காதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு- தொ(ல்)லை/குறும்படம்

அன்பர்களுக்கு வணக்கம், எப்பொழுதும் என் விருப்பம் குறும்படம் தான். கதையே இல்லாமல் இரண்டரை மணி நேரம் சினிமா எடுக்கிறார்கள், ஆனால் தான் சொல்ல வேண்டிய விசயத்தை 15 நிமிடங்களுக்குள் சொல்ல எவ்வளவோ உழைக்கும் இந்த குறும்பட இயக்குனர்களுக்கு ஒரு பாராட்டை தெரிவித்துக் கொண்டு நாம் பதிவிற்கு செல்வோம்.
தொ(ல்)லை- இந்த வார்த்தைக்கான அர்த்தம் எத்தனை பேருக்கு புரியுதோ இல்லையோ டார்ச்சர்னு தூய தமிழ்ல சொன்னா எல்லாருக்கும் புரியும்னு நினைக்கறேன். அதே மாதிரி இந்த டார்ச்சர லவ் பன்னாதவங்களால முழுசா புரிஞ்சுக்க முடியாது. காதல் இன்பமானது, எல்லா பிரச்சனையையும் மறக்கவைக்க கூடியதுங்கறது உண்மைதான். ஆனா அந்த நல்ல காதல் எல்லோருக்கும் கிடைக்கறது இல்லை, அதிகமா சண்டை மட்டுமே போடற காதல் தான் இப்ப பரவி கிடக்கு.
அந்த மாதிரி சந்தேக படற, சண்டை மட்டுமே போடற சாவடிக்கற காதலால் பாதிக்க பட்டவந்தான் கதையோட ஹீரோ. அவன் எப்படி எப்படிலாம் அவன் ஆள்கிட்ட போன்ல பாட்டு வாங்கறாங்கறதை சீன் பை சீனா காட்டராங்க. அந்த சாங் கொஞ்சம் அதிகம் தான், இட்ஸ் ஓகே.

எல்லாத்தையும் வெறுத்து தற்கொலை பன்னிக்க போற நம்ம ஹீரோவ அப்ப கூட போன போட்டு சந்தேகப்பட்டு சாவடிக்கற காதலிகிட்டருந்து தப்பிக்க ஹீரோ ஒரு முடிவெடுக்கறார், அது என்னங்கறதை படத்தை பார்த்து தெரிஞ்சுக்கங்க, ஒரு 15 நிமிசம் தானே, படத்தை பார்த்துருங்க.
மறக்காம கமெண்ட் அ போட்டுருங்க.

“என்ன சொல்ல வரன்னா” – கதையில்லாத வித்தியாசமான குறும்படம்

அன்பர்களுக்கு வணக்கம். எனக்கு தெரிந்து நான் எழுதிய பதிவில் குறுகிய காலத்தில் அதிகம் பேர் பார்த்தது “ஊருக்கு 4 பேர்” “ராமசாமி” குறும்படங்களை பற்றிய பதிவுகள் தான். என்னதான் கோடிகோடியா செலவு பன்னி படம் எடுத்தாலும் சில நேரத்துல கதை ஊத்திகிச்சுனா மொக்கையா போய்டும், அந்த வகைல குறும்படம் பல வகைல பரவாயில்லை, ஏற்கனவே “சொத்தை பொன்னு” குறும்படத்துலயும் பெருசா கதை இல்லனாலும் ஜனங்ககிட்ட நல்லா போய் சேர்ந்தது. அதே மாதிரி கதையில்லாத ஆனா நல்லாயிருக்க ஒரு குறும்படத்தை பத்தி பார்ப்போம்.
படத்தோட பேர் “என்ன சொல்ல வரேன்னா”. தலைப்பு வித்தியாசமா இருக்கேனு பார்த்தேன். கண்டிப்பா கதை இருக்காது, ஏதாவது காமெடியா முடிக்க போறாங்கங்கறது படம் ஆரம்பிச்சவுடனேயே தெரிஞ்சது. அதேதானுங்க.
எடுத்ததும் ஒரு ரெஸ்டாரண்ட், ஒருத்தர் வர்ரார், கெத்தா உட்கார்ரார், கையில வச்சுருக்க ஏதோ பேப்பர் அ பார்க்கறார், சர்வர்கிட்ட சலிச்சுகிட்டே ஆர்டர் பன்றார். அப்பப்ப பக்கத்துல உட்கார்ந்துருக்க ஃபிகர் அ சைட் அடிக்கறார்(இவர் நம்ம ஆளுங்கோ)

திடிர்னு ஒருத்தன் அவருக்கு குறுக்க வர்ரான், நாகரீகமா பேசி பக்கத்துல உட்கார்ந்து பேசும் போதுதான் இவ்வளவு நேரம் வளைச்சு வளைச்சு சைட் அடிச்ச நம்ம ஆளு ஒரு திரைப்பட இயக்குனர்னு தெரியுது.
எடுத்ததும் “உங்க படம்லாம் ஏன் இவ்வளவு மொக்கையா இருக்கு?” கேட்டு கடுப்ப கெளப்ப ஆரம்பிச்சு வரிசையா கேள்வி கேட்டு அசிங்க படுத்தறார், அதோட நிறுத்தாம கடைசியா ஒரு அவமானத்தை குடுக்கறார் பாருங்க, அந்த டைரக்டர் நொந்து போய் எழுந்து போயிடறான், இப்பதாங்க அந்த ஃபிகர் முகத்தை முழுசா காட்டறாங்க, இதுக்காக தான் நான் காத்துட்டு இருந்து முழு படத்தையும் பார்த்தேன்.
 கேமராவா மட்டும் அடிக்கடி ஆட்டிட்டே இருக்காங்க, மத்தபடி படம் எனக்கு பிடிச்சுருக்கு, ஒரு ஃபிகர் முகத்தை சைட்லருந்து மட்டும் காட்டி கடைசி வரைக்கும் ஆடியன்ஸ் அ வெய்ட் பன்ன வச்சு முழு படத்தையும் பார்க்க வச்ச டைரக்டருக்கு ஒரு சபாஸ், கடைசியா அரசாங்கத்தோட சட்டம் (RIGHTS OF INFORMATION) பத்தி ஸ்லைட் போட்டு விளம்பர படுத்தறாங்க. பாருங்க, நல்ல படம்தான்.
படத்தை பார்க்கனுமா?

வந்துட்டிங்க, படிச்சுட்டிங்க, அப்படியே கமெண்ட் அ போட்ட்டுட்டு , மேல டாப் ல பாருங்க FACEBOOK LIKE பட்டன் இருக்கு, அதை க்ளிக் பன்னி உங்க நண்பர்கள்கிட்ட பகிர்ந்துக்கங்க.

“ராமசாமி- 50% நக்கல்+50%லொல்லு”- குறும்படம்

அன்பு நண்பர்களுக்கு என் மகிழ்ச்சியான வணக்கங்கள், என் மகிழ்ச்சிக்கு காரணம் என்னன்னு கேட்டிங்கனா அது நீங்க தாங்க, ஆமாங்க எப்பவுமே என் ப்ளாக் ல 100-120 தான் அதிக பட்ச விசிட்டர் வந்துருக்கறது, ஏப்ரல் முதல் நாள் அனுஷ்காக்கு ஆக்சிடென்ட்னு ஒரு பிட் அ போட்டேன் பார்த்தீங்களா அன்னைக்குதான் கூட்டம் 150 அ தாண்டுனுச்சு. இன்னைக்கு என்னடான்னா நான் எந்த பதிவும் போடாமயே சாயந்தரத்துக்குள்ள 160 க்கு மேல லிஸ்ட் எகுறுது. ரொம்ப சந்தோஷமா இருக்குங்க.
சரி வந்தது வந்துட்டோம், ஒரு விமர்சனத்தையும் போட்டுருவோம். இப்ப நாம பார்க்க போறது நாம் ஏற்கனவே பார்த்த “ஊருக்கு 4 பேர்” குறும்படத்தோட டீம் தயாரிச்ச “ராமசாமி”ங்கற குறும்படத்தை பத்திதான்.
படம் ஆரம்பிக்கும் போது எழுத்து போடறப்ப புகை பேக்ரவுண்ட்ல “சரஸ்வதி சபதம்” பட டைட்டில் மியுஸிக் போடுவாங்க பாருங்க, அங்கயே அவங்க நக்கல் ஆரம்பிக்குது. ஹீரோ அறிமுக படுத்திட்டு பார்க்கறவங்களுக்கு ஒரு எச்சரிக்கை குடுப்பாங்க, அது என்னன்னா “இவனுக்கு எப்படி வாழ்க்கைல ஒரு லட்சியம் கிடையாதோ அதே மாதிரி இந்த படத்துல கதையும் கிடையாதுங்க, இஷ்டமில்லைனா பார்க்காதிங்க”னு. அப்புறம் எப்படிடா படம் எடுத்திங்கங்கற கேள்விலயே படத்தை பார்த்தேன்.
 ஒன்னுமில்லிங்க, படிச்சுட்டு வேலைக்கு போகாம வீட்டுல இருக்க ஹீரோ, சிவாஜிகனேசன் காலத்துல இருந்து இதுதான் ஹீரோவோட வேலைங்கறது நமக்கு தெரியும். அவன் வீட்ல பன்ற அலும்பல்களை வரிசையா ரசிக்கற மாதிரி காட்டுவாங்க. அவனை பத்தி நல்லா தெரிஞ்ச அவங்கப்பா ஹீரோக்கு தெரியாமயே ஒரு கம்பெனிக்கு அப்ளை பன்னி அடுத்த நாள் போய் அட்டென்ட் பன்ன சொல்லுவார்.
அடுத்த நாள் கட்டாயம் ஃப்ரென்ட்ஸ் கூட படத்துக்கு வரென்னு ஹீரோ வாக்கு குடுத்துருப்பார். சரி இன்டர்வியு சும்மா பேருக்கு அட்டென்ட் பன்னிட்டு வரலாம்னு போன உள்ளே போற ஒவ்வொருத்தனும் முகத்தை தொங்க போட்டுகிட்டே வந்துருவாங்க. “இவங்களுக்கே கிடைக்காத வேலை நமக்கெங்க கெடைக்க போகுது?” நு உள்ளே ஹீரோ போகும் போது எழுத்து போடுவாங்க, படம் அவ்ளோதான்னு நினைச்சுராதீங்க, இதுக்கப்புறம்தான் படம் ஆரம்பிக்குது.
இன்டர்வியுல ஹீரோ அடிக்கற ஒவ்வொரு டைமிங் கவுண்டருக்கும் நான் அடிமைங்க, அவ்வளவு நக்கலா இருக்கும், உங்களால சிரிக்காம இருக்க முடியாது. க்ளைமாக்ஸ் ல ஒரு பிரபலம் வருவார், அவர் யாருங்கறது சஸ்பென்ஸ். எவ்வளவு டென்ஷன்ல இருந்தாலும் அதெல்லாம் மறந்து கட்டாயம் சிரிப்பிங்க.
படத்தை பார்க்கனுமா?
வழக்கமான டயலாக் தான், வந்ததும் வந்தீங்க, அப்படியே கமெண்ட் போட்டுட்டு மத்தவங்க கூட பகிர்ந்துக்குங்க.

ஊருக்கு 4 பேர்- AWARD WINNING SHORT FILM/குறும்படம்

 அன்பு நண்பர்களுக்கு வணக்கம். பொதுவா பார்த்தீங்கனா சினிமால எடுத்துக்கற கருத்தையே திரும்ப எடுத்து குறும்படத்துல பன்னும் போது அது பெருசா ஜெயிக்கறதில்லை. அந்த நேரத்துல சமுகத்துல எந்த பிரச்சனை பெருசா பேசப் படுதோ அதை ஜனங்க ரசிக்கற விதத்துல பன்னா தானா ஜெயிச்சுருது, ரசிக்கற மாதிரி எடுக்கறது வேற ஒன்னுமில்லைங்க காமெடியா எடுக்கறதுதான் சொல்றேன், ஏன்னா பல பேர் குறும்படம்னா தெறிச்சு ஓடுறதுக்கு காரணம் அதுல காட்டற தேவையில்லாத அதிக பட்சமான சோகம் தான்.சரி நம்ம படத்தை பார்ப்போம்.
“ஊருக்கு 4 பேர்”- படம் ஆரம்பிக்கும் போது சத்தியமா நான் எதிர்பார்க்கலீங்க, இந்த டீம் எடுத்துருக்க கான்செப்ட் ‘எம்பளம்’ பத்தி இருக்கும்னு, ஏன்னா அத வச்சு எப்படி எடுக்க முடியும்னு யாருமே யோசிக்கலை போல, 
இந்த எம்பளம்னா என்னன்னு சொல்லவே இல்லை பாருங்க, அதாவது ஒரு குறிப்பிட்ட தொகைய பணமா கட்டி ஒருத்தருக்கு கீழே நாம் சேரும் போது நாம கட்டுன பணத்துக்கு 50%க்கான ஏதாவது ஒரு பொருளை குடுத்துருவாங்க, அப்ப மீதி பணத்தை எப்படி திருப்பி எடுக்கறதுனா நாம அலைஞ்சு திரிஞ்சி நமக்கு கீழே ஆள் சேர்த்தனும், அவங்க கட்டுற பணத்துல நமக்கு கமிஸன் கிடைக்கும், அவங்களுக்கு கீழே ஆள் சேர சேர நமக்கு கமிஸன் கிடைச்சுகிட்டே இருக்கும். இந்த மாதிரி உழைக்காம சம்பாதிக்க ஆசைப்பட்டுதான் எல்லாரும் இதுல போய் மாட்டுறது.
படம் ஆரம்பத்துல பெங்களூர்ல சாப்ட்வேர் கம்பெனில மாசம் 30000க்கு மேல சம்பாதிச்சுட்டு குடியும் கும்மாளமுமா இருக்க 4 பேரை காட்டறாங்க, ஒவ்வொருத்தரை பத்தியும் தனித்தனியா சொல்றாங்க,அதுல ஒருத்தனை அவன் கூட வேலை பார்க்கற ஒருத்தர் ரெகமண்ட் பன்னி இந்த எம்பளம் சம்பந்தபட்ட நிகழ்ச்சிக்கு அனுப்பறார். 
அங்கே போய் அங்கே ஒருத்தன் கோட் போட்டுகிட்டு பேசுற பேச்சுல மயங்கி 30000 பணத்தை கட்டி டீம்ல சேர்ந்துடறான், அதுக்கு அப்புறம் அவனுக்கு கீழே ஆள் சேர்த்த விசாரிக்கும் போதுதான் அவன் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் அதுல சேர்ந்துருக்கறது தெரியுது.
யார இதுல சேர்த்து விடறதுனு தெரியாம அவங்க எப்பவுமே ‘மாக்கான்’னு கூப்புட்ற அவங்க ஊர்லருந்து வேலை தேடி வந்து தங்கி இருந்த ஒருத்தனை சிக்க வைக்கலாம்னு ப்ரோக்ராம்ல போய் உட்கார வைக்கறாங்க,அவன் ஏமாந்தானானு படத்தை பார்த்து தெரிஞ்சுக்கங்க. ஆனா செம நக்கல் நையான்டிங்க, மிஸ் பன்னிடாதிங்க.
அப்புறம் யாருங்க அந்த மாக்கானை நடிச்சவரு? கலக்கிருக்கார் போங்க, இந்த டீம் எடுத்த இன்னோரு குறும்படம் “ராமசாமி“. இதை பத்தி அடுத்த பதிவு கண்டிப்ப போடுவேன்.
படத்தை பார்க்கனுமா?
வந்துட்டீங்க, படிச்சுட்டீங்க, அப்படியே கமெண்ட் அ போட்டு SHARE பண்ணிட்டு போங்க.

மாலை நேரம்-குறும்படம்

 அன்பு நண்பர்களுக்கு வணக்கம், சாதாரணமா ஒரு படம் பார்த்து முடிக்க 2 மணி நேரத்துக்கு மேல ஆகும், ஹாலிவுட்னா பராவாயில்லை ஒரு 1.30 மணிக்குள்ள பார்த்துடலாம், அந்த அளவுக்கு கூட டைம் இல்லாதப்ப பார்க்கறதுக்குனுதான் குறும்படங்களை நெட் ல இறக்கி வச்சு பார்க்க ஆரம்பிச்சேன். அந்த வகைல எனக்கு ரொம்ப பிடிச்ச காதல் அ அருமையா சொன்ன குறும்படம் இந்த “மாலை நேரம்”.
ஒரு நாள் எதெச்சையா ஒவ்வோரு சேனல் ஆ மாத்திட்டு இருக்கும் போது நம்ம கேப்டன் டீவில “கூத்துப்பட்டறை” னு ஒரு ப்ரோக்ராம், சரியா பேர் நினைவுல இல்லை தப்பா இருந்தா மன்னிச்சுக்குங்க. அதுல பாதிலருந்துதான் இந்த குறும்படத்தை பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடிச்சுருந்தது.அதுக்கு அப்புறம் நெட் ல தேடி எடுத்தேன்.
கதைனு பார்த்தீங்கனா பெருசா கருத்து சொல்ற மாதிரிலாம் இல்லைங்க, ஒரு சராசரி வாலிபனுக்கு போன் மூலமா ஒரு பொன்னோட அறிமுகம் கிடைக்குது. அவனும் ரொம்ப எதிர்பார்ப்போட போய் நேர்ல பார்க்கும் போது அது ஸ்கூல் படிக்கற சின்ன பொன்னுனு தெரியுது, அவனுக்கு என்ன பன்றதுனு தெரியாம குழம்பி, எரிஞ்சு விழுந்து எல்லாத்தையும் அந்த பொன்னு பொறுத்துகிட்டு எப்படி அவனை லவ் பன்ன வைக்குதுங்கறதுதான் கதை.
கண்டிப்பா பார்க்கறவங்களை  நெகிழ வைக்கற மாதிரி நிறைய விசயம் இந்த படத்துல இருக்கு. YOUTUBE  ல தேடும்போது அவார்ட் வின்னிங் சார்ட் ஃபில்ம் லிஸ்ட் ல இந்த படம் வரும். கண்டிப்பா பாருங்க.
படத்தை பார்க்கனுமா?

மறக்காம உங்க நண்பர்கள்கிட்ட பகிந்துக்குங்க.

முகப்புத்தகம்/FACEBOOK-குறும்படம்

அன்பு நண்பர்களுக்கு வணக்கம். நான் ரசிச்ச குறும்படம் பத்தி எழுதி ரொம்ப நாள் ஆச்சு. நான் வாரத்துக்கு 4 குறும்படமாவது பார்த்துடறேன். என்னை இது மாதிரி பார்க்க தூண்டுன கலைஙர் டீவி ல வர “நாளைய இயக்குனர்கள்” நிகழ்ச்சிக்கு நன்றிய சொல்லிகிட்டு உள்ள போவோம்.
முகப்பத்தகம்/FACEBOOK-இதுதான் படத்தோட பேர். இது என்னை பெருசா ஈர்க்கலை, ஏனா இந்த மாதிரி பார்க்காம லவ் பன்றது பத்தி நிறைய குறும்படம் வந்துருச்சு. 
என்னை கவனிக்க வச்ச 2 விசயம். ஒன்னு இதுல நடிச்சுருக்க ஹீரோ வேற யாருமில்லை. நம்ம ஆல் ரவுண்டர் சிவகார்த்திகேயன் தான், ரெண்டாவது இதுல நடிச்சுருக்க இன்னோரு பிரபலம் என்னோட ஃபேவரட் எழுத்தாளர் பாலகுமாரனோட பையன் சூர்யா பாலகுமாரன், இவர் எப்ப பெரிய திரைல படம் பன்ன போறார்னு நான் காத்துட்டுருக்கேன், இந்த குறும்படத்துலயும் நடிப்பு இல்லாம டைரக்ஸனலயும் கொஞ்சம் இறங்குனதா கேள்வி பட்டேன்.
படத்தோட கதைக்களம் ஃபேஸ்புக் தான், அதாவது பார்க்காம காதலிக்கறது, அதை எப்படி சில மோசமானவங்க அவங்களுக்கு சாதகமா பயன்படுத்திக்கறாங்கனும் உண்மையான காதலும் வந்து போய்கிட்டுருக்குங்கறதயும் அழகா ரொம்ப நகைச்சுவையா கலாட்டாவா சொல்லிருப்பாங்க.
அதுலயும் அந்த 4 நண்பர்களோட அறிமுகமும் அவங்களை பத்தி சொல்றதுக்காக வச்சுருக்க பாட்டுல அவங்க அடிக்கற கூத்தும். கண்டிப்பா எல்லாரையும் ரசிக்க வைக்கும்.
படத்தை பார்க்கனுமா?
வந்ததும் வந்தீங்க, கமெண்ட் போட்டு மத்தவங்ககிட்டயும் பகிர்ந்துக்கங்க.

chatting-ல் figure ஐ கரெக்ட் செய்வது எப்படி? “சொத்தை பொன்னு” குறும்படம்


அன்பு நண்பர்களே, நானும் ஏதாவது உருப்படியா சொந்தமா எழுதனும்னு தாங்க நினைக்கறேன், எதுவும் வர மாட்டெங்குது, ஏதாவது தோணும் போது கரென்ட் இருக்க மாட்டேங்குது, முதல்ல வீட்ல சொல்லி ups போடனும், உண்மைலியே நீங்க நம்பறிங்களோ இல்லையோ நான் கொஞ்சம் உருப்படியா பேசுவேன், எழுதுவேன்னு கொஞ்சம் பேரி சொன்னதை நம்பி  BLOG ஆரம்பிச்சுட்டேன், ஆனா எந்த மாதிரி விசயம் எல்லாருக்கும் பிடிக்கும் நு தெரியாமமுழிச்சுட்டு இருக்கேன், விடுங்க எப்படியாவது நல்ல நல்ல வலைப்பதிவர்களோட BLOG படிச்சு படிச்சாவது கத்துக்கறேன்,  நம்ம தலைவர் சந்தானம் சொன்ன மாதிரி “PRACTICE MAKE A MAN PERFECT”, சரி கதைக்கு போலாம்.
இன்னைக்கு ஒரு குறும்படத்தை பத்தி பார்ப்போம், பெருசா ஒன்னும் மெசேஜ் சொல்லலை, குறும்படம் னாலே ஒன்னு மெசேஜ் இருக்கும் இல்ல லவ் அ பத்தி இருக்கும்,’சொத்தை பொன்னு’ங்கற டைட்டில் கொஞ்சம் புதுசா இருந்தது, எப்படியும் காமெடியா ஏதாவது ட்ரை பன்னிருப்பானுங்கனு பார்த்தேன்.
எடுத்ததும் ஒரு காலேஜ் கேண்டின் ல ஒரு கேங் அ காட்றாங்க, ஒருத்தன் சாப்பாட்டு ராமன், இன்னோருத்தன் பொன்னுங்களை பார்த்ததுக்கே பொங்கறவன், இந்த கேங்ல ஒருத்தன் புதுசா ஒரு பொன்னை மடக்கி கடலை போட்டுட்டு இருக்கான், ‘எப்புடிறா புடிச்ச?’னா “FACEBOOK” மூலமானு சொல்லி என்னென்ன மாதிரி ஸ்டெப் எடுக்கனும்னு கரெக்ட் பன்ன சொல்லி குடுக்கறான்.

 இதை கேட்டு வீணாப் போகத்தான் என்னை மாதி அப்பாவி பசங்க ( நான் அப்பாவி தாங்க)நிறைய பேர் இருக்காங்களே, அந்த அப்பாவியும் ஃஃபேஸ்புக் ல தேடி தேடி ஒரு பொன்னை ஃப்ரெண்ட் பிடிச்சு இராப்பகலா கடலை போட்றான், நேர்ல பார்க்கவும் ஒத்துக்க வச்சுட்றான். போய் நேர்ல பார்க்கும் போது ஒரு ட்விஸ்ட், என்னங்கறத, நேர்ல பார்த்துக்கங்க.ரொம்ப பெரிய ட்விஸ்ட் லாம் எதிர்பார்த்துறாதிங்க, என்னை பொறுத்த வரைக்கும் உண்மைலியே கதையே இல்லாம, ஒரு குறும்படத்தை போர் அடிக்காம சொன்னதுக்கு பாராட்டியே ஆகனுங்க, நீங்க படம் பார்த்து திட்டறதுனா தாராளமா என்னையோ இல்லை இந்த படம் எடுத்தவனையோ திட்டிக்கலாம், தப்பு இல்லை,
உங்கள் திட்டுக்கள் வரவேற்க படுகின்றன, நானும் எப்படியாவது ஏதாவது எழுத கத்துக்கனும்னு நினைக்கறேன், முடிய மாட்டேங்குது, ஆனா கத்துக்காம விட மாட்டேன்.
அது வரைக்கும் என் மொக்கையான பதிவுகளை நீங்க படிச்சுதான் ஆகனும்.
இப்ப போறேன்.
ஆனா திரும்பி
………………..
…………………
……………………..
வருவேன்.
நன்றி

என் friend மச்சான்- இன்று நான் ரசித்த குறும்படம்


 வணக்கம் நண்பர்களே,இதோ எனது 3 வது பதிவு
ஏதோ ஒன்றை தினமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உறுதியாக இருக்கிறேன்.
இன்று அதற்காகதான் என் நண்பன் மொபைலில் பார்த்த ஒரு குறும்படத்தினை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
“என் ஃப்ரெண்ட் மச்சான்”
குறும்படம் என்றாளே ஏதாவது ஒரு மெசேஜ் சொல்லுவாங்கனு தெரியும்,
ஆனா டைட்டில் அ பார்த்தா மெசேஜ் சொல்ர மாதிரி தெரியலியே,
ஒரு வேளை விஜய் நடிச்ச நண்பன் படத்த கிண்டல் பண்ணிருப்பாங்களோனு பார்க்க ஆரம்பிச்சேன். ஆமாங்க அதே டைட்டில் சாங்,  அதே மாதிரி ஃப்ரெண்ட் அ தேடி இன்னோரு ஃப்ரெண்ட் வந்துருக்கறத பார்த்ததும் கடுப்பாய்டுச்சு,
ஆனா கொஞ்சம் என் காலேஜ் வாழ்க்கை  நினைவுக்கு வந்ததால தொடர்ந்து பார்க்க ஆரம்பிச்சேன்.
அனேகமா காலேஜ் ஸ்டுடண்ஸ் ஆ தான் இருப்பாங்கனு நினைக்கறேன், முடிஞ்ச வரைக்கும் செலவு பண்ணிருக்காங்க,2 பேர் எப்படி எந்த டேஸ்ட்டும் ஒத்து போகாம ஃப்ரெண்ட்ஸ் ஆனாங்கனு ஆரம்பிக்குது
 இதுல வர ஒரு ஃப்ரெண்ட் க்கு ஒரு மேனரிசம் இருக்கு, எப்ப பார்த்தாலும் ஃப்ரெண்ட் அ பின்பக்கமா குத்தற ஊசி பாபு, வழக்கமா ஃப்ரெண்ட்ஸ்க்குள்ள ஏன் சண்டை வரும், அதேதாங்க, ஃபிகருதான் காரணம் அடிச்சுகிட்டு பிரிஞ்ச்சுடறாங்க, அப்புறம் ஒரு ஃப்ரெண்ட் விட்டு குடுக்கவும் இன்னோருத்தற்கு செட் ஆய்டுது.

 இதுல என்ன மெசேஜ் இருக்குனு நீங்க கேட்கறது எனக்கு புரியுது, கிளைமாக்ஸ் அ பாருங்க, கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும், சிரிக்காம இருக்க முடியாது . ஆரம்பத்துல மொக்கையாதான் இருக்கும் இப்பவே சொல்லிடரேன்.
அப்புறம் முக்கியாமந விசயம், படிச்சா திட்டியாவது comment போடுங்கப்பா, போர் அடிக்குது. இந்த குறும்படத்தை பார்க்க கீழே சொடுக்கவும்