்போது உள்ளே மாணவரோடு வைத்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, உள்ளே அவர்கள் சுமக்கும் புத்தகக் கட்டைத் தூக்கி வெளியே வீசுகிறார்களோ அப்போது தான் மாணவர்கள் சுதந்திரமாய் உணர்வார்கள்” என்பது நூறு விழுக்காடு உண்மை அல்லவா?
நான் ஒருமுறை மாணவரிடம் பேசும்போது, “புத்தகம் நோட்டே இல்லாத, வீட்டுப் பாடம் இல்லாத, பரிட்சை இல்லாத பள்ளி வகுப்பறை எப்படி இருக்கும்?” என்று கேட்க, அவர்கள் ஓவென்ற சத்தத்துடன் “ரொம்ப நல்லா இருக்கும் சார், ஆசிரியரும் இல்லை என்றால் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும் சார்” என்றது இன்னும் காதில் ஒலிக்கிறது! பள்ளி விடுமுறை என்றால் மாணவர் எழுப்பும் மகிழ்ச்சிக் கூச்சல் கூட ஒருவகையில் கல்விமுறை மீதான மாணவர் விமர்சனம்தானே?
பாடத்திட்டத்தில் மதிப்பெண்ணை மட்டுமே விரட்டும் போட்டியில், மாணவரின் மற்ற பல திறமைகள் கண்டுகொள்ளப் படாததில் விரக்தி அடைவது இயல்பு அல்லவா? “மாணவர் முன்னேற்ற அறிக்கை” (Progress Card) இல் அவனது பாடும் திறமை, பேசும் திறமை, ஓவியத் திறமை, விளையாட்டு, சேர்ந்து செயலாற்றுவது, முக்கியமாக அடுத்தவருடன் அன்பாக இருப்பது என, இதர பல பண்பு-திறமைகளையும் பாராட்டி அவற்றுக்கும் மதிப்புப் போட்டு, பெற்றோர்க்கு அறிக்கை தருவதாக இருந்தால், “இதில் நான் இல்லை, இதோ இதில் நான் இருக்கிறேன்” என்னும் நிறைவு மாணவர்க்குக் கிடைக்கும். இப்போது மதிப்பெண்ணை மட்டும் காட்டும் முறையை நிச்சயமாக மாற்றியாக வேண்டும். அங்கீகாரம் தரப்படும் ஒவ்வொரு திறமையும்-பண்பும் மற்ற திறமைகளையும் வளர்க்கும் என்பதைக் கல்வித்துறை நிச்சயமாகப் பரிசீலிக்க வேண்டும்!
நமது தேர்வுமுறை தோல்வியடைவதை மையமாகக் கொண்டிருப்பதாகவே எனக்குப் படுகிறது. தாள் திருத்தும் மையங்களில் தரப்படும் மாதிரி விடைத்தாள் (key)களைக் கட்டிக்கொண்டு அழாமல், சிந்தித்து எழுதும் மாணவர்க்கே சிறந்த மதிப்பெண் கொடுக்கும்படி ஆசிரியர்களுக்கும் பயிற்சிதர வேண்டும். மாணவர் எழதியதை தரப்பட்ட விடைக்குறிப்போடு ஒப்பிட்டு “சரியாக இருக்கிறது” என்று எந்தவித சிந்தனையும் இல்லாமலே திருத்தப்படும் தேர்வுக்குத்தான் நோட்ஸ் தேவைப்படும். சிந்தித்து எழுதப்படும் விடைக்கு நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்றால் ஆசிரியர்களையே அசர அடிக்கும் விடைகளை மாணவர் தருவார் என்பதில் நம்பிக்கை வேண்டும்.
தேர்வு முறை மட்டுமல்லாமல், திருத்தும் முறையும் மாறவேண்டும். அல்லது, ஒவ்வொரு மாணவருக்கும் கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான வினாத்தாள்களில் ஒன்றைத் தந்து, அவரே விடையை இட்டு, கணினியால் உடனுக்குடன் திருத்தப்படும் விடைத்தாள் மதிப்பெண் படியை அவரே எடுத்துக்கொண்டு செல்லும் தேர்வு முறையை அறிமுகப் படுத்தலாம். இப்போது நடக்கும் தேர்வுகளால் மனித உழைப்பு விரயம் மட்டுமல்ல, மனஅழுத்தம், தேர்வு அறைக் கண்காணிப்பாளர்-மாணவர் மோதல் களையும் தவிர்க்கலாம். இதில் தனியார் பள்ளி நிர்வாகங்களின் நேரடிப் பங்களிப்பும் உண்டு! சொல்லும்விதம் நடந்துகொண்டால் தனிக்கவனிப்பும், நேர்மையுடன் நடந்து கொண்டால் அவரது வாகனம் சேதப்பட்டுக் கிடக்கும் பரிதாபத்தையும் தவிர்க்கலாம்.
தாய்-தந்தை இருவரில் ஒருவராவது தன் குழந்தையின் மீது அன்பு செலுத்த நேரம் ஒதுக்கி அதை வெளிப்படையாகக் காட்டவும் வேண்டும். இரண்டுபேரும் கண்டிப்பாக இருக்கும் இடம் குழந்தையின் கல்வி குறித்தே என்பதை மாற்றியாக வேண்டும். மருத்துவராகவும், பொறியாளராகவும், வழக்குரைஞராகவும் வரவேண்டும் எனும் கனவில் அவன் மனிதனாகவும் இருக்க வேண்டும் என்பதை மறந்து விடுகிறார்களே! பணம் கறக்கும் படிப்பாகப் பிள்ளை படிக்கவேண்டும் என்ற ஆசையில் 9ஆம் வகுப்பிலிருந்தே அந்தக் குழந்தையின் தலையில் தன் பேராசையை ஏற்றிவிட்டு, பாடாய்ப் படுத்தும் பெற்றோர், என்ன சம்பாதித்தாலும் அவன் வாழும் முறையைக் கற்றுக்கொள்ளாமல் எப்படி வாழ்வான் என்பதை எப்போதுதான் யோசிப்பார்கள்?
குழந்தை பள்ளிக்கு வருவது நல்ல மதிப்பெண் வாங்குவதற்காக மட்டுமல்ல. இதை வீட்டிலிருந்து தனிப்பயிற்சி வழியாகவும் கற்றுக்கொள்ள முடியும். பலருடன் பழகி இந்த உலகத்தோடு ஒட்டி வாழக் கற்பதுதான் உண்மையான கல்வி! ஆசிரியர்கள்- பள்ளியில் இருக்கும் பெற்றோராகவும், பெற்றோர்- வீட்டிலிருக்கும் ஆசிரியராகவும் நடந்து கொள்வதுதான் ஒரு குழந்தையை அறிவோடும் பண்போடும் வளர்க்கும் ஒரே வழி!
கண்டிப்பும் கனிவும் சரிவிகித்த்தில் காட்டவேண்டிய பெற்றோர் இரண்டில் ஒன்றை மட்டுமே காட்டுவதில் குழந்தையின் மன அழுத்தம் நிச்சயமாகப் பாதிக்கப்படும். இது வெளிப்படும் இடமாக வகுப்பறை இருக்கும்போது, மனப்பிறழ்ச்சி அதிகமாகி தோல்விகளைத் தாங்காத மனநிலை இயல்பாகச் சிந்திக்க விடுமா?
அரசுகளின் முதல்பார்வை படவேண்டிய கல்விக்கு ஓரப்பார்வையே கிடைக்கிறது! ஒவ்வோராண்டும் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி விழுக்காடு குறைந்துகொண்டே வருவதை கல்வியாளர் மட்டுமல்ல, நாட்டு வளர்ச்சியில் அக்கறை கொண்ட யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தின் பலனை முதலில் கல்வித்துறைக்கல்லவா வழங்க வேண்டும்? அதுதானே உடனடித் தேவை! ஆனால், நமது நாட்டில் தலைகீழாக அல்லவா நடக்கிறது?
சுவையாக இனிக்க வேண்டிய பாடம் கசப்பதும், வெறுக்கத் தகுந்த சீரழிவு ஊடகங்கள் பலவண்ணத்திலும்-பலமடங்கு முன்னேறிய வாய்ப்பு-வசதிகளோடும் பல்லை இளிப்பதில் பலியாவது நம் சந்ததிகள் தானே என அரசுகள் கவலைப்பட வேண்டாமா?
மக்களுக்கு இலவசமாகத் தரப்படவேண்டிய கல்வியும் –மருத்துவமும்தானே நம்நாட்டில் ஏழைக்கு எட்டாக் கனியாக இருக்கிறது?! மற்ற இலவசங்களையெல்லாம் நிறுத்திவிட்டு அனைவருக்கும் உயர்கல்வி வரை இலவசம், அனைத்து மருத்துவமும் இலவசம் என்று கொண்டுவரட்டும், கல்விவள்ளல்கள் கடையை மூடி-ஓடிவிட மாட்டார்களா? மற்றவற்றை இலவசமாகக் கொடுக்க முன்வரும் அரசுகள், ஏழைக்கு எட்டாக் கனியாகிவிட்ட கல்வி-மருத்துவம் இரண்டையும் எப்படியாவது வாங்கிவிடும் போட்டியில்தான் இளைய தலைமுறை பலியாகிறது என்பதை உணர வேண்டாமா?
திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடரிலும் வரும் குழந்தைகள் “பிஞ்சிலே பழுத்தது”போலப் பேசும்பேச்சுகளைப் பார்த்தால், வியப்புக்குப்பதிலாக நமக்கு வேதனை தான் மிஞ்சுகிறது. அதிலும் சில காட்சிகளில் நகைச்சுவை எனும் பெயரில் குழந்தைகள் பேசும் சிலவசனங்கள் எரிச்சலையும் ஆற்றாமையையும் அல்லவா எழுப்புகின்றன?
“தமிழகத்தின் தங்கக் குரல்” “செல்லக்குரல்” “குட்டிக்குரல் தேடல்” என்று ஒவ்வொரு தொலைக்காட்சியும ஒவ்வொரு பெயர் வைத்துக்கொண்டாலும் போட்டிக்கு வரும் குழந்தைகள் பாடும் பாடல் குழந்தைள் பாடக் கூடியதாக இருக்கிறதா என்று எந்த நடுவராவது கவலைப் படுகிறாரா? 5வயதுக் குழந்தை முக்கி முணகிப் பாடும் காமரசப் பாடல்களைப் பாடும் குழந்தையின் வயதுக்கு இது சரிதானா என்று யோசிக்க வேண்டாமா? இவர்களின் வணிக நோக்கத்திற்கு, பாடிக்கொண்டிருக்கும் சில நூறு குழந்தைகள் மட்டுமல்லாமல், பார்த்துக் கொண்டிருக்கும் பல கோடிக் குழந்தைகளும் பலியாகி ஒரு தலைமுறையே “குழந்தைமை”யை இழந்து பிஞ்சிலே பழுத்து உதிரவேண்டியதுதான் விதியா?
பேச்சு பாட்டு நடிப்பு மூன்றையும்தான் கேட்கிறேன்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், “வாடா மாப்பிள வாழப்பழத் தோப்புல வாலிபால் ஆடலாமா?” என்பன போலும் பாடல்களை ஏராளமான முகபாவங்களுடனும் தாராளமான இடுப்பாட்டத்தோடும் ஐந்து வயதுக் குழந்தை அனுபவித்துப் பாடுவதைப் பார்வையாளர்கள் பார்த்து ‘பரவச’ப்படுவதும், நடுவர்கள் பார்த்துப் பாராட்டுவதும் சரியானதுதானா? இர்பான் கூட இப்படி ஒரு இந்தி திரைப்படம் பார்த்த்தாகச் சொன்னானே?
ஒரு சிலர் மிகச் சரியான விமரிசனங்களோடு அந்த ‘மீத்திற’க் குழந்தைகளின் அபாரத் திறமையை மனம்விட்டுப் பாராட்டும்போது நமக்கும் ஏற்படும் மகிழ்ச்சி, இதுபோன்ற வயதை மீறிய விஷயங்களோடு வரும்போது –அதற்குப் பயிற்சி கொடுக்கும் பெற்றோரிடம் “இப்படிச் செய்வது தவறு, இது குழந்தைகளுக்கும் நல்லதல்ல” என்று எடுத்துக் கூறித் திருத்துவதல்லவா கலைத் தாய்மையின் கடமையாக இருக்கும்? அவர்களே இதைப் பாராட்டிவிட்டால் பிறகு பெற்றோர்களின் குழந்தைப் பயணம் அந்தத் திசையில் தானே அதிவேகமாக இருக்கும்!
இப்போது சொல்லுங்கள் –
ஆசிரியர் உமாமகேஸ்வரியை வகுப்பறையிலேயே குத்திக் கொன்றது யார்?
கல்விமுறை, ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊடகங்கள், அரசுகள் ஆகிய நாம் எல்லாரும்தானே?
செத்துப் போன உமாவை உலகம் தெரிந்து கொண்டது.
குற்றுயிரும் குலை உயிருமாகத் திரியும் ஆயிரக்கணக்கான உமாக்களும் இர்பான்களும் சாகுமுன், நாமெல்லாரும் ஏதாவது செய்தாக வேண்டும். அதுதான் உமாவின் ரத்தம் நமக்குச் சொல்லியிருக்கும் செய்தி.

மறக்கப் பட்ட கவர்ச்சி கன்னி-சில்க் ஸ்மிதா

1926 சூன் 1 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமையில் பிறந்த குழந்தையின் பெயர் நார்மா ஜீன் மார்ட்டேன்சன் , இவர் உலக சினிமாவையே வரலாற்றில் மிக பெரிய கனவு தேவதையாக வலம் வருவார் என்று அன்று தெரியவில்லை, சிறு வயதில் பல்வேறு துன்பங்களுக்கும், பாலியல் வன்முறைக்கும், குடும்ப சூழல்களுக்கும் சிக்கக் கொண்டவர் இவர், பதினாறு வயதில் திருமணம் முடித்து, அதற்கு பின் மாடலிங் துறையில் காலெடுத்து, தன் அழகாலும், தோற்றத்தாலும், கவர்ச்சியாலும் இந்த உலகை புரட்டிப் போட்டு இறந்த பின்னும் இன்று வரை நம் மனதில் மாறாது இருப்பவர் மெர்லின் மன்றோ… இவரின் இறப்பு குறித்த மர்மங்கள் இன்றும் புரியாத புதிராகவே இருந்து வருகின்றது…

 


===========================================
1960 , மர்லின் மன்றோ இறப்பதற்கு சரியாக இரண்டு வருடங்கள், ஏலுறு , ஆந்திரா பிரதேசத்தில் விஜயலட்சுமி என்ற பெயரில் டிசம்பர் 2 ஆம் தேதி ஒரு பெண் குழந்தை பிறந்தது. சிறு வயதில் குடும்ப சுழல் காரணமாக பெற்றோரால் படிப்பை நிறுத்தப் பட்டு, அறியாத வயதில் திருமணமும் செய்து வைத்தனர், கணவன் மற்றும் மாமியார் கொடுமையால், அங்கிருந்து தப்பித்து சென்னைக்கு புறப்பட்டு வந்தார் விஜயலட்சுமி. அன்றிலிருந்து அவர் வாழ்கையில் ஒரு திருப்பு முனை ஏற்பட்டது. , தமிழகத்தை தன் கவர்ச்சியாலும், காந்த கண்களினாலும் சுண்டி இழுத்தவர் , அவர் தான் விஜயலட்சுமி என்கின்ற சில்க் சுமிதா.


ஆனால் இவரின் கவர்ச்சியான தோற்றத்திற்கும், கவர்ச்சியான நடிப்பிற்கும் முகம் சுழித்தவர்களும் இருந்தனர், ஐடம் கேர்ள் நடனம் மட்டும் ஆடும் பெண்களிடையே சில்க் தான் என்றும் டாப், அதோடு மட்டும் அல்லாமல் சில்க் பல படங்களில் நடித்தும் உள்ளார், அற்புதமான நடிகையும் கூட அவர்…

சுமித்தாவின் வாழ்க்கை புரியாத புதிராகவே இருந்து வந்தது, அவரின் தனிப் பட்ட வாழ்க்கை இன்று வரை மர்ம முடிச்சுகள் அவிழப் படாமல் இருகின்றது , அவர் தற்கொலை செய்துக் கொண்ட பின், ஏற தாழ அவரைப் பற்றி தமிழ் மக்களும் சினிமா துறையும் மறந்து போனது, தீடிரென பாலிவுட்டில் அவரின் சுய சரிதை படமாக்கப்படுவதாகவும், படத்தில் சோகம் தோய்ந்த முகத்துடன், ஒரு குடும்ப பெண்ணாக ( பரிநீதா ) போன்ற படங்களில் நடித்த வித்யா பாலன் நடிப்பதாகவும் சொன்னார்கள் , இது ஒரு நல்ல தேர்வே இல்லை, சில்கு எவ்வளவு அழகு, சில்கின் நடை, உடை, அவளின் தோற்றம், நிறம் எல்லாமே ஒரு அழகு, என்று பல பேர் தங்களின் கருத்தை முன் வைத்தார்கள்,


இது ஒரு புறம் இருக்கட்டும், இன்றைய நவீன காலத்து பெண்கள் ” Dusky ” என்று கூறப் படும் மாநிறத்தை விரும்புகின்றனர், தீபிகா படுகோனே, கஜோல், ராணி முகர்ஜி போன்றவர்கள் ” Dusky beauty ” என்றும் சிலரால் அழைக்கப் படுவது உண்டு. ஆனால், நம் தமிழ் சினிமா, இதை ஒரு தலை முறைக்கு முன்பாகவே அறிமுகப் படுத்திவிட்டது. சில்க் சுண்டி இழக்கும் நிறம் இல்லை, மாநிறம் தான், இப்பொழுதுக்கான சொல்லாடல்களில் சொல்லபோனால் ” Dusky Beauty :, இன்றைய நவீன பெண்கள் தங்களின் நாரிகம், உடை ஆகிய அனைத்தையும் தாங்கள் தேர்வு செய்வதற்கான சுதந்திரத்தைப் பெற்று இருகின்றனர், அதை அன்றே பெற்று இருந்தார் சில்கு, சில்கின் வாழ்க்கையிலிருந்து அறிவது என்ன வென்றால் அவர் நிச்சயமாக ஒரு தைரியமான, சுயமாக முடிவெடுக்கும் ,பெண்ணாக இருந்து இருத்தல் வேண்டும், மிக அழுத்தமான பெண்ணாகவும் இருந்திருத்தல் வேண்டும்.


யாரும் எளிதாக செய்ய தயங்கும் கவர்ச்சி வேடங்களில் சில்க் செய்தார் என்பதால் பல பேர் அவரை வெக்கம் இல்லாதவள் , மானம் கேட்டவள் என்றும் பட்டமளித்தனர், ஆனால் அப்படி அவர் செய்வதற்கு அவர் எத்தகைய துணிச்சலான பெண்ணாக இருந்து இருப்பார் என்பது வியப்பை அளிக்கின்றது. இதிலென்ன துணிச்சல் வேண்டும் ? என்பவர்களுக்கு, சில்க் சிறிய வயதில் பல்வேறு துன்பங்கள் அனுபவித்து அந்த அனுபவங்களின் தாக்கம் கலைத் துறையில் அவர் எந்த கதாப் பாத்திரத்தையும் ஏற்று நடிப்பதற்கான மன உறுதியை வெளிப்படுத்தியது,

இன்றைய சுழலில் நடிகைகளின் வாழ்க்கை வேறுவிதமாக அமைந்துள்ளது. பெற்றோர்களே அவர்களை ஊக்குவிக்கிறார்கள் , வித்யா பாலன் சில்கைப் போல் நடித்ததற்கு அவரை முதலில் பாராட்டியது வித்யா பலானின் தந்தை, ஆனால் சில்கிற்கு மிஞ்சியது வெறும் மரணம் என்னும் கோர பிடித்தான்.

அன்றைய காலகட்டத்தில் சில்க் சுமிதா அருவெறுப்புடனும் , சில்க் சுமிதாவை ரசிப்பவர்கள் எல்லாம் கெட்டவர்கள் என்றும் இருந்தது, அது இன்று வரை தொடர்கிறது, ஆனால் சில்க் சுமிதாவின் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்த ஒரு பெண்ணுக்கு பரிசும் பாராட்டும், பட்டங்களும், கோடிகளும்… பல பேர் வித்யா பாலனின் இந்த முயற்சிக்கு , ” She is courageous to take up this stand “, என்றனர் , நான் மறுக்கவில்லை, ஆனால் ஒருவராக நடிக்கும் ஒருவருக்கு இத்தனை புகழ் என்றால், வாழ்ந்தவருக்கு ஏன் அப்படி இல்லை? ஏன் சில்க்கை பார்க்கும் போது எல்லோருக்கும் பாலியல் குறித்த எண்ணமும், கேவலமான சிந்தனையும் மட்டும் தோன்றுகிறது ? என்றால் நாம் எதையும் எப்படி சொல்லப் பட்டதோ அப்படியே ஏற்கும் மனப் பான்மையில் உள்ளோம் என்பதற்கான அறிகுறியே ..

மெர்லின் மன்றோவிற்கும் ..சுமித்தாவின் வாழ்க்கையும் ஏற தாழ ஒரே சூழ்நிலைகள் தான். சிறு வயதில் வறுமை, புறக்கணிப்பு, திருமணம், திருப்புமுனை, மரணம். ஆனால் இடைப்பட்ட வாழ்க்கையில் மெர்லின் மன்றோவிற்கும் சில்க்குக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன,

மெர்லின் மன்றோ அமெரிக்காவின் ஒரு அழகு தேவதையாகவும், கவர்ச்சி கண்ணியாகவும் கருதப்பட்டார் , இன்றளவும் அவருக்கு பல கோடி பேர் ரசிகர்கள், ஆனால் சில்க் இன்று நம்மிடையே மறைந்து போய் விட்டார்… அவரின் ரசிகர் என்று சொல்வதற்கு கூட தயங்குகிறார்கள்….

சில்க் 1996 , தூக்கில் இட்டு தற்கொலை செய்துக் கொண்டார், இவர் மரணத்தில் மர்மங்களின் முடிச்சுகள் அவிழப்படாமல் உள்ளது, பலர் காதல் தோல்வியென்றும், பாலியில் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறுகின்றனர் , எது எப்படி இருந்தாலும் . ஆந்திராவில் பிறந்து தமிழகம் கண்டெடுத்த சில்க் சுமிதா தமிழ் நாட்டின் மெர்லின் மன்றோ….