அருளே துணை – குறளுரை

யார்னே தெரியாதவர் கூட சுவாரசியமா பேசுன அனுபவம் இருக்கா? குடும்ப உறுப்பினர்களை தவிர்த்து எல்லோர் கூடவும் முதல்ல அப்படி பேசித்தான் பழக ஆரம்பிச்சுருப்போம். அதை கேட்கலை. ஒருத்தர் கூட பேச போறிங்க. அவரை பத்தின விவரங்களை கேட்டுக்க போறதில்லை. உங்களோட விவரங்களையும் பகிர்ந்துக்க போறதில்லை. ஏன் பேர் கூட சொல்ல போறதில்லை. இருந்தும் பேசறிங்க. எந்தெந்த இடத்துல இப்படி பேசுவோம்? அதிகம் வரிசைல நிக்கற இடங்கள்ல இது நடக்கும். ரேசனுக்கோ, ஏடிஎம்க்கோ நிற்கும் போது நேரத்தை கொல்றதுக்கு வேற வழி இல்லாதப்ப பேச ஆரம்பிப்போம். அவரும் அதே எண்ணத்துல இருந்தா அரட்டை அரங்கம் தான். எல்லோர்க்குமே இப்படி கூச்சமில்லாம புது மனுசங்களோட பேச வராது. அவங்க என்ன பன்னுவாங்க? கையோட ஒரு ஆளை துணைக்குனு கூட்டிட்டு போயிருவாங்க. துணைன்னா என்ன துணை? பேச்சுத்துணை. Continue reading “அருளே துணை – குறளுரை”

Labor Day (2013) – விமர்சனம்

மனிதர்கள் எப்பொழுதும் இயற்கை படைத்த படைப்புகளின் உன்னதமான மகத்துவத்தை முழுவதுமாக புரிந்துக் கொள்வதில்லை. அதற்கு சிறந்த உதாரணமாக பெண்களை சொல்லலாம். இந்த ஆண்கள் உலகத்தில் பெண்களுக்கான இடம் மிகக்குறைவு. அவர்களின் உணர்வுகளை கேட்பதற்கு கூட ஆட்கள் இல்லை. வெறுமனே புனிதப்படுத்தி அவர்களை அடைத்து வைப்பதில் அளவில்லா ஆனந்தம். அதிலும் உச்சக்கட்டம் இந்த தாய்ப்பாசம் தான். தாய் என்ற வார்த்தையை கேட்டாலே புனிதபிம்பம் தான் எனும் அளவிற்கு இருக்கும். அவளும் பெண்தானே? அவளுக்கும் நமக்கு இருக்கும் அனைத்து உணர்வுகளும் இருக்கும் தானே? ஆனால் அதை நாம் அனுமதிக்கிறோமா? கணவனை இழந்தோ பிரிந்தோ பிள்ளைகளுடன் வாழும் பெண்களுடைய உணர்வுகளை நினைத்து பாருங்கள். அவர்களுக்கான கடமைகளாக சமூகம் என்ன வரையறுத்துள்ளது? இதை பேசினால் தீராது. படத்திற்கு வருவோம்.

http://www.entertainmentwallpaper.com/images/res1920x1080/movie/labor-day01.jpg Continue reading “Labor Day (2013) – விமர்சனம்”

திட்டு ஸ்ரீ திட்டு – சிறுகதை

என்னடா?

ம்

ஏன் ஒரு மாதிரி இருக்க?

அது…

சொல்லுடா

ஸ்ரீமதி இருக்கா இல்லை?

யாரு, உன் லவ்வரோட இருக்குமே அந்த பொண்ணா?

ஆமா

அவளுக்கென்ன?

அவ என்னை லவ் பன்றாளாம் Continue reading “திட்டு ஸ்ரீ திட்டு – சிறுகதை”

அதிகாரம் 022 – ஒப்புரவறிதல்

குறள்: 211/1330

குமார், நாளைக்கு ரிவ்யூ மீட்டிங்க்கு பிரசன்டேஷன் ரெடி பண்ணியாச்சா?

ஆகிட்டுருக்கு சார், முடிஞ்சுரும்

லேட்டானாலும் கொஞ்சம் சிரமம் பார்க்காம முடிச்சுட்டு போயிருங்க

கண்டிப்பா சார்

இப்படி ஒவ்வொரு அலுவலகத்திலும் ஒரு அதிகாரி தன்னுடைய வேலையை தன் கீழ் வேலை பார்ப்போர் தலையில் கட்ட, அவர்களும் பின்னாடி ஏதேனும் செய்வார் என்ற நம்பிக்கையில் உதவி செய்வதாக நினைத்துக் கொண்டு செய்வார்கள்.

இன்னும் சிலர் அதிகாரிகள் கேட்காவிடிலும் தானாக சென்று செய்து தந்து ஜால்ரா அடிப்பார்கள். அவர்களது எதிர்பார்ப்பும் மேலதிகாரியின் குட்புக்கில் இருந்தால் இன்க்ரிமென்ட், புரமோஷனுக்கு உதவும் என்பதாகத்தான் இருக்கும்.

இது போன்ற நாம் செய்யும் உதவிக்கு பதிலாக ஒரு உதவி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதற்கு பெயர்தான் கைமாறு.

இன்னார்க்கு உதவி செய்வதால் நமக்கு எந்த பயனும் இல்லை, காலத்திற்கும் அவர் திருப்பி எதுவும் செய்ய வாய்ப்பில்லை என இருந்தால், நாம் உதவி செய்வோமா? அப்படி செய்ததுண்டா?

உதவி பெற்றவன் ஏமாற்றிவிட்டான், அதற்கான பிரதிபலனே எனக்கு இனி கிட்டாது. அவற்றை சொல்லலாமா? என கேட்காதீர்கள். நீங்கள் உதவி செய்யும் பொழுதே பிரதிபலனை எதிர்பாராமல் செய்திருக்க வேண்டும்.

எனக்கு தெரிந்து இதற்கு சரியான உதாரணம் மேகங்கள் தரும் மழைதான். அவை தரும் தண்ணீர் இல்லையேல் உயிரினங்கள் வாழ வழியேயில்லை என்ற பொழுதிலும், பதிலுக்கு அவை உயிர்களிடத்தில் எதையும் எதிர்பார்ப்பதில்லை. மனிதர்களும் மற்றவர்களுக்கு உதவும் பொழுது அப்படித்தான் கைம்மாறு எதுவும் எதிர்பார்க்காமல் உதவ வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றும் கொல்லோ வுலகு

Continue reading “அதிகாரம் 022 – ஒப்புரவறிதல்”

முதல் முத்தம் – சிறுகதை

“என்னம்மா சொல்ற? ஹனிமூன் போரடிக்குதா?” உண்மையில் அதிர்ந்துவிட்டான் அருண். பின் யாரால் தான் அதிராமல் இருக்க முடியும்? திருமணமாகி ஒரு வாரம்தான் ஆகியுள்ளது. வீட்டில் பார்த்து செய்து வைத்த திருமணம் தான். தூரத்து உறவு என சொன்னார்கள். இருவருக்கும் சரியான வயது, சரியான வேலை, கைநிறைய சம்பளம், திருமண பேச்சை எடுத்து 2 மாதங்களுக்குள் தாலியே கட்டி முடிந்தாகி விட்டது. அவ்வளவு விரைவாக அனைத்தும் முடிந்திருந்தது. பார்த்த முதல் பெண்ணே அமையும் கொடுப்பினை அனைவருக்கும் அமையாது. அருணுக்கு அமைந்தது. உண்மையில் அருணுக்கு ஸ்ரீமதியிடம் பிடித்தது அவளது குழந்தைத்தனமான முகம் தான். பெண் பார்த்த அடுத்த நாளே நிச்சயம், 45 நாளில் திருமணம். அதிகம் சுற்ற முடியவில்லை என்றாலும் இருவரும் இடைப்பட்ட காலத்தில் பேசிக் கொண்டு தான் இருந்தார்கள்.

திருமணம் முடிந்து தேனிலவு என்ற பேச்சு வரும் பொழுது, யாரும் ஒத்துக்கொள்ளவில்லை. அந்த கலாச்சாரம் இன்னும் அவர்கள் குடும்பத்திற்குள் நுழையாமல் இருந்தது. தனியாய் அனுப்பவும் தயங்கினார்கள். அதனால் தொலைவாக வேண்டாமென்று பக்கத்தில் சொந்தபந்தங்கள் இருக்கும் ஊரான ஊட்டிக்கு அனுப்பினார்கள். முதல் இரண்டு நாள் சுற்றவும் கொண்டாடவும் நன்றாகத்தான் போனது. மூன்றாவது நாள்தான் ஸ்ரீமதி முகம் வாடிப்போய் இருந்தது. ஏன் இப்படி இருக்க என கேட்டதற்குத்தான் இந்த பதில். ஹனிமூன் போரடிக்கிறது என்றால் அவன் எப்படி எடுத்துக் கொள்வான், பாவம்.

Image result for pizza film

Continue reading “முதல் முத்தம் – சிறுகதை”

யாக்கை பொறுத்த நிலம் – குறளுரை

அதிகாரம்: புகழ் குறள் எண்:239
வசைஇலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்

உரை:
புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும். Continue reading “யாக்கை பொறுத்த நிலம் – குறளுரை”

பொச்சாந்தார் – குறள்கதை

மனுசனை போட்டு உழப்பி எடுக்கறாங்கடா

டேய் இருடா, சாப்பிட உட்கார்ந்ததும் ஆரம்பிக்கற, என்ன வீட்ல செம அடியா?

வீட்டு பிரச்சனையே தேவலை, ரெண்டு நாள் கொஞ்சிட்டு, ஒருநாள் சண்டை போடறாங்க. அது பிரச்சனை இல்லை

பின்ன ஆஃபிஸ்லயா? இல்லையே, உன்னை விட அதிகமா திட்டு வாங்கற நானே புலம்பறது இல்லையே

அய்யய்ய, மச்சி என்னை பேச விடறா? இப்ப நான் புலம்பறன்னா அதுக்கு பிரச்சனைதான் காரணமா இருக்கனுமா? ஏன் குழப்பமா இருக்க கூடாதா?

என்ன குழப்பம்?

எப்படி வாழ்றதுன்னுதான் Continue reading “பொச்சாந்தார் – குறள்கதை”

இசையென்னும் எச்சம் – குறளுரை

எந்த ஒரு விஷயத்துலயும் மூனு இடம் இருக்கு. பாசிட்டிவ், நெகட்டிவ், நியுட்ரல் அதாவது நடுநிலைமை. இப்போ அரசியல்னு எடுத்துக்கங்க, ஆளுங்கட்சி, எதிர்கட்சி இல்லை நடுநிலை. ஒரு கிரிக்கெட் மேட்ச்னு எடுத்துகிட்டா ரெண்டு டீம்ல ஒண்ணு இல்லை பொதுவா விளையாட்டை இரசிக்கறவங்க. எல்லா நேரத்துலயும் நடுநலைல நின்னு சமாளிக்க முடியாது. சந்தானம் காமெடி மாதிரிதான் ஒன்னு தலன்னு வை, இல்லை தளபதின்னு வை, அது என்ன தல தளபதின்னு வச்சுருக்க?ன்னு அடிவிழற இடமும் இருக்கு. Continue reading “இசையென்னும் எச்சம் – குறளுரை”

புகழ்பட வாழாதார் – குறளுரை

ஒரு விளையாட்டுல ஜெயிக்கலாம், இல்லை தோற்கலாம், வெறுமனே வேடிக்கை மட்டும் பார்க்கக்கூடாதுன்னு சொல்லுவாங்க, அதெல்லாம் முன்ன? இப்ப அதெல்லாம் ஒத்து வருமா? சொல்லுங்க, இப்ப பார்க்கறதுக்கு யாரும் இல்லைன்னா யாராவது விளையாடுவாங்களா? இப்ப கிரிக்கெட் தவிர மத்த விளையாட்டுங்க விழுந்துட்டு இருக்கறதுக்கும் முக்கிய காரணம் பார்வையாளர்கள் குறைஞ்சுட்டு இருக்கறதுதானே. அதனால நானாவது விளையாண்டேன் நீ சும்மா வேடிக்கை மட்டும் தானே பார்த்தன்னு யாரையும் சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது. Continue reading “புகழ்பட வாழாதார் – குறளுரை”

இரப்பார்க்கே ஈதல் – குறள்கதை

ஹலோ கார்த்தி

சொல்லுடா

மச்சான் கொஞ்சம் அர்ஜென்ட், அவசரமா ஒரு 3000 எனக்கு டிரான்ஸ்பர் பன்னுடா, சேலரி போட்டதும் திருப்பி கொடுத்துடறேன்

சரிடா, அனுப்பறேன்
என்று சொன்ன கார்த்திக்கிற்கு சுரத்தேயில்லை. Continue reading “இரப்பார்க்கே ஈதல் – குறள்கதை”