ARJUN REDDY (2017) – எனக்கு பிடிச்சுருக்கு

ஒநாயும் ஆட்டுக்குட்டியும் படம் பார்த்திருப்பவர்கள் எத்தனை பேர் இதை கவனித்து இருப்பீர்கள் என தெரியவில்லை. மிஷ்கினுக்கு மருத்துவ கல்லூரி மாணவர் சர்ஜரி செய்ய முயல்வார். அதற்கு உதவியாக அவனது ஆசிரியர் போனிலேயே என்னென்னெ செய்ய வேண்டும் என சொல்லுவார். அவர் முதலில் கேட்பதே இப்படித்தான் இருக்கும்.

“டிரக்ஸ் ஏதாவது வச்சு இருக்கியா?”

“இல்லை சார்”

“டேய் மெடிக்கல் காலேஜ் ஸ்டூடன்ட், அதுவும் ஃபைனல் இயர் படிக்கறவன்கிட்ட டிரக்ஸ் இல்லைன்னா எவனாவது நம்புவானா?” என அதட்டிய பின்புதான்

“கீட்ட்டாமைன் இருக்கு சார், மெண்டல் ஸ்ட்ரஸ் அதான்” என்பார்.

முதலில் தெளிவாக ஒரு விசயம் தெரிந்து கொள்ளுங்கள். மருத்துவக் கல்லூரியில் படிப்பவர்களில் பாதிக்கு மேல் போதை பொருள் பழக்கத்திற்கு ஆளாகி நாளாகி விட்டது. குடிப்பழக்கம் பற்றி சொல்லவே வேண்டாம். இதுதான் உண்மை. இல்லை என மறுப்பவர்களுக்கும் தமிழ் நாட்டில் டெங்கு பாதிப்பு பெரிதாக இல்லை என சொல்லும் அதிமுக அமைச்சர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. Continue reading “ARJUN REDDY (2017) – எனக்கு பிடிச்சுருக்கு”

Lipstick Under My Burkha (2016) – பெண்கள் நம் கண்கள்

“ஒருத்தனை ஏமாத்தனும்னா அவன்கிட்ட கருணையை எதிர்பார்க்க கூடாது, அவன் ஆசையை தூண்டனும்” – காந்தி பாபு

“ஒரு கூட்டத்தை அடிமையா வச்சுருக்கனும்னா அவங்களை அடக்க கூடாது, அவங்களை புனிதமாக்கி விட்டுடனும்” – அனைத்து மதங்களும்

“நீ ஒரு பொண்ணு, எங்களை எதிர்த்துகிட்டு இருந்துடுவியா நீ?” என மிரட்டியா பெண்கள் அடிமையாக்கப் பட்டார்கள்?. “பெண்கள் புனிதமானவர்கள், பெண்கள் நம் கண்கள், உங்களை வேறு யாரும் பார்த்து விடக்கூடாது வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள். உங்கள் பாதுகாப்பிற்காகத்தான் சொல்கிறேன், சமையலறை தாண்டி வராதீர்கள்” இப்படித்தானே உள்ளே தள்ளி கதவை சாத்தினார்கள். கொடுமை என்னவென்றால் இதை பெரும்பாலான பெண்களே புரிந்துக் கொள்வதில்லை.

இன்று கூட ஒரு செய்தி “6 வயது பெண் கற்பழிப்பு”. அந்த குழந்தைக்குமாடா கற்பு இருக்கு, அது அழிக்கப்பட்டுருக்குன்னு சொல்றிங்க? பாலியல் வன்கொடுமைன்னு சொன்னா செஞ்சவனுக்கு மட்டும் தான் அவமானம், கற்பழிப்புன்னா அந்த பெண்ணுக்கும் சேர்த்து அவமானம், நாளைக்கு இதைக்காட்டி எல்லா பெண்களையும் வீட்டுக்குள்ள அடைக்கலாம்? எப்படி திட்டம் பாருங்க.

சரி படத்திற்கு வருவோம். ஒரு ஆண். 50 வயதிற்கு பின் மனைவியை இழந்து விடுகிறார். பிள்ளைகளும் திருமணமாகி வெளியூரில் இருக்கிறார்கள். அவருக்கும் ஒரு துணை தேவைப்படும் இல்லையா? இரண்டாவதாக ஒரு திருமணம் செய்துக் கொள்கிறார். இதுவரை படித்த பொழுது உங்களுக்கு எதுவும் வித்தியாசமாக பட்டிருக்காது. இதே அந்த “ஆண்” என்ற இடத்திற்கு பதிலாக “பெண்” என்று போட்டு வாசியுங்கள். மனம் எதையெல்லாம் யோசிக்கிறது என்று பார்க்கலாம்.

படத்தில் 4 பெண்களின் கதைகள். அதில் 3 பெண்கள் முஸ்லீம்கள். ஒரு இந்து பெண்மணி. மதத்தை குறிவைத்து தாக்கியது போல் தெரியலாம். அப்படி இல்லை. இந்து மதத்தில் திருமணத்திற்கு பிறகு, தாயான பிறகு, வயதான பிறகுதான் போகப்போக புனிதம் என்ற பெயரில் சுதந்திரங்கள் பறிக்கப்படும். இஸ்லாமில் துவக்கத்தில் இருந்தே உண்டு. அனைத்து பெண்களும் விரும்பியா பர்தாக்குள் தங்களை ஒளித்துக் கொள்கிறார்கள்? அதனால் தான் 3/4:1/4 வித்தியாசம் என நினைக்கிறேன்.

முதலில் உஷா. தன் பெயரே மறக்கும் அளவிற்கு அனைவராலும் “ஆண்டி” என்றே அழைக்கப்படுபவர். அவரை விட வயது முதிர்ந்த ஒருவர் மனைவியை இழந்து விட்டார் என்பதற்காக அவரின் இரண்டாம் திருமணத்திற்கு இவரையே பெண் பார்த்து தரச் சொல்வார்கள். அந்த முதியவராவது 50 களுக்கு பிறகு துணையை இழந்திருப்பார். உஷா வாலிபத்திலேயே கணவனை இழந்து, பிள்ளைகள் கூட இல்லாமல் உறவினர்களுடன் வாழ்ந்து வருவார். தனிமையில் மற்ற புத்தகங்களுக்கு இடையே வைத்து பலான புத்தகங்களை படிக்கும் பழக்கம் கொண்டவர். நீச்சல் சொல்லித் தரும் வாலிபன் ஒருவன் தன்னை பெயர் சொல்லி அழைப்பதை விரும்பி, இரகசியமாக நீச்சல் உடை வாங்கி நீச்சல் பயிற்சி செல்வார். அவ்வாலிபனுடன் இரவில் தான் யார் என்று சொல்லாமல் போனில் பேசி இச்சைகளை தீர்த்துக் கொள்வார்.

அடுத்து கல்லூரிக்கு முதல் வருடம் செல்லும் இஸ்லாமிய பெண். கட்டுப்பாடான குடும்பத்தில் இருந்து வந்தாலும் மேற்கத்திய நாகரீகத்தை மிகவும் விரும்புபவள். பாட பிடிக்கும், ஆட பிடிக்கும். ஆனால் எதற்கும் அனுமதியோ வாய்ப்போ இல்லாத வாழ்க்கை. கல்லூரியில் கிடைக்கும் சுதந்திரம், மற்றவர்களுடன் நெருங்கி பழக வேண்டிய உடைகளை திருடக் கூட செய்கிறது. ஜீன்ஸ் எங்கள் உரிமை என போராடும் போது மனதில் இருந்து பேசி அனைவர் கவனத்தையும் ஈர்க்கிறாள். டிரம்ஸ் வாசிக்கும் ஒருவனால் கவரப்பட்டு அவனை காதலிக்க துவங்குகிறாள்.

ஓவியர்களுக்கு மாடலாக வேலை பார்க்கும் அம்மா மட்டுமே கொண்ட பெண் ஒருத்தி, தொழில் அழகுக் கலை. சிறியதாக போட்டோஷாப் வைத்திருப்பவனுடன் காதல். ஆனால் அம்மாவிற்கு வசதியான மாப்பிள்ளை வேண்டும். அவனுடன் நிச்சயம் நடக்கிறது. அதை பழிவாங்க அன்று இரவே தன் காதலனுடன் உறவு கொண்டு, அதை வீடியோ எடுத்து வைக்கிறாள். ஒரு கட்டத்தில் காதலனா? கணவனாக போகிறவனா? என்று குழம்புகிறாள்.

துபாயில் வேலை பார்க்கும் கணவனுக்கு தெரியாமல் சேல்ஸ் கேர்ளாக வேலை பார்க்கும் இஸ்லாமிய பெண்ணொருத்தி. அவளை அவள் கணவன் வெறும் உடல்பசிக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்கிறான். கொஞ்சம் கூட அவள் மீது அக்கறைக் காட்டாமல் தன் இச்சைக்காக மட்டும் படுத்து எழுபவனால் 3 பிள்ளைகள், 3 அபார்ஷன், மேற்கொண்டு போனால் ஆப்ரேஷன் செய்தாக வேண்டிய நிலை என்ற போதும் காண்டம் கூட உபயோகிக்க மறுக்கும் மிருகம். வேலை போனதை மறைத்து, வேறொரு பெண்ணுடனான உறவை மறைத்து, அது தெரிந்து கேள்வி கேட்கும் மனைவியை வல்லுறவு கொண்டு வாயை அடைக்கும் அசிங்கம் பிடித்தவன்.

இந்த 4 பெண்களுக்குமான ஒற்றுமை என்ன தெரியுமா? யாருக்கும் தங்கள் வாழ்க்கையை பற்றி யோசிக்கவோ, கனவு காணவோ, முடிவு எடுக்கவோ உரிமை இல்லை. ஏனென்றால் பெண் என்பவளை பொறுத்துத்தான் குடும்பத்தின் கௌரவம் இருக்கிறதாம். ஆண் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், பெண்கள் வீட்டின் கண்கள் அல்லவா?

படத்தில் 18 இடத்தில் வெட்டு விழுந்தும் குழந்தைகளுடன் பார்க்க முடியாத படம் தான். இது கணவன்-மனைவி பார்க்க வேண்டிய படம். வாழ்க்கையில் உடல் உறவுக்கு தயாரானவர்கள் பார்க்க வேண்டிய படம்.

பல இடங்கள் செருப்பால் அடிக்கிறது

1. 54ல் மனைவியை இழந்து இரண்டாம் திருமணத்திற்கு தயாராகும் முதியவரிடம் உஷாவை “ஆண்டி” என்று அழைக்க சொல்வது

2. புதிதாய் வாங்கிய மைக்ரோஓவனில் செய்த கேக்கை ஆசையாக எடுத்து வரும் மனைவியை எதுவும் பேச விடாமல், அவள் கையை பிடித்து மைதுனம் செய்ய வைக்கும் இடம், அந்த கேக்கை அழுது கொண்டே தனியாக வந்து கொங்கனா சாப்பிடும் இடம்.

3. உறவினர்களே உஷாவின் அந்தரங்கத்தை எடுத்து நடுவில் கொட்டி அவமானப்படுத்தும் இடம்

4. காதலி என்று சொன்னவளை, போலிஸ் வந்ததும் விட்டு விட்டு நகர்ந்து “யார் நீ?” என கேட்கும் இடம்

5. “உனக்கு செக்ஸ் தான் வேணும்னா நிறைய பசங்களை அனுப்பறேன்” என்று சொல்லிவிட்டு விலகியவன், அவள் நிச்சயிக்கப்பட்டவனை முத்தமிடுவதை பார்த்து பொறமையால் ஓடிப்போக அழைக்கும் இடம்

சொல்லிக் கொண்டே போகலாம். சத்தியமாக அடுத்து குறைந்தது 10 வருடங்களுக்கு தமிழில் இப்படி ஒரு படம் வர வாய்ப்பே இல்லை. தவறாமல் பார்க்க வேண்டிய படம்.

“ஆண்களுக்கு இணையாக பெண்கள் தவறு செய்வதுதான் பெண்ணியமா?” என்று சில அறிவு ஜீவன்கள் கேட்பார்கள். அவர்களெல்லாம் தப்பித்தவறி பெண்கள் டாஸ்மாக்கை மூட போராட வந்தால் கூட “உனக்கெதுக்கும்மா இந்த வேலை? குடிக்கறவன் நாசமா போகட்டும், நீ வீட்டுக்கு போம்மா” என்பவர்கள். அதாவது ஆண்கள் பிரச்சனையில் பெண்கள் தலையிடக் கூடாது. ஆனால் பெண் என்ன யோசிக்க வேண்டும் என்பதைக் கூட ஆண்தான் முடிவு செய்வான். ஏனென்றால் பெண் புனிதமானவள் இல்லையா?

கற்றது தமிழ் (2007) – வெறும் படமல்ல, எங்கள் வாழ்க்கை

2007, தமிழ் நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளிலும் பொறியியல் கல்லூரிகள் கரையான் புற்றுக்களை போல் முளைத்துக் கொண்டிருந்த நேரம், சேருபவர்கள் அனைவரும் சாஃப்ட்வேர் இன்ஜினியர்தான் ஆவேன் என அடம்பிடித்த காலம். அதற்காகவே, கேம்பஸில் வேலை கிடைக்க அவனவன் ஆங்கிலத்தை கற்க முக்கிக் கொண்டிருந்த காலம். இத்தகைய ஜீவன்கள் இருக்கும் கல்லூரியில் சாஃப்ட்வேர் குறித்த எந்த தொடர்பும் இல்லாமல் படித்த சிவில் இன்ஜினியர்கள் நாங்கள்.

எங்கள் டிபார்ட்மெண்டில் கூட சிலர் சாஃப்ட்வேருக்கு முயற்சித்து கொண்டிருந்தார்கள். நாங்களோ அர்ரியர்சை கிளியர் செய்தாலே போதும் என வாழ்ந்து கொண்டிருந்தோம். 3 வது வருடம் முடிகையிலேயயே பலர் கேம்பசில் செலக்ட் ஆனார்கள். யாரை கேட்டாலும் வருடத்திற்கு சம்பளம் 4 இலட்சம் 5 இலட்சம் என்றார்கள். சிவிலுக்கு ஆரம்பத்தில் 10000 கூட தாண்டாத காலம் அது. இரண்டு கூட்டத்துக்கும் ஒரு பெரிய இடைவெளி உருவானதை உணர முடிந்தது. அப்படி என்றால் நாம் யார்? வேலைக்கு போய் வாழ்ந்து விட முடியுமா? என்ற பயம் வந்தது. அந்த நேரத்தில் தமிழ் M.A என்ற ஒரு படமும் வந்தது.

தமிழ் படித்தவனின் வாழ்க்கைதான் படம் என்று புரிந்தவுடனேயே படத்திற்குள் கலந்து விட்டோம். ஒவ்வொரு காட்சியும் மிக புதுமையாக தெரிந்தது. ஏனென்றால் படத்துவக்கத்தில் இருந்தே நாயகன் ஓடிக் கொண்டிருக்கிறான். இந்த சமூகமும் வாழ்க்கையும் அவனை துரத்துகிறது. கொலைகாரனாகி போலிசுக்கு பயந்து ஓடுகையில் துவங்கும் அந்த “இன்னும் ஓர் இரவு” பாடல், யுவனின் குரல். ஸ்ஸ்ஸப்பா. தந்த உணர்வுகளை சொல்லவே முடியாது. படத்தினைக் குறித்து நிறைய சொல்லலாம். முக்கியமானதை மட்டும் பார்க்கலாம்.

10 வருடங்களுக்கு முன்பு இணையம் பெரிதாய் வளர்ந்திருக்கவில்லை. ஆனால் அப்போதும் பார்க்காமல், தொலைவில் இருப்போரை காதலிப்பது இருந்தது. எங்கோ ஒரு கல்லூரியில் படிக்கும் பெண்ணுடன் மணிக்கணக்காக பேசி, காதலித்து, பரிசுகளை அனுப்பி, பெற்று, பிறந்த நாட்களிலோ, முக்கிய தினங்களிலோ இருவரும் சந்திப்பது வழக்கமாக இருக்கும். எனக்கு தெரிந்து நான் உட்பட என் நண்பர்கள் அனைவருக்குமே இப்படி ஒரு காதல் கதை இருந்தது. அப்படி ஒரு நாள் காதலியை தேடி செல்கையில், அந்த தருணத்தில் பாடுவதற்கு அதுவரை எந்த பாடலும் இல்லாமல் இருந்தது. இப்படத்தில் அதே சூழலில் ஒரு பாடல் வரும் பொழுது அழாத குறைதான். அதிலும் அந்த கடிதத்தின் வரிகளுடன் துவங்கும். என் அறைத் தோழர்கள் அனைவருக்கும் அது மனப்பாடம்.

“பிரபா என்னை தேடி இருப்பன்னு எனக்கு தெரியும்” என துவங்கி “ஆனந்தி” என முடியும் அந்த வரிகள். அஞ்சலி-ஜீவாவின் குரல்கள். மெதுவாய் துவங்கிய இசையும், தொடர்ந்து வரும் இராஜா சாரின் குரல் “பறவையே எங்கு இருக்கிறாய்”, முத்துகுமாரின் வரிகள். இதையெல்லாம் நினைத்தாலே கண்கள் கலங்குகிறது.

அதுவரை எங்கள் அறையில் ஸ்பீக்கர் இல்லை. இந்த படம் வந்த பின் வாங்கினோம். என்ன சிறப்பு என்றால் பாட்டு கேட்கவென தனியாக ஒரு அறை ஒதுக்கப்பட்டது. ஒவ்வொருவனும் தனியாக சென்று முழு வால்யூமில் பாடலை ஒலிக்க விட்டு, உடன் சேர்ந்து இராஜவுடன் பாடுவான், இல்லை அழுவான். அழுவேன்.

சோகம் மட்டுமல்ல. இந்த படம் வந்த பின் கொஞ்ச நாட்களுக்கு நாங்கள் பேசும் தொனியே எப்படி இருக்கும் என்றால் “இங்க பாரு ஆனந்தி, இப்ப நான் குடிக்கறதுக்கு பேர் கஞ்சா” என்று பாடலின் இடையே வருமே, அதே டோனில் பேசிக் கொண்டிருந்தோம்.

“ஏன் ரெகார்ட் எழுதலை?”

“இங்க பாரு, நான் ரெகார்ட் எழுதலை, ஏன்னா நான் படத்துக்கு போய்ட்டேன், நான் ஏன் படத்துக்கு போனன்னா…”

இப்படித்தான் பேசிக் கொண்டு இருப்போம்.

அதே மாதிரி காதலி இருப்பவன் சென்று பார்க்கையில் “பறவையே எங்கு இருக்கிறாய்” பாடினால், காதலி இல்லாதவர்களுக்காக ஒரு வரி வரும்

“போய் பார்க்க யாருமில்லை

வந்து பார்க்கவும் யாருமில்லை

வழிபோக்கன் போவான் வருவான்

வழிகள் எங்கும் போகாது”

அந்த “புத்தி இருக்கவந்தான் புகை பிடிப்பான்” வசனத்தை பத்தி தனியா வேற சொல்லனுமா?

“இந்த ஊர் 2 இலட்சம் சம்பளம் வாங்கறவனுக்கேத்த மாதிரி மாறிகிட்டு வருது”ன்னு சொன்னப்ப புரிஞ்ச்சுக்க முடியலை. படிப்பு முடிஞ்சப்புறம் புரிஞ்சது.

எழுதிகிட்டே போகலாம். “கற்றது தமிழ்”-எங்கள் வாழ்வோடு கலந்த படம்.

Lakshman Rekha (1984) (Malayalam) – விமர்சனம்

ஆண்களிடம் ஒரு கேள்வி. உங்கள் வீட்டினருகே ஒரு குடும்பம் குடியிருக்கிறது. ஒரு கணவன் – மனைவி. கணவன் ஒரு விபத்தில் கழுத்துக்கு கீழ் அனைத்து பாகங்களிலும் உணர்ச்சி இழந்து, எந்நேரமும் படுக்கையில் கிடப்பவர். இருவருக்கும் திருமணம் ஆனதில் இருந்து எந்த சேர்க்கையும் நிகழ்ந்ததில்லை. கிட்டத்தட்ட 5 வருடங்களாக அந்த பெண் திருமணத்திற்கு பின்பும் கன்னியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவளை எப்படி பார்ப்பீர்கள்? பெண்கள் சொல்லுங்கள், இந்த பெண்ணின் தியாகத்தை எங்ஙனம் போற்றி புகழ்வீர்கள்?

சரி அடுத்த கேள்வி. இதே பெண் உங்கள் குடும்பத்தை சார்ந்தவளாக இருந்தால்? காலம் முழுக்க இப்படியே இருக்கட்டும் என விட்டு விடுவீர்களா? கணவன் இல்லையென்றால் உடனடியாக அப்பெண்ணின் விருப்பத்தோடு மறுமணம் செய்து வைக்கலாம். கணவன் பெயருக்கு உயிருடன் இருக்கிறார். அவ்வளவுதான். இந்த நிலையில் என்ன செய்யலாம்? விவாகரத்து செய்து வைத்து வேறு ஒருவருக்கு மணம் செய்து வைக்கலாம் என்பவர்கள் மட்டும் மேலே படிக்கலாம். இல்லை ஒருவரை மணந்து கொண்டு விட்டால் இறுதி வரை எந்த சூழலிலும் பிரியக் கூடாது என்பவர்கள் படிக்க வேண்டாம். Continue reading “Lakshman Rekha (1984) (Malayalam) – விமர்சனம்”

பல்வால்தேவனின் காதல் – இது பாகுபலி விமர்சனம் அல்ல

இந்த நூற்றாண்டின் தவிர்க்க முடியாத இந்திய சினிமாவாக பாகுபலி இடம் பிடித்தாகி விட்டது. யாரும் மறுக்க முடியாது. படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. பாகுபலியும் பல்வால்தேவனும் இயற்பியல் விதிகளை மீறும் வல்லமை படைத்தவர்கள் என்று முதல் பாகத்திலேயே தெரிந்து விட்டதால் அதை பற்றி பேசுவதும் வீண். திரைக்கதையில் எங்கெங்கே ஓட்டைகள் இருக்கிறது என்று கருந்தேளார் நன்கு அலசி விட்டார். நான் பேச விரும்புவது படத்தில் சரியாக சொல்லப்படாத விசயங்களை. “தாண்டவராயன் கதை” படித்ததில் இருந்து எனக்கு இப்படி ஆகிவிட்டது. புத்தகமோ, சினிமாவோ சொல்லப்பட்டதை விட சொல்லப்படாததில் தான் கதை இருக்கிறது என ஆழமாக நம்ப துவங்கி விட்டேன்.

பாகுபலி படத்திற்கு கதை விஜேயேந்திர பிரசாத். ராஜ்மவுலியின் தந்தை. சிறந்த கதை எழுத்தாளர். ஆனால் அது அனைத்தும் அவரது சொந்த சரக்காகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அதை அவரே சொல்லி இருக்கிறார். இவர் எழுதிய கதைதான் “பஜ்ரங் பாய்ஜான்”. சல்மான்கான் நடிப்பில் பெரிதாக வசூலித்த படம். அப்படத்தின் மூலக்கதை பாசில் இயக்கிய “பூவிழி வாசலிலே” படத்திலிருந்து எடுத்ததாக அவரே நாளிதழ் ஒன்றில் கூறியிருக்கிறார். அதே போல் மகாபாரதத்தில் சில பாத்திரங்களை எடுத்து, பெண்களுக்கு அதிகாரம் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்து எழுதியதுதான் பாகுபலி. இதோடு விஜேயேந்திர பிரசாத்திற்கு வேலை முடிந்தது. Continue reading “பல்வால்தேவனின் காதல் – இது பாகுபலி விமர்சனம் அல்ல”

Love Actually (2003) – குறளும் படமும்

வாழ்வில் நமக்கான இணையை காதல் எப்போது நம் கண்ணில் காட்டும் என்பதனை சொல்வது மிகக் கடினம். என் பெயர் டேவிட். என் வயது, அது எதற்கு? அதற்கும் காதலுக்கு சம்பந்தம் இல்லை என நினைக்கிறேன். ஆனால் என் வேலையை தெரிந்து கொள்வது என் கதையை தெரிந்துக் கொள்ள அவசியம் என நம்புகிறேன். நான் புதிதாய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள என் நாட்டின் பிரதமர். இந்தியாவை போல பிரதமர் என்றதும் 60க்கு மேல் தான் என நினைத்து விடாதீர்கள். குத்து மதிப்பாக 30-40க்குள் என் வயதை வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு வித சித்தாந்த பிடியில் சிக்கி, சிறுவயது முதல் வாழ்க்கையே போராட்டமாகவும் அரசியல் களமாகவுமே கழிந்தது எனக்கு. என் அக்கா கூட பேசும் பொழுது என் திருமணத்தை பற்றி நச்சரிப்பது உண்டு. எனக்கு காதலிலோ திருமணத்திலோ விருப்பம் இல்லாமல் இல்லை. நேரம் இல்லை என்பது ஒரு காரணம், இன்னொன்று அனைத்தையும் தாண்டி என்னை இதுவரை யாரும் ஈர்க்கவில்லை. அது நான் பிரதமராகும் வரைதான். Continue reading “Love Actually (2003) – குறளும் படமும்”

Rustom (2016) – விமர்சனம்

ருஸ்டம், ஒரு கடற்படை அதிகாரி, நாட்டை விட்டு நீண்ட நாட்கள் தொலைவாக பணிபுரிய பணிக்கப்பட்டு இருக்கிறான். அவன் இருக்கும் கப்பலுக்கு எதெச்சையாக சொந்த ஊருக்கு திரும்ப உத்தரவு கிடைக்கிறது. கப்பலில் இருக்கும் அனைவரும் உற்சாகத்தில் சத்தம் எழுப்புகிறார்கள். மாதக்கணக்கில் குடும்பத்தை பிரிந்து, நிலந்தை பிரிந்து வாழ்பவர்களுக்கு திடிரென்று கிடைத்த ஆச்சர்யமான பரிசு. அந்த அதிகாரியும் மிகவும் மகிழ்ச்சியாக செல்லும் வழியில் தன் காதல் மனைவி சிந்தியாக்குக்கு பூக்கள் வாங்கிக் கொண்டு செல்கிறான். எந்த வித முன்னறிவிப்பும் இன்றி கதவை திறந்தவுடன் மனைவியை திடிரென கட்டிப்பிடித்து சந்தோஷப் படுத்த வேண்டும் என்ற திட்டத்துடன் செல்கிறான். கதவை திறப்பதோ வேலைக்காரி, “உஷ்ஷ்ஷ் சத்தம் போடாதே” என்று சொல்லி விட்டு இரகசியமாக மெதுவாக ஒவ்வொரு அறையாக சென்று தேட, மனைவி வீட்டில் இல்லை. “எங்கே?” என கேட்டால் “வீட்டை விட்டு சென்று ஒரு நாளுக்கு மேலாகிவிட்டது” என பதில் வருகிறது. அவள் தோழியை கேட்டால் தெரியவில்லை. சந்தேகப்பட்டு நண்பனின் இருப்பிடம் சென்றால் பால்கனியில் நிற்கும் தன் மனைவியை, நண்பன் அணைத்து உள்ளே அழைத்து செல்வதை பார்க்கிறான். இதுதான் படத்தின் முதல் 5 நிமிடம். Continue reading “Rustom (2016) – விமர்சனம்”

Labor Day (2013) – விமர்சனம்

மனிதர்கள் எப்பொழுதும் இயற்கை படைத்த படைப்புகளின் உன்னதமான மகத்துவத்தை முழுவதுமாக புரிந்துக் கொள்வதில்லை. அதற்கு சிறந்த உதாரணமாக பெண்களை சொல்லலாம். இந்த ஆண்கள் உலகத்தில் பெண்களுக்கான இடம் மிகக்குறைவு. அவர்களின் உணர்வுகளை கேட்பதற்கு கூட ஆட்கள் இல்லை. வெறுமனே புனிதப்படுத்தி அவர்களை அடைத்து வைப்பதில் அளவில்லா ஆனந்தம். அதிலும் உச்சக்கட்டம் இந்த தாய்ப்பாசம் தான். தாய் என்ற வார்த்தையை கேட்டாலே புனிதபிம்பம் தான் எனும் அளவிற்கு இருக்கும். அவளும் பெண்தானே? அவளுக்கும் நமக்கு இருக்கும் அனைத்து உணர்வுகளும் இருக்கும் தானே? ஆனால் அதை நாம் அனுமதிக்கிறோமா? கணவனை இழந்தோ பிரிந்தோ பிள்ளைகளுடன் வாழும் பெண்களுடைய உணர்வுகளை நினைத்து பாருங்கள். அவர்களுக்கான கடமைகளாக சமூகம் என்ன வரையறுத்துள்ளது? இதை பேசினால் தீராது. படத்திற்கு வருவோம்.

http://www.entertainmentwallpaper.com/images/res1920x1080/movie/labor-day01.jpg Continue reading “Labor Day (2013) – விமர்சனம்”

Groundhog Day – விமர்சனம்

வாய்ப்புகள் எல்லோர்க்கும் கிடைப்பதில்லை என்பது எந்தளவு உண்மையோ அதே அளவு கிடைத்த வாய்ப்பை அனைவரும் உபயோகப்படுத்திக் கொள்வதில்லை என்பதும் உண்மை. பென் 10 கார்ட்டூன் பார்த்ததுண்டா? ஏலியனாக மாறக்கூடிய வாட்ச் ஒருவருக்காக உருவாக்கப்பட்டு தவறுதலாக அவரது பேரன் கைக்கு சென்றுவிடும், இப்படியெல்லாம் உபயோகப்படுத்த முடியுமா என்று யாரும் யோசிக்க முடியாத வகையில் அவன் அதை பயன்படுத்துவதை பார்த்து அவனிடமே இருக்கட்டும் என விட்டு விடுவார்கள். எதற்கு சொல்கிறேன் என்றால் நமக்கு கிடைக்கும் வாய்ப்பை நாம் எந்த அளவு முடியுமோ அந்த அளவு சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். Continue reading “Groundhog Day – விமர்சனம்”

U Turn (2016) – விமர்சனம்

வதந்திகள் விஷயத்தில் நீங்கள் எப்படி? நம்புவீர்களா என்று கேட்கவில்லை. ஒரு விஷயத்தை கேள்விப்படுகிறீர்கள். அது உறுதியாக உண்மை என தெரியவரும் வரை காத்திருப்பீர்களா? இல்லை தெரிந்தவர்களிடம் பகிர்ந்து கொள்வீர்களா? நான் கேட்பது 2000 ரூபாய் நோட்டை கேமரா போனில் ஸ்கேன் செய்தால் மோடி பேசுவார் போன்ற வதந்திகளை அல்ல, உங்களுக்கு தெரிந்தவர்களை பற்றி, குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் அவர்களது நடத்தை பற்றி. தற்போது எப்படியோ, கல்லூரி காலத்தில் எனக்கொரு கெட்ட பழக்கம் இருந்தது, உண்மையோ பொய்யோ காதுக்கு வரும் செய்திகளை மற்றவர்களுக்கு தயங்காமல் சொல்வது. அது தவறு என புரிய வைத்ததோடு பயமுறுத்தியது ஒரு படம். Continue reading “U Turn (2016) – விமர்சனம்”