இந்த கொடுமைக்கு பேசாமா கல்யாணமே பன்னிக்கலாம்

அன்பர்களுக்கு இனிய வணக்கம், இன்று நான் எழுத போவது ஒரு பேச்சிலர் வாழ்வில் ஏற்படும் துயரங்கள், பெருசா ஒன்னுமில்லைங்க, காலைல எழுந்ததுலருந்து நைட் தூங்க போற வரைக்கும் கல்யாணம் ஆகாத பசங்களை யார்யார்லாம் கடுப்பேத்தி காயப்படுததறாங்கனு பார்ப்போம்.
காலைல 4 மணிக்கு மேலதான் நல்லா தூக்கம் வரும், அப்பதான் வீட்ல பெத்தவங்க எழுப்பி பால் வாங்கிட்டு வர சொல்றது, தண்ணீர் பிடிச்சு வைக்க சொல்றதுனு வேலை வைப்பாங்க, அதை செய்யலைனா என்னமோ முதியோர் இல்லத்துல கொண்டு போய் சேர்த்துட்ட மாதிரி அக்கம்பக்கத்துல புலம்ப ஆரம்பிப்பாங்க.
சரீன்னு அதுக்கு பயந்து வேலையா செய்யலாம்னு வெளிய வந்தா கோலம் போடறேங்கற பேர்ல தெருவுல வரிசையா கல்யாணம் ஆனது ஆகாததுனு 2 கேட்டகிரிலயும் பொன்னுங்க நிப்பாங்க, நான் அதை தப்பு சொல்லலை, அவங்க வேலைய அவங்க பார்க்கட்டு, என் வேலைய நான் பார்க்கறேன், எதுக்கு எங்களை(பேச்சுலர்ஸ்) பார்த்ததும் நல்லா கவர் பன்னிருக்க ஏரியாவையும் திரும்ப ஒரு தரம் கவர் பன்னனும்னு கேட்கறேன்? நாங்க என்ன ஏதாவது தப்பா பார்த்தமா?கைய பிடிச்சு இழுத்தமா? 
வீட்ல இருக்க சின்ன சின்ன வேலைய முடிச்சுட்டு வேலைக்கு போலாம்னு கிளம்புனா பக்கத்து வீட்டு ஆண்டி (BELOW 35 ONLY) அவங்க குழந்தைங்க 2 பேரையும் நான் போற வழில இருக்க ஸ்கூல்ல விட சொல்லுவாங்க, சரி மனுசனுக்கு மனுசன் இந்த உதவி கூட செய்யலன்னா எப்படின்னு நாமலும் கூட்டி போவோம், உடனே அந்த ஆண்ட்டிய ட்ரை பன்ற கம்முனாட்டி எவனோ ஒருத்தன் உடனே எங்க 2 பேரையும் வச்சு தெரு முழுக்க காவியம் பாடிடுவான், அதுல சஸ்பென்ஸ் வேற? 
“BIKE ல இந்த வாரம் பொன்னு, அடுதத வாரம் அவங்க அ……..?”
நீயெல்லாம் விஜய் டீவிக்கு வேலைக்கு போடா, அவங்க TRB  ரேட் எங்கயோ போய்டும்.
அதுல வழில பார்த்து வேணும்னே நக்கலா ஒரு கேள்வி கேட்பான் பாருங்க, “என்ன மச்சி, உன் குழந்தையா?”னு, செம காண்டாகும்.
சரி போகட்டும்னு வேலைக்கு வருவோம், எப்படியும் இருக்கற வயசான சீனியர் டிக்கட்டுங்க முழுசும் வேலைல எவன் பன்ன தப்புக்கோ நம்மளை கூப்பிட்டு திட்டும், ஏன்னா நாம் பேச்சிலர்ஸ், சின்ன பசங்க, கேட்டா “உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை அதான் கோபம் வருது, பொறுப்பு இல்லைனு” சம்பந்தம் இல்லாம காரணம் சொல்லுவானுங்க.
இருக்கறதுலயே பெரிய பிரச்சனை இதுதாங்க, நம்ம கூட எப்படியும் கல்யாணம் ஆகி 3 வருசம் தாண்டி அவங்க ஆத்துக்காரர் கூட சண்டை போட ஆரம்பிச்ச லேட்டஸ்ட் ஆண்ட்டிங்க க்ரூப் இருக்கும். அவங்க பன்ற அட்டாகாசம் இருக்கே, அய்யய்யய்யோ.
 
 நான் வேலை பார்க்கற இடத்துல ஒரு ஆண்ட்டி இருக்குங்க, பேர் சொல்ல வேண்டாம், ஆனா எங்க ஏரியால இருக்கவங்களுக்கு நான் யாரை சொல்றன்னு நல்லாவே தெரியும். அந்த ஆண்ட்டி வரத நீங்க 100 மீட்டர்க்கு முன்னாடியே தெரிஞ்சுக்கலாம். அப்படி ஒரு ஸ்மெல் வரும், நான் அதை பொணத்துகிட்ட அனுபவிச்ச ஃபீலிங், அவங்களை கேட்டா துபாய் பெர்ஃப்யூம்னு சொல்லுவாங்க. துபாய்ல எந்த விவேகனாந்தர் தெருல வாங்கனாங்களோ?

 

இன்னொரு கடுப்பு, இந்த இடுப்புதாங்க, வேற எதையும் கற்பனை பன்னாதிங்க. நீங்க கேட் வாக் பார்த்துருக்கிங்களா? நடக்கும் போது கழுத்து, கை ஆடாம இடுப்ப மட்டும் ஆட்டுவாங்க, அதே மாதிரி இங்க ஒன்னு இருக்குங்க, நான் முதல்ல பார்க்கும் போது அமைதியான பொன்னுனு நினைச்சேன், நார்மலாவே நடக்காது, ALWAYS CAT WALK ONLY, இதே நான் காலேஜ்ல படிக்கும் போது மட்டும் என் கன்னுல சிக்கிருந்தா ஓட்டியே சாகடிச்சுருப்பேன், இப்ப ஒன்னும் பன்ன முடியாது, இப்படி சொல்லிக்க வேண்டியதுதான் “பன்னிக்குட்டி எல்லாம் பஞ்ச் டையலாக் பேசுது எஜமான் “
இருங்க கொஞ்சம் ஆணி புடுங்கற வேலை இருக்கு, புடுங்கிட்டு வந்து என் கஷ்டத்தை பகிர்ந்துக்கறேன்.