வசையொழிய வாழ்வார் – குறளுரை

அதிகாரம்: புகழ் குறள் எண்:240
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய
வாழ்வாரே வாழா தவர்

உரை:
தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர்; புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர். Continue reading “வசையொழிய வாழ்வார் – குறளுரை”

யாக்கை பொறுத்த நிலம் – குறளுரை

அதிகாரம்: புகழ் குறள் எண்:239
வசைஇலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்

உரை:
புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும். Continue reading “யாக்கை பொறுத்த நிலம் – குறளுரை”

இசையென்னும் எச்சம் – குறளுரை

எந்த ஒரு விஷயத்துலயும் மூனு இடம் இருக்கு. பாசிட்டிவ், நெகட்டிவ், நியுட்ரல் அதாவது நடுநிலைமை. இப்போ அரசியல்னு எடுத்துக்கங்க, ஆளுங்கட்சி, எதிர்கட்சி இல்லை நடுநிலை. ஒரு கிரிக்கெட் மேட்ச்னு எடுத்துகிட்டா ரெண்டு டீம்ல ஒண்ணு இல்லை பொதுவா விளையாட்டை இரசிக்கறவங்க. எல்லா நேரத்துலயும் நடுநலைல நின்னு சமாளிக்க முடியாது. சந்தானம் காமெடி மாதிரிதான் ஒன்னு தலன்னு வை, இல்லை தளபதின்னு வை, அது என்ன தல தளபதின்னு வச்சுருக்க?ன்னு அடிவிழற இடமும் இருக்கு. Continue reading “இசையென்னும் எச்சம் – குறளுரை”

புகழ்பட வாழாதார் – குறளுரை

ஒரு விளையாட்டுல ஜெயிக்கலாம், இல்லை தோற்கலாம், வெறுமனே வேடிக்கை மட்டும் பார்க்கக்கூடாதுன்னு சொல்லுவாங்க, அதெல்லாம் முன்ன? இப்ப அதெல்லாம் ஒத்து வருமா? சொல்லுங்க, இப்ப பார்க்கறதுக்கு யாரும் இல்லைன்னா யாராவது விளையாடுவாங்களா? இப்ப கிரிக்கெட் தவிர மத்த விளையாட்டுங்க விழுந்துட்டு இருக்கறதுக்கும் முக்கிய காரணம் பார்வையாளர்கள் குறைஞ்சுட்டு இருக்கறதுதானே. அதனால நானாவது விளையாண்டேன் நீ சும்மா வேடிக்கை மட்டும் தானே பார்த்தன்னு யாரையும் சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது. Continue reading “புகழ்பட வாழாதார் – குறளுரை”

இரப்பார்க்கே ஈதல் – குறள்கதை

ஹலோ கார்த்தி

சொல்லுடா

மச்சான் கொஞ்சம் அர்ஜென்ட், அவசரமா ஒரு 3000 எனக்கு டிரான்ஸ்பர் பன்னுடா, சேலரி போட்டதும் திருப்பி கொடுத்துடறேன்

சரிடா, அனுப்பறேன்
என்று சொன்ன கார்த்திக்கிற்கு சுரத்தேயில்லை. Continue reading “இரப்பார்க்கே ஈதல் – குறள்கதை”

ஈதல் இசைபட வாழ்தல் – குறள்கதை

என்னடா, நானும் 4 நாளா பார்க்கறேன், ஆளே ஒரு மாதிரி இருக்க?

எப்படி இருக்கேன்?

தனியா உட்கார்ந்துக்கற? போனையே பார்த்துட்டுருக்க, மனசுக்குள்ள ஏதோ படம் ஓடற மாதிரி முகத்துல ரியாக்ஷனை மாத்திட்டே இருக்கியே? என்ன ஊருக்கு போனப்ப ஏதாவது சிக்கிருச்சா? இல்லை வீட்ல பார்த்து வச்சுட்டாங்களா? Continue reading “ஈதல் இசைபட வாழ்தல் – குறள்கதை”

தோன்றுக புகழொடு – குறள் கதை

கொஞ்சம் நல்லா யோசிச்சு பாருங்க, ஓரளவுக்கு விவரம் தெரிஞ்சதும் முதல்ல என்னவா ஆகனும்னு ஆசைப்பட்டோம்? எப்படியும் சுத்தி இருக்கவங்க சொல்லி சொல்லி டாக்டராகனுங்கற ஆசை வந்துருக்கும், சினிமா பார்க்க ஆரம்பிச்ச கொஞ்ச நாள்ல நடிகனாகனும்னு அதுலயும் நடிச்சா ஹீரோதான்னு ஆசைப்பட்டுருப்போம். அப்புறம் போலிஸ், இந்த மூனுல கண்டிப்பா குறைஞ்சது ஒரு விஷயத்தை ஆசைப்படாம இருந்துருக்க மாட்டோம். இதெல்லாம் சின்ன வயசு ஆசைகள், நிச்சயம் நிறைவேறி இருக்கனும்னு ஆசை இல்லை. Continue reading “தோன்றுக புகழொடு – குறள் கதை”

சாக்காடும் வித்தகர்- குறள் கதை

புதுமைப்பித்தன், இந்த பெயரை கேட்கறப்ப என்ன தோணுது?

அவரோட சிறுகதைகள்? எனக்கு அவரோட வாழ்க்கை அதுல இருந்த வறுமைதான் முதல்ல ஞாபகம் வருது. ஒருத்தருக்கு எழுத பிடிச்சுருக்கு, ஆனா எழுதிட்டிருந்தா மட்டும் எல்லாம் கிடைச்சுறாதுங்கற நிலைமை, எல்லாம் என்ன எதுவுமே கிடைக்காது, சொல்லப்போனா சமகாலத்துல அவருக்கு பெரிய அங்கிகாராம் கூட கிடைக்கலைன்னுதான் சொல்றாங்க, இருந்தாலும் அவர் எழுதனார், நீங்களா இருந்தா எழுதுவிங்களா? கொஞ்சம் யோசிங்க. Continue reading “சாக்காடும் வித்தகர்- குறள் கதை”

நீள்புகழ் – குறள் கதை

அப்பா, அப்பா, மரம் எப்படிப்பா பின்னாடி போகுது?

மரம் பின்னாடி போகலைப்பா, நாமதான் ட்ரெயின்ல முன்னாடி போய்ட்டுருக்கோம்

அப்பா ட்ரெய்ன் ஸ்பீடா? கார் ஸ்பீடாப்பா?

அம்மாகிட்ட கேளுப்பா, அப்பாக்கு தூக்கம் வருது

என்கிட்ட தள்ளிவிடாதிங்க, நான் தூங்குனாதான் நாளைக்கு உங்களுக்கு சமைச்சு போட முடியும்

Continue reading “நீள்புகழ் – குறள் கதை”

உயர்ந்த புகழ் – குறள் கதை

அம்மா என்னம்மா இது?

என்னடா?

இந்த சட்டையை ஏன் துவைச்ச?

அழுக்கு சட்டையை துவைச்சா என்னடா?

துவைக்கலாம், அதுக்குனு கஞ்சி போட்டு துவைப்பியா? பாரு எவ்வளவு மொடமொடன்னு இருக்கு Continue reading “உயர்ந்த புகழ் – குறள் கதை”