The Birds (1963)- Hitchcock Movie – விமர்சனம்

சினிமா பார்க்கிறேன் என்று அமர்ந்த பின் படம் முடியும் வரை லாஜிக் பற்றிய சந்தேகங்கள் வரக்கூடாது. படம் முடிந்த பின் வரலாம். இடையில் வந்தால் அவ்வளவுதான், டிக்கெட்டிற்கு கொடுத்த பணம் காலி. சிறந்த உதாரணம் என்றால் சின்னத்தம்பி தான். குஷ்பூ பிறப்பது ஏதோ கொரியரில் வருவதைப் போலத்தான் காட்டியிருப்பார்கள். பிரசவித்த அம்மா இறந்து விட்டதாகவும் சொல்ல மாட்டார்கள், குறைந்த பட்சம் அதற்கு 10 மாதம் முன்பு வரை உயிருடன் இருந்திருக்க வேண்டிய அவர்களது தந்தை பற்றியும் பேச மாட்டார்கள். அவர்கள்தான் பேசவில்லை. படம் பார்த்த எத்தனை பேருக்கு அந்த சந்தேகம் வந்திருக்கும்? அதுதான் சினிமா. சில இடங்களில் கேள்வி கேட்பதை தவிர்த்தால் சுவாரசியமான அனுபவம் கிடைக்கும். எதற்கு இவ்வளவு தூரம் பேசுகிறேன் என்றால் இந்தப் படத்தில் முக்கியமாக அனைவருக்கும் தோன்றும் கேள்விக்கு பதில் சொல்லப்பட்டு இருக்காது அதனால்தான். Continue reading “The Birds (1963)- Hitchcock Movie – விமர்சனம்”

Psycho (1960)- Hitchcock Movie – விமர்சனம்

தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சாமியை ஏன் வில்லனாக நடிக்க வைத்தீர்கள் என்று கேட்டதற்கு ஜெயம் ராஜா, பொய் எப்போதும் ஆபத்தானது, அதிலும் அழகான பொய் கொடுரமானது. வில்லன் கொடுரமானவனாக இருக்க வேண்டுமென்றால் அழகனாக இருக்க வேண்டும். வசிகரமானவனாக இருப்பவனால் தான் கொடுரமானவனாகவும் இருக்க முடியும் என்றார். எவ்வளவு நிஜமான வார்த்தைகள். பார்க்கவே பயப்படும்படி பெரிய உருவம், உருண்டை கண்கள், முறுக்கு மீசையுடன் இருப்பவர் கொலை செய்வதையும் குழந்தை முகத்துடன் நேர்த்தியாக உடையணிந்து ஒருவன் மெதுவாக கழுத்தை அறுப்பதையும் ஒப்பிட்டு பாருங்கள் எது கொடுரமானது என்று புரியும். இப்போதே சொல்கிறேன். சினிமாவை விரும்புபவர்கள் இதற்கு மேல் எதையும் படிக்க தேவையில்லை. நேரடியாக சென்று படத்தை பார்த்து விடுங்கள். படத்தின் இணைப்பு  Continue reading “Psycho (1960)- Hitchcock Movie – விமர்சனம்”

North by Northwest (1959)- Hitchcock Movie – விமர்சனம்

ஹிட்ச்காக்கை பலர் பயமுறுத்தும் விதமான படங்களை எடுப்பவர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் விறுவிறுப்பான படங்களை எடுப்பவர். இப்போது போல சத்தமாக இசையமைத்தோ, கேமராவை ஆட்டியோ பயமுறுத்துவது போல் கிடையாது. விறுவிறுப்பு வேண்டுமென்றால் நல்ல கதை வேண்டும், அதை விட முக்கியம் நல்ல திரைக்கதை வேண்டும். புத்தகமாகவோ, நாடகமாகவோ வெளிவந்து வெற்றி பெற்றிருப்பினும் சரி பிடித்திருந்தால் எங்கிருந்தாலும் கதையை எடுத்துக் கொள்வார். அதே போல் தன்னை விட திரைக்கதை எழுத தெரிந்தவர்கள் கிடைக்கும் பொழுது தேவையில்லாமல் அதில் மூக்கை நுழைக்காமல் வல்லுனர்களை வைத்து திரைக்கதை எழுதிக் கொள்வார். தனது மொத்த திறமையையும் இயக்கத்தில் காட்டுவார். அதனால்தான் 50 ஆண்டுகள் தொடர்ந்து வெற்றிப் படங்களை அவரால் தர முடிந்தது. நாமும் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அவர் படங்களை பேசிக் கொண்டிருக்கிறோம். Continue reading “North by Northwest (1959)- Hitchcock Movie – விமர்சனம்”

Vertigo (1958)- Hitchcock Movie – விமர்சனம்

ஜான் ஸ்காட்டி, ஒரு போலிஸ் அதிகாரி. ஒரு குற்றவாளியை துரத்தும் பொழுது ஒரு கட்டிடத்தின் மீதிருந்து சக காவலாளி தவறி விழுந்து உயிர் விட தான் காரணமானதால் உயரம் என்றால் பயம் ஏற்படும் அக்ரோஃபோபியா மற்றும் உயரத்திலிருந்து கீழே பார்க்கையில் அனைத்தும் சுழலும் தோற்றப்பிழை உண்டாகும் வெர்டிகோ என்னும் நோய்க்கு ஆளாகிறார். சரி இப்படிப்பட்ட பிரச்சனைகளை வைத்துக் கொண்டு இனி என்ன காவல்துறையில் செய்வது என்று முன் கூட்டியே ஜானை வேலையிலிருந்து விடுவித்து விடுகிறார்கள். இவருடைய வழக்கு பத்திரிக்கைகளின் மூலம் பரபரப்பாக பேசப்படுகிறது. இது போன்ற ஃபோபியாக்கள் பற்றிய வழக்குகள் சுவாரசியமானவை என்பது ஒரு காரணம். Continue reading “Vertigo (1958)- Hitchcock Movie – விமர்சனம்”

The Man Who Knew Too Much (1956)- Hitchcock Movie – விமர்சனம்

தமிழில் ஏற்கனவே வந்த படத்தை ரீமேக் செய்து வெற்றிப்பெற்ற முதல் படம் பில்லாதான். ஆனால் அதற்கு முன்பு கருப்பு வெள்ளை காலத்திலேயே உத்தம்புத்திரன் படத்தை ரீமேக் செய்து சிவாஜி நடிப்பில் வெற்றி பெற்றது என்பதுதான் வரலாறு. பில்லாவிற்கு பிறகு நிறைய ரீமேக் படங்கள் எடுக்கப்பட்டன. எடுத்து ஒரிஜினல் படங்களை கொலையாய் கொன்றார்கள் என்பதுதான் உண்மை. மாப்பிள்ளையை கூட மன்னிக்கலாம், தில்லுமுல்லுவை என்னவென்று திட்டுவது? சரி அதை விடுவோம். நான் அவன் இல்லை படம் ரீமேக் செய்து வெளியிட்டு வெற்றி பெறவும் கமலஹாசன் பாலச்சந்தரிடம் அவர்கள் படத்தை ரீமேக் செய்யலாம் என்றாராம். ஏனென்றால் அது நல்ல கதையம்சமுள்ள படம், ஆனால் சரியாக போகவில்லை. இப்போது எடுக்கலாம் என்று விரும்புகிறார். இது நற்சிந்தனை. நல்ல கதையுள்ள ஓடாத படத்தை மீண்டுமொருமுறை எடுத்து ஓட வைக்க முயற்சிப்பதை ஏற்றுக் கொள்ளலாம். நன்றாக ஓடி அனைவருக்கும் பிடித்திருக்கும் கிளாசிக் படங்களை கெடுப்பவர்களை என்னவென்று சொல்வது? Continue reading “The Man Who Knew Too Much (1956)- Hitchcock Movie – விமர்சனம்”

To Catch a Thief (1955)- Hitchcock Movie – விமர்சனம்

ஹிட்ச்காக் எம்ஜியார் போல நடிக்க வரும் நாயகிகளிடம் தொடர்ந்து இரண்டு படங்களுக்கு மொத்தமாக கால்சிட் வாங்கி வைத்துக் கொள்வார் போல் தெரிகிறது. ஏன் சொல்கிறேன் என்றால் அவர் வரிசையாக எடுக்கும் படங்களில் கவனிக்கையில் அடுத்தடுத்த இரண்டு படங்களுக்கு ஒரே கதா நாயகியை பயன்படுத்தும் பழக்கம் இருப்பது தெரியவருகிறது. கதா நாயகனைப் பற்றி கேட்டீர்களேயானால் மன்னிக்கவும் அதெல்லாம் என் கண்களில் படாது. சரி படத்திற்கு வருவோம். Continue reading “To Catch a Thief (1955)- Hitchcock Movie – விமர்சனம்”

The Trouble with Harry (1955)- Hitchcock Movie – விமர்சனம்

ஹிட்ச்காக் படங்கள் எந்தளவுக்கு திரில்லரோ அந்தளவுக்கு அதுக்குள்ள நகைச்சுவையும் இருக்கற மாதிரி பார்த்துப்பார். ரிபாகால மட்டும்தான் அது இல்லைன்னு தோணுது. மீதி எல்லா படத்துலயும் நகைச்சுவை இருக்கும். ஹா ஹா ஹா ன்னு சத்தமா சிரிக்க வைக்கலனாலும் மனசை இலகுவாக்குற மாதிரி இருக்கும். அவர் முழுக்க நகைச்சுவைக்குன்னு எடுத்த படம் தான் இந்த படம். ஆனா அதுவும் ஒரு கொலையை சுத்தி நடக்கற மாதிரி இருக்கும். இந்தப் படமும் ஒரு நாவல்ல இருந்து எடுக்கப்பட்டதுதான்.

படத்தை பத்தி பார்க்கறதுக்கு முன்னாடி ஒரு விசயத்தை சொல்றேன். படத்தை நீங்க எதுக்காக பார்க்கனுமோ இல்லையோ படத்துல காட்டற இயற்கை அழகை இரசிக்கறதுக்காகவே கட்டாயம் பார்க்கனும், உங்களுக்கு படம் பிடிக்குதோ இல்லையோ இந்த படத்துல காட்டப்படற இடங்களோட வண்ணங்கள் கட்டாயம் உங்க மன அழுத்தத்தை குறைக்கும்னு உறுதியா சொல்றேன். அதுக்குனு Highway அளவுக்கு எதிர்பார்க்க வேண்டாம். நல்லாருக்கும். Continue reading “The Trouble with Harry (1955)- Hitchcock Movie – விமர்சனம்”

Rear Window (1954)- Hitchcock Movie – விமர்சனம்

Peeping Tom என்று ஒரு சொலவடை உண்டு. கேள்விப்பட்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அடுத்தவர்களின் அந்தரங்கத்தை எட்டிப் பார்ப்பவரை இப்படி சொல்வது வழக்கம். உண்மையில் இதன் பின்னனியில் கொஞ்சம் விவகாரமான சமாச்சாரம் உண்டு. அதைப் பற்றி கூகுளில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ஹிட்ச்காக் இந்த கதைக்களத்தில் எடுத்த ஒரு படத்தைப் பற்றித்தான் நாம் பார்க்க இருக்கிறோம். சொல்லப் போனால் இதே மாதிரி பல படங்கள் பல மொழிகளில் வந்து விட்டன. தமிழில் கூட நிழல்கள் ரவி தன் மனைவியை கொலை செய்வதை எதிர்வீட்டில் ஒரு பெண் கேமராவில் படம் பிடித்து சிக்கலில் மாட்டிக் கொள்வதாக ஒரு படம் வந்திருக்கும். அதே களம் தான். ஆனால் கொஞ்சம் ஜனரஞ்சகமான படம் இது. விரிவாக பார்ப்போம். Continue reading “Rear Window (1954)- Hitchcock Movie – விமர்சனம்”

Dial M for Murder (1952)- Hitchcock Movie – விமர்சனம்

கிரைம் நாவல் மன்னன் ராஜேஸ்குமாருடைய ஒரு நாவலில் இப்படி எழுதி இருப்பார். தினம் தினம் செய்தி தாள்களில் வரும் குற்றங்களை கொண்டே எனது கதைகளை உருவாக்குகிறேன். என்னைப் போலவே செய்தித் தாள்களில் வரும் குற்றங்களை ஆராய்ந்து மாட்டிக் கொள்ளாமல் குற்றச்செயல்களில் ஈடுபட பலர் முயற்சித்து சிக்கிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு புரிவதில்லை, எந்த குற்றச்செயலையும் நாம் திட்டமிட்ட படி முடிக்கவே முடியாது. எங்கேனும் ஏதேனும் ஒரு தவறிழைப்போம் என்று. அந்த நாவலில் ஆள் மாறாட்டம் செய்து ஒருவனின் சொத்துக்களை அடைய ஒருவனை கொலை செய்து விட்டு அவன் இடத்திற்கு இன்னொருத்தன் வருவான். வந்த பின்னர்தான் அந்த பனக்காரனுக்கு ஊரைச் சுற்றிக் கடன் இருப்பதும், ஒரு கால் இல்லாமல் கட்டைக்கால் வைத்திருந்ததும், பல பெண்களை ஏமாற்றி சிக்கலில் முழித்துக் கொண்டிருப்பதும் தெரியவரும். இந்த நாவலைப் போலவே திட்டமிட்டு குற்றமிழைக்கு ஈடுபடும் ஒருவனுடைய கதைதான் இந்தப் படம். Continue reading “Dial M for Murder (1952)- Hitchcock Movie – விமர்சனம்”

Strangers on a train (1951)- Hitchcock Movie – விமர்சனம்

இந்த படத்தின் தலைப்பை பலர் கேள்விப் பட்டு இருப்பீர்கள். ஏனெனில் இந்தப் படத்தினை தமிழில் சேரன், பிரசன்னா நடிக்க “முரண்” என்ற பெயரில் வெளியிட்டு பலர் பார்த்தும் பெரிய வெற்றி பெறவில்லை. ஆனால் முதலிலேயே சொல்லி விடுகிறேன். இந்த ஆங்கிலப் படத்தில் இருந்து வெறும் பத்து சதவீதம் மட்டுமே எடுத்துக் கொண்டு மீதியை சொந்தமாக உருவாக்கிய படம் தான் முரண். எனவே இந்தப் படத்தை பார்க்கும் பொழுது ஏற்கனவே பார்த்தது போல் இருப்பது மிக மிக குறைவு.

படத்தின் ஆரம்பம் ஒரு இரயில்வே ஸ்டேசனில். இரண்டு கால்கள் தனித்தனியாக காட்டப்படுகின்றன. அவை இரண்டும் இரயிலில் எதிர் எதிரே அமர்ந்து தவறுதலாக மோதிக் கொண்ட பின் தான் அக்கால்களுக்கு சொந்தக்காரர்களை காண்கிறோம். ஒருவர் புகழ் பெற்ற வளரும் டென்னிஸ் விளையாட்டு வீரர். இன்னொருவர் பெரிய பணக்காரரின் மகன். டென்னிஸ் வீரர் தான் நாயகன். அவரது அந்தரங்க வாழ்க்கைக் குறித்து பத்திரிக்கைகளில் படித்த மற்றொரு சகப்பயணி ப்ருனோ அதைப் பற்றி கேட்டும் பேசிக் கொண்டும் வருகிறார். இறுதியாக ஒரு யோசனை சொல்கிறார். Continue reading “Strangers on a train (1951)- Hitchcock Movie – விமர்சனம்”