To Catch a Thief (1955)- Hitchcock Movie – விமர்சனம்

ஹிட்ச்காக் எம்ஜியார் போல நடிக்க வரும் நாயகிகளிடம் தொடர்ந்து இரண்டு படங்களுக்கு மொத்தமாக கால்சிட் வாங்கி வைத்துக் கொள்வார் போல் தெரிகிறது. ஏன் சொல்கிறேன் என்றால் அவர் வரிசையாக எடுக்கும் படங்களில் கவனிக்கையில் அடுத்தடுத்த இரண்டு படங்களுக்கு ஒரே கதா நாயகியை பயன்படுத்தும் பழக்கம் இருப்பது தெரியவருகிறது. கதா நாயகனைப் பற்றி கேட்டீர்களேயானால் மன்னிக்கவும் அதெல்லாம் என் கண்களில் படாது. சரி படத்திற்கு வருவோம். Continue reading “To Catch a Thief (1955)- Hitchcock Movie – விமர்சனம்”

The Trouble with Harry (1955)- Hitchcock Movie – விமர்சனம்

ஹிட்ச்காக் படங்கள் எந்தளவுக்கு திரில்லரோ அந்தளவுக்கு அதுக்குள்ள நகைச்சுவையும் இருக்கற மாதிரி பார்த்துப்பார். ரிபாகால மட்டும்தான் அது இல்லைன்னு தோணுது. மீதி எல்லா படத்துலயும் நகைச்சுவை இருக்கும். ஹா ஹா ஹா ன்னு சத்தமா சிரிக்க வைக்கலனாலும் மனசை இலகுவாக்குற மாதிரி இருக்கும். அவர் முழுக்க நகைச்சுவைக்குன்னு எடுத்த படம் தான் இந்த படம். ஆனா அதுவும் ஒரு கொலையை சுத்தி நடக்கற மாதிரி இருக்கும். இந்தப் படமும் ஒரு நாவல்ல இருந்து எடுக்கப்பட்டதுதான்.

படத்தை பத்தி பார்க்கறதுக்கு முன்னாடி ஒரு விசயத்தை சொல்றேன். படத்தை நீங்க எதுக்காக பார்க்கனுமோ இல்லையோ படத்துல காட்டற இயற்கை அழகை இரசிக்கறதுக்காகவே கட்டாயம் பார்க்கனும், உங்களுக்கு படம் பிடிக்குதோ இல்லையோ இந்த படத்துல காட்டப்படற இடங்களோட வண்ணங்கள் கட்டாயம் உங்க மன அழுத்தத்தை குறைக்கும்னு உறுதியா சொல்றேன். அதுக்குனு Highway அளவுக்கு எதிர்பார்க்க வேண்டாம். நல்லாருக்கும். Continue reading “The Trouble with Harry (1955)- Hitchcock Movie – விமர்சனம்”

Rear Window (1954)- Hitchcock Movie – விமர்சனம்

Peeping Tom என்று ஒரு சொலவடை உண்டு. கேள்விப்பட்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அடுத்தவர்களின் அந்தரங்கத்தை எட்டிப் பார்ப்பவரை இப்படி சொல்வது வழக்கம். உண்மையில் இதன் பின்னனியில் கொஞ்சம் விவகாரமான சமாச்சாரம் உண்டு. அதைப் பற்றி கூகுளில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ஹிட்ச்காக் இந்த கதைக்களத்தில் எடுத்த ஒரு படத்தைப் பற்றித்தான் நாம் பார்க்க இருக்கிறோம். சொல்லப் போனால் இதே மாதிரி பல படங்கள் பல மொழிகளில் வந்து விட்டன. தமிழில் கூட நிழல்கள் ரவி தன் மனைவியை கொலை செய்வதை எதிர்வீட்டில் ஒரு பெண் கேமராவில் படம் பிடித்து சிக்கலில் மாட்டிக் கொள்வதாக ஒரு படம் வந்திருக்கும். அதே களம் தான். ஆனால் கொஞ்சம் ஜனரஞ்சகமான படம் இது. விரிவாக பார்ப்போம். Continue reading “Rear Window (1954)- Hitchcock Movie – விமர்சனம்”

Dial M for Murder (1952)- Hitchcock Movie – விமர்சனம்

கிரைம் நாவல் மன்னன் ராஜேஸ்குமாருடைய ஒரு நாவலில் இப்படி எழுதி இருப்பார். தினம் தினம் செய்தி தாள்களில் வரும் குற்றங்களை கொண்டே எனது கதைகளை உருவாக்குகிறேன். என்னைப் போலவே செய்தித் தாள்களில் வரும் குற்றங்களை ஆராய்ந்து மாட்டிக் கொள்ளாமல் குற்றச்செயல்களில் ஈடுபட பலர் முயற்சித்து சிக்கிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு புரிவதில்லை, எந்த குற்றச்செயலையும் நாம் திட்டமிட்ட படி முடிக்கவே முடியாது. எங்கேனும் ஏதேனும் ஒரு தவறிழைப்போம் என்று. அந்த நாவலில் ஆள் மாறாட்டம் செய்து ஒருவனின் சொத்துக்களை அடைய ஒருவனை கொலை செய்து விட்டு அவன் இடத்திற்கு இன்னொருத்தன் வருவான். வந்த பின்னர்தான் அந்த பனக்காரனுக்கு ஊரைச் சுற்றிக் கடன் இருப்பதும், ஒரு கால் இல்லாமல் கட்டைக்கால் வைத்திருந்ததும், பல பெண்களை ஏமாற்றி சிக்கலில் முழித்துக் கொண்டிருப்பதும் தெரியவரும். இந்த நாவலைப் போலவே திட்டமிட்டு குற்றமிழைக்கு ஈடுபடும் ஒருவனுடைய கதைதான் இந்தப் படம். Continue reading “Dial M for Murder (1952)- Hitchcock Movie – விமர்சனம்”

Strangers on a train (1951)- Hitchcock Movie – விமர்சனம்

இந்த படத்தின் தலைப்பை பலர் கேள்விப் பட்டு இருப்பீர்கள். ஏனெனில் இந்தப் படத்தினை தமிழில் சேரன், பிரசன்னா நடிக்க “முரண்” என்ற பெயரில் வெளியிட்டு பலர் பார்த்தும் பெரிய வெற்றி பெறவில்லை. ஆனால் முதலிலேயே சொல்லி விடுகிறேன். இந்த ஆங்கிலப் படத்தில் இருந்து வெறும் பத்து சதவீதம் மட்டுமே எடுத்துக் கொண்டு மீதியை சொந்தமாக உருவாக்கிய படம் தான் முரண். எனவே இந்தப் படத்தை பார்க்கும் பொழுது ஏற்கனவே பார்த்தது போல் இருப்பது மிக மிக குறைவு.

படத்தின் ஆரம்பம் ஒரு இரயில்வே ஸ்டேசனில். இரண்டு கால்கள் தனித்தனியாக காட்டப்படுகின்றன. அவை இரண்டும் இரயிலில் எதிர் எதிரே அமர்ந்து தவறுதலாக மோதிக் கொண்ட பின் தான் அக்கால்களுக்கு சொந்தக்காரர்களை காண்கிறோம். ஒருவர் புகழ் பெற்ற வளரும் டென்னிஸ் விளையாட்டு வீரர். இன்னொருவர் பெரிய பணக்காரரின் மகன். டென்னிஸ் வீரர் தான் நாயகன். அவரது அந்தரங்க வாழ்க்கைக் குறித்து பத்திரிக்கைகளில் படித்த மற்றொரு சகப்பயணி ப்ருனோ அதைப் பற்றி கேட்டும் பேசிக் கொண்டும் வருகிறார். இறுதியாக ஒரு யோசனை சொல்கிறார். Continue reading “Strangers on a train (1951)- Hitchcock Movie – விமர்சனம்”

Rope (1948)- Hitchcock Movie – விமர்சனம்

பள்ளியில் ஆங்கில ஆசிரியர் ஷேக்ஸ்பியர் பற்றி சொல்லும் போது இப்படி குறிப்பிடுவார் “அவரது நாடகத்தின் துவக்கத்திலேயே அத்தனை பேருடைய வாயையும் அடைக்கும் காட்சி இருக்கும். ஏதேனும் ஒரு பெரிய விபத்து, கொடுரமான கொலை இப்படி ஏதாவது ஒன்று. பார்வையாளர்கள் அத்தனை பேரும் இது யார்? எதனால் இப்படி நடக்கிறது? என்று மனதிற்குள் யோசிக்க துவங்கிய பின் நாடகத்தில் கதை துவங்கும்”. இதுவரை நான் ஷேக்ஸ்பியரை வாசித்ததுமில்லை, அவர் கதைகளை கொண்ட படங்களை பார்த்ததுமில்லை. ஆனால் மேற்சொன்ன முறையில் துவங்கிய படமாக நான் பார்த்தது இந்த படத்தைத்தான். Continue reading “Rope (1948)- Hitchcock Movie – விமர்சனம்”

Notorious (1946 film)- Hitchcock Movie – விமர்சனம்

தமிழ் சினிமாவின் மீது எனக்குண்டான மிகப்பெரிய வருத்தம் இங்கு நாயகிகளை சரியாக பயன்படுத்தாதுதான். எத்தனை விதமான ஆண்கள் இருக்கிறார்களோ அத்தனை விதமான பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் சினிமாவிம் மொத்தமே இரண்டே விதமான நாயகிகள் தான். ஒன்று குழந்தைத்தனம் என சொல்லிக் கொள்ளும் அரை மெண்டல்கள் இன்னொன்று வில்லனுக்கு மகளாக வரும் திமிர் பிடித்தவள்கள். அதைக் கூட சரியாக காட்ட மாட்டார்கள். அந்த விதத்தில் இறுதியாக கந்தசாமி படத்தில் வரும் ஸ்ரேயா பாத்திரம் கொஞ்சம் சரியாக பொருந்தி இருந்தது. அதற்கு சிகையில் இருந்து குரல் வரை இயக்குனர் மெனக்கெட்டு இருப்பார். Continue reading “Notorious (1946 film)- Hitchcock Movie – விமர்சனம்”

Spellbound (1945 film)- Hitchcock Movie – விமர்சனம்

தொடர்ந்து ஹிட்ச்காக் படங்களை பார்த்து வருகையில் சில படங்களை தவிர்த்து மற்ற படங்களில் குறிப்பாக காதல் வரும் இடங்களில் பொதுப்படையாக ஒரு நூல் தெரிகிறது. இரமணிச்சந்திரனை எடுத்துக் கொள்ளுங்கள். தமிழில் பெண்களால் அதிகம் வாசிக்கப்படும் எழுத்தாளர்களில் முதலிடம். ஆனால் ஒரே கதையைத்தான் பேரையும் சம்பவங்களையும் மாற்றி எழுதுவார். ஏழை அப்பாவி நாயகி, அழகான பனக்கார நாயகன், மோதல், காதல். இதேதான் எல்லா புத்தகங்களிலும் இருக்கும். ஹிட்ச்காக் படங்களில் எனக்கு பொதுவாக தெரிவது நாயகனைத் தாங்கும் நாயகிகள். செல்வா படத்தில் வருவது போலவே இருக்கும். ஏதேனும் ஒரு பிரச்சனையில் மன அழுத்தத்தில் சிக்கி இருக்கும் நாயகனை அதில் இருந்து வெளிவர மிகப்பெரிய அளவில் ரிஸ்க் எடுப்பாள் நாயகி. ஆனால் இதை உங்களால் உணர முடியாத அளவு மிகமிக வேறுபட்ட கதைக்களத்தை தேடி பிடிப்பார் ஹிட்ச்காக். ஆனாலும் தினம் ஒன்றாக பார்த்ததினாலோ என்னவோ எனக்கு தெரிந்து விட்டது. சரி இந்த படத்திற்கு வருவோம். Continue reading “Spellbound (1945 film)- Hitchcock Movie – விமர்சனம்”

Lifeboat (1944)- Hitchcock Movie – விமர்சனம்

நம் காலத்தில் நாம் அதிகம் போர்களை சந்தித்ததில்லை. சதாம் உசேனையும் பிரபாகரனையும் வேட்டையாடுவதற்காக நடந்த இன அழிப்புகளை வேண்டுமானால் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். இரண்டாம் உலகப் போர் குறித்து எத்தனையோ படங்கள் வந்து விட்டன. அதிலும் குறிப்பாக ஜெர்மனியின் நாசிக்களின் கொடுரமுகத்தை காட்டுவதற்கென்றே ஏகப்பட்ட படங்கள் வந்துள்ளன. அந்த காலகட்டத்திலேயே சார்லி சாப்ளின் எடுத்த “தி டெக்டெட்டர்” படத்தினை உதாரணமாக சொல்லலாம். அதே காலகட்டத்தில் திரை இயக்கத்தில் ஜாம்பவனாக இருந்த ஹிட்ச்காக் எடுத்த போர் தொடர்பான படத்தினை பற்றி இங்கு பார்க்க இருக்கிறோம். இதற்கு முந்தைய படமானது அரசாங்கத்திற்காக எடுக்கப்பட்ட குறும்படம். அது கணக்கில் வராது. Continue reading “Lifeboat (1944)- Hitchcock Movie – விமர்சனம்”

Bon Voyage 1945- Hitchcock Movie – விமர்சனம்

ஹிட்ச்காக் அடிப்படையில் ஒரு பிரிட்டிஸ்காரர், சினிமா அபிமானத்தின் காரணமாகத்தான் ஹாலிவுட்டை நோக்கி சென்றிருந்தாலும் அவருக்கு தன் நாட்டின் மீதான பற்றி மிக அதிகம், இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இங்கிலாந்து அரசாங்கம் மக்களிடம் தங்கள் கொள்கைகளை எடுத்துச் சொல்ல சினிமாவை மற்ற ஊடகங்களை விட அதிகம் நம்பியது, அரசாங்கத்திற்காக படமெடுக்க அழைக்கையில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்க பல முன்னனி இயக்குனர்கள் நழுவிய சமயத்தில் ஹிட்ச்காக் தானாக முன்வந்தார், வாரத்திற்கு 10 டாலர் சம்பளத்திற்கு ஒத்துக் கொண்டு படம் இயக்கினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

“அப்பம் வடை தயிர்சாதம்” என்றொரு நாவலில் பாலகுமாரன் இந்தியாவில் வெள்ளையர்கள் இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லருக்கு எதிரான மனநிலையை தூண்டி இந்தியர்களை அதிகம் யுத்தத்தில் பங்குபெற செய்வதற்காக ஊருக்கு ஊர் டூரிங்க்டாக்கிஸ் திறந்து அதில் யுத்தக்காட்சி தொடர்பான செய்தி படங்களை திரையிட்டதாக சொல்வார். இந்தப் படம் அதை நினைவுப்படுத்தியது. சரி படத்திற்கு வருவோம். Continue reading “Bon Voyage 1945- Hitchcock Movie – விமர்சனம்”