The Trouble with Harry (1955)- Hitchcock Movie – விமர்சனம்

ஹிட்ச்காக் படங்கள் எந்தளவுக்கு திரில்லரோ அந்தளவுக்கு அதுக்குள்ள நகைச்சுவையும் இருக்கற மாதிரி பார்த்துப்பார். ரிபாகால மட்டும்தான் அது இல்லைன்னு தோணுது. மீதி எல்லா படத்துலயும் நகைச்சுவை இருக்கும். ஹா ஹா ஹா ன்னு சத்தமா சிரிக்க வைக்கலனாலும் மனசை இலகுவாக்குற மாதிரி இருக்கும். அவர் முழுக்க நகைச்சுவைக்குன்னு எடுத்த படம் தான் இந்த படம். ஆனா அதுவும் ஒரு கொலையை சுத்தி நடக்கற மாதிரி இருக்கும். இந்தப் படமும் ஒரு நாவல்ல இருந்து எடுக்கப்பட்டதுதான்.

படத்தை பத்தி பார்க்கறதுக்கு முன்னாடி ஒரு விசயத்தை சொல்றேன். படத்தை நீங்க எதுக்காக பார்க்கனுமோ இல்லையோ படத்துல காட்டற இயற்கை அழகை இரசிக்கறதுக்காகவே கட்டாயம் பார்க்கனும், உங்களுக்கு படம் பிடிக்குதோ இல்லையோ இந்த படத்துல காட்டப்படற இடங்களோட வண்ணங்கள் கட்டாயம் உங்க மன அழுத்தத்தை குறைக்கும்னு உறுதியா சொல்றேன். அதுக்குனு Highway அளவுக்கு எதிர்பார்க்க வேண்டாம். நல்லாருக்கும்.

ஒரு அழகான மலையை ஒட்டி இருக்க கிராமம். அந்த ஊர்ல ஜனத்தொகையே ரொம்ப குறைச்சல். ஒவ்வொரு வீட்டுக்கும் இடையே கூட அதிக தூரம். அதனாலேயோ என்னவோ அங்கே இருக்கவங்களுக்கு அறிமுகம் இருந்தாலும் நெருங்கி பழக வாய்ப்பு அமையலை. அப்படி தனிச்சு வாழற நாலு பேரை ஒரு பிணம் நெருக்கமாக்குது. இதான் படத்தோட ஒன்லைன். அந்த ஊருக்கு பக்கத்துல இருக்க மலைகிட்ட ஒருத்தன் செத்து கிடக்கறான். அவன் பேர்தான் ஹேரி. அவனை 5 பேர் இல்லை 6 பேர் இல்லை 5 பேர் பாக்கறாங்க. எதுக்கு ஒருத்தரை சேர்த்துட்டு நீக்குனன்னு படம் பார்த்தா உங்களுக்கு புரியும்.

முதல்ல பாக்கறது ஒரு குட்டிப் பையன். ரெண்டாவது பார்க்கறது அங்கே இருக்க ஒரு வயசான கேப்டன், வேட்டைக்கு வந்தவர் தன்னோட குண்டு பட்டுதான் அவன் செத்துட்டான்னு நினைக்கறவர். இன்னொரு வயசான பெண்மணி. அவங்களும் தன்னாலத்தான் அவன் செத்துட்டான்னு நினைச்சுட்டு இருக்காங்க. அடுத்து முதல்ல பார்த்த அந்த குட்டிப் பையனோட அம்மா, அவங்களும் தன்னாலத்தான் அவன் செத்துட்டான்னு நினைச்சுட்டு இருக்காங்க. கடைசியா நம்ம ஹீரோ, ஒரு ஓவியன். அவனுக்கும் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னாலும் மத்தவங்களுக்காக அதை மறைக்க உதவ முன்வரான். மொத்தம் 5 பேர் ஆச்சா?

இது இல்லாம அந்த பிணத்துகிட்டருந்து ஷூ-வ திருடற பிச்சைக்காரன், எப்ப பாரு படிச்சுகிட்டே இருக்க ஒரு டாக்டர், ஒரு கடை நடத்தற அம்மா, அவங்க பையன். அவங்க பையன் கார் வியாபாரி, பழச வாங்கி சரிபண்ணி விக்கற தொழில். இன்னொரு தொழிலும் கைவசம் இருக்கு. டெபுட்டி செரிஃப். என்ன வேலைன்னா போலிசுக்கு கேஸ் பிடிச்சு கொடுத்தா, கேசுக்கேத்த காசு. அதனாலேயே யாராவது ஊருக்குள்ள சட்டத்தை மீறி நடக்குறாங்களான்னு பார்த்துட்டே இருப்பான். அப்புறம் நாயகனோட ஓவியங்களை வந்து பார்த்துட்டு போய்ட்டு இருக்க ஒரு பனக்காரர். மொத்தமே படத்துல வரவங்க அவ்வளவுதான்.

பிணத்தை வச்சுட்ட காமெடின்னதும் மகளீர் மட்டும் நாகேஸ் காமெடி அளவு எதிர்பார்க்க வேண்டாம். ஏன்னா இது முழுக்க டார்க் ஹியுமர். ஆனா நல்லாருக்கும். பிணத்தை பார்த்துட்டு நம்ம சுட்டதால செத்துட்டான்னு பயந்து அதை மறைக்க கேப்டன் முயற்சி செய்ய, ஒவ்வொருத்தரா அந்தப் பக்கம் வர போய் மரத்துக்கு பின்னாடி ஒளிவார். நிறைய பேர் வந்து வந்து போகவும் அப்படியே அசந்து தூங்கிருவார். கொடுமை என்னன்னா ஒருத்தர் கூட அந்த பிணத்தை பார்த்து அதிர்ச்சி அடைய மாட்டாங்க, போலிஸ்கிட்ட போக மாட்டாங்க. கேப்டன் தூங்கி எழுந்து வந்து பார்த்தா ஹீரோ, அந்த பிணத்தோட முகத்தை அழகா வரைஞ்சுட்டு இருப்பான். கேப்டன் கடுப்பாகி பக்கத்துல போனா, அவர் கைல இருக்க துப்பாக்கிய தூக்கி பார்த்து, பிணத்தோட நெத்தில இருக்க ஓட்டைய பார்த்துட்டு “உங்க பாடி போல? இருங்க வரைஞ்சுச்சு கொடுத்துடறேன்”ன்னு சொல்ற உடல்மொழிலாம் உச்ச கட்டம்.

ஹிட்ச்காக் படத்துல வழக்கமா எதிர்பார்க்கற எந்த திடிர் திருப்பத்தையும் எதிர்பார்க்காம பார்க்க வேண்டிய படம். ஆனா கண்டிப்பா பார்க்க வேண்டிய படங்கள்ல ஒன்னுன்னுதான் சொல்லுவேன். படத்துல வர நிறைய காட்சிகளை பத்தி பேச விருப்பம் தான். ஆனா இருக்க கொஞ்ச நஞ்ச சஸ்பென்சும் போயிடும்னு பேசாம விடறேன்.

யூடியுப் ல இந்த படத்தோட ரெண்டு லிங்க் கிடைச்சது. ஒன்னு சப்டைட்டில் இருக்கு, ஆனா குவாலிட்டி சுமார்தான், இன்னொன்னு நல்ல பிரிண்ட், ஆனா சப்டைட்டில் இல்லை. சரி வழக்கமா சப்டைட்டில் இருக்க லிங்கா கொடுத்து பழகிட்டோம்னு குவாலிட்டி கம்மியான லிங்கை தந்துருக்கேன். படத்தின் இணைப்பு