சாதலின் இன்னாதது – குறள்கதை

“ஏங்க, என்னங்க இது? இப்பவும் கண்ணை கசக்கிட்டு இருந்தா நல்லாவா இருக்கு?”

“கண் கலங்கிருச்சா?”

“ம்”

“பெரிய தப்பு பண்ணிட்டேன்”

மாதவனால் அழுகையை அடக்க இயலவில்லை. ஆண்கள் அழக்கூடாது என காலம்காலமாக சொல்லி வளர்க்கிறார்கள். எதற்கென்று தெரியவில்லை. ஒருவேலை பெண்களிடம் இருந்து பல உரிமைகளை பறித்ததற்காக அழுகின்ற உரிமையை எடுத்துக் கொண்டார்கள் போலும். ஆனாலும் அம்மாக்களிடமும் மனைவிகளிடமும் மனம் விட்டு அழுது தங்கள் ஆற்றாமையை தீர்க்கும் ஆண்கள் நிறைந்த உலகம் இது. அவர்களைப் போல மடி தந்து தாங்கும் உறவுகளிடம் மட்டுமே தங்கள் சுமைகளை ஆண்களால் இறக்கி வைக்க இயலும்.

“இன்னும் எத்தனை நாளைக்கு இதையே சொல்லிட்டிருப்பிங்க”

“இல்லம்மா, நான் அப்பா பேச்சை கேட்டுருக்கனும், தேவையில்லாம இருக்கற பணத்தை எல்லாம் கொண்டு போய் கண்டவன் கூட வியாபாரம் பன்றேன்னு விட்டுட்டு வந்துட்டேன்”

Continue reading “சாதலின் இன்னாதது – குறள்கதை”

தாமே தமியர் உணல் – குறள்கதை

நான் கல்லூரியில் படிக்கும் பொழுது நடந்தது…

அர்ரியர்ஸ் மட்டும் நடந்து கொண்டிருந்ததால் அன்று அறையில் தனியாக இருந்தேன். என்னிடம் சுத்தமாக பணம் இல்லை.

அழுக்கு துணிகளில் தேடிய பொழுது 10ரூபாய் கிடைத்தது. இது இரவு உணவுக்கு தாங்கும். நாளை அறைத்தோழன் ஒருவன் வருவான், அவனிடம் வாங்கி கொள்ளலாம் என்று இருந்தேன். Continue reading “தாமே தமியர் உணல் – குறள்கதை”

ஈத்துவக்கும் இன்பம் – குறள் கதை

 “மச்சி, நைட் ஷோ படத்துக்கு வரியா?”

“போலாம், டிக்கெட் போட்ரு”

இரவுக்காட்சிகள் என்பது முக்கியமாய் குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பவர்களுக்காகவும் குடும்பமே இல்லாதவர்களுக்காகவும் தான். பின் எந்த குடும்பம் விடிய விடிய தியேட்டருக்கு வந்து விழித்து இருக்க போகிறது? இதோ இப்போது இரவுக்காட்சிக்கு டிக்கெட் எடுப்பவர்களும் பிரம்மச்சாரிகள்தான். வெளியூரில் வேலை பார்ப்பவர்கள். குடும்பத்திற்கு அனுப்புவது போக மீதமிருக்கும் பணம் இவர்களின் தேவைகளுக்கும் சரியாக இருப்பதால் வார இறுதியில் சினிமா கட்டாயமான ஒன்றாய் மாறிவிட்டது.

“வேற யாராவது வருவாங்களா? முன்னாடியே சொல்லிடு, புக் பண்ணதுக்கு அப்புறம் சொல்லாதே”

“தர்ஷன்கிட்ட கேட்கறேன் இரு” Continue reading “ஈத்துவக்கும் இன்பம் – குறள் கதை”

பசிஎன்னும் தீப்பிணி – குறள் கதை

வேலை பார்க்குமிடத்தில் எல்லோர்க்கும் ஒரு குரு அமைவார்கள். வேலை சம்பந்தமான விசயங்களை மட்டுமல்ல. வாழ்க்கையில் பல விசய்ங்களை சொல்லித் தருவார்கள். என்ன ஒரு சிறப்பு என்றால் சில நேரம் குருவை விட சிஷ்யனுக்கு வயது அதிகமாக கூட இருக்கும். சிலர் மட்டும் தான் ஈகோ பார்க்காமல் வயதில் இளையோரிடம் என்று பார்க்காமல் பயனுள்ளவற்றை கேட்டு தெரிந்து கொள்வார்கள்.

அது போன்ற ஒருவர்தான் ராஜசேகர். மனிதனுக்கு எப்போதும் தன்னைவிட இளையோர்களிடம் பழகுவதில் விருப்பம் அதிகம். ஏதோ ஒரு புத்தகத்தில் உங்கள் நட்புவட்டமே உங்கள் வயதையும் தோற்றத்தையும் முடிவு செய்யும் என படித்ததில் இருந்துதான் இப்படி. அப்படி பழகியதில் மிக முக்கியமானவன் நிவாஷ். நன்றாக பழக கூடியவன். அவன் வந்தாலே இவருக்கு உற்சாகம் கூடும். ஆனால் அவனிடம் இவர் அதிகம் செய்வது புலம்பலாகத்தான் இருக்கும். நிவாசும் சலிக்காமல் கேட்டுக் கொள்வான்.

ராஜசேகருக்கு 30ஐ கடந்ததில் இருந்தே தினசரி சாப்பாடு முடிந்ததும் பீடாவைப் போல் மாத்திரைகளை விழுங்க வேண்டிய நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஆளானார். அப்படி விழுங்குகையில்தான் நிவாஷ் வந்தான்.

“என்ன சார்? இவ்ளோ மாத்திரை முழுங்கறிங்க? கலர்கலரா இருக்கு?”

“கடுப்பேத்ததாத நிவாஷ், வயித்து புண், அல்சர் மாதிரி, உனக்கு இதெல்லாம் வந்தாதான் புரியும், ஆனா உனக்குலாம் வராது”
 “ஏன் சார்? என்னாச்சு?”

Continue reading “பசிஎன்னும் தீப்பிணி – குறள் கதை”

அழிபசி தீர்த்தல் – குறள் கதை

“அம்மு, ஏதாவது வேணுமா? எல்லாம் இருக்குல்லை? என்று கொஞ்சம் அக்கறையாக கேட்ட கார்த்திக்கை முறைத்தாள் சக்தி, “இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலை? எத்தனை தடவை கேட்பிங்க? உங்க ஃபிரன்ட் குடும்பத்தோட வருவார், டின்னர் முடிச்சுட்டு போகப்போறாங்க, அவ்ளோதானே? எனக்கு தெரிஞ்சு எதுவும் வாங்க தேவையில்லை, ஏன் பதறறிங்க?” Continue reading “அழிபசி தீர்த்தல் – குறள் கதை”

பசியாற்றல் – குறள் கதை

அது ஒரு சிறிய பள்ளி. கிராமத்தில் துவங்கப்பட்ட சிபிஎஸ்சி பள்ளி. அது ஆரம்பித்த பின் கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரம் உயர்ந்ததோ இல்லையோ, அக்கம்பக்கம் இருந்த பெண்களுக்கு தரமான வேலை கிடைத்தது. சம்பளம் குறைவுதான். ஆனால் பெண்கள் வேலைக்கு செல்வது சம்பளத்திற்காக மட்டும் தானா? வேலை என்ற ஒன்று இல்லாவிட்டால் நாட்டில் பல பெண்களுக்கும் சமூகத்திற்குமான தொடர்பு சுத்தமாய் அறுபட்டு விடும். குடும்பத்தினருக்காக மட்டும் தினசரி 24 மணி நேரம் செலவளித்து தனக்கென நேரத்தை ஒதுக்காத பெண்களின் மன அழுத்தம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்லும்.

இதே வீட்டில் என்ன பிரச்சனை என்றாலும் அனைத்தையும் மறந்து மனம் கொஞ்சம் காற்று வாங்குவதற்கு பெண்களுக்கு  உதவும் பல வேலை தரும் இடங்களில் இப்பள்ளியும் ஒன்று. அங்கும் சமமில்லாத வயதுடைய தோழிகளுடன் அரட்டை அடிப்பதை விட வேறு என்ன சுவாரசியம் கிடைத்துவிடும் இப்பள்ளியில்?

“என்ன மேடம் இது?”

“எது?”

“உங்க பாட்டில்ல இருக்க தண்ணீர் ஒரு மாதிரி இருக்கு?”

“அது தண்ணீர் இல்லை, ஜீஸ், லெமன் ஜீஸ்”

“ஜீசா, எதுக்கு?”

“இன்னைக்கு சனிக்கிழமை, நான் விரதம்?” Continue reading “பசியாற்றல் – குறள் கதை”

இரந்தவர் இன்முகம் – குறள் கதை

“என்னங்க”

மனைவி அழைக்கும் தொனியில் இருந்தே ஏதோ குழப்பம் என்பதை புரிந்து பார்த்துக் கொண்டிருந்த டீவியை அனைத்துவிட்டு திரும்பினார் ராஜேந்திரன்.

“ஏம்மா”

“லோகு வந்ததுல இருந்து ஒரு மாதிரியா இருக்கான் கவனிச்சிங்களா?”

“ஆமா, அமைதியா இருக்கான், கவனிச்சேன், ஏதாவது சண்டை போட்டியா?”

“ஏங்க மாசத்துக்கு ஒருக்கா வரவன்கிட்ட நான் ஏங்க சண்டைக்கு நிக்க போறேன்?”

“என்னன்னு கேட்டியா?”

“கேட்டேன், ஒன்னும் சொல்ல மாட்டேங்றான், பஸ்ல வரும்போது கூட நல்லாதான் பேசுனான், சாயந்திரமே நைட்டுக்கு என்னென்ன சாப்பிட வேணும்னு லிஸ்ட் சொன்னான், ஆனா ஒழுங்காவும் சாப்பிடலை” Continue reading “இரந்தவர் இன்முகம் – குறள் கதை”

குலன்உடையான் – குறள் கதை

“கோதை, எங்கே இருக்க?” என்ற வண்ணம் உள்நுழைந்தார் இரத்னம்.

“இங்கதான், சமையகட்டுல, நீங்க வர வண்டிசத்தம் கேட்டுதான் தண்ணி எடுத்தார போனேன்”

வாங்கி குடித்தவர்
“என்ன இது பத்திரிக்கை? யார் வந்தா?”

“நம்ம குமரன் தான், கமலா மகன்”

“அவனுக்கா கல்யாணம்?”

“அவன் தங்கச்சிக்காமாம்” Continue reading “குலன்உடையான் – குறள் கதை”

கொளல்தீது

குறள் 222/1330
சில கேள்விகளுக்கு விடையே கிடையாது. இப்படி சொன்னதும் உங்களுக்கு “கோழிலருந்து முட்டை வந்ததா? முட்டைலருந்து கோழி வந்ததா?”ங்கற கேள்வி ஞாபகம் வந்தா நிம்மதியா இருக்கிங்கன்னு அர்த்தம், இல்லாம “ஆண்டவன் ஏன் நம்மளை மட்டும் சோதிக்கிறான்?” இல்லை “ஏன் என் காதலை அவ புரிஞ்சுக்க மாட்டேங்கறா?” மாதிரியான கேள்விகள் தோணுனா கொஞ்சம் கஷ்டம். Continue reading “கொளல்தீது”

ஈவதே ஈகை

“டேய், எங்கடா வாசல்ல பைக்க காணோம்? நீ உள்ள இருக்க? பைக் எங்கடா?”

வெளியூரில் வந்து வேலை பார்க்கையில் கடைசி வரை போகாததில் ஒன்று திருட்டு பயம். அது ஏனோ மனம் புதிதாக ஒன்றை பார்க்கையில் சந்தேகத்துடந்தான் பார்க்கிறது. சரவணனின் பைக் இல்லாமல் அவன் மட்டும் அறைக்கும் இருப்பதை பார்க்கவும் சூர்யாவிற்கு பதட்டம் தானாக வந்தது.

“பதறாதடா, எங்க கம்பெனி எலக்ட்ரிசியன் குமார் தெரியும் இல்லை, அவன் எடுத்துட்டு போயிருக்கான், நைட்டுக்குள்ள கொண்டு வந்து கொடுத்துருவான்.”

“டேய் மச்சி, கிரேட் டா, ஒரு அசிஸ்டென்ட் மேனேஜரா இருந்துகிட்டு இவ்ளோ சகஜமா உனக்கு கீழே வேலை பார்க்கறவங்களோட பழகற, என்னாலலாம் முடியாதுப்பா.”

“எல்லாம் ஒரு காரணமாதான் டா.” Continue reading “ஈவதே ஈகை”