தெருளாதான் மெய்ப்பொருள் – குறளுரை

இணையத்துல புழங்கற முக்கால்வாசி பேர்க்கு மேல வாசிக்கிற பழக்கம் இருக்குன்னு நம்பறேன். அப்ப அவங்க எல்லோர்க்கும் இந்த விஷயம் தெரிஞ்சிருக்கும். குறிப்பா வீட்ல யாருக்கும் வாசிக்கிற பழக்கம் இல்லாம இருந்து புதுசா வாசிக்கிறவங்களுக்கு. என்னன்னா நீங்க ஆழமா ஏதாவது ஒன்னை படிச்சுட்டு இருக்கும் போது ஏதோ விசித்திர ஜந்துவை பார்க்கற மாதிரி பார்ப்பாங்க. இதை அனுபவிச்சதுண்டா? யாரும் அதிகம் படிக்காத கம்பனையோ, காரல்மார்க்ஸ் அ வாசிக்கும் போது மட்டும் இல்லை. எல்லோரும் வாசிக்கிற ராஜேஸ்குமார், சுஜாதா, பாலகுமாரனை வாசிக்கும் போதே அப்படி பார்ப்பாங்க. அந்த மாதிரி நேரத்துல ஒரு மாதிரி எரிச்சலா இருந்தாலும் இன்னொரு பக்கம் பெருமையா இருக்கும். இதெல்லாம் உனக்கு எங்க புரிய போகுது? போடா போய் சினிமா மட்டும் பாருன்னு ஒரு கர்வம் வரும். உனக்கு தெரியாததை, உன்னால முடியாததை நான் செய்யறேன்னு ஒரு ஆணவம் வரும். அது இயல்பான விஷயம் தான். ஆர்வமில்லாம இருக்கவங்களை இதை வச்சு எளிமையா தண்டிக்கலாம். நிஜமா, வாசிக்கிற பழக்கம் இல்லாதவனை ஒரு இடத்துல உட்கார்ந்து தடியா ஒரு புத்தகத்தை படிக்க சொல்லி கொடுங்களேன், மூலைல மாட்டிகிட்ட பூனைக்குட்டி மாதிரி சீறுவாங்க. Continue reading “தெருளாதான் மெய்ப்பொருள் – குறளுரை”

பணம் வரும் போகும் – குறளுரை

வியாபாரம் செய்யனும்னு இறங்குற எல்லாருமே ஜெயிச்சுடறதில்லை. அதே சமயம் வியாபாரத்துல இறங்குற வரைக்கும் சாதாரணமா இருந்தவங்க, ஒரு கட்டத்துல சடார்னு உச்சத்துக்கு போய் நின்னதும் உண்டு. ஒருத்தர் இருந்தார். அவருக்கு நல்லா சமைக்க வரும். விதவிதமா புதுசுபுதுசா சமைக்க முயற்சிப்பார். அவரோட திறமையை ஏன் வீணடிக்கனும்னு ஒரு ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்கிறார். சரியா ஓடலை, மூட வேண்டியதா போய்டுச்சு. ஏன்னா விலை அதிகம். சரின்னு இன்னொரு இடத்துல புதுசா ஆரம்பிச்சு விலை குறைவா இருக்கற மாதிரி சமைக்க ஆரம்பிக்கவும் அரசாங்கம் அங்கே ஏதோ திட்டம் கொண்டு வரேன்னு ரெஸ்டாரண்டை மூடிடறாங்க. இது ஆரம்பம் தான், தொடர்ந்து எந்த தொழில் செஞ்சாலும் அடிதான், இடிதான். எல்லாமே தோல்வி தான். ஆள் விடலையே, அடுத்து அடுத்து ஏதாவது செய்வார். ஒருமுறை கோழிக்கறில அவர் செஞ்ச வித்தியாசமான ரெசிபி எல்லோர்க்கும் பிடிக்க ஆரம்பிக்க அதையே முதலா போட்டு வியாபாரம் ஆரம்பிக்கிறார். ஒவ்வொரு ஊரா போய் தன்னொட ரெசிபிக்குனு தனியா கடை போட வைக்கறார். இப்படி பல தோல்விகளை கடந்து அவரோட முதல் வெற்றியை சுவைக்கறப்ப அவரோட வயசு 63. பேரன் பேத்தி எடுத்தாச்சு. அவர் பேர் காலனல் சேண்டர்ஸ், கேஎஃசி சிக்கனோட ஃபவுண்டர். அவர் ஜெயிக்கற வரைக்கும் கிழ உட்காரலை, ஓடிகிட்டேதான் இருந்தார். இங்கே அதிகபட்சம் 30-40, அவ்வளவுதான் Continue reading “பணம் வரும் போகும் – குறளுரை”

பணம் இல்லாம வாழ முடியுமா? – குறளுரை

அதிகாரம் :அருளுடைமை குறள் எண் :247
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு

இந்த குறளை படிச்சதும் வள்ளுவர் கீழுலகம், மேலுலகம் அதாவது சொர்க்கம், நரகம் பத்தி சொல்ல வர மாதிரி தெரியும். ஆனா அது இல்லை. அவர் உலக வாழ்க்கையை ரெண்டு விதமா பிரிக்கறார். இல்லற வாழ்க்கை, துறவற வாழ்க்கை. முதல்ல சொல்றது துறவற வாழ்க்கையை பத்தி. ரெண்டாவது இல்லற வாழ்க்கையை பத்தி. பொருள் இல்லாம இல்லற வாழ்க்கை சாத்தியமில்லைன்னு சொல்றார். பொருள்னா என்ன? பணமா? Continue reading “பணம் இல்லாம வாழ முடியுமா? – குறளுரை”

மா ஞாலம் – குறளுரை

அதிகாரம்: அருளுடைமை குறள்: 245
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி

உரை:
அருள் உள்ளம் கொண்டவர்க்கு துன்பம் என்று ஒன்று இவ்வுலகில் இல்லவே இல்லை. அதற்கு அருள் உள்ளம் கொண்டு வாழ்பவர்கள் இடம் வளம் நிறைந்து இருப்பதே அதற்கு சான்று. Continue reading “மா ஞாலம் – குறளுரை”

தன்னுயிர் அஞ்சான் – குறளுரை

உங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கணத்தில் போதும் இந்த வாழ்க்கை முடித்துக் கொள்ளலாம் என நினைத்திருக்கிறிர்களா? சிறுபிள்ளைகளாய் இருக்கும் பொழுதே, வீட்டில் சண்டை போட்டு, அடி வாங்கும் பொழுது நான் நினைத்ததுண்டு. பின் என்ன ஆயிற்று என்று கேட்கிறீர்களா? அம்மா பிடித்த உணவை சமைப்பார்கள், சாப்பிட்டுவிட்டு சாகலாம் என நினைப்பேன், சாப்பிட்டதும் தூக்கம் வந்துவிடும், தூங்கி எழுகையில் இரவு நடந்தது மறந்திருக்கும். இது இயல்புதான். ஏதாவது ஒரு வயதில், ஏதேனும் ஒரு கட்டத்தில், துரோகத்தால் விரக்தியடைந்து வாழ்க்கையை முடித்து கொள்ள அனைவரும் நினைத்திருப்போம். சரி இன்னொரு கேள்வி கேட்கிறேன். ஏதாவது ஒரு கணத்தில் உங்கள் வாழ்க்கையை அல்ல, உலகத்தினை அழிக்க நினைத்ததுண்டா? உலகம் என்றால் மொத்த பூமியை கேட்கவில்லை. மனித இனத்தினை பற்றி கேட்கிறேன். Continue reading “தன்னுயிர் அஞ்சான் – குறளுரை”

அறியாமை – குறளுரை

ஒரே வார்த்தை, ஆனா இடத்துக்கு தகுந்த மாதிரி வெவ்வேறு பொருள் தரும். இந்த மாதிரி வார்த்தைகள் தமிழ்ல ஏராளமா கொட்டி கிடக்கு. அதுல ரொம்ப சிறந்தது, அதிக இடங்கள்ல பயன்படற வார்த்தை “ஹிக்கூம்” தான். இதுக்கு என்ன பொருள்னு உங்களால சொல்லிட முடியுமா? யார், எங்கே சொல்றாங்கனு பார்த்துதான் பொருள் சொல்ல முடியும். இந்த வார்த்தையோட இன்னொரு சிறப்பு என்னன்னா இதை எல்லா இடத்துலயும் பயன்படுத்த முடியும். இதை அதிகமா சிறப்பா பயன்படுத்தறது யார்னா மனைவிகள்தான். சுவராசியமானதுங்கறதால உதாரணத்தோட பார்ப்போம்.

எங்கம்மா வீட்டுக்கு வராங்களாம் – ஹிக்கூம்
உங்கப்பாக்கு வேற வேலையே இல்லையா? எப்ப பாரு ஏதாவது விசேசம்னு லீவ் போட வைக்கறார் – ஹிக்கூம்
ஏன்டி எனக்கென்ன உன் மேல பாசமே இல்லைன்னு நினைக்கிறியா? – ஹிக்கூம்
வரவர உன் சமையல் மோசமாகிட்டே போகுது – ஹிக்கூம்
இன்னைக்கு சமையல் சூப்பர், அசத்திட்ட – ஹிக்கூம்

நிறைய இருக்கு, சினிமா லருந்து சொல்லுவமே,
“தங்கமகன்” படத்துல தனுஷ் சமந்தாகிட்ட “ஐ லவ் யூ” சொன்னதும்
“ஹிக்கூம், பர்ஸ்ட் டைம் கேட்கறேன்”
“நான் இன்னும் அதை கூட கேட்கலையே?”
“லவ் யூ லவ் யூ” Continue reading “அறியாமை – குறளுரை”

பெரிய மனுசனா? – குறள்கதை

“பெரிய மனுஷன் மாதிரியா நடந்துக்கறான் அந்த ஆளு?”

“ஹேய், என்ன ஆச்சு? ஏன் கோபமா இருக்க?” என்று நடேசனின் தோளில் ஆதரவாக கைபோட்ட வண்ணம் வேலு கேட்க

“இவ்ளோ பெரிய ஸ்கூலுக்கு ஓனர்னா அதுக்கேத்த மாதிரி நடந்துக்க வேணாமா?”

“உங்க ஓனரைதான் திட்றியா? என்ன வழக்கம்போல டீசல் அடிச்ச பில்ல வச்சுகிட்டு எத்தனை கிலோமீட்டர் வண்டி ஓடுதுன்னு செக் பண்ணி சாவடிக்கிறானா?” Continue reading “பெரிய மனுசனா? – குறள்கதை”

வலியார்முன் மெலியார் – குறள்கதை

“சார்”

“வாங்க சக்தி, ரிசல்ட் முழுசா பார்த்துட்டிங்களா? நம்ம டிபார்ட்மென்ட் ஓவர் ஆல் எவ்ளோ பர்சென்டேஜ்?”

“ஒரு பிரச்சனை ஆகிருச்சு சார்”

“என்னாச்சு?”

“லேப் மார்க் என்ட்ரி பண்ணும் போது தப்பாகிருச்சு சார்”

“முதல்ல உட்காருங்க, என்னன்னு தெளிவா சொல்லுங்க” Continue reading “வலியார்முன் மெலியார் – குறள்கதை”

அருளே துணை – குறளுரை

யார்னே தெரியாதவர் கூட சுவாரசியமா பேசுன அனுபவம் இருக்கா? குடும்ப உறுப்பினர்களை தவிர்த்து எல்லோர் கூடவும் முதல்ல அப்படி பேசித்தான் பழக ஆரம்பிச்சுருப்போம். அதை கேட்கலை. ஒருத்தர் கூட பேச போறிங்க. அவரை பத்தின விவரங்களை கேட்டுக்க போறதில்லை. உங்களோட விவரங்களையும் பகிர்ந்துக்க போறதில்லை. ஏன் பேர் கூட சொல்ல போறதில்லை. இருந்தும் பேசறிங்க. எந்தெந்த இடத்துல இப்படி பேசுவோம்? அதிகம் வரிசைல நிக்கற இடங்கள்ல இது நடக்கும். ரேசனுக்கோ, ஏடிஎம்க்கோ நிற்கும் போது நேரத்தை கொல்றதுக்கு வேற வழி இல்லாதப்ப பேச ஆரம்பிப்போம். அவரும் அதே எண்ணத்துல இருந்தா அரட்டை அரங்கம் தான். எல்லோர்க்குமே இப்படி கூச்சமில்லாம புது மனுசங்களோட பேச வராது. அவங்க என்ன பன்னுவாங்க? கையோட ஒரு ஆளை துணைக்குனு கூட்டிட்டு போயிருவாங்க. துணைன்னா என்ன துணை? பேச்சுத்துணை. Continue reading “அருளே துணை – குறளுரை”

பொச்சாந்தார் – குறள்கதை

மனுசனை போட்டு உழப்பி எடுக்கறாங்கடா

டேய் இருடா, சாப்பிட உட்கார்ந்ததும் ஆரம்பிக்கற, என்ன வீட்ல செம அடியா?

வீட்டு பிரச்சனையே தேவலை, ரெண்டு நாள் கொஞ்சிட்டு, ஒருநாள் சண்டை போடறாங்க. அது பிரச்சனை இல்லை

பின்ன ஆஃபிஸ்லயா? இல்லையே, உன்னை விட அதிகமா திட்டு வாங்கற நானே புலம்பறது இல்லையே

அய்யய்ய, மச்சி என்னை பேச விடறா? இப்ப நான் புலம்பறன்னா அதுக்கு பிரச்சனைதான் காரணமா இருக்கனுமா? ஏன் குழப்பமா இருக்க கூடாதா?

என்ன குழப்பம்?

எப்படி வாழ்றதுன்னுதான் Continue reading “பொச்சாந்தார் – குறள்கதை”