அதிகாரம் 001 – கடவுள் வாழ்த்து

குறள்: 1/1330

அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

உரை:
தமிழில் மூத்த எழுத்தினை முதலெழுத்தாக கொண்டது போல்,மூத்தோரை கடவுளாக மதித்தல் வேண்டும்

குறள்: 2/1330

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

உரை:
இறுமாப்பு தந்து மூத்தோரை மதிக்கவிடாது தடுக்கும் படிப்பினால் யாதொரு பயனுமில்லை

குறள்: 3/1330

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்

உரை:

மலர் போல மென்மை மனமுடையோனை(இறைவன்) பின்பற்றுதலே நிலவுலகில் நீண்டகாலம் வாழ்தலுக்கான வழியாகும்.

குறள்: 4/1330

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

உரை:
எதனிலும் (பெண்,பொன்,மண்,புகழ்) 100% விருப்பமுமில்லாமல் அதே நேரம் வெறுப்புமில்லாமல் இருப்போரையே பின்தொடர்வது சிறந்தது.
அப்படி இருப்பது இறைவன் மட்டுமே…

குறள்: 5/1330

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

உரை:

இருள்சேர் இருவினை- அறியாமையை மட்டும் தரும் நல்வினை, தீவினை எனும் மூட நம்பிக்கைகள்

இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார்- இறை பொருளான “படைக்கப்பட்ட அனைவரும் சமம்” என்பதனை புரிந்து கொண்டோர்

இறை பொருளான “படைக்கப்பட்ட அனைவரும் சமம்” என்பதனை புரிந்து கொண்டோரிடம், அறியாமையை மட்டும் தரும் நல்வினை, தீவினை எனும் மூட நம்பிக்கைகள் இருக்காது.

குறள்: 6/1330

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

உரை:
ஐம்புலன்களை அடக்கி,
பொய் இல்லா ஒழுக்கத்தை கொண்டவர்
நீண்ட புகழ் தரும் வாழ்வை நெடுநாள் வாழ்வர்

குறள்: 7/1330

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

உரை:
யாருடனும் ஒப்பிட இயலாதவரான இறைவனை பின்தொடர்பவர்களால் மட்டுமே தங்கள் மனதை எளிதாக வெல்ல இயலும்.

குறள்: 8/1330

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

உரை:
இறைவனை பணிந்தோரே அறமெனும் பெருங்கடலை கடப்பர், மற்றோர் பிற கடலான சிற்றின்பத்தில் மூழ்கி இறப்பர்.

குறள்: 9/1330

கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

உரை:
எட்டு குணங்களை (அஷ்டசித்திகளை) கொண்ட இறைவனை வணங்காதோர் தலையானது, செயல்படாத ஐம்புலன்களை போல இருந்தும் பயனற்றது.

குறள்: 10/1330

பிறவிப் பெருங்கடலை நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

உரை:
இறைவனை சரண்டைந்தோர் பிறப்பெனும் சமுத்திரத்தை நீந்தி கடப்பர், மற்றோர் இயலாமல் மீண்டும் மீண்டும் பிறந்து தத்தளிப்பர்.