Shadow of a Doubt (1943)- Hitchcock Movie – விமர்சனம்

கொலைகாரர்கள் எத்தனை வகைப்படுவார்கள் என்று தேர்வில் ஒரு கேள்வி கேட்கப் படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். என்னவேன்று பதில்கள் வரும் யோசித்து பாருங்கள். நீங்கள் என்ன பதில் எழுதுவீர்கள்? என்னுடைய பதிலை எழுதுகிறேன். கொலைகாரர்கள் பொதுவாக இரண்டு வகையாக பிரிக்கலாம். முதல் வகை சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக கொலை செய்பவர்கள், இன்னொரு வகையினர் திட்டமிட்டு செய்பவர்கள், அதற்கு காரணம் பணத்திற்காக இருக்கலாம், முன்விரோதமாக இருக்கலாம், மிக முக்கியமாக கொலை செய்வது அவர்களுக்கு பிடித்திருக்கலாம். அப்படி பிடித்துப் போய் செய்பவர்களினால் ஒன்றிரண்டு கொலைகளோடு நிறுத்திக் கொள்ள முடியாது. தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும், அதற்கு போலிசில் மாட்டாமல் இருக்க வேண்டும், அதற்கு வெளியே சமுதாயத்தின் முன்பு மிகவும் நல்லவன் போல் நடிக்க வேண்டும். இந்த கருவை மையமாக வைத்து தமிழில் பல படங்கள் வந்து வெற்றியடைந்திருக்கின்றன, குறிப்பிடத்தகுந்தப் படம் சிகப்பு ரோஜாக்கள்.

அதிகம் வெற்றியடைந்த தொடர் கொலைகாரர்கள் படங்களில் அவர்கள் அதிகம் பெண்களை கொலை செய்வது போல் இருக்கும், ஏனெனில் எதிர்க்க வலு இல்லாத பெண்களை அலற விட்டு கொல்வதுதான் கொடுரமானதாக இருக்கும் என்பதால் இருக்கலாம். இன்னொரு ஒற்றுமை இப்படி தொடர்கொலை செய்பர்களுக்கு குடும்பம் இருப்பது போல் காட்டமாட்டார்கள். ஒரு நல்ல குடும்ப அமைப்பில் இருந்து ஒரு கொலைகாரன் வர வாய்ப்பில்லை என்பதால் கூட இருக்கலாம், வேட்டையாடு விளையாடு படத்தில் மட்டும் தான் கொலைகாரர்களுக்கு குடும்பம் இருப்பதையும் மேம்போக்காக சொல்லி இருப்பார்கள். யோசித்து பாருங்கள், ஒரு நல்ல சமுக அந்தஸ்தான குழந்தைகள் இருக்கும் குடும்பத்தில் ஒரு தொடர்கொலை புரிபவன் இருந்தால் எப்படி இருக்கும்? அவன் அப்படிப் பட்டவன் என்ற விவரம் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் தெரிந்தால் எப்படி இருக்கும்? அதை அத்தகைய உணர்வை சொல்லும் படம் தான் Continue reading “Shadow of a Doubt (1943)- Hitchcock Movie – விமர்சனம்”

Rebecca (1940 film)- Hitchcock Movie – விமர்சனம்

ஹிட்ச்காக் கிட்டத்தாட்ட 7 வருடம் முனைந்து எடுத்த படமென்று இதை சொல்வார்கள். “கிளாசிக்” என்ற வார்த்தைக்கு இந்த படத்தை தாராளமாக உதாரணப்படுத்தலாம். இதற்கு முன்பு இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள படங்களின் தன்மையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட திரைமொழியையும் கதைகளத்தையும் கொண்ட படம் இது.

Continue reading “Rebecca (1940 film)- Hitchcock Movie – விமர்சனம்”

Saboteur (1942)- Hitchcock Movie – விமர்சனம்

ஹிட்ச்காக் படங்களுக்கென உருவாகி வந்த ஒரு டெம்ப்ளெட் படி எடுக்கப்பட்ட மற்றுமொரு படம் தான் இது. ஒரு பெரிய சதிக்கும்பலின் சதித் திட்டத்தில் எதிர்பாராமல் நுழையும் சாமானியன் அவர்களை எதிர்த்து தனியாளாக அவர்களது திட்டங்களை முறியடிப்பதுதான் அந்த டெம்ப்ளெட். அதற்காக படம் ஒரே மாதிரி இருக்கும் என நினைக்கத் தேவையில்லை. சதித் திட்டத்திலும் அதை செயல்படுத்துல் கும்பலிலும் சுவாரசியம் ஏற்படும் வகையில் மாறுதல் செய்திருப்பார் ஹிட்ச்காக். இப்படத்திற்கு கதையும் திரைக்கதையும் வேறொருவர் எழுத வெறுமனே இயக்கம் மட்டும் தான் ஹிட்ச்காக். Continue reading “Saboteur (1942)- Hitchcock Movie – விமர்சனம்”

THE LADY VANISHES (1938)- Hitchcock Movie – விமர்சனம்

ஹிட்ச்காக் படங்கள் பார்க்க துவங்குவதற்கு முன்பு அவரை குறித்தான பிம்பம் மிகைப்படுத்த பட்டதாக கூட இருக்கலாம் என்ற சந்தேகம் இல்லாமல் இல்லை. ஆனால் முதல் 2 படங்களை பார்க்கும் போதே அது பொய் என்பது புரிந்து விட்டது. கிட்டத்தட்ட 80 வருடங்களுக்கு பிறகு பார்க்கும் பொழுது கூட அடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியாத படி எடுத்திருக்கிறார் என்றால் என்னவென்று புகழ்வது. சரி அடுத்த படத்தை பார்ப்போம்.

Continue reading “THE LADY VANISHES (1938)- Hitchcock Movie – விமர்சனம்”

The 39 steps (1935)- Hitchcock Movie – விமர்சனம்

ஹிட்ச்காக் இங்கிலாந்து நாட்டுக்காரர். இலண்டன்வாசி. ஆங்கிலப்படம் எடுத்து வெற்றி பெற்றாலும் ஹாலிவுட்டுக்கு இணையாகுமா? ஹாலிவுட்டுக்கு செல்வது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஆனால் அதற்கு முன்பு தன்னை நிருபித்தாக வேண்டும். The lodger படத்திற்கு பின் பல படங்கள் எடுத்து வெற்றியும் பெற்றாலும் வசூல்ரீதியில் உலகத்தை திரும்பி பார்க்க வைத்தால்தான் ஹாலிவுட்டிற்கு செல்கையில் கௌரவமாக நினைத்தாரோ என்னவோ, ஒரு கம்ப்ளீட் ஆக்ஷன் த்ரில்லர் கம் எண்டர்டெய்ன் படம் எடுத்தார். அந்த படம் தான் The 39 steps. Continue reading “The 39 steps (1935)- Hitchcock Movie – விமர்சனம்”

The Lodger (1927) – Hitchcock Movie – விமர்சனம்

1888 ல் இலண்டனில் தொடர் கொலைகள் நிகழ்ந்தன. அக்கொலைகளை செய்து வரும் சீரியல் கில்லரை “Jack the ripper” என்று அழைப்பார்கள். காரணம் கொலை செய்வதுடன் அவர்களின் உறுப்புகளையும் எடுத்து சென்று விடுவான். கிட்னிக்காக இது செய்யப்பட்டது என பேசப்பட்டாலும் அந்த காலகட்டத்தில் இப்போது போல் கிட்னி திருட்டு மருத்துவ கொள்ளைக்காக நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. அந்த கொலைகாரனை இறுதிவரை யாராலும் பிடிக்க இயலவில்லை. இதை மையமாக கொண்டு பல புத்தகங்கள் இங்கிலாந்தில் வெளியாகி பெறும் வெற்றிப் பெற்றது. அதில் ஒரு புத்தகம் தான் “The Lodger”. Continue reading “The Lodger (1927) – Hitchcock Movie – விமர்சனம்”