செல்ல மழையும் நீ! சின்ன இடியும் நீ! – குறள்கதை

“டேய் எங்கடா வச்ச?”

“தெரிஞ்சா எடுக்க தெரியாதா எனக்கு, நீ நகரு முதல்ல”

“ஆமா, நான் நகர்ந்தா நீ எடுத்து கிழிச்சுருவ, பேசாம ஓரமா நில்லு, நான் தேடறேன்”

“சரி தேடு, ஆனா எதுவும் சொல்லாம தேடு”

“ஆ..ன் சொல்றாங்க, எருமைமாடு, கொஞ்சமாவது பொறுப்பு இருக்காடா உனக்கு? இன்னைக்கு ஆடிட் பன்றாங்கன்னு தெரியுமில்லை, நேத்தே எல்லாத்தையும் எடுத்து வச்சா என்ன உனக்கு?”

“ஏய், இப்படி பொறுமிகிட்டே செய்யறதுன்னா நீ ஒன்னும் தேட வேண்டாம், நகரு, என் வேலையை நான் பார்த்துக்கறேன்”

“கிழிச்ச, நீ போய் உன் லேப்ல எங்கயாவது வச்சியா பாரு”

“எதுக்கு? நான் போனதுக்கு அப்புறம் இங்கே எடுத்துட்டு நான் ஒரு வேலைக்கும் நான் லாயக்கில்லைன்னு திட்டவா? நீ நகரு, என் வேலையை நான் பார்த்துக்கறேன்”

நிமிர்ந்து முறைத்த வண்ணம் அவன் கேபினை விட்ட நகர்ந்தாள் உமா. Continue reading “செல்ல மழையும் நீ! சின்ன இடியும் நீ! – குறள்கதை”

எனக்கு என் காதல்தான் முக்கியம் – குறள்கதை

“நீ பார்த்தியா?”

“ஆமா மச்சான்”

“டேய் இது விளையாட்டு சமாச்சாரம் இல்லை, என் குடும்பத்தோட மானப்பிரச்சனை, தெரியும்ல”

“டேய் எனக்கு தெரியாதா? விளையாட்டுக்கு பேசற விஷயமாடா இது? நான் உன் தங்கச்சியையும் அந்த கிருஷ்ணன் பயலையும் ஒண்ணா பார்த்தேன்டா”

“இருக்கட்டும்டா, எங்களுக்குள்ள பகைன்னு ஆனாலும் இவ சின்ன பொண்ணு, ஏதோ பழைய பழக்கத்துக்கு மரியாதைக்கு பேசிட்டுருந்துருப்பா, அதை வச்சு தப்பா முடிவெடுத்துறக் கூடாதுன்னுதான் பொறுமையா யோசிக்கிறேன்”

“இங்கே பாரு மச்சான், எனக்கு அப்படி ஒன்னும் வயசாயிடலை, எனக்கும் இளவயசுதான், நல்லது கெட்டது எனக்கும் தெரியும். பவானிசாகர் முன்னுக்க ரெண்டு பேரும் கை கோர்த்துகிட்டு போனதை பார்த்துட்டுதான் பதறி சொல்றேன். வெறுமனே பேசிகிட்டு இருந்துருந்தா உன்கிட்ட நான் சொல்லிருக்கவே மாட்டேன்” Continue reading “எனக்கு என் காதல்தான் முக்கியம் – குறள்கதை”

காதலின் சமத்துவம் – குறள்கதை

“பிளிஸ்டா, என் செல்லம்ல”

“என்ன ஆச்சு உனக்கு? ஏன் மாமா இப்படி பன்ற?”

“நான் இது வரைக்கும் உன்கிட்ட ஏதாவது இப்படிக் கேட்டுருக்கனா?”

“அதனால தான் கேட்கறேன், நீ ஏன் இப்படி கேட்கற? உன்னை எவ்ளோ நல்லவன்னு நம்பிட்டுருக்கேன் தெரியுமா?”

“ஹேய், என்ன? லவ் பன்ற பொண்ணுகிட்ட முத்தம் கேட்டா நான் கெட்டவனாகிருவனா?”

“நீ கேட்கலனாலுமே நான் குடுப்பன் மாமா, ஏன் இது வரைக்கும் கொடுத்தது இல்லையா? அதுக்காக இப்பவா? மணி என்ன பார்த்தியா, விடியக்காத்தால 3.30 மணிக்கு வீட்டுக்கு முன்ன வந்து நின்னுகிட்டு போன் பண்ணி கூப்டா நான் எப்படி வருவேன்” Continue reading “காதலின் சமத்துவம் – குறள்கதை”

உறங்கா விழிகள் -குறள் கதை

“சத்தியம் பண்ணு நம்பறேன்”

“ஏன் திவ்யா? என் மேல நம்பிக்கை இல்லையா?”

“உன் மேல நம்பிக்கை இல்லாமலா உன்னை காதலிக்கிறேன்? எனக்கு உன் மேல சந்தேகம் இல்லை, உன் பயத்து மேலதான் சந்தேகம்”

“நான் பயப்படுவேன், இல்லேன்னு சொல்லலை, ஆனா நம்பு, நான் வருவேன்”

“என் மேல சத்தியம் பண்ணு”

“இது என்னை காயப்படுத்துது, நான் நாளைக்கு வரலைன்னா இனி எப்பவும் உன் முகத்துலயே முழிக்க மாட்டேன், உன் மேல மட்டும் இல்லை, நான் நேசிக்கற யார் மேலயும் சத்தியம் பண்ண மாட்டேன்னு உனக்கே தெரியும்”

“உண்மையை சொல்லனும்னா எனக்கு ரொம்ப பயமா இருக்கு ராகவ், அதான் இப்படி உன்னை கேட்டு என்னை திடப்படுத்திக்கறேன்”

“எல்லா பாரத்தையும் தூக்கி என் மேல போட்டுட்டு நீ போய் தூங்கு. நாளைக்கு சந்திப்போம்” Continue reading “உறங்கா விழிகள் -குறள் கதை”

மாலை என் வேதனை கூட்டுதடி – குறள் கதை

மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி

டீக்கடையில் சன்மியுசிக்கில் ஓடும் பாடலை பார்த்து விட்டு ஹரி, சூர்யாவிடம்

“ஆமாமா” என்றான்.

“என்னடா?”

“அந்த பாட்டை சொன்னேன்டா, ரொம்ப சரியா எழுதி இருக்காங்க”

“ஏன் அப்படி என்ன இருக்கு?”

“அது என்னவோ இருந்துட்டு போகட்டும், ஒரு நண்பனா சொல்றேன், லவ் லாம் ஜென்மத்துக்கும் பண்ணிடாதே” Continue reading “மாலை என் வேதனை கூட்டுதடி – குறள் கதை”

காமக் கடும்புனல் – குறள் கதை

தினசரி செய்யும் வேலைகளையெல்லாம் முடித்து விட்டு, வீட்டிற்க்கு வந்த பின், சட்டையை கழட்டும் போது, கண்ணாடியை பார்த்த வண்ணம் உங்கள் காதலை நினைத்து, உங்களையே அறியாமல் முகம் சிரிப்புக்கு போவதை பார்த்த அனுபவம் உண்டா? கொஞ்ச நாட்களாக நான் அப்படித்தான் தனியாக இருக்கும் பொழுது சிரித்துக் கொண்டு இருக்கிறேன். ஒரு மாதிரி புது சந்தோஷமாக இருக்கிறது. என்ன சொல்ல? தனியாக இருக்க சொன்னால் போன், டீவி இல்லையென்றால் செத்து விடுவேன். ஆனா இப்போது அப்படி இல்லை, மனம் தனிமையைத்தான் தேடுகிறது. எதையோ யோசித்து சிரிக்க தோணுகிறது. குறிப்பாக அவள் ஞாபகம்தான் அதிகம். அவளை நினைப்பதே அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. Continue reading “காமக் கடும்புனல் – குறள் கதை”

Love Actually (2003) – குறளும் படமும்

வாழ்வில் நமக்கான இணையை காதல் எப்போது நம் கண்ணில் காட்டும் என்பதனை சொல்வது மிகக் கடினம். என் பெயர் டேவிட். என் வயது, அது எதற்கு? அதற்கும் காதலுக்கு சம்பந்தம் இல்லை என நினைக்கிறேன். ஆனால் என் வேலையை தெரிந்து கொள்வது என் கதையை தெரிந்துக் கொள்ள அவசியம் என நம்புகிறேன். நான் புதிதாய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள என் நாட்டின் பிரதமர். இந்தியாவை போல பிரதமர் என்றதும் 60க்கு மேல் தான் என நினைத்து விடாதீர்கள். குத்து மதிப்பாக 30-40க்குள் என் வயதை வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு வித சித்தாந்த பிடியில் சிக்கி, சிறுவயது முதல் வாழ்க்கையே போராட்டமாகவும் அரசியல் களமாகவுமே கழிந்தது எனக்கு. என் அக்கா கூட பேசும் பொழுது என் திருமணத்தை பற்றி நச்சரிப்பது உண்டு. எனக்கு காதலிலோ திருமணத்திலோ விருப்பம் இல்லாமல் இல்லை. நேரம் இல்லை என்பது ஒரு காரணம், இன்னொன்று அனைத்தையும் தாண்டி என்னை இதுவரை யாரும் ஈர்க்கவில்லை. அது நான் பிரதமராகும் வரைதான். Continue reading “Love Actually (2003) – குறளும் படமும்”

நாணமும் நல்லாண்மையும் – குறள்கதை

யாரு? நவீனா? லவ்வா? நம்பவே முடியலை

முதல்ல என்னாலயும் நம்ப முடியலை

யாரைடா?

ஐஸ்வர்யாவை

அந்த கோழிக்குஞ்சா? எப்படிடா? Continue reading “நாணமும் நல்லாண்மையும் – குறள்கதை”

காமம் உழந்து வருந்தினார்க்கு – குறள்கதை

“வேற வழியே இல்லையா கார்த்திக்?”

“இல்லை ஜோதி, எனக்கு வேற எதுவும் தோணலை, எனக்கு உங்க அப்பா பேசுனதை விட எங்க அப்பா பேசுன வார்த்தை ஒவ்வொன்னும் செருப்புல அடிச்ச மாதிரி இருந்தது. அவரை தப்பு சொல்ல முடியாது, என் தப்புதான், அவர் காலடிலயே கிடந்தது என் தப்புதான்”

“கேட்கறேன்னு தப்பா நினைக்காதடா, உன்னால முடியும்னு நம்பறியா?”

“ஹிம், நம்பிக்கை இருக்குன்னுலாம் பொய் சொல்ல விரும்பலை, ஆனா செஞ்சே ஆகனும், ஏதாவது ஒரு வழியில, நீ கவலைப்படாதே, என்னை நம்பு, நாம ஆசைப்பட்ட மாதிரி வாழ்வோம்”

“கண்டிப்பா, நீ போய்ட்டு போன் பண்ணு, செலவுக்கு பணம் வேணுமா?”

“இல்லை ஜோதி, எனக்கு இனிமேல் தேவைப்பட்டாலும் நான் வேலைக்கு போற வரைக்கும் உன்கிட்ட பணம் வாங்க மாட்டேன், என்னை தப்பா நினைக்காதே, நான் போய் சேர்ந்துட்டு உனக்கு போன் பன்றேன்.” Continue reading “காமம் உழந்து வருந்தினார்க்கு – குறள்கதை”

கடலன்ன காமம் – குறள் கதை

தூக்கம் வருதா?

இல்லைடா சொல்லு

ம்

ஏன் உனக்கு வருதா?

தூக்கம் வரலை, ஆனா…

என்ன வேறெதும் வேலை இருக்கா?

நைட் 10 மணிக்கு எனெக்கென்ன வேலை? கொஞ்சம் தனிமைய தேடுது மனசு Continue reading “கடலன்ன காமம் – குறள் கதை”