தி புரோபசல்-சத்தமில்லாமல் பூக்கும் காதல்- திரை விமர்சனம்

அன்பு வாசகர்களே, நாளுக்கு நாள் எழுதுவதில் கொஞ்சமாவது கற்றுக் கொள்கிறேன் என்ற நம்பிக்கையுடன் இதோ நான் ரசித்த திரைப்படத்தினை பற்றிய விமர்சனம்….
விக்கிபிடியாவில் ரொமன்டிக் காமெடி ஃபிலிம் வரிசையில் சில படங்களை தேர்வு செய்து பார்த்துக் கொண்டிருக்கிறேன், இப்போதெல்லாம் ஆக்ஸன் படங்கள் என்னை ஈர்ப்பதில்லை.அந்த வகையில் சமிபத்தில் நான் ரசித்த படம் “தி புரோபசல்”
நாம் அனைவரும் வேலை பார்க்கும் இடத்தில் கண்டிப்பாக ஹிட்லர் என்று ஒருவருக்கு பெயர் வைத்திருப்போம். எல்லா அலுவலகங்களிலும் ஸ்ட்ரிக்டாக ஒருவர் இருப்பார்,அப்படி எல்லாராலும் “POISONOUS WITCH” என்று அழைக்க படுபவர்தான் ஹீரோயின் மார்க்கரேட்(சேன்ட்ரா பல்லாக்), அவருக்கு P.A வாக இருப்பவர்தான் ஹீரோ ஆண்ட்ரூ(ரியான் ரெனால்ட்ஸ்). படத்தின் ஆரம்பத்தில் மார்க்கரெட் எவ்வளவு கல் நெஞ்சக்காரி என்பதை ஒருவரை வேலையை விட்டு அனுப்பவதில் நமக்கு புரிய வைக்கிறார்கள், மார்க்கரேட்டுக்கு வீசா காலம் முடிவடைவதால் அவரை அரசாங்கம் திரும்ப கனடாவிற்கே போக சொல்கிறது. நம்ம ஊர் ‘நள தமயந்தி’ ஸ்டைலில் ஆண்ட்ரு வை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொண்டு பர்மனென்ட் சிட்டிசன் ஆகப் போவதாக அறிவிக்கிறார், அதிலிருந்து கதை சூடு பிடிக்கிறது. அந்த நேரத்தில் ஆண்ட்ருவின் முகம் போகிற போக்கை பார்க்கனுமே?
 பர்மனென்ட் சிட்டிசன் ஆவதற்கான விண்ணப்ப வேலைகளை முடித்துக் கொண்டு அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக ஆண்ட்ருவுடன் அவரது சொந்த ஊருக்கு செல்ல திட்டமிடுகிறார் நமது ஹீரோயின், இதில் மாட்டிக் கொண்டால் சிறைத்தண்டனை என்பதால் ஹீரோ மறுக்க அவரிடம் அவர் நீண்ட காலமாக எதிர்பார்க்கும் பதவி உயர்வை தருவதாக பேரம் பேச ஒருவழியாக டீல் ஓகே ஆகிறது, ஹீரோயினை மண்டி போட செய்து திருமணத்திற்கு சம்மதம் கேட்க சொல்லும்போதுதான் ஹீரோ உண்மையில் ஹீரோ ஆகிறார்.
ஹீரோவின் சொந்த ஊருக்கு போனால் தான் அவர் உண்மையில் பெரிய பணக்காரர் என்றும், அப்பாவோட தொழில் பிடிக்காமல் சண்டை போட்டுக்கொண்டு நியுயார்க்கில் வேலை பார்ப்பதும் தெரிகிறது. வந்திருக்கும் அனைத்து உறவினர்கள் மத்தியில் திருமணத்தை அறிவிக்க அவர்கள் கேட்கும் குறுக்கு கேள்விகளும் இவர்கள் சமாளிப்பதுமாக கதை நகர்கிறது, அவர்களின் திருப்திக்காக முத்தமிடும்போது ஒரு மாற்றத்தை இருவரும் உணர்கிறார்கள், இது மிக இயல்பான காட்சி, ஒரு முத்தம் சகலத்தையும் மாற்றி விடும்.
 இருவரும் ஒரே அறையில் தங்குவது, நாள் போக போக இருவரும் மனம் விட்டு பேச ஆரம்பிப்பது என்று மெலிதாக கதை நகர்கிறது, கொஞ்சம் கொஞ்சமாக இருவருக்குள்ளும் இருக்கும் இறுக்கம் தளர்கிறது, திடுக்கென்று வீட்டில் திருமணத்தை நாளைக்கேவைத்துக் கொள்ளலாம் எனும்போது மறுக்க முடியாமல் ஒத்துக் கொள்கிறார்கள்,
1) ஹீரோ வேறு பெண்ணுடன் பேசும் போது ஏற்படும் மெல்லிய பொறாமை
2) ஹீரோ குடும்பத்தின் நம்பிக்கையை தவறாக பயன் படுத்துவதாக உணரும் போது வரும் அழுகை


 ஒருக்கட்டத்திற்கு மேல் ஏமாற்ற விரும்பாமல் திருமணமேடையில் உண்மையை சொல்லி விட்டு ஊருக்கு கிளம்பி விடுகிறார் மார்க்கரேட், கிட்டத்தட்ட தமிழ் சீரியல் போல் இருந்தாலும், அந்த சீன் எனக்கு ரொம்ப பிடிச்சுருந்தது,


 கிளைமாக்ஸ் சுபம் தாங்க, அது எப்படிங்கறத நீங்க படத்தை பார்த்து தெரிஞ்சுக்கங்க,

  1. முதல்ல பார்க்கற எல்லாருக்கும் வெறுப்பு வர மாதிரி ஹீரரோயின்ன காட்டறது, அதுக்குனு தனி மேனரிசம் ட்ரெஸ்ஸிங்னு பார்த்து பார்த்து செஞ்சுருக்காங்க.
  2. ஹீரோயின் தன்னோட ஃப்ளாஸ்பேக் அ சொல்ற இடம், ரொம்ப சின்ன சீன் தான் , ஆனா நல்லாருக்கும்.
  3. போட் ல போகும் போது ஆக்சிடென்ட் ஆ தண்ணீர்ல விழுந்த ஹீரோயின் அ ஹீரோ காப்பாத்தும் போது அந்த ஈரத்தோட ஈரமா அழறது,
  4. ஹீரோவோட பாட்டி க்ளைமாக்ஸ் ல நெஞ்சு வலி நு நடிச்சு ஹீரோவ  ஹீரோயின்கிட்ட ப்ரோபோஸ் பண்ண அனுப்பறது
  5. ரொம்ப ரொம்ப பிடிச்ச சீன், ப்ரோபோஸ் பன்னும் போது எப்ப நமக்குள்ள லவ் வர ஆரம்பிச்சதுனு ஹிரோ வரிசையா சொல்றது

படம் தனியா பார்க்கும் போது எல்லாருக்கும் பிடிக்குங்க,

சரி என் பதிவ படிக்கற யாரும் கமெண்ட் பண்ண மாட்டெங்கறிங்களே ஏன்?

பாராட்டியோ திட்டியோ ஏதாவது கமெண்ட் பன்னுங்க ப்ளிஸ்.

என் பதிவு கடைசி வரைக்கும் படிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க