கற்றது தமிழ் (2007) – வெறும் படமல்ல, எங்கள் வாழ்க்கை

2007, தமிழ் நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளிலும் பொறியியல் கல்லூரிகள் கரையான் புற்றுக்களை போல் முளைத்துக் கொண்டிருந்த நேரம், சேருபவர்கள் அனைவரும் சாஃப்ட்வேர் இன்ஜினியர்தான் ஆவேன் என அடம்பிடித்த காலம். அதற்காகவே, கேம்பஸில் வேலை கிடைக்க அவனவன் ஆங்கிலத்தை கற்க முக்கிக் கொண்டிருந்த காலம். இத்தகைய ஜீவன்கள் இருக்கும் கல்லூரியில் சாஃப்ட்வேர் குறித்த எந்த தொடர்பும் இல்லாமல் படித்த சிவில் இன்ஜினியர்கள் நாங்கள்.

எங்கள் டிபார்ட்மெண்டில் கூட சிலர் சாஃப்ட்வேருக்கு முயற்சித்து கொண்டிருந்தார்கள். நாங்களோ அர்ரியர்சை கிளியர் செய்தாலே போதும் என வாழ்ந்து கொண்டிருந்தோம். 3 வது வருடம் முடிகையிலேயயே பலர் கேம்பசில் செலக்ட் ஆனார்கள். யாரை கேட்டாலும் வருடத்திற்கு சம்பளம் 4 இலட்சம் 5 இலட்சம் என்றார்கள். சிவிலுக்கு ஆரம்பத்தில் 10000 கூட தாண்டாத காலம் அது. இரண்டு கூட்டத்துக்கும் ஒரு பெரிய இடைவெளி உருவானதை உணர முடிந்தது. அப்படி என்றால் நாம் யார்? வேலைக்கு போய் வாழ்ந்து விட முடியுமா? என்ற பயம் வந்தது. அந்த நேரத்தில் தமிழ் M.A என்ற ஒரு படமும் வந்தது.

தமிழ் படித்தவனின் வாழ்க்கைதான் படம் என்று புரிந்தவுடனேயே படத்திற்குள் கலந்து விட்டோம். ஒவ்வொரு காட்சியும் மிக புதுமையாக தெரிந்தது. ஏனென்றால் படத்துவக்கத்தில் இருந்தே நாயகன் ஓடிக் கொண்டிருக்கிறான். இந்த சமூகமும் வாழ்க்கையும் அவனை துரத்துகிறது. கொலைகாரனாகி போலிசுக்கு பயந்து ஓடுகையில் துவங்கும் அந்த “இன்னும் ஓர் இரவு” பாடல், யுவனின் குரல். ஸ்ஸ்ஸப்பா. தந்த உணர்வுகளை சொல்லவே முடியாது. படத்தினைக் குறித்து நிறைய சொல்லலாம். முக்கியமானதை மட்டும் பார்க்கலாம்.

10 வருடங்களுக்கு முன்பு இணையம் பெரிதாய் வளர்ந்திருக்கவில்லை. ஆனால் அப்போதும் பார்க்காமல், தொலைவில் இருப்போரை காதலிப்பது இருந்தது. எங்கோ ஒரு கல்லூரியில் படிக்கும் பெண்ணுடன் மணிக்கணக்காக பேசி, காதலித்து, பரிசுகளை அனுப்பி, பெற்று, பிறந்த நாட்களிலோ, முக்கிய தினங்களிலோ இருவரும் சந்திப்பது வழக்கமாக இருக்கும். எனக்கு தெரிந்து நான் உட்பட என் நண்பர்கள் அனைவருக்குமே இப்படி ஒரு காதல் கதை இருந்தது. அப்படி ஒரு நாள் காதலியை தேடி செல்கையில், அந்த தருணத்தில் பாடுவதற்கு அதுவரை எந்த பாடலும் இல்லாமல் இருந்தது. இப்படத்தில் அதே சூழலில் ஒரு பாடல் வரும் பொழுது அழாத குறைதான். அதிலும் அந்த கடிதத்தின் வரிகளுடன் துவங்கும். என் அறைத் தோழர்கள் அனைவருக்கும் அது மனப்பாடம்.

“பிரபா என்னை தேடி இருப்பன்னு எனக்கு தெரியும்” என துவங்கி “ஆனந்தி” என முடியும் அந்த வரிகள். அஞ்சலி-ஜீவாவின் குரல்கள். மெதுவாய் துவங்கிய இசையும், தொடர்ந்து வரும் இராஜா சாரின் குரல் “பறவையே எங்கு இருக்கிறாய்”, முத்துகுமாரின் வரிகள். இதையெல்லாம் நினைத்தாலே கண்கள் கலங்குகிறது.

அதுவரை எங்கள் அறையில் ஸ்பீக்கர் இல்லை. இந்த படம் வந்த பின் வாங்கினோம். என்ன சிறப்பு என்றால் பாட்டு கேட்கவென தனியாக ஒரு அறை ஒதுக்கப்பட்டது. ஒவ்வொருவனும் தனியாக சென்று முழு வால்யூமில் பாடலை ஒலிக்க விட்டு, உடன் சேர்ந்து இராஜவுடன் பாடுவான், இல்லை அழுவான். அழுவேன்.

சோகம் மட்டுமல்ல. இந்த படம் வந்த பின் கொஞ்ச நாட்களுக்கு நாங்கள் பேசும் தொனியே எப்படி இருக்கும் என்றால் “இங்க பாரு ஆனந்தி, இப்ப நான் குடிக்கறதுக்கு பேர் கஞ்சா” என்று பாடலின் இடையே வருமே, அதே டோனில் பேசிக் கொண்டிருந்தோம்.

“ஏன் ரெகார்ட் எழுதலை?”

“இங்க பாரு, நான் ரெகார்ட் எழுதலை, ஏன்னா நான் படத்துக்கு போய்ட்டேன், நான் ஏன் படத்துக்கு போனன்னா…”

இப்படித்தான் பேசிக் கொண்டு இருப்போம்.

அதே மாதிரி காதலி இருப்பவன் சென்று பார்க்கையில் “பறவையே எங்கு இருக்கிறாய்” பாடினால், காதலி இல்லாதவர்களுக்காக ஒரு வரி வரும்

“போய் பார்க்க யாருமில்லை

வந்து பார்க்கவும் யாருமில்லை

வழிபோக்கன் போவான் வருவான்

வழிகள் எங்கும் போகாது”

அந்த “புத்தி இருக்கவந்தான் புகை பிடிப்பான்” வசனத்தை பத்தி தனியா வேற சொல்லனுமா?

“இந்த ஊர் 2 இலட்சம் சம்பளம் வாங்கறவனுக்கேத்த மாதிரி மாறிகிட்டு வருது”ன்னு சொன்னப்ப புரிஞ்ச்சுக்க முடியலை. படிப்பு முடிஞ்சப்புறம் புரிஞ்சது.

எழுதிகிட்டே போகலாம். “கற்றது தமிழ்”-எங்கள் வாழ்வோடு கலந்த படம்.

அவனெல்லாம் யோகி என்றால் வள்ளலார் யார்? – குறளுரை

“சத்யம்” படத்தில் ஒரு காட்சி வரும். மந்திரிகளை கொலை செய்து மாட்டிக் கொள்ளும் உபேந்திரா, விஷாலிடம் சிறைச்சாலையில் பேசும் காட்சி “பிரார்த்தல் பன்னவ, அதையே பண்ணிட்டு இருந்துருந்தா சுட்டுருக்க மாட்டேன், ஐட்டமா இருந்தவ அறநிலையத்துறை மந்திரி ஆனா, அதான் சுட்டேன். கள்ளச்சாராயம் காய்ச்சுனவன் கல்வித்தந்தை, இவங்ககிட்ட நம்ம பிள்ளைங்க படிக்கனும், கருமம், கருமம்”. இதில் அந்த “கருமம், கருமம்” என சொல்வது நிஜத்தை சொல்வது போலவே இருக்கிறது இப்போது. யார் நம்மை ஆள்கிறார்கள் என அப்படியே பொறுமையாக பார்த்தால் வரும் எரிச்சலுக்கு அளவே இல்லை.

என்னடா, சினிமாவில் வருவதை வைத்து பேசுகிறானே, என நினைக்க வேண்டாம். “மான்புமிகு மாணவன்” என்று ஒரு விஜய் படம். கல்லூரிக்குள் அரசியல் ரவுடிகள் வந்து தாக்குவது போல் காட்டிவிட்டு, வாய்ஸ் ஓவரில் எஸ்.ஏ.சி பேசுவார். அந்த படம் வந்த போது இப்படி எங்காவது நடக்குமா என்று யோசித்தேன். அடுத்த சில வருடங்களில் ஒரு சட்டக் கல்லூரிக்குள் நுழைந்து மாணவர்களை கொடுரமாக தாக்கிய காட்சியை விடாமல் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதை பார்த்து நொந்துக் கொள்வதை தவிர்த்து வேறு வழியில்லாமல் போனது.

வெறுமனே ஆள்கிறவர்கள், கொள்ளையடித்துக் கொண்டு போனால் கூட பரவாயில்லை. துறவிகள் என அவர்களது அடிவருடிகளை விட்டு புகழ்ந்துக் கொள்வது தான் கடுப்பேற்றுவதில் உச்சக்கட்டம். துறவறம் என்றால் திருமணம், செய்து கொள்ளாமல் இருப்பதோ, அல்லது கட்டிய மனைவியை நட்டாற்றில் விட்டு ஓடுவதோ மட்டுமல்ல. சமுதாயத்தில் மக்கள் அனைவருக்காகவும் சிந்திப்பது தான் துறவறம். தன் குடும்பம், தன் வீடு என்று இருந்தவர்கள் மொத்தமாக என் மக்கள், என் உலகம் என யோசிப்பது தான் துறவின் உண்மை நிலை.

எனக்கு நன்குத் தெரிந்த துறவி என்றால் ராமலிங்க அடிகளார் தான். வள்ளலார் என அழைக்கப் படுபவர், பாரதியாரால் “புது நெறிக் கண்ட புலவர்” என அழைக்கப்பட்டார். காரணம் வள்ளாலார் எடுத்த நிலைப்பாடு அப்படி “சங்கடம் தரும் சாதியையும் மதத்தையும் தவிர்த்தேனே” என பாடிய துறவிகள் வேறு யாரையாவது காட்டுங்கள் பார்க்கலாம்? தமிழின் வளர்ச்சிக்கு வள்ளலார் ஆற்றிய பங்கினை பேசினால் பெரிதாக போகும்.

சாதி, பேதங்களை தவிர்த்ததை விட பெரிய விஷயமாக படுவது அவர் துவங்கிய மூன்று இயக்கங்கள்.
1. சத்திய தரும சாலை – பசி போக்கும்
2. சத்திய சன்மார்க்க சங்கம் – பாகுபாட்டை போக்கும்
3. சத்திய ஞான சபை – அறிவை வளர்க்கும்

யோசித்து பாருங்கள். 19ம் நூற்றாண்டில் மட்டும் எத்தனை பஞ்சங்கள்? இயற்கையோ, செயற்கையோ, அதனால் நிகழ்ந்த உயிரிழப்புகள் மட்டும் எத்தனை? மக்கள் மனதில் இருக்கும் தர்ம சிந்தனையை நம்பி ஒரு அடுப்பை பற்ற வைக்கிறார். வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் பசித்தீயை அனைக்க, அடுப்பில் தீ மூட்டுகையில் அவர் சொன்ன வார்த்தை “இந்த உலகில் தர்மம் இருக்கும் வரை இந்த நெருப்பு எரியும். இந்த நெருப்பு எரியும் வரை உலகில் தர்மம் இருக்கும்” அவர் ஏற்றி 150 ஆண்டுகளாக அனையாமல் எரியும் அந்த ஜோதி தானே தர்மம்?

என் நண்பர்களுக்கும் சொல்வதுண்டு. பிள்ளைகளை ஊட்டி, கொடைக்கானல், திருப்பதி, பழனி என அழைத்து செல்வதற்கு முன் வடலூர் சத்திய தருமசாலைக்கு அழைத்து செல்ல சொல்வேன். பசி என்றால் என்ன என புரியாமல், உணவை மதிக்காத ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. அதை தவிர்க்க இது உதவும் என்பேன். வெறுமனே தான் சார்ந்த மதத்தை பிடித்து தொங்காமல், மொழிக்காக, சமத்துவத்துக்காக, மக்களுக்காக வாழ்ந்த துறவியினால் தான் “வாடிய பயிரை கண்ட பொழுது வாடினேன்” பாட முடியும்.

இப்படிப்பட்ட மாமனிதர்கள் வாழ்ந்த மண்ணில், அவரைப் பற்றி படித்து தெரிந்துக் கொண்டு விட்டு, ஆடம்பரமாக திரியும் முட்டாள்களையும், மூடர்களையும், வன்முறையாளர்களையும், நேரடியாக சொன்னால் தீவிரவாதிகளை துறவி என சொல்வதைக் கேட்கையில் மனம் எவ்வளவு குளுகுளுவென்று இருக்கும்?

கொடுமையிலும் பெருங்கொடுமை, அனைத்தையும் துறந்த துறவி என சொல்லிக் கொண்டு, மக்களை ஏமாற்றுவதுதான். அது நித்தியானந்தாவோ, சத்குருவோ, பாபா ராம்ததேவோ, ஆதித்யனாத்தோ, மோடியோ, இவர்களுக்கெல்லாம் அப்போதே எழுதி வைத்திருக்கிறார் வள்ளுவர்.

அதிகாரம்: கூடாவொழுக்கம் குறள்: 276
நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

உரை:
மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல், துறந்தவரைப் போல் வஞ்சனை செய்து வாழ்கின்றவர் போல் இரக்கமற்றவர் வேறு எவரும் இல்லை.

பிரேமானந்தா, நித்தியானந்தாக்கள் காலத்தில் அடங்காதவர்கள் – குறளுரை

“காந்தளூர் வசந்தகுமாரன்” படித்ததுண்டா? சுஜாதா எழுதியதில் மொத்தம் இரண்டு நாவல்கள் தான் வரலாறு தொடர்பானது. ஒன்னு “இரத்தம் ஒரே நிறம்”. சிப்பாய் கலகத்தை பற்றி எழுதி இருப்பார். மற்றொன்று “கா.வசந்தகுமாரன்”. அதிலேயும் அவரது டிரெட்மார்க் பாத்திரங்களான கனேஷ் – வசந்த் ஐ பயன்படுத்தி இருப்பார். கதைக்காலம் கி.பி 1000. இராஜராஜ சோழன் காலக்கதை. அவரோட அதிகாரிகளில், கிட்டத்தட்ட அமைச்சர் மாதிரி வரவர் கனேச பட்டர்( நம்ம கனேஷ்). அவருடைய சிஷ்யனா வசந்தகுமாரன். பெண்களை பார்த்தா கவிதை சொல்ற அதே வசந்த் தான். இங்கே ஜீனியர் வக்கீல், அங்கே சிஷ்யன்.  Continue reading “பிரேமானந்தா, நித்தியானந்தாக்கள் காலத்தில் அடங்காதவர்கள் – குறளுரை”

புலித்தோல் போர்த்திய பசு – குறளுரை

“வேங்கை” படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி வரும். கஞ்சா கருப்பு ஒரு பக்கம் விரைப்பாக நின்றுக் கொண்டு வீராப்பாக பேசிக் கொண்டு இருப்பார். காட்சி இறுதியில் தனுஷ் கேட்பார் “நீ உண்மையிலேயே வீரமா நிக்கறியா? இல்லை மோஷன் போய்ட்டு மூவ் பண்ண முடியாம நிக்கறியா?”

சில நாட்களுக்கு முன்பு இந்தியா, சீனா விவகாரத்தில் காக்கும் அமைதி, விடுக்கும் எச்சரிக்கைகளை பார்க்கையில் இந்த காட்சிதான் நினைவுக்கு வந்தது. பாகிஷ்தான் எல்லை மீறும் போது காட்டும் வீரம், சீனாவிடம் குறைவது போல் தெரியவில்லையா? உண்மைதான். உலகத்தில் பாதி நாடுகள் பயப்படும் அளவிற்கு வளர்ந்த நாடு மீது எடுக்கும் நடவடிக்கையை யோசிக்காமல் எடுக்க முடியாது தான். Continue reading “புலித்தோல் போர்த்திய பசு – குறளுரை”

4 பேர் பேசறதை கவனிக்காம விடனுமா? – குறளுரை

“ஒரு தோட்டால ஒரு உயிர் போகுமா?”

“ரெண்டு உயிர், ரெண்டு பேர் செத்துருவாங்க, ஒருத்தன் குண்டடி பட்டவன், இன்னொருத்தன் அதை முதல் தடவையா சுடறவன்”

Highway(2014) படத்தில் வரும் வசனம். முதல் முறையாக அது எந்த சூழ்நிலையில் வேண்டுமென்றாலும் நிகழ்ந்ததாய் இருக்கட்டும், தன் கையால் ஒரு உயிர் போனதை அறிந்த எவராலும், அதன்பின் தன் வாழ்க்கையை முன்பு போல் எளிமையாய் கடக்க இயலாது. இதுதான் உண்மை. Continue reading “4 பேர் பேசறதை கவனிக்காம விடனுமா? – குறளுரை”

எனக்கு ப்ளஸ் 27, உனக்கு மைனஸ் 76 – சிறுகதை

சூர்யாவிற்கு இவளை எப்படி கையாளுவது என்றே தெரியவில்லை. இப்படி எல்லாம் நடக்கும் என தெரிந்துதான் அந்த விளம்பரத்தை இந்தியாவில் எந்த நாளிதழுக்கும் தராமல் தன் நண்பர்கள் மூலமாக இங்கிலாந்தில் இருக்கும் “இலண்டம் டைமஸ்” இதழுக்கு தந்திருந்தான். ஆனால் அந்த விளம்பரத்தை எப்படியோ பார்த்து விட்ட யாரோ ஒரு இந்திய பத்திரிக்கையாளர் ஒருவர், அது குறித்த செய்தியை இந்திய நாளிதழில் வெளியிட மானமே போய் விட்டது. கிட்டத்தட்ட ‘பணக்கார கிறுக்கன்’ என்று சொல்லாமல் சொல்லி இருந்தார்கள். அதில் இருந்து பலர் துக்கம் விசாரிப்பது போல் அவனிடம் விசாரிக்க துவங்கினார்கள். சிலர் தெரிந்த மனநல மருத்துவர்களை பரிந்துரைக்கவும் செய்தனர். Continue reading “எனக்கு ப்ளஸ் 27, உனக்கு மைனஸ் 76 – சிறுகதை”

Lakshman Rekha (1984) (Malayalam) – விமர்சனம்

ஆண்களிடம் ஒரு கேள்வி. உங்கள் வீட்டினருகே ஒரு குடும்பம் குடியிருக்கிறது. ஒரு கணவன் – மனைவி. கணவன் ஒரு விபத்தில் கழுத்துக்கு கீழ் அனைத்து பாகங்களிலும் உணர்ச்சி இழந்து, எந்நேரமும் படுக்கையில் கிடப்பவர். இருவருக்கும் திருமணம் ஆனதில் இருந்து எந்த சேர்க்கையும் நிகழ்ந்ததில்லை. கிட்டத்தட்ட 5 வருடங்களாக அந்த பெண் திருமணத்திற்கு பின்பும் கன்னியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவளை எப்படி பார்ப்பீர்கள்? பெண்கள் சொல்லுங்கள், இந்த பெண்ணின் தியாகத்தை எங்ஙனம் போற்றி புகழ்வீர்கள்?

சரி அடுத்த கேள்வி. இதே பெண் உங்கள் குடும்பத்தை சார்ந்தவளாக இருந்தால்? காலம் முழுக்க இப்படியே இருக்கட்டும் என விட்டு விடுவீர்களா? கணவன் இல்லையென்றால் உடனடியாக அப்பெண்ணின் விருப்பத்தோடு மறுமணம் செய்து வைக்கலாம். கணவன் பெயருக்கு உயிருடன் இருக்கிறார். அவ்வளவுதான். இந்த நிலையில் என்ன செய்யலாம்? விவாகரத்து செய்து வைத்து வேறு ஒருவருக்கு மணம் செய்து வைக்கலாம் என்பவர்கள் மட்டும் மேலே படிக்கலாம். இல்லை ஒருவரை மணந்து கொண்டு விட்டால் இறுதி வரை எந்த சூழலிலும் பிரியக் கூடாது என்பவர்கள் படிக்க வேண்டாம். Continue reading “Lakshman Rekha (1984) (Malayalam) – விமர்சனம்”

உனக்கு நல்ல சாவே வராதுடா – வள்ளுவரும் சாபமும்

மகாபாரதத்தில் கிளைக்கதை ஒன்று வரும்.  பாண்டவர்கள் வனவாசம் சென்று இருக்கும் பொழுது, ஒருமுறை நீர் எடுக்க செல்கையில், ஒருவர் பின் ஒருவராக வராமல் போக, இறுதியாக தர்மர் செல்வார். அனைவரும் இறந்து கிடக்க, வழக்கம் போல் ஒரு அசிரீரி நான் கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்ல சொல்லி அவரை சோதிக்கும். அனைத்திற்கும் விடையளித்த பின் ஒருவரை மட்டும் உயிர்பிக்கிறேன், யார் வேண்டும்? என கேட்கையில் மாற்றந்தாய் வீட்டு பிள்ளைகள் இருவரில் ஒருவரை உயிர்பிக்க சொல்லிக் கேட்பார். அதற்கொரு நெடிய விளக்கம் சொல்லி, அதனால் திருப்தியடைந்த அந்த மாயன் அனைவரையும் உயிர்ப்பித்து தருவார். Continue reading “உனக்கு நல்ல சாவே வராதுடா – வள்ளுவரும் சாபமும்”

ஊர் என்ன வேணா பேசட்டும்…! – குறள்கதை

“எல்லாம் நீ இடம் கொடுத்துதான் இவ்வளவு தூரத்துக்கு வந்துருக்கு, பார்த்தியா?”

“அப்படிலாம் இல்லை”

“என்ன இல்லை? முன்னலாம் எப்படி உன் பின்னாடியே சுத்திகிட்டு இருப்பான்?”

“அவன் எங்கே சுத்துனான்? ஆரம்பத்துல இருந்தே அவன் நம்ம ஃப்ரெண்ட்தானே?”

“ஃப்ரெண்ட்தான், ஆனா தினம் இங்கே உன்னை விட்டு தனியா எங்கேயாவது போயிருக்கானா? போன் பண்ணா ஒரு ரிங்ல அட்டெண்ட் பன்னுவான், நீ பன்னலைன்னா கூட திட்டுவான்னு சொல்லிருக்க, ஆனா இப்ப பார்த்தியா?”

“இப்ப மட்டும் என்ன? போனை எடுக்காமயா இருக்கான்?”

“எடுக்குறான், எடுத்து அப்புறம் பேசறேன்னு சொல்லிட்டு வச்சுடறானே, ஏன்டி இப்படி இருக்க? அவனுக்கு உன் மேல பெருசா லவ்லாம் இல்லைடி, யாருக்கும் மடங்காம இருக்கியேன்னு பின்னாடி சுத்தி, ஃப்ரெண்டாகி, லவ் சொல்லி, ஒத்துக்க வ்ச்சு, இப்ப எல்லாம் முடிஞ்சதும் அவாய்ட் பன்றான்” Continue reading “ஊர் என்ன வேணா பேசட்டும்…! – குறள்கதை”

எப்படி என் மனதை அறிந்திருப்பான்? – குறள்கதை

“அவசரம் இல்லை, யோசிச்சு பொறுமையா சொல்லு, நீ என்ன சொன்னாலும் சரி, திரும்ப வற்புறுத்த மாட்டேன்”

நான் எந்த பதிலும் சொவதற்கு முன்பாகவே அனிதா என்னை இழுத்து வந்து விட்டாள். அவள் இல்லை என்றால் சரி என்று சொல்லி இருப்பேன் என்றெல்லாம் சொல்ல முடியாது, ஆனால் என் முகம் காட்டி கொடுத்து விடும். என் முகவெட்டு அப்படி. கோபப்பட்டாளோ, சோகத்தை உள்ளே வைக்க முயற்சிக்கையிலோ உடனடியாக காட்டி கொடுத்து விடும். இது போன்ற உணர்ச்சிகளை மட்டும் அல்ல, ஒருவர் மீதான உணர்வுகளையும் என் முகம் காட்ட துவங்கி விட்டது போல, இல்லையென்றால் எந்த தைரியத்தில் என்னிடம் வந்து அப்படி சொல்லிருப்பான். Continue reading “எப்படி என் மனதை அறிந்திருப்பான்? – குறள்கதை”