போதையில் கல்யாணம்/கலாட்டா- WHAT HAPPENED IN VEGAS- திரை விமர்சனம்


 அன்பு வாசகர்களே, நீண்ட இடைவெளிக்கு பின் வழக்கம் போல் ஒரு ஹாலிவுட் திரைப்பட விமர்சனத்தில் உங்களை சந்திக்கிறேன், ஏற்கனவே முந்தைய பதிவில் சொன்னது போல் விக்கிபீடியாவில் ரொமாண்டிக் காமெடி சீரியசில் பார்த்த ஒரு படத்தை பற்றித்தான் இன்றைய விமர்சனம், ஏறக்குறைய பலர் பார்த்திருக்க கூடிய படம் தான், “WHAT HAPPENED IN VEGAS” .

75% நகைச்சுவையும் 50% சதவீதம் காதலையும் 75% கலாட்டாவையும் கலந்து எடுத்திறுக்கிறார்கள், அதற்கு ஏற்ற கதைக்கரு, காதலனால் அவனது பிறந்த  நாளன்று இன்ப அதிர்ச்சி குடுக்க காத்திருக்கும் நண்பர்கள் மத்தியில் கழட்டி விடப்பட்ட கதா நாயகி, தனது தந்தையால் வேலையை விட்டு துரத்தப்பட்ட கதா நாயகன், இருவரும் தத்தம் சோகங்களை மறக்க வேகாஸ் நகருக்கு நெருக்கமான நண்பர்களுடன் சொல்ல ரூம் நம்பர் குழப்பத்தில் அறிமுகமாகிறார்கள்.
வழக்கம் போல இராத்திரியான பார்ட்டி வைக்கற ஊருக்கு போய்ட்டு கோவிலுக்கா போகப் போறாங்க, க்ளப் தான் சரக்குதான், எல்லாத்தையும் மறந்து விடிய விடிய சரக்கடிக்கறாங்க, இப்பதாந் நம்ம ஊர் ‘மங்காத்தா’ த்ரிஷாவே சரக்கடிச்சுட்டு டூயட் பாட்றாங்களே, ஹாலிவுட்ல கேட்கவா வேணும், விடிஞ்சாதான் பெரிய அதிர்ச்சி, நைட் மப்புலையே 2 பேருக்கும் கல்யானம் ஆயிருக்கு.

சரி, ஏதோ நடந்தது நடந்து போச்சு நடந்தத கெட்ட கனவா நினைச்சு மறந்துருவோம்னு முடிவு பன்னி 2 பேரும் முடிவு பன்னி பிரியும் போது ஹீரோயின் குடுக்கற காயின் அ வச்சு ஹீரோ ஜாக்பாட் விளையாடும்போது 3000000 டாலர் பரிசு விழுந்துருது,  என் காயின்லதான் விழுந்ததுனு ஹீரோயின் சொல்ல, விளையான்டது நாந்தான்னு ஹீரோ மல்லுகட்ட, நான் உன் பொன்டாட்டி, உன் சொத்துல எனக்கு பங்கு இருக்குனு ஹீரோயின் ரூல்ஸ் பேச டைவர்ஸ் கேட்டு கோர்ட்டுக்கு போனா, ஒரு நாள் கூட ஆகாம டைவர்ஸ் ஆனு ஜட்ஜ் காண்டாகி, 6 மாசம் சேர்ந்து வாழ்ந்துட்டு வாங்க, அது வரைக்கும் அந்த பரிசுதொகைய freeze பன்னி வைக்கறேன்னு ஜட்ஜ்மென்ட் குடுத்துட்றார்.
அதுக்கு அப்புறம் 2 பேரும் சேர்ந்து வாழனும்னு ஒரே வீட்ல தங்கி ஏகப்பட்ட அலப்பறைய குடுக்கறாங்க,அதெல்லாம் செம காமெடி, அப்புறம் ஒருத்தரைொருத்தர் மாட்டிவிட முயற்சி பன்னி முடியாம கொஞ்சம் கொஞ்சமா பேச ஆரம்பிக்கறாங்க. ஹீரோ குடும்பத்துல ஹீரோயின் ஒட்ட ஆரம்பிக்கறாங்க.
அப்புறம் ஹீரோயினோட ஆபிஸ் பார்ட்டிக்கு போய் அவளை மாட்டிவிட ஹீரோ வல்கர் ஆ பேச அதுவே அவங்க பாஸ்க்கு பிடிச்சு போய் ப்ரோமோஸன் வரைக்கும் போகுது.
கொஞ்சம் கொஞ்சமா நம்ம மானாட மயிலாடல சொல்ற மாதிரி 2 பேருக்கும் கெமிஸ்ட்ரி வொர்கவுட் ஆக ஆரம்பிக்குது, 
ஹாலிவுட்ல எனக்கு ஒரு பெரிய சந்தேகம் என்னன்னா எப்படித்தான் ஒரு அழகான பொண்ணு கூட தனியா தங்கும் போது கன்ட்ரோல்லா இருக்கானுங்களோ? நம்மாள முடியாதுப்பா.

அப்புறம் எதிபாராத விதமா 2 பேருக்குள்ளயும் பிரிவு வருது, அந்த பிரிவுதான் 2 பேரும் ஒருத்தருக்கொருத்தர் எவ்வளவு காதலிக்கறாங்கனு புரியவச்சு சேர்த்து வைக்குது,

படத்துல எல்லாருக்கும் பிடிச்ச சீன் ஹீரோவும் ஹீரோயினும் மப்புல பன்னிக்கற கல்யானம், அவ்வளவு கலாட்டாவா இருக்கும், சைட்ல இவங்க 2 பேர் ஃப்ரென்ட்ஸும் ஏதோ……………………….. பன்னிட்டு இருப்பாங்க.
 

 படம் முழுக்க ஒரே கலாட்டாவா இருக்கும், கண்டிப்பா அனுபவிச்சு பார்க்கலாம்.

படத்தோட ட்ரெய்லர்

உங்கள் மதிப்பு மிக்க கருத்துக்களை தெரிவிக்கவும்.மறக்காம பகிர்ந்துக்கங்க.

 அன்புடன் கதிரவன்…

Forgetting Sarah Marshall (2008)- விமர்சனம்

காதல் துவங்குவது ஒவ்வொருவரின் வாழ்க்கையில் வேறுபடுவதை போல, காதல் பிரிவதும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அப்படி காதலி பிரிந்து சென்ற பின்னர் ஆண்களின் வாழ்வு அவர்களது குணநலன்களை பொறுத்து மாறுபடும். முதலில் காதலி பிரிந்தால் மதுவிடம் சரணடைய வேண்டும் என தேவதாஸ் காலத்தில் இருந்து சொல்லி வருகிறார்கள். குடிப்பதால் மட்டும் அந்த வலி போய்விடுமா? இல்லை, ஒரு வலியை இன்னொரு வலிதான் மறக்கச் செய்யும். புரியவில்லையா? “ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா நர்ஸ் பொண்ணை காதலி”னு கேட்டதில்லை அதுதான். சொல்வதற்கு எளிதான விஷயம் தான். பாதிக்கப்பட்ட ஆணுடைய வேதனை அடுத்த பெண்ணை பார்க்க விடாது. அதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும். சரி படத்திற்கு வருவோம். Continue reading “Forgetting Sarah Marshall (2008)- விமர்சனம்”

KAHAANI – பார்க்க வேண்டிய படம்- திரை விமர்சனம்

அன்புள்ள வாசகர்களுக்கு, இது வரை நான் ஒரு தமிழ் படத்திற்கு கூட விமர்சனம் எழுதியது இல்லை, ஏனென்றால் தமில் சினிமாக்களை நான் பார்ப்பதற்குள் குறைந்தது 50 பேராவது பார்த்து விமர்சனம் எழுதி விடுகிறார்கள், மற்ற மொழி படங்கள் அப்படி இல்லை, அதனால்தான் நான் எழுதும் விமர்சனங்கள் மற்ற மொழி படங்களை மட்டும் விமர்சிக்கின்றன.
இன்று நாம் பார்க்க இருக்கும் படம் “KAHAANI”. இந்த வார்த்தைக்கு அர்த்தம் எனக்கு தெரியவில்லை. தலைப்பா முக்கியம், நம்மள பொறுத்த வரைக்கும் வசனமே முக்கியம் இல்லை.

 அதாவது பார்த்திங்கனா நம்ம வித்யா பாலன் அதாங்க நம்ம ஊர் சில்க் ஸ்மிதா கேரக்டர்ல THE DIRTY PICTURE ல நடிச்சதே அந்த பொன்னுதான், உண்மைலேயே அழகான பொன்னுங்க, அதே நேரத்துல நல்லா நடிக்கவும் செய்யுது.கதைக்கு வருவோம்.
படத்தோட ஆரம்பத்துல ஒரு மெட்ரோ ட்ரேய்ன் ல ஒரு டெர்ரரிஸ்ட் கேஸ் பாம் போட்டு எல்லாரையும் கொல்றத காட்றாங்க, இந்த சீன்னுக்கும் க்ளைமாக்ஸ்க்கும் சம்பந்தம் இருக்கு, நல்லா பார்த்துக்கங்க,
ஒரு பொன்னு உண்மைலேயே கர்ப்பத்துலதான் அழகா தெரிவாங்கனு சொல்லுவாங்க, அந்த வகையில படம் ஆரம்பத்துல வித்யா ஏர்போர்ட்ல வந்து இறங்கும் போதே அழகா தெரியறாங்க, லண்டன் லருந்து நேரா கொல்கத்தா வந்து முதல் வேலையா போலிஸ் ஸ்டேசன் போய் ஒரு மாசத்துக்கு முன்னாடி இந்தியா வந்த தன்னோட புருசன்ன கானோம் நு கம்ப்ளெய்ன்ட் தராங்க, அந்த ஸ்டேசன்ல இருக்க ஒரு சப் இன்ஸ்பெக்டர் அவங்களுக்கு கூடவே இருந்து உதவி பன்றார். 
இதுல வித்யா தன்னோட வீட்டுக்காரர கண்டுபிடிக்க விடாம நிறைய பேர் தடுக்கறாங்க, போலிஸ்ல பல பெருந்தலைங்கலாம் தலையிடுது, இதுல தீவிரவாதிங்களும் சம்பந்த பட்றாங்க, இது எல்லாத்தையும் தாண்டி வித்யா தன்னோட வீட்டுக்காரர எப்படி கண்டு பிடிக்கிறாருங்கறதுதான் கதை.
தமிழ் படம் மாதிரி கதையோட ஒட்டாம காமெடி வச்சோ, ரசிகர்கள் கேட்கறாங்கனு குத்து பாட்டு வச்சோ, 20, 30 பேரை அடிக்கற மாதிரி ஃபைட் வச்சோ டைரக்டர் படத்தை நகர்த்தலை, கதைக்கு தேவை இல்லாம ஒரு சீன் கூட வைக்கலை, அதே மாதிரி கதைல வர ஒவ்வோரு கேரக்டரோட மென்டாலிட்டிய நாம பார்த்தாலே புரிஞ்சுக்கற மாதிரி ஆளுங்களை தேரிந்தெடுத்துருக்கார்.உதாரணத்துக்கு படத்துல வர காண்ட்ராக்ட் கில்லர்- அ பார்த்தா யாருக்கும் சந்தேகம் வர மாதிரி பன்னிருக்கார்.
 
எல்லா சீன்லயும் அழகா தெரியறது கொல்கத்தாவும் வித்யா பாலனும்தான், விதயா ஊருக்கு வரப்ப துர்கா பூஜைக்கு ஊரே தயாராகறதா சொல்லிட்டு துர்கா பூஜையன்னைக்கு கதைய முடிச்சுருக்காங்க,
கொல்கத்தால பாரம்பரியமா கட்டற வெள்ளை-சிகப்பு புடவைய கட்ட முயற்சி பன்னி அழும்போது நம்ம கண்லயும் மெதுவா ஈரம் எட்டி பார்க்குது. மசாலா படம் பார்த்து வெறுத்தவங்களுக்கு இந்த படம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்,
படத்துல எனக்கு நிறைய விசயம் பிடிச்சுருக்குங்க, 
 1. முதல் விசயம் எந்த மாஸ் ஹீரோவையும் நம்பாம படம் எடுத்தது
 2. க்ளாமர் கேர்ள்னு சொல்ற வித்யா பாலன் அ தைரியமா கர்ப்பினியா காட்டுனது
 3. முடிஞ்ச வரைக்கும் கொல்கத்தாவ அழகா காட்டுனது
 4. போலிஸ் ஸ்டேசன் அ அவ்ளோ இயல்பான இடமா நம்மள நம்ப வச்சது, முதல் முதலா வித்யா வந்தப்ப ஸ்டேசன்ல இருக்க எல்லா போலிஸிம் இங்கிலிஸ் ல பேச முயற்சி பன்னி முடியாம விட்டுட்றது
 5. வித்யா எல்லா குட்டி பசங்ககிட்டயும் அழகா பேசி ஃப்ரெண்ட் ஆகிடறது
 6. அது ஏன்னே தெரியலை, நம்ம ஹீரோ கொலை பன்னும் போது ஆண் கடவுள் யாரையாவது காட்றாங்களோ இல்லையோ ஹீரோயின்னுக்கு கோபம் வந்தாலே காளியம்மன காட்டிடறாங்க.ஆனாலும் நல்லாயிருந்தது.
 
படத்தை கண்டிப்பா பாருங்க, ஒரு அழகான பொன்னு ஒழுக்கமா நடிச்சுருக்கு, இதுக்காகவே பார்க்கனும். ஏற்கனவே படம் பார்த்தவங்க நான் ஏதாவது தப்பா சொல்லிருந்தா எனக்கு சுட்டிக் காட்டுங்க.
என்றும் அன்புடன் 
கதிரவன்.

தி புரோபசல்-சத்தமில்லாமல் பூக்கும் காதல்- திரை விமர்சனம்

அன்பு வாசகர்களே, நாளுக்கு நாள் எழுதுவதில் கொஞ்சமாவது கற்றுக் கொள்கிறேன் என்ற நம்பிக்கையுடன் இதோ நான் ரசித்த திரைப்படத்தினை பற்றிய விமர்சனம்….
விக்கிபிடியாவில் ரொமன்டிக் காமெடி ஃபிலிம் வரிசையில் சில படங்களை தேர்வு செய்து பார்த்துக் கொண்டிருக்கிறேன், இப்போதெல்லாம் ஆக்ஸன் படங்கள் என்னை ஈர்ப்பதில்லை.அந்த வகையில் சமிபத்தில் நான் ரசித்த படம் “தி புரோபசல்”
நாம் அனைவரும் வேலை பார்க்கும் இடத்தில் கண்டிப்பாக ஹிட்லர் என்று ஒருவருக்கு பெயர் வைத்திருப்போம். எல்லா அலுவலகங்களிலும் ஸ்ட்ரிக்டாக ஒருவர் இருப்பார்,அப்படி எல்லாராலும் “POISONOUS WITCH” என்று அழைக்க படுபவர்தான் ஹீரோயின் மார்க்கரேட்(சேன்ட்ரா பல்லாக்), அவருக்கு P.A வாக இருப்பவர்தான் ஹீரோ ஆண்ட்ரூ(ரியான் ரெனால்ட்ஸ்). படத்தின் ஆரம்பத்தில் மார்க்கரெட் எவ்வளவு கல் நெஞ்சக்காரி என்பதை ஒருவரை வேலையை விட்டு அனுப்பவதில் நமக்கு புரிய வைக்கிறார்கள், மார்க்கரேட்டுக்கு வீசா காலம் முடிவடைவதால் அவரை அரசாங்கம் திரும்ப கனடாவிற்கே போக சொல்கிறது. நம்ம ஊர் ‘நள தமயந்தி’ ஸ்டைலில் ஆண்ட்ரு வை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொண்டு பர்மனென்ட் சிட்டிசன் ஆகப் போவதாக அறிவிக்கிறார், அதிலிருந்து கதை சூடு பிடிக்கிறது. அந்த நேரத்தில் ஆண்ட்ருவின் முகம் போகிற போக்கை பார்க்கனுமே?
 பர்மனென்ட் சிட்டிசன் ஆவதற்கான விண்ணப்ப வேலைகளை முடித்துக் கொண்டு அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக ஆண்ட்ருவுடன் அவரது சொந்த ஊருக்கு செல்ல திட்டமிடுகிறார் நமது ஹீரோயின், இதில் மாட்டிக் கொண்டால் சிறைத்தண்டனை என்பதால் ஹீரோ மறுக்க அவரிடம் அவர் நீண்ட காலமாக எதிர்பார்க்கும் பதவி உயர்வை தருவதாக பேரம் பேச ஒருவழியாக டீல் ஓகே ஆகிறது, ஹீரோயினை மண்டி போட செய்து திருமணத்திற்கு சம்மதம் கேட்க சொல்லும்போதுதான் ஹீரோ உண்மையில் ஹீரோ ஆகிறார்.
ஹீரோவின் சொந்த ஊருக்கு போனால் தான் அவர் உண்மையில் பெரிய பணக்காரர் என்றும், அப்பாவோட தொழில் பிடிக்காமல் சண்டை போட்டுக்கொண்டு நியுயார்க்கில் வேலை பார்ப்பதும் தெரிகிறது. வந்திருக்கும் அனைத்து உறவினர்கள் மத்தியில் திருமணத்தை அறிவிக்க அவர்கள் கேட்கும் குறுக்கு கேள்விகளும் இவர்கள் சமாளிப்பதுமாக கதை நகர்கிறது, அவர்களின் திருப்திக்காக முத்தமிடும்போது ஒரு மாற்றத்தை இருவரும் உணர்கிறார்கள், இது மிக இயல்பான காட்சி, ஒரு முத்தம் சகலத்தையும் மாற்றி விடும்.
 இருவரும் ஒரே அறையில் தங்குவது, நாள் போக போக இருவரும் மனம் விட்டு பேச ஆரம்பிப்பது என்று மெலிதாக கதை நகர்கிறது, கொஞ்சம் கொஞ்சமாக இருவருக்குள்ளும் இருக்கும் இறுக்கம் தளர்கிறது, திடுக்கென்று வீட்டில் திருமணத்தை நாளைக்கேவைத்துக் கொள்ளலாம் எனும்போது மறுக்க முடியாமல் ஒத்துக் கொள்கிறார்கள்,
1) ஹீரோ வேறு பெண்ணுடன் பேசும் போது ஏற்படும் மெல்லிய பொறாமை
2) ஹீரோ குடும்பத்தின் நம்பிக்கையை தவறாக பயன் படுத்துவதாக உணரும் போது வரும் அழுகை


 ஒருக்கட்டத்திற்கு மேல் ஏமாற்ற விரும்பாமல் திருமணமேடையில் உண்மையை சொல்லி விட்டு ஊருக்கு கிளம்பி விடுகிறார் மார்க்கரேட், கிட்டத்தட்ட தமிழ் சீரியல் போல் இருந்தாலும், அந்த சீன் எனக்கு ரொம்ப பிடிச்சுருந்தது,


 கிளைமாக்ஸ் சுபம் தாங்க, அது எப்படிங்கறத நீங்க படத்தை பார்த்து தெரிஞ்சுக்கங்க,

 1. முதல்ல பார்க்கற எல்லாருக்கும் வெறுப்பு வர மாதிரி ஹீரரோயின்ன காட்டறது, அதுக்குனு தனி மேனரிசம் ட்ரெஸ்ஸிங்னு பார்த்து பார்த்து செஞ்சுருக்காங்க.
 2. ஹீரோயின் தன்னோட ஃப்ளாஸ்பேக் அ சொல்ற இடம், ரொம்ப சின்ன சீன் தான் , ஆனா நல்லாருக்கும்.
 3. போட் ல போகும் போது ஆக்சிடென்ட் ஆ தண்ணீர்ல விழுந்த ஹீரோயின் அ ஹீரோ காப்பாத்தும் போது அந்த ஈரத்தோட ஈரமா அழறது,
 4. ஹீரோவோட பாட்டி க்ளைமாக்ஸ் ல நெஞ்சு வலி நு நடிச்சு ஹீரோவ  ஹீரோயின்கிட்ட ப்ரோபோஸ் பண்ண அனுப்பறது
 5. ரொம்ப ரொம்ப பிடிச்ச சீன், ப்ரோபோஸ் பன்னும் போது எப்ப நமக்குள்ள லவ் வர ஆரம்பிச்சதுனு ஹிரோ வரிசையா சொல்றது

படம் தனியா பார்க்கும் போது எல்லாருக்கும் பிடிக்குங்க,

சரி என் பதிவ படிக்கற யாரும் கமெண்ட் பண்ண மாட்டெங்கறிங்களே ஏன்?

பாராட்டியோ திட்டியோ ஏதாவது கமெண்ட் பன்னுங்க ப்ளிஸ்.

என் பதிவு கடைசி வரைக்கும் படிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க

கலர்புல் லவ் ஸ்டோரி ‘BACHNA AE HASEENO’ விமர்சனம்

அன்புள்ள நண்பர்களுக்கு, ஏதோ கடிதம் எழுதுவது போலத்தான் துவங்க வருகிறது, இன்னும் பயிற்சி தேவையோ? சரி விசயத்துக்கு வருவோம், மறுபடியும் விமர்சனம் தாங்க, என்னமோ தெரியல நான் விமர்சனம் எழுதனும் நினைக்கற படத்துல வர ஹீரோ பொம்பளை பொறுக்கியா தாங்க வரான், அதுவுமில்ல்லாம எனக்கும் இது மாதிரி படம்தான் பிடிச்சு தொலையுது.
படத்தோட பேர் “BACHNA AE HASEENO” அப்படினா என்ன அர்த்தம் னு கேட்காதிங்க, சத்தியமா எனக்கு தெரியாது. இந்த ஹீரோ, டைரக்டரோட இன்னோரு படம் “ANJAANA ANJAANI” பார்த்தேன், பிடிச்சுருந்தது, அத பத்தி அடுத்த பதிவு ல எழுதறேன்.முதல்ல இத பார்ப்போம்.
படத்துல எனக்கு பிடிச்ச முதல் விசயம் 3 ஹீரோயின்,  இந்த ஒரு காரணம் போதாதா எனக்கு முழு படமும் பார்க்க, நம்ம ஊர் “நான் அவன் இல்லை” மாதிரி படத்தோட ஆரம்பத்திலேயே 3 ஹீரோயின் கூடவும் சேர்ந்து ஒரு பாட்டு வச்சுட்டாங்க,
 எனக்கு 3 பேரையுமே பிடிச்சுருக்குங்க, அடுத்ஹு ஹீரோ கதை சொல்ல ஆரம்பிக்கிறார், முதல்ல அவர் ஆட்டோகிராஃப் போட்டது 1996 ல, ஒரு ஃபாரின் ட்ரிப் ல ட்ரேய்ன் ல கியூட் ஆ ஒரு பொண்ண மீட் பன்றார், அடுத்து ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து எப்படி அதை கரெக்ட் பன்றதுனு பிளான் போட்றார், இதுல இவங்களுக்கு ஒரு கொள்கை, கடைசி வரைக்கும் எந்த பொன்னையும் கல்யாணம் பன்னாம சும்மா கரேக்ட் மட்டும் பன்னிட்டு கழட்டி விட்டுடனும்னு, அவருக்கு அதிர்ஸ்டம் அடிக்குது.
 ஹீரோவும் ஹீர்ரொயினும் சேர்ந்தாப்ல ட்ரேய்ன் அ மிஸ் பன்னிடறாங்க, இந்த ஹீரோயின் பத்தி சொல்ல மறந்துட்டனே, இவங்களுக்கும் ஒரு லட்சியம் இருக்கு, “dhilwae dhulhania lee jaainge” படத்துல வர ஷாருக் மாதிரி ஒரு கேரக்டர் அ கண்டுபிடிச்சு லவ் பண்ணி கல்யாணம் பன்னனும்னு, இந்த மாதிரி ஒரு ஃபிகருக்கு இப்படி ஒரு லட்சியம் இருக்குனு தெரிஞ்சா எந்த பையங்க சும்மா இருப்பான், ஹீரோ அவனால முடிஞ்ச எல்லாத்தையும் செஞ்சு மடக்கி ஒரு லிப் கிஸ்ஸும் அடிச்சுர்ரார்,
 அடுத்த நாள் ஏர்போர்ட் ல அவர் ஃப்ரெண்ட் கிட்ட எல்லாத்தையும் ஷேர் பன்னும் போது பாத்துடற ஹீரோயினுக்கு ஹீரோ தன்னை உண்மையா லவ் பண்ணலைங்கறது தெரிஞ்சு அழுதுகிட்டே பிரிஞ்சு போயிடறாங்க பாவம்.
அடுத்த ஆட்டோகிராஃப் 2002, மும்பை ல, ஒரு பெரிய சாஃப்ட்வேர் கம்பெனி ல வேலை கிடைச்சு செட்டில் ஆகி புது ஃப்ளாட்க்கு குடி வர நம்ம ஹீரோக்கு ஒரு இன்ப அதிர்ச்சி, நமக்குளாம் பக்கத்து வீட்டுக்கு சம்மர் லீவ்க்கு சுமாரா ஒரு பொன்னு 2 மாசம் வந்து தங்கனாளே தாங்காது, இருக்கறதுலயே நல்ல துணியா போட்டு கரெக்ட் பண்ண பார்ப்போம், நம்மஹீரோக்கு பக்கத்து வீட்ல கும்முனு ‘பிபாஷா பாசு’ தனியா தங்கி இருக்கறது தெரிஞ்சா சும்மா இருக்க முடியுமா?
 வழக்கம் போலதான் சின்ன வீடு பாக்யராஜ் மாதிரி ‘நதுர்தனா தினனா நா’ னு தீம் மியுசிக் போட்டு அதையும் கரெக்ட் பண்ணி 1 வருசம் ஒண்ணா ஒரே வீட்ல ‘GET TOGETHER’ ஆ இருக்கற அளவுக்கு கொண்டு வந்துடறார்.
 இப்பதான் கதைல ட்விஸ்ட், ஹீரோக்கு சிட்னி ல பெரிய வேலை கிடைக்குது, கழட்டி விட்டுடலாம்னு நம்பிகிட்டு இருந்த காதலி கல்யாணத்த பத்தி பேச ஆரம்பிக்கறா, அதுல இருந்து தப்பிக்க என்னென்னமோ ட்ரை பன்னி, முடியாம கல்யாணத்தன்னைக்கு ஃப்ளைட் ஏறி சிட்னிக்கு ஓடி வந்துடறார்.
வழக்கம் போல தினம் ஒரு ஃபிகர் அ கரெக்ட் பண்ணி ஜாலியா சுத்திட்டு இருக்கறவர் கண்ல எதெச்சையா படறாங்க நம்ம தீபிகா படுகோன்(ஓம் சாந்தி ஓம்) டெய்லி நைட் டாக்சி ஓட்டி அதுல MBA படிக்கற நம்ம அம்மணி கொஞம் கொஞ்சமா நம்ம ஹீரோவோட மனச திருடிறாங்க, 
 இவ்வளவு அம்சமான ஃபிகர் வந்தா யார்தான் கவுறாம இருப்பாங்க, வழக்கம் போல நம்ம ஹீரோ மண்டி போட்டு கல்யாணம் பன்னிக்க கெஞ்சுரார்.
 தீபிகாவுக்கு கல்யாணத்துல நம்பிக்கை இல்லைனு சொல்லிடறாங்க, மனசு வெறுத்து போன நம்ம ஹீரோ ‘ஆகா நமக்கு வலிக்கற மாதிரிதானே நாம கழட்டி விட்ட ஃபிகருங்களுக்கும் வலிச்சுருக்கும்’-னு புத்தி தெளிஞ்சு புதுசா ஒரு விசயம் பன்றார், நம்ம சேரன் போய் பழைய லவ்வர்ஸ்க்கு பத்திரிக்கை வச்ச மாதிரி, இவர் முன்னாள் காதலிங்ககிட்ட மன்னிப்பு கேட்க போறார்.
முத்ல்ல கழட்டி விட்ட பஞ்சாப் காதலிக்கு கல்யாணம் ஆகி 2 பசங்க இருக்காங்க, போய் அவ புருசன்கிட்டயே தான் யார்னு சொல்லி வாங்கி கட்டிக்கறார், ஒரு பெரிய கல்யாண வீட்ல எல்லாரையும் மீறி யாருக்கும் தெரியாம எப்படி மன்னிப்பு கேட்டு வர்ரார்னு நீங்க படத்த பார்த்து தெரிஞ்சுக்கங்க,
 முதல் பஞ்சாயத்து முடிஞ்சு போனா கல்யாணத்தன்னைக்கு கழட்டி விட்டு போன பிபாஷா இப்ப நெ.1 சினிமா ஸ்டார்,
 அவங்களை மீட் பன்னி, மனச மாத்தி மன்னிக்க வைக்கறதுக்கு ரொம்ப கஷ்ட படறார்,
பிபாஷா பன்ற அலம்பலுக்கு நானா இருந்தா சரிதான் போடினு சொல்லிட்டு வந்துருப்பேன். அவ்வளவு கொடுமை, பாவம் ஹீரோ.
 எப்படி பிபாஷாகிட்டயும் மன்னிப்பு வாங்கிட்டு ரிட்டர்ன் வந்து தீபிகாவ கைப்பிடிச்சு லிப் கிஸ் அடிக்கறைங்கறதுதான் கிளைமாக்ஸ், படம் நல்லா கலர்ஃபுல்லா ஜில்லுன்னு இருக்கு
எனக்கு மன்னிப்ப பத்தி பேசிக்கற சீன் ரொம்ப பிடிச்சுருக்கு, படத்துல வர லிப் கிஸ் பிடிச்சுருக்கு, எதை எதையோ இந்த படம் என்னை யோசிக்க வச்சது, கொஞ்சம் பழைய படம்தான், பாருங்க நல்லருக்கும்.
கமெண்ட் பிளிஸ்

GHOST OF GIRLFRIENDS PAST (2009) – விமர்சனம்

உங்ககிட்ட மறைச்சு என்ன ஆகப்போகுது? title அ வர girlfriend ங்கற வார்த்தைய நம்பிதான் படம் பார்க்க ஆரம்பிச்சேன். உண்மையிலேயே எதுக்கும் குறை வைக்க, கருத்தாழமிக்க அசைவ படம். கருத்து என்னன்னா நம்மூர் பக்கம் சொல்றதுதான், நல்ல பொண்ண அழ வைக்கறவனுக்கு நல்ல சாவே வராதுங்கறதுதான், இந்த கான்செப்ட் அ வச்சு எப்படி ஃபேண்டசியா படம் எடுத்துருக்காங்கங்கறதுலதான் விசயமே! 

இப்ப கதைக்கு வருவோம். படத்தோட டைட்டில் போடும் போதே ஹீரோ ஒரு மன்மதன் னு நமக்கு புரிய வச்சுட்றாங்க, அவர் ஒரு போட்டோகிராபர், அவருக்குனு ஒரு கொள்கை இருக்கு, ஆம்பளைங்களை போட்டோ எடுக்க மாட்டார். முழுசா டிரஸ் பன்னிருக்க பொண்ணுங்களையும் எடுக்க மாட்டார், வேற எப்படி எடுப்பார்னு கீழ இருக்கு படத்த பார்த்தா உங்களுக்கே புரியும்
என்ன மாதிரி கிரியேட்டிவிட்டி பார்த்திங்களா? ஆனா இந்த ஒரே ஷாட் ல அந்த பொண்ணு எப்படி மடங்குனுச்சுனு டைரக்டர் சொல்லவே இல்லை?
 அடுத்த சீன் பெட் ரூம் தான், அது என்னமோ நம்மூர் பசங்க அவ்வளவு விவரம் இல்லைனுதான் சொல்லனும். அடுத்து ஒரே டைம்ல 3 ஃபிகருங்களை நெட்ல கழட்டி விட்றாரு, டைம் சேவ் பன்றாராம்,
இதுக்கு அப்புறம்தாங்க கதையே ஆரம்பிக்குது, ஹீரோக்கு இருக்க ஒரே ஒரு தம்பிக்கு கல்யாணம்னு கிளம்பி போறார், அங்கயும் ஏகப்பட்ட பொன்னுங்க, ஹ்ம்ம்ம் நம்ம பசங்க கல்யாணத்துக்கு போறதே அதுக்கு தானே, என்ன மாதிரி மன்மதனா இருந்தாலும் அவருக்குனு ஒரு உண்மையான காதலி இருப்பாங்கற லாஜிக் ல நம்ம ஹீரோ வும் சிக்கிட்றார், அந்த உண்மையான காதலியும் கல்யாணத்துக்கு வந்துருக்காங்க, அப்பப்ப ஹீரோவ குத்தி காட்றாங்க, இந்த கல்யாணம் காது குத்தறதுனு எந்த சம்பிரதாயத்துலயும் நம்பிக்கை இல்லாத நம்ம ஹீரோ கைல சரக்கோட பாத்ரூம் பக்கம் ஒதுங்க, அங்க இவருக்கு எல்லா மன்மத கலையையும் கத்துக் குடுத்த அவரோட அங்கிள்(கதைப்படி ஏற்கனவே செத்தவர்) ஆவியா வர்ரார்.
வந்தவர் சும்மா இல்லாம “உன்னை நான் கெடுத்துட்டேன், உனக்கு கெட்டத மட்டும் சொல்லி குடுத்து உன் வாழ்க்கைய நாசமாக்கிட்டேன்” னு புலம்பவும் இதெல்லாம் கிளைமாக்ஸ் ல வர டயலாக் ஆச்சே, இப்பவே வருதே னு நானும் குழம்பிட்டேன், அப்புறமா சொல்றாரு ” நீ பன்றது தப்புனு உனக்கு புரிய வைக்க இன்னைக்கு ராத்திரி 3 பொன்னுங்களோட ஆவிய நீ சந்திப்ப”னு சொல்லிட்டு எஸ் ஆயிட்றார், அதுக்கு அப்புறம் படம் ஒரு டைரிய படிக்கற மாதிரி போகுது.
முதல்ல வர ஆவி ஹீரோவ அவரோட கடந்த காலத்துக்கு கூட்டி போகுது, அங்க அவரோட அந்த சின்ன வயசு காதல், அவர் ஏன் ப்ளே பாய் ஆ மாறுராருனு காட்றாங்க, எனக்கு அந்த சின்ன வயசு லவ் பிடிச்சுருக்குங்க
 இதோ கீழ படத்துல கைய மடக்கி காட்டி ஏதோ நாட்டுக்காக ஆர்மில சேரனும் னு ரேஞ்சுக்கு பில்டப் குடுத்துட்டு இருக்கறவர்தான் நம்ம ஹீரோக்கு ஆய கலைகள் 64யும் கத்து தர பெரிய மனுசன்
படத்துல எனக்கு மிகவும் பிடித்தது, ஹீரோவோட உண்மையான காதல் வரும் காட்சி தான், அதுலயும் கலவிக்கு பின் நாயகன் படுக்கையில் இருந்து எழுந்து கிளம்பும் போது நாயகி “உலகத்துல 2 விதமான் பொண்ணுங்க, ஒன்னு நீ முடிச்சதும் கிளம்பற டைப், இன்னோன்னு அவன் கூட கட்டி பிடிச்சு தூங்கற டைப், நான் 2 வது ரகம், நீ 3 செகன்ட் ல வந்து என் பக்கத்துல படுக்கலனா இனி என்ன பார்க்கவே வரக்கூடாது” சொல்ற காட்சி எனக்கு ரொம்ப பிடிக்கும். காதலும் கலவியும் கலந்திருக்கும்.
அடுத்து ஒரு சீன்ல ஹீரோ கரெக்ட் பன்னி கழட்டி விட்ட பெண்களை ஒரே சீன் ல காட்றதும் அந்த பெண்களோட கண்ணீர் னு மழைய காட்றதும் நச்
அப்புறம் 2 வதா வர ஆவி நிகழ் காலத்துல ஹீரோ இல்லாத டைம் ல மத்தவங்க அவரை பத்தி என்ன பேசறாங்கனு கூட்டி போய் காட்டுது, அடுத்து வர கடைசி ஆவி இப்படியே ஊருக்கு அடங்காம பொலிகாளையாட்டம் திரிஞ்சா நல்ல சாவு வராதுனு உணர வைக்குது,இதெல்லாம் புரிஞ்சு ஹீரோ மனசு மாறருதுக்குள்ள அவரோட தம்பி கல்யாணம் நின்னு போய்டுது, அதுக்கு காரணமும் நம்ம ஓட்டவாய் ஹீரோதான், பெருசா ஒன்னுமில்லிங்க, கல்யாண மாப்பிள்ளை , பொண்ணோட friend ஒருத்தி கூட ஒரு நாள் தங்கி இருந்தத மப்புல உளறிடறார்,திருந்தி இருக்க நம்ம ஹீரோ எப்படி தன்னால நின்ன தம்பி கல்யாணத்த நடத்தறாரு?கழட்டி விட்ட ஹீரோயின எப்படி திரும்ப கரேக்ட் பன்றாருங்கறதுதான் கிளைமாக்ஸ்.

கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் எல்லாம் இல்லை, பார்க்க நன்றாக இருக்கும் படம்.