Rope (1948)- Hitchcock Movie – விமர்சனம்

பள்ளியில் ஆங்கில ஆசிரியர் ஷேக்ஸ்பியர் பற்றி சொல்லும் போது இப்படி குறிப்பிடுவார் “அவரது நாடகத்தின் துவக்கத்திலேயே அத்தனை பேருடைய வாயையும் அடைக்கும் காட்சி இருக்கும். ஏதேனும் ஒரு பெரிய விபத்து, கொடுரமான கொலை இப்படி ஏதாவது ஒன்று. பார்வையாளர்கள் அத்தனை பேரும் இது யார்? எதனால் இப்படி நடக்கிறது? என்று மனதிற்குள் யோசிக்க துவங்கிய பின் நாடகத்தில் கதை துவங்கும்”. இதுவரை நான் ஷேக்ஸ்பியரை வாசித்ததுமில்லை, அவர் கதைகளை கொண்ட படங்களை பார்த்ததுமில்லை. ஆனால் மேற்சொன்ன முறையில் துவங்கிய படமாக நான் பார்த்தது இந்த படத்தைத்தான். Continue reading “Rope (1948)- Hitchcock Movie – விமர்சனம்”

Notorious (1946 film)- Hitchcock Movie – விமர்சனம்

தமிழ் சினிமாவின் மீது எனக்குண்டான மிகப்பெரிய வருத்தம் இங்கு நாயகிகளை சரியாக பயன்படுத்தாதுதான். எத்தனை விதமான ஆண்கள் இருக்கிறார்களோ அத்தனை விதமான பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் சினிமாவிம் மொத்தமே இரண்டே விதமான நாயகிகள் தான். ஒன்று குழந்தைத்தனம் என சொல்லிக் கொள்ளும் அரை மெண்டல்கள் இன்னொன்று வில்லனுக்கு மகளாக வரும் திமிர் பிடித்தவள்கள். அதைக் கூட சரியாக காட்ட மாட்டார்கள். அந்த விதத்தில் இறுதியாக கந்தசாமி படத்தில் வரும் ஸ்ரேயா பாத்திரம் கொஞ்சம் சரியாக பொருந்தி இருந்தது. அதற்கு சிகையில் இருந்து குரல் வரை இயக்குனர் மெனக்கெட்டு இருப்பார். Continue reading “Notorious (1946 film)- Hitchcock Movie – விமர்சனம்”

Spellbound (1945 film)- Hitchcock Movie – விமர்சனம்

தொடர்ந்து ஹிட்ச்காக் படங்களை பார்த்து வருகையில் சில படங்களை தவிர்த்து மற்ற படங்களில் குறிப்பாக காதல் வரும் இடங்களில் பொதுப்படையாக ஒரு நூல் தெரிகிறது. இரமணிச்சந்திரனை எடுத்துக் கொள்ளுங்கள். தமிழில் பெண்களால் அதிகம் வாசிக்கப்படும் எழுத்தாளர்களில் முதலிடம். ஆனால் ஒரே கதையைத்தான் பேரையும் சம்பவங்களையும் மாற்றி எழுதுவார். ஏழை அப்பாவி நாயகி, அழகான பனக்கார நாயகன், மோதல், காதல். இதேதான் எல்லா புத்தகங்களிலும் இருக்கும். ஹிட்ச்காக் படங்களில் எனக்கு பொதுவாக தெரிவது நாயகனைத் தாங்கும் நாயகிகள். செல்வா படத்தில் வருவது போலவே இருக்கும். ஏதேனும் ஒரு பிரச்சனையில் மன அழுத்தத்தில் சிக்கி இருக்கும் நாயகனை அதில் இருந்து வெளிவர மிகப்பெரிய அளவில் ரிஸ்க் எடுப்பாள் நாயகி. ஆனால் இதை உங்களால் உணர முடியாத அளவு மிகமிக வேறுபட்ட கதைக்களத்தை தேடி பிடிப்பார் ஹிட்ச்காக். ஆனாலும் தினம் ஒன்றாக பார்த்ததினாலோ என்னவோ எனக்கு தெரிந்து விட்டது. சரி இந்த படத்திற்கு வருவோம். Continue reading “Spellbound (1945 film)- Hitchcock Movie – விமர்சனம்”

Lifeboat (1944)- Hitchcock Movie – விமர்சனம்

நம் காலத்தில் நாம் அதிகம் போர்களை சந்தித்ததில்லை. சதாம் உசேனையும் பிரபாகரனையும் வேட்டையாடுவதற்காக நடந்த இன அழிப்புகளை வேண்டுமானால் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். இரண்டாம் உலகப் போர் குறித்து எத்தனையோ படங்கள் வந்து விட்டன. அதிலும் குறிப்பாக ஜெர்மனியின் நாசிக்களின் கொடுரமுகத்தை காட்டுவதற்கென்றே ஏகப்பட்ட படங்கள் வந்துள்ளன. அந்த காலகட்டத்திலேயே சார்லி சாப்ளின் எடுத்த “தி டெக்டெட்டர்” படத்தினை உதாரணமாக சொல்லலாம். அதே காலகட்டத்தில் திரை இயக்கத்தில் ஜாம்பவனாக இருந்த ஹிட்ச்காக் எடுத்த போர் தொடர்பான படத்தினை பற்றி இங்கு பார்க்க இருக்கிறோம். இதற்கு முந்தைய படமானது அரசாங்கத்திற்காக எடுக்கப்பட்ட குறும்படம். அது கணக்கில் வராது. Continue reading “Lifeboat (1944)- Hitchcock Movie – விமர்சனம்”

Bon Voyage 1945- Hitchcock Movie – விமர்சனம்

ஹிட்ச்காக் அடிப்படையில் ஒரு பிரிட்டிஸ்காரர், சினிமா அபிமானத்தின் காரணமாகத்தான் ஹாலிவுட்டை நோக்கி சென்றிருந்தாலும் அவருக்கு தன் நாட்டின் மீதான பற்றி மிக அதிகம், இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இங்கிலாந்து அரசாங்கம் மக்களிடம் தங்கள் கொள்கைகளை எடுத்துச் சொல்ல சினிமாவை மற்ற ஊடகங்களை விட அதிகம் நம்பியது, அரசாங்கத்திற்காக படமெடுக்க அழைக்கையில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்க பல முன்னனி இயக்குனர்கள் நழுவிய சமயத்தில் ஹிட்ச்காக் தானாக முன்வந்தார், வாரத்திற்கு 10 டாலர் சம்பளத்திற்கு ஒத்துக் கொண்டு படம் இயக்கினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

“அப்பம் வடை தயிர்சாதம்” என்றொரு நாவலில் பாலகுமாரன் இந்தியாவில் வெள்ளையர்கள் இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லருக்கு எதிரான மனநிலையை தூண்டி இந்தியர்களை அதிகம் யுத்தத்தில் பங்குபெற செய்வதற்காக ஊருக்கு ஊர் டூரிங்க்டாக்கிஸ் திறந்து அதில் யுத்தக்காட்சி தொடர்பான செய்தி படங்களை திரையிட்டதாக சொல்வார். இந்தப் படம் அதை நினைவுப்படுத்தியது. சரி படத்திற்கு வருவோம். Continue reading “Bon Voyage 1945- Hitchcock Movie – விமர்சனம்”

Shadow of a Doubt (1943)- Hitchcock Movie – விமர்சனம்

கொலைகாரர்கள் எத்தனை வகைப்படுவார்கள் என்று தேர்வில் ஒரு கேள்வி கேட்கப் படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். என்னவேன்று பதில்கள் வரும் யோசித்து பாருங்கள். நீங்கள் என்ன பதில் எழுதுவீர்கள்? என்னுடைய பதிலை எழுதுகிறேன். கொலைகாரர்கள் பொதுவாக இரண்டு வகையாக பிரிக்கலாம். முதல் வகை சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக கொலை செய்பவர்கள், இன்னொரு வகையினர் திட்டமிட்டு செய்பவர்கள், அதற்கு காரணம் பணத்திற்காக இருக்கலாம், முன்விரோதமாக இருக்கலாம், மிக முக்கியமாக கொலை செய்வது அவர்களுக்கு பிடித்திருக்கலாம். அப்படி பிடித்துப் போய் செய்பவர்களினால் ஒன்றிரண்டு கொலைகளோடு நிறுத்திக் கொள்ள முடியாது. தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும், அதற்கு போலிசில் மாட்டாமல் இருக்க வேண்டும், அதற்கு வெளியே சமுதாயத்தின் முன்பு மிகவும் நல்லவன் போல் நடிக்க வேண்டும். இந்த கருவை மையமாக வைத்து தமிழில் பல படங்கள் வந்து வெற்றியடைந்திருக்கின்றன, குறிப்பிடத்தகுந்தப் படம் சிகப்பு ரோஜாக்கள்.

அதிகம் வெற்றியடைந்த தொடர் கொலைகாரர்கள் படங்களில் அவர்கள் அதிகம் பெண்களை கொலை செய்வது போல் இருக்கும், ஏனெனில் எதிர்க்க வலு இல்லாத பெண்களை அலற விட்டு கொல்வதுதான் கொடுரமானதாக இருக்கும் என்பதால் இருக்கலாம். இன்னொரு ஒற்றுமை இப்படி தொடர்கொலை செய்பர்களுக்கு குடும்பம் இருப்பது போல் காட்டமாட்டார்கள். ஒரு நல்ல குடும்ப அமைப்பில் இருந்து ஒரு கொலைகாரன் வர வாய்ப்பில்லை என்பதால் கூட இருக்கலாம், வேட்டையாடு விளையாடு படத்தில் மட்டும் தான் கொலைகாரர்களுக்கு குடும்பம் இருப்பதையும் மேம்போக்காக சொல்லி இருப்பார்கள். யோசித்து பாருங்கள், ஒரு நல்ல சமுக அந்தஸ்தான குழந்தைகள் இருக்கும் குடும்பத்தில் ஒரு தொடர்கொலை புரிபவன் இருந்தால் எப்படி இருக்கும்? அவன் அப்படிப் பட்டவன் என்ற விவரம் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் தெரிந்தால் எப்படி இருக்கும்? அதை அத்தகைய உணர்வை சொல்லும் படம் தான் Continue reading “Shadow of a Doubt (1943)- Hitchcock Movie – விமர்சனம்”

Rebecca (1940 film)- Hitchcock Movie – விமர்சனம்

ஹிட்ச்காக் கிட்டத்தாட்ட 7 வருடம் முனைந்து எடுத்த படமென்று இதை சொல்வார்கள். “கிளாசிக்” என்ற வார்த்தைக்கு இந்த படத்தை தாராளமாக உதாரணப்படுத்தலாம். இதற்கு முன்பு இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள படங்களின் தன்மையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட திரைமொழியையும் கதைகளத்தையும் கொண்ட படம் இது.

Continue reading “Rebecca (1940 film)- Hitchcock Movie – விமர்சனம்”

Saboteur (1942)- Hitchcock Movie – விமர்சனம்

ஹிட்ச்காக் படங்களுக்கென உருவாகி வந்த ஒரு டெம்ப்ளெட் படி எடுக்கப்பட்ட மற்றுமொரு படம் தான் இது. ஒரு பெரிய சதிக்கும்பலின் சதித் திட்டத்தில் எதிர்பாராமல் நுழையும் சாமானியன் அவர்களை எதிர்த்து தனியாளாக அவர்களது திட்டங்களை முறியடிப்பதுதான் அந்த டெம்ப்ளெட். அதற்காக படம் ஒரே மாதிரி இருக்கும் என நினைக்கத் தேவையில்லை. சதித் திட்டத்திலும் அதை செயல்படுத்துல் கும்பலிலும் சுவாரசியம் ஏற்படும் வகையில் மாறுதல் செய்திருப்பார் ஹிட்ச்காக். இப்படத்திற்கு கதையும் திரைக்கதையும் வேறொருவர் எழுத வெறுமனே இயக்கம் மட்டும் தான் ஹிட்ச்காக். Continue reading “Saboteur (1942)- Hitchcock Movie – விமர்சனம்”

THE LADY VANISHES (1938)- Hitchcock Movie – விமர்சனம்

ஹிட்ச்காக் படங்கள் பார்க்க துவங்குவதற்கு முன்பு அவரை குறித்தான பிம்பம் மிகைப்படுத்த பட்டதாக கூட இருக்கலாம் என்ற சந்தேகம் இல்லாமல் இல்லை. ஆனால் முதல் 2 படங்களை பார்க்கும் போதே அது பொய் என்பது புரிந்து விட்டது. கிட்டத்தட்ட 80 வருடங்களுக்கு பிறகு பார்க்கும் பொழுது கூட அடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியாத படி எடுத்திருக்கிறார் என்றால் என்னவென்று புகழ்வது. சரி அடுத்த படத்தை பார்ப்போம்.

Continue reading “THE LADY VANISHES (1938)- Hitchcock Movie – விமர்சனம்”

The 39 steps (1935)- Hitchcock Movie – விமர்சனம்

ஹிட்ச்காக் இங்கிலாந்து நாட்டுக்காரர். இலண்டன்வாசி. ஆங்கிலப்படம் எடுத்து வெற்றி பெற்றாலும் ஹாலிவுட்டுக்கு இணையாகுமா? ஹாலிவுட்டுக்கு செல்வது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஆனால் அதற்கு முன்பு தன்னை நிருபித்தாக வேண்டும். The lodger படத்திற்கு பின் பல படங்கள் எடுத்து வெற்றியும் பெற்றாலும் வசூல்ரீதியில் உலகத்தை திரும்பி பார்க்க வைத்தால்தான் ஹாலிவுட்டிற்கு செல்கையில் கௌரவமாக நினைத்தாரோ என்னவோ, ஒரு கம்ப்ளீட் ஆக்ஷன் த்ரில்லர் கம் எண்டர்டெய்ன் படம் எடுத்தார். அந்த படம் தான் The 39 steps. Continue reading “The 39 steps (1935)- Hitchcock Movie – விமர்சனம்”