எம்.ஆர்.ராதாவின் 105 வது பிறந்தநாள்நேற்று நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் 105 வது பிறந்தநாள்!

விகடனில் இடம்பெற்ற எம்.ஆர்.ராதா 25!

சினிமாவில், சீர்திருத்தக்காரர். நாடகத்தில், கலகக்காரர். அரசியல் மேடையில் சீறினால், இடியாக இறங்குவார். தனிமையில் சீண்டினால், வெடியாக வெடிப்பார். எம்.ஆர்.ராதா… எவருக்கும் அஞ்சாத ராஜா!

மதராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் என்ப தன் சுருக்கம்… எம்.ஆர்.ராதா. ஜெர்மன் போர்க் கப்பலான ‘எம்டன்’ சென்னையில் குண்டு வீசிய அன்று பிறந்தவர் என்பதால், அவரது வாழ்க்கை முழுவதும் வெடிச் சம்பவங்கள் நிறைய!

அப்பா ராஜகோபாலன், இந்திய ராணுவத்தில் இருந்தவர். முதலாம் உலகப் போரில் பங்கேற்று மெசபடோமியாவில் பலியானவர். அதற்காகப் பெற்ற வீரப் பதக்கத்தை எப்போதும் பொக்கிஷமாகவைத்து இருப்பார் ராதா!

சின்ன வயதிலேயே வீட்டுக்கு அடங்காத பிள்ளை. அதனால் பள்ளியில் படிக்க மனம் இல்லை. ‘நான் ஓர் அநாதை’ என்று சொல்லி, ஆலந்தூர் அரங்கசாமி நாடகக் குழுவில் சேர்ந்தார். நல்லத்தங்காள் நாடகத்தில் அவள் கிணற்றில் வீசும் குழந்தைகளில் ஒன்றாக மேடையேறியது முதல் அனுபவம். ‘நாடகத்தில் நடிக்கச் சொல்லிக்கொடுத்தவர் ஜெகநாதய்யர்தான்’ என்பார்!

ராதா நடித்த முதல் படம் ‘ராஜசேகரன்’ (1937). கடைசிப் படம் ‘பஞ்சாமிர்தம்’ (1979). சினிமா வாய்ப்பு கிடைத்ததும் பலரும் நாடகத்தை விட்டுவிடுவார்கள். ஆனால், சினிமா – நாடகம் இரண்டையும் விடாமல் வைத்திருந்தவர் இவர் மட்டும்தான்!

‘உலகப் பாட்டாளி மக்களே ஒன்று சேருங்கள்’ என்று சொல்லி, அரிவாள் சுத்தியல் சின்னத்தைக் காட்டு வதைத் தனது ஆரம்ப கால நாடகங்களில் வழக்கமாக வைத்திருந்த ராதா, அதன் பிறகு திராவிடர் கழகக் கொடியையும் பெரியார் படத்தையும் காட்டிவிட்டுத்தான் நாடகத்தை ஆரம்பிப்பார்!

ரத்தக் கண்ணீர் நாடகம் 3 ஆயிரத்து 21 நாட்கள் அரங்கேற்றப்பட்டது. தூக்குமேடை நாடகம் 800 நாட் களும், லட்சுமிகாந்தன் நாடகம் 760 நாட்களும் அரங்கேற்றப்பட்டுள்ளன!

ப்ளைமௌத், அம்பாஸடர், இம்பாலா எனப் பலப்பல கார்களை வைத்திருந்தார். இம்பாலாவில் ஒருநாள் எருமை மாட்டுக்கு வைக்கோல் எடுத்துச் சென்றதைப் பார்த்துப் பலரும் ஆச்சர்யப்பட்டார்கள். ‘நமக்குப் பயன்படுறதுக்குத்தானப்பா கார். தகரத்துக்கு கலர் பெயின்ட் அடிச்சதுக்காக, தலையிலயா தூக்கிட்டுப் போகமுடியும்?” என்று கேட்டார்!

நாடகம் நடந்துகொண்டு இருக்கும்போது, செருப்பு, கல், அழுகிய முட்டை போன்றவை எதிரிகளால் வீசப்படுவது வாடிக்கை. அந்தப் பொருட்களை மறு நாள் கண்காட்சியாக வைப்பார். ‘நேற்று பேடி கள் விட்டுச்சென்ற சாமான்கள்’ என்று அதில் எழுதி வைப்பார்!

எம்.ஜி.ஆரை ‘ராமச்சந்திரா’ என்றும், சிவாஜியை ‘கணேசா’ என்றும் அழைப்பார். மற்ற நடிகர்களை எல்லாம் வாடா, போடாதான்!

இவரது நாடகங்களைத் தடை செய்வதற்காகவே காங்கிரஸ் ஆட்சி நாடகத் தடைச்

சட்டம் கொண்டுவந்தது. அந்தச் சட்டம் விவாதத்துக்கு வந்தபோது டவுசர், பனியனோடு சபை வளாகத்துக்குப் போய்விட்டார். ஒரு நாடகத்தைத் தடை செய்தால், அதையே பெயர் மாற்றி மறு நாள் போடுவார்!

என்.எஸ்.கிருஷ்ணனைச் சுடுவதற்காக உளுந்தூர்ப்பேட்டையில் கள்ளத் துப்பாக்கி வாங்கினார். விஷயம் தெரிந்து, ‘நண்பன் கையால் சாகக்கொடுத்து வைத்திருக்கணும்’ என்று என்.எஸ்.கே. சொன்னதும், மனம் மாறி கட்டி அணைத்தார் ராதா. திருப்பதி கோயிலுக்கு குண்டுவைக்கப் போய் வெடி மருந்தைக் காயவைத்து, அது வெடித்துச் சிறு விபத்தான சம்பவமும் உண்டு!

எம்.ஜி.ஆரை அவரது ராமாவரம் தோட்டத்தில் சுட்டு, தானும் சுட்டுக்கொண்டதாகப் பதிவான வழக்கில் ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை தரப்பட்டது. “நண்பர்கள் ரெண்டு பேரும் துப்பாக்கியைவெச்சு விளையாடிக்கிட்டோம். என்னடா துப்பாக்கி கண்டுபிடிக்கிறானுங்க. நானும் சாகலை… ராமச்சந்திரனும் சாகலை. இதுல எல்லாமா டூப்ளிகேட் வர்றது?” என்று அதற்கும் காமெடி விளக்கம் கொடுத்தார்!

நான்கரை ஆண்டு காலம் சென்னை மத்தியச் சிறையில் இருந்தார். அவர் மீது ஆர்வம்கொண்டவராகக் காட்டிக்கொண்ட கைதி ஒருவர், ஒருநாள் சமையல் செய்து கொடுத்தார். ராதா வளர்த்த பூனை அதை முதலில் சாப்பிட்டதும் சுருண்டு விழுந்து செத்துப்போனது. ஆய்வுக்கு அனுப்பப்பட்ட அந்த உணவில், விஷம் கலக்கப்பட்டு இருந்தது பின்னர் தெரிய வந்தது!

‘அடியே காந்தா… ஃபாரின்ல நீராவியில கப்பல் விடுறான்… நீங்க நீராவியில புட்டு செஞ்சு வயித்துக்குள்ள விடுறீங்க’, ‘ஊருக்கு ஒரு லீடர்… அவனவனுக்கு ஒரு கொள்கை.. அவனவனுக்கு ஒரு பட்டினிப் பட்டாளம்… நான்சென்ஸ்’-இப்படி ராதாவின் வார்த்தைகளைவைத்தே மிமிக்ரி நடிகர் ஆனவர்கள் அதிகம்!

ராமாயணத்தை அதிகப்படியாகக் கிண்டலடித்தவர். ‘கீமாயணம்’ என்று நாடகம் போட்டார். ராமன் வேடத் தில் இருக்கும்போதே கைது செய்தார்கள். பக்தர்கள் மனம் புண்படுகிறது என்று வழக்குப் போட்டார்கள். ‘மனம் புண்படுபவர்கள் யாரும் வர வேண்டாம்’ என்று விளம்பரம் கொடுத்தார்!

‘நீங்கள் எதில் அதிக இன்பம் காண்கிறீர்கள்?’ என்று கேட்டபோது, ‘எதிர்ப்பில்தான். மக்கள் எதை விரும்புகிறார்களோ…அதை எதிர்ப்பதுதான் என் பழக்கம்’ என்றார்!

ராதாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. எவ் வளவு நீளமான வசனங் களாக இருந்தாலும், யாராவது வாசித்தால் அப்படியே மனதுக்குள் ஏற்றிக்கொள்வார். அவர் சொல்லச் சொல்ல எழுதப்பட்டவை சிறுசிறு வெளியீடுகளாக அந்தக் காலத்தில் வெளிவந்தன. ‘அண்ணாவின் அவசரம்’, ‘ராமாயணமா? கீமாயணமா?’ என்ற இரண்டும் அதிக சர்ச்சையைக் கிளப்பியவை!

ரத்தக் கண்ணீர், பாகப்பிரிவினை, பாவ மன்னிப்பு, பலே பாண்டியா, பாலும் பழமும், தாய் சொல்லைத் தட்டாதே, படித்தால் மட்டும் போதுமா, பெரிய இடத்துப் பெண், தொழிலாளி, பெற்றால்தான் பிள்ளையா ஆகிய படங்கள் ராதா வாழ்ந்து காட்டிய படங்கள். 118 படங்கள் நடித்த ராதா 1963-ம் ஆண்டில் சாதனையாக 22 படங்கள் நடித்தார்!

மு.கருணாநிதி என்று அதுவரை அழைக்கப்பட்டு வந்தவரை ‘கலைஞர் கருணாநிதி’ என்று அழைத்துப் பட்டம் கொடுத்தவர். ‘நடிகவேளின் தலைமுடியும் நடிக்கும்’ என்று கலைஞரும் பாராட்டி இருக்கிறார்!

“திராவிட இயக்க ஆட்சி தமிழகத்தில் மலரும் போது ராதாதான் கலைத் துறை அமைச்சராக நியமிக்கப்படுவார்” என்று பகிரங்கமாக அறிவித்தார் அண்ணா. 67-ல் ஆட்சி மலர்ந்தபோது, ராதா கடுங் காவல் தண்டனை பெற்று சிறையில் இருந்தார்!

தன்னைப் பார்க்க இளைஞர்கள், மாணவர்கள் வந்தால் விரட்டுவார். “போய்ப் படிங்கடா… நாங்க எங்க வேலையைப் பார்க்கிறோம். நீங்க உங்க வேலையைப் போய்ப் பாருங்கடா’ என்பார். மாண வர்கள் சினிமா பார்க்கக் கூடாது என்பது அவரது அழுத்தமான கருத்து!

விழாக்கள், பாராட்டுக்கள் ஆகியவற்றில் விருப்பம் இல்லாத காமராஜர், ராதாவுக்கு மட்டும்தான் புனித ஆடை போர்த்தும் விழாவை நடத்தினார். ‘ஆடையில் என்ன புனிதம் வேண்டிக்கிடக்கு? போர்த்துகிறவர் புனிதர்… அதனால ஏத்துக்கிறேன்’ என்று அங்கும் கர்ஜித்தார் ராதா!

‘மக்களின் அஞ்ஞானத்தைப் போக்க விஞ்ஞானம் மட்டும் போதாது. ராதா நடத்துவது போன்ற நாடகங்களும் தேவை’ என்று சொன்னவர் விஞ்ஞானி சர்.சி.வி.ராமன்!

‘சுட்டாள்… சுட்டான்… சுட்டேன்’ என்ற தலைப்பில் நாடகமும் சினிமாவும் எடுக்கத் திட்டமிட்டார். வி.என்.ஜானகி சுட்டாள், எம்.ஜி.ஆர். சுட்டான், நான் சுட்டேன்… என்று விஷயம் அறிந்தவர்களால் விளக்கம் சொல்லப்பட்டது!

“தமிழினத்துக்குத் துரோகம் செய்கிறவர்களை ஒழிக்க ஒரு தற்கொலைப் படை வேண்டும். அதுதான் என்னுடைய லட்சியம். 300 பேர் அதற்குக் கிடைத்தால் போதும்” என்று தனது கடைசிக் காலத்தில் சொல்லிக்கொண்டே இருந்தார்

கிஷோகர் IN பக்கங்கள்: மவனே தனுசு ! மாட்டினா செத்தடா

கிஷோகர் IN பக்கங்கள்: மவனே தனுசு ! மாட்டினா செத்தடா: டேய் வேணாம்டா! வலிக்கும்டா ஒரு சில ஜந்துக்கள் இருகுதுங்க இந்த உலகத்தில! ஓவர் நைட்ல புகழ்    வ ந்துட்டா போதும், தாங்க எப்பிடி இருந்தோம்…

Raju Online: .. தமிழ் பொறியியல் நண்பர்களே தயவு செய்து படியுங்கள…

Raju Online: .. தமிழ் பொறியியல் நண்பர்களே தயவு செய்து படியுங்கள…: எனது வலைதள நண்பர்களே . . இந்த கட்டுரையை உங்களிடம் பகிர்ந்து கொள்ள பெருமையும் படுகிறேன். . தலை குனிவும் அடைகிறேன் . . ஏனென்றால் நானும் பொற…

சிந்திக்க சில விஷயங்கள்… {கேவலமான உண்மைகள்.}

1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!!

2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!

3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!!

4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!

5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!!

6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..!!

7. குடிக்கும் Lemon Juice,Orange juice…etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!

8.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

9.கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை…அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!!

10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை..!!!

11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்…!!!!

-படித்ததில் பிடித்தது..( by அக்னி சிறகுகள்)..

நட்புக்கும் காதலுக்கும் எவ்வளவு தூரம்?

இந்த பதிவு வண்ண நிழலன் வழியாக அராத்துவிடமிருந்து சுட்டது….
ஆண் பெண் நட்பு / ஆண் பெண் காதல் இரண்டிலும் பொதுவான சில செயல்களை பார்த்து நக்கல் அடிக்கும் நயவஞ்கர்களுக்காக இந்த பதிவு . இரண்டிலும் பொதுவாக சில வினைகள் இருந்தாலும் , அவற்றிற்கிடையேயான மெல்லிய வேறுபாடுகளை பட்டியலிடுவதே நோக்கம்.

காதல் : கட்டிப்பிடிக்கலாம் , இறுக்கி கட்டிப்பிடிக்கலாம் , மார்பகம் என்ன பாடு பட்டாலும் பரவாயில்லை ,கட்டிப்பிடிக்கும் போது பின் பக்கத்தில் கூட கை வைத்துக்கொள்ளலாம்.

நட்பு : கட்டிப்பிடிக்கலாம் , ஒரு மார்பகத்தின் மீது மட்டும் படலாம்.ஒத்தடம் கொடுத்தது போல ஒத்தி எடுத்து விட வேண்டும் . முதுகில் பட்டும் படாமல் கை வைத்து எடுக்க வேண்டும்.

காதல் : எங்கு வேண்டுமானாலும் வகை தொகை இல்லாமல் முத்தம் கொடுக்கலாம்.கடிக்கவும் செய்யலாம்.

நட்பு : கடிக்கக்கூடாது , நெற்றி , புறங்கை , உச்சந்தலை ( பேனு, ஈறு எல்லாம் வாயில் போகாமல்)போன்ற இடங்களில் முத்தமிடலாம். உதடு ட்ரையாக இருக்க வேண்டும் .ஓவராக எச்சில் படுத்தி விடக்கூடாது.

காதல் : எப்போது வேண்டுமானாலும் மடியில் உட்கார வைத்துக்கொள்ளலாம்.

நட்பு : பிளான் பண்ண வேண்டும் . அள்ளக்கை 3 பேரை வெட்டியாக சேர்த்துக்கொண்டு ஆட்டோ பிடிக்க வேண்டும்.முதலில் 3 பேரை உள்ளே அனுப்பி விட்டு நாலாவதாக நாம் ஏறி தோழியை மடியில் உட்கார வைத்துக்கொள்ளலாம். இடுப்பையும் இந்த சந்தர்பத்தில் மட்டும் பிடிக்கலாம்.

காதல் : எந்த இடத்தில் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தொட்டுப்பார்த்து உவகை அடையலாம்.

நட்பு : ஒன்று சந்தர்ப்பத்திற்காக காத்திருக்க வேண்டும் , ஜுரம் அடிக்கையில் கழுத்தை தொடலாம். ஸ்கூட்டியில் இருந்து விழுந்து விட்டால் சம ஜாலி , முட்டிக்கால் வரை தொட்டுப்பார்க்கலாம் , தொடையெல்லாம் நட்பின் ஆழத்தை பொறுத்தது.சாலையை கடக்கையில் கையை தொடலாம் ( முன்ன பின்ன அவ சாலையை கடந்ததே இல்லை பாவம்) பீச்சிற்கு அழைத்து சென்று இடுப்பளவு ஆழத்தில் விளையாடும் அளவிற்கு சென்றால் ….ஐயோ சக்க ஜாலி …காதலனே தொட்டரியாத சகல இடங்களையும் பரிச்சயம் செய்து கொள்ளலாம்.

ரொம்ப தில் இருப்பவர்கள் , என்னா வயிறு ஒரு மாதிரி வீங்கி இருக்கு என வயிறை தொடுவார்கள்.உதட்டில் சாம்பார் என உதட்டை தொடலாம்.

காதல் : மடியில் தலை வைத்து படுக்க எந்த தடையும் இல்லாதிருந்தும் வேறு பல சுவாரசியங்கள் இருப்பதால் இந்த ஏரியா இங்கு டல்.

நட்பு : மடியில் தலை வைத்து படுக்கலாம் . நேக்காக செய்ய வேண்டும்.
,கும்பலாக இருக்கும் போது ஆரம்பித்து ….போக போக தனியாக இருக்கையிலும் செய்யலாம்.

காதல் :செக்ஸ் ஜோக் அடிகக்லாம்.

நட்பு : செக்ஸ் ஜோக் மட்டுமே அடிக்கவேண்டும் .கெட்ட வார்த்தை மட்டும் தவிர்க்க வேண்டும்.

காதல்:லவ் யூ தங்கம் , மிஸ் யூ செல்லம் சொல்லலாம்.

நட்பு : லவ் யூ / மிஸ் யூ மட்டும் சொல்லலாம். நக்கலாக தங்கம் /செல்லம் என்றெல்லாம் தைரியமாக உபயோகிப்பவர்களும் உள்ளனர்.

காதல் : ஒரே பெட்டில் படுத்து கட்டி பிடித்து ….தூங்கி விடலாம்.

நட்பு : ஒரே பெட்டில் படுத்து , தூக்கமே வரலை என வயிறெறிந்து கொண்டே கொட்ட கொட்ட விழித்திருக்க வேண்டும் . தலை வலிக்குது என மேலே சாய்ந்து கொள்ளலாம்.

காதல் : எதிர் பாராமல் ந்யூடாக பார்த்து விட்டால் , ஓடி கட்டிப்பிடித்துக்கொள்ளலாம்.

நட்பு : ஐ யாம் சாரி என சொல்லி விட்டு சோளக்கொல்லை பொம்மை போல நின்று கொண்டிருக்க வேண்டும்.பின் தினமும் அதை சொல்லி சொல்லி சாரி கேட்டு ஆழம் பார்க்கலாம்.

நட்பில் , அடிக்கடி என்னா சொன்னாலும் பாராட்டுவதற்காக கையை காட்டு என சொல்லி ஒரு அடி அடிக்கணும் . ரெகுலர் பாடி டச் இருக்கணும் என்பதற்கான பயிற்சி இது. 2) இறுக்கி கட்டி புடிச்சி உறுளனும்னா அதுக்கும் வழி இருக்கு : எதாவது அவளோட பொருளை ( மொபைலை , கைப்பையை ) அவள் பார்க்கும் போதே எடுத்து கொண்டு ஓட வேண்டும் (மெதுவாக) …அவள் துரத்தி கொண்டு வந்து உஙக்ளை பிடிப்பாள் …..பின் நீங்கள் கீழே விழ வேண்டும் …அவளும் விழுந்து உங்கள் மேல் ஏறி அதை பிடுங்க முயற்ச்சிப்பாள்…பொருளை கொடுக்காத வரை ஆவாரம்பூ வினீத் போல உருண்டு புரளலாம். சில அவசரக்குடுக்கைகள் இந்த நேரத்தில் முத்தம் கொடுத்து நட்பை கேள்விக்குறி ஆக்கிக்கொள்வதும் உண்டு .
போரடிக்குது ….எனக்கே காதல் …நட்பு குழம்பி போச்சு ….இதோட நிறுத்திக்கிறேன்…
 

போதையில் கல்யாணம்/கலாட்டா- WHAT HAPPENED IN VEGAS- திரை விமர்சனம்


 அன்பு வாசகர்களே, நீண்ட இடைவெளிக்கு பின் வழக்கம் போல் ஒரு ஹாலிவுட் திரைப்பட விமர்சனத்தில் உங்களை சந்திக்கிறேன், ஏற்கனவே முந்தைய பதிவில் சொன்னது போல் விக்கிபீடியாவில் ரொமாண்டிக் காமெடி சீரியசில் பார்த்த ஒரு படத்தை பற்றித்தான் இன்றைய விமர்சனம், ஏறக்குறைய பலர் பார்த்திருக்க கூடிய படம் தான், “WHAT HAPPENED IN VEGAS” .

75% நகைச்சுவையும் 50% சதவீதம் காதலையும் 75% கலாட்டாவையும் கலந்து எடுத்திறுக்கிறார்கள், அதற்கு ஏற்ற கதைக்கரு, காதலனால் அவனது பிறந்த  நாளன்று இன்ப அதிர்ச்சி குடுக்க காத்திருக்கும் நண்பர்கள் மத்தியில் கழட்டி விடப்பட்ட கதா நாயகி, தனது தந்தையால் வேலையை விட்டு துரத்தப்பட்ட கதா நாயகன், இருவரும் தத்தம் சோகங்களை மறக்க வேகாஸ் நகருக்கு நெருக்கமான நண்பர்களுடன் சொல்ல ரூம் நம்பர் குழப்பத்தில் அறிமுகமாகிறார்கள்.
வழக்கம் போல இராத்திரியான பார்ட்டி வைக்கற ஊருக்கு போய்ட்டு கோவிலுக்கா போகப் போறாங்க, க்ளப் தான் சரக்குதான், எல்லாத்தையும் மறந்து விடிய விடிய சரக்கடிக்கறாங்க, இப்பதாந் நம்ம ஊர் ‘மங்காத்தா’ த்ரிஷாவே சரக்கடிச்சுட்டு டூயட் பாட்றாங்களே, ஹாலிவுட்ல கேட்கவா வேணும், விடிஞ்சாதான் பெரிய அதிர்ச்சி, நைட் மப்புலையே 2 பேருக்கும் கல்யானம் ஆயிருக்கு.

சரி, ஏதோ நடந்தது நடந்து போச்சு நடந்தத கெட்ட கனவா நினைச்சு மறந்துருவோம்னு முடிவு பன்னி 2 பேரும் முடிவு பன்னி பிரியும் போது ஹீரோயின் குடுக்கற காயின் அ வச்சு ஹீரோ ஜாக்பாட் விளையாடும்போது 3000000 டாலர் பரிசு விழுந்துருது,  என் காயின்லதான் விழுந்ததுனு ஹீரோயின் சொல்ல, விளையான்டது நாந்தான்னு ஹீரோ மல்லுகட்ட, நான் உன் பொன்டாட்டி, உன் சொத்துல எனக்கு பங்கு இருக்குனு ஹீரோயின் ரூல்ஸ் பேச டைவர்ஸ் கேட்டு கோர்ட்டுக்கு போனா, ஒரு நாள் கூட ஆகாம டைவர்ஸ் ஆனு ஜட்ஜ் காண்டாகி, 6 மாசம் சேர்ந்து வாழ்ந்துட்டு வாங்க, அது வரைக்கும் அந்த பரிசுதொகைய freeze பன்னி வைக்கறேன்னு ஜட்ஜ்மென்ட் குடுத்துட்றார்.
அதுக்கு அப்புறம் 2 பேரும் சேர்ந்து வாழனும்னு ஒரே வீட்ல தங்கி ஏகப்பட்ட அலப்பறைய குடுக்கறாங்க,அதெல்லாம் செம காமெடி, அப்புறம் ஒருத்தரைொருத்தர் மாட்டிவிட முயற்சி பன்னி முடியாம கொஞ்சம் கொஞ்சமா பேச ஆரம்பிக்கறாங்க. ஹீரோ குடும்பத்துல ஹீரோயின் ஒட்ட ஆரம்பிக்கறாங்க.
அப்புறம் ஹீரோயினோட ஆபிஸ் பார்ட்டிக்கு போய் அவளை மாட்டிவிட ஹீரோ வல்கர் ஆ பேச அதுவே அவங்க பாஸ்க்கு பிடிச்சு போய் ப்ரோமோஸன் வரைக்கும் போகுது.
கொஞ்சம் கொஞ்சமா நம்ம மானாட மயிலாடல சொல்ற மாதிரி 2 பேருக்கும் கெமிஸ்ட்ரி வொர்கவுட் ஆக ஆரம்பிக்குது, 
ஹாலிவுட்ல எனக்கு ஒரு பெரிய சந்தேகம் என்னன்னா எப்படித்தான் ஒரு அழகான பொண்ணு கூட தனியா தங்கும் போது கன்ட்ரோல்லா இருக்கானுங்களோ? நம்மாள முடியாதுப்பா.

அப்புறம் எதிபாராத விதமா 2 பேருக்குள்ளயும் பிரிவு வருது, அந்த பிரிவுதான் 2 பேரும் ஒருத்தருக்கொருத்தர் எவ்வளவு காதலிக்கறாங்கனு புரியவச்சு சேர்த்து வைக்குது,

படத்துல எல்லாருக்கும் பிடிச்ச சீன் ஹீரோவும் ஹீரோயினும் மப்புல பன்னிக்கற கல்யானம், அவ்வளவு கலாட்டாவா இருக்கும், சைட்ல இவங்க 2 பேர் ஃப்ரென்ட்ஸும் ஏதோ……………………….. பன்னிட்டு இருப்பாங்க.
 

 படம் முழுக்க ஒரே கலாட்டாவா இருக்கும், கண்டிப்பா அனுபவிச்சு பார்க்கலாம்.

படத்தோட ட்ரெய்லர்

உங்கள் மதிப்பு மிக்க கருத்துக்களை தெரிவிக்கவும்.மறக்காம பகிர்ந்துக்கங்க.

 அன்புடன் கதிரவன்…

காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் …

காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் …

ஒன்று : காதலிக்காதீர்கள். அது நேர விரயம்

இரண்டு : ஒருவேளை காதலிக்கத் தொடங்கி விட்டால் அதற்காக எதையும் தியாகம் செய்யாதீர்கள்

மூன்று : காதல்தான் வெற்றி. கல்யாணம் தோல்வி.

நான்கு : காதலிக்கிறவர் உங்களிடம் எதையுமே மறைப்பதில்லை என்று நினைத்து ஏமாறாதீர்கள்.(மறைக்க வேண்டியதை மறைக்காமல் இருக்கிற எல்லாரும், மறைக்கக் கூடாததை மறைக்காதவர்கள் அல்ல)

ஐந்து : நீங்கள் காதலிக்கிறவரிடம் எதையுமே மறைக்கக் கூடாது என்றெண்ணி ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.

ஆறு : காதல் தெய்வீகமானதோ, புனிதமானதோ அல்ல. ஒரு கேளிக்கை. அவ்வளவுதான்.

ஏழு : காமமும் காதலும் வெவ்வேறு அல்ல. காதல் பொட்டேன்ஷியல் எனர்ஜி காமம் கைனடிக். சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும்.

எட்டு : நெருக்கமாகப் பழகும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பரிசுத்தமான நட்பைத் தவிர வேறொன்றுமில்லை என்பது மாதிரி உலக ஏமாற்று வேறே கிடையாது.

ஒன்பது : காதலர்கள் செத்தால் மட்டுமே காதல் வாழும். காதலர்கள் வாழ்ந்தால் காதல் செத்துப் போகும்.

பத்து : காதலித்துக் கல்யாணம் செய்த எல்லாருக்குமே இரண்டாவது காதல் வரும் (சில சமயம் மூன்றாவது கூட!)

தமிழகத்தின் பரிதாப நிலையை பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம்…

தமிழகத்தின் பரிதாப நிலையை பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம்…

1. குவார்ட்டர் கட்டிங், சைட் டிஷ் போன்ற அதிமுக்கியமான தலைப்புகளில் சினிமா படங்கள் தயாரிக்கப்படுவது இங்கே தான்.

2. இன்று இந்தியாவில் மிக அதிகமாக மது அருந்துபவர்கள் உள்ள மாநிலம் தமிழகம். இங்கு 13 வயது சிறுவர்கள் கூட குடிகாரர்களாக இருக்கிறார்கள்.

3. தமிழகத்தில் குடிகாரர்களின் எண்ணிக்கை ஒரு கோடி. அவர்களில் 20 விழுக்காட்டினர் குடியை விட்டு மீளமுடியாத அளவுக்கு போதைக்கு அடிமையானவர்கள்…

4. தமிழகத்தில் அன்றாடம் மது அருந்துபவர்களில் 49 இலட்சம் பேர் 13 முதல் 28 வயதை சேர்ந்தவர்கள்.

5. மிக அதிகமான சாலை விபத்துக்களை கொண்ட மாநிலம் என்ற பெருமை தமிழகத்தையே சேரும். ஒராண்டில் நடக்கும் 60,000 சாலை விபத்துகளுக்கு பல்வேறு காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் இருக்கலாம். ஆனால் 60 விழுக்காடு சாலை இறப்புகளுக்கு குடித்து விட்டு வாகனத்தை ஓட்டுவதே முதன்மைக் காரணம்.

6. மதுபான விற்பனையால், ஆண்டு தோறும் தமிழக அரசுக்கு 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. தமிழக அரசின் மொத்த வருவாயில், கிட்டதட்ட 30 சதவீத அளவுக்கு சாராய விற்பனையில் இருந்து கிடைக்கும் நிலை.

7. கிராமப் புறங்களில் உள்ளவர்கள் தங்கள் வருமானத்தில் 24 சதவீதத்தையும், நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் 32 சதவீதத்தையும் மதுபானத்துக்காக செலவிடுகிறார்கள்.

8. இந்தியாவின் விவாகரத்து பட்டியலில் தமிழ் நாடு முதல் இடம்.

-நன்றி சகோதரர் ஹைதர் அலி…..

பால் விலை உயர்வு, பேரூந்து கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு….வேலையில்லா திண்டாட்டம்… தினம் தினம் கொலை, கொள்ளை, வழிப்பறி…. எங்கும் பார பட்சமின்றி லஞ்சம், ஊழல்… இவை அனைத்தையும் தொலை நோக்கு பார்வையில் சிந்தித்து பார்க்கும் போது…. நமது எதிர்காலத்தையும், நமது எதிர்கால சமூகத்தை நினைத்து சற்றே அச்சம் ஏற்படுகிறது.

தமிழக மக்கள் அனைவரையும் ஓட்டாண்டியாக்கும் முயற்சியில் ஒருபுறம் அரசுக்கு நல்ல வெற்றி கிடைத்து வருகிறது…!!!

மறுபுறம் குடிமக்களை குடிகாரர்களாக மாற்றும் முயற்சியிலும் நல்ல முன்னேற்றம் கண்டுவருகிறது…!!!

சிறுவர்கள் வாங்கிச்செல்லும் அளவுக்கு மது விற்பனையை விரிவுபடுத்தியுள்ளது தமிழக அரசு…!!!