பணக்காரன் மேலும் பணக்காரனாகுறான். ஏழை இன்னும் ஏழையாகுறான் – வள்ளுவர் பார்வையில்

இரஜினிகாந்த் ‘சிவாஜி’ படத்தில் ஒரு இடத்தில் சொல்வார் தெரியுமா? “Rich get richer, Poor get poorer. பணக்காரன் மேலும் பணக்காரனாகுறான். ஏழை இன்னும் ஏழையாகுறான்” கருப்பு பணத்தோட தீங்கு குறித்து பேசும் போது இந்த வசனம் வரும். இந்த படம் வரை சங்கர் படத்துக்கு வசனம் சுஜாதாவாதான் இருந்தது. ஆனால் மேற்சொன்ன rich get richer வாத்தியாரோட சொந்த சரக்கு கிடையாது. காரல்மார்க்ஸ் புத்தகங்கள்ல உபயோகப்படுத்துனது. இப்ப பிரச்சனை அது இல்லை. அதுல சொல்லபடற விஷயங்கள்தான். Continue reading “பணக்காரன் மேலும் பணக்காரனாகுறான். ஏழை இன்னும் ஏழையாகுறான் – வள்ளுவர் பார்வையில்”

மனிதன் எதற்கு அடிமை? – குறளுரை

நியுயார்க்கில் ஒரு முதலீட்டார்கள் கூட்டம் நடைபெறுகிறது. உலகெங்கும் இருந்து முதலீட்டாளர்கள் வந்திருக்கிறார்கள். இந்தியாவை சேர்ந்த ஒருவர் அரங்கில் மேடையேறி தன் நிறுவனம் பற்றியும் அடுத்தக் கட்ட திட்டங்களை பற்றியும் விளக்குகிறார். அமெரிக்கர்கள் முதலீடு விசயத்தில் அவ்வளவு சீக்கிரத்தில் யாரையும் நம்பிவிட மாட்டார்கள். அதிலும் இந்தியன் என்றால் ஏற இறங்க பார்ப்பார்கள். ஏனென்றால் அவர்களை பொறுத்தவரை மட்டுமல்ல, உலகம் முழுவதும் இந்தியன் என்றால் நல்ல திறமைசாலி வேலையில், தொழிலில் அல்ல. ஆனால் இந்த மாநாட்டில் பேசிய தொழிலதிபர் அத்தனையும் உடைத்து அங்கு கூடியிருந்த அனைவரது நம்பிக்கையையும் சம்பாதிக்கிறார். எல்லாம் நல்லபடியாக முடிந்து விட்டது என அவர் கிளம்ப எத்தனிக்கும் பொழுது ஒருவர் கேட்கிறார்.

“கடைசியாக உங்களை எப்போது கண்ணாடியில் பார்த்தீர்கள்?” Continue reading “மனிதன் எதற்கு அடிமை? – குறளுரை”

எனக்கு எதற்கு கடவுள்? – குறளுரை

கடவுள் நம்பிக்கை இருக்கா? மதங்களை இழுக்க வேண்டாம். இறை என்றொரு விஷயம் இருப்பதை நம்புகிறீர்களா? பலர் கோவிலுக்கு செல்லும் பழக்கம் இல்லை, ஆனால் கடவுள் மறுப்பாளன் கிடையாது என்ரு சொல்லி கேட்டு இருக்கிறேன். அவர்களுக்கு மட்டுமல்ல. நாள் தவறாமல் செல்லும் பழக்கமுடையவர்களுக்கு கூட பதில் தெரியுமாென்று தெரியவில்லை. எதற்கான பதில் என்கிறீகளா?

“எதற்கு கடவுளை வணங்க வேண்டும்? அவர்தான் படைத்தார் என்றே இருக்கட்டும். அதை ஏற்றுக் கொள்கிறேன். எதற்கு வணங்க வேண்டும்? எனக்கு அவரது அற்புதங்களில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, அது எனக்கு தேவை இல்லை என நினைக்கிறேன். நான் ஏன் வணங்க வேண்டும் என்று சொல்ல முடியுமா?” Continue reading “எனக்கு எதற்கு கடவுள்? – குறளுரை”

கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே – திருக்குறள் உரை

“மயக்கம் என்ன” படம் போல் என்னை மிகவும் பாதித்த படம் போல் வேறு எதுவும் இல்லை. அந்த படம் வந்த பிறகுதான் பலர் DSLR கேமிரா வாங்கிக் கொண்டு சுற்றினார்கள். அது நம் அனைவருக்குமான படம். இங்கு நம் அனைவருக்கும் ஒரு கனவு இருக்கும். ஒரு இலட்சியம் இருக்கும். அது சிறு வயதிலேயே முளை விடும். யாரையாவது பார்த்தோ, இயல்பாகவோ தானாய் உள்ளுக்குள் தோன்றும். அப்படி ஒரு கனவு, இலட்சியம் இருக்கிறது என்று சொன்னால் முதல் கேள்வி என்னவாகத் தெரியுமா இருக்கும் “அதில் எவ்வளவு வருமானம் வரும்?” என்பதுதான். அந்தப் படத்தில் கூட தனுஷ் வைல்ட் லைஃப் போட்டோகிராஃபர் ஆக முயற்சிப்பார். அத்தொழிலில் கூட வாய்ப்பு அமைந்தால் நிறைய வருமானம் வர வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எல்லா தொழிலுக்கும் எல்லா துறைக்கும் அந்த வாய்ப்பு இருக்கிறதா? Continue reading “கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே – திருக்குறள் உரை”

இவர்கள் இதைத்தான் செய்ய வேண்டுமா? தேவையில்லை – குறளுரை

நான் கல்லூரியில் பணிபுரிகையில் தேர்வு நடக்கும் பொழுது என் துறையை சேர்ந்த மாணவர்கள் பிட் அடிப்பதை பிடித்து தந்தால் பிரியாணி வாங்கி தருவதாக அறிவிப்பேன். என் மாணவர்கள் மீது அவ்வளவு நம்பிக்கை இருந்தது. படித்து வந்து எழுதுவார்கள் என்று. அதிலும் சிலர் மாட்டி எனக்கு செலவு வைப்பார்கள். இது போன்ற அறிவிப்புகளை பல நிறுவனங்கள் வெளியிடும். தங்கள் சிஸ்டத்தின் மீது இருக்கும் நம்பிக்கையை அறிவிக்க ஒரு விளம்பரமாக வெளியிடப்படும். பல தளங்கள் கூகுள், யாகூ, முகநூல் போன்றவைகளும் அறிவிப்பார்கள். அவர்களது தளத்தை யாராவது ஹேக் செய்து காட்டினால் பரிசு என்று. என்ன பரிசு என்று கேட்கிறீர்களா? பணம் தான் கொடுப்பார்கள். அதிகமில்லை. சில கோடிகள் தான். இப்படி செய்பவர்களை வொயிட் ஹேட் (தொப்பி) ஹேக்கர் என்கிறார்கள். Continue reading “இவர்கள் இதைத்தான் செய்ய வேண்டுமா? தேவையில்லை – குறளுரை”

தவம் பண்ணா என்ன வேணா செய்யலாம் தெரியுமா? – குறளுரை

“யார் பெரிய பணக்காரன்?” என்று வகுப்பில் ஒரு ஆசிரியர் கேட்டார். நாங்களும் பில்கேட்ஸ், அம்பானி என தெரிந்த பெயர்களை சொல்லிக் கொண்டிருந்தோம். அவர் கேட்ட கேள்வியை நாங்கள் சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என புரிந்ததும் விளக்குவதற்காக குட்டிக் கதை ஒன்றைக் கூறினார்.

ஒரு மாலை வேளையில் ஒரு பணக்காரன் தன்னைப்போல கோடிகோடியாக சம்பாதிக்கும் சக பணக்காரனுக்கு போன் செய்தாராம். சம்பிரதாய விசாரிப்புகளுக்கு பிறகு “என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என ஒருவர் கேட்க, மற்றவர் “இன்றைய வருமான, செலவுகளை கணக்கிட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றாராம். அதற்கு மற்றவர் “போடா ஃபூல், உங்கிட்ட எவ்வளவு பணம் இருக்குன்னு எண்ண முடிஞ்சா நீயெல்லாம் என்னடா பணக்காரன்?” என்று பரிகசித்தாராம். இப்ப்போது புரிந்திருக்கும் என நினைக்கிறேன். Continue reading “தவம் பண்ணா என்ன வேணா செய்யலாம் தெரியுமா? – குறளுரை”

அனைவருக்கும் பொதுவானது யோகா – குறளுரை

பிராணயாமம் – கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இந்தியா மட்டுமன்றி பல நாடுகள் பரிந்துரைத்ததன் பேரில் ஐநா சபையில் ஒப்புதல் பெற்று சர்வதேச யோகா தினத்தை கொண்டாட துவங்கிவிட்ட நிலையில் அனைவருக்கும் தெரிந்துருக்கும் என நம்புகிறேன். எனக்கு அதனை குறித்து என் பொறியியல் கல்லூரி பேராசிரியர் ஒருவர் அறிமுகப்படுத்தினார். எனக்கு மட்டுமல்ல, வகுப்பில் இருந்த அனைவருக்கும் தியானம், பிராணயாமம் குறித்து சொல்லித் தருவார். அவருக்கு நாங்கள் “பாபாஜி” என்றுதான் பெயர் வைத்திருந்தோம். யாராவது தனியாக சிக்கினால் அவ்வளவுதான். பல விஷயங்களை, நல்ல விசயங்களைத்தான் சொல்லித் தருவார். ஆனால் இதெல்லாம் ஏறுகின்ற வயதா அது? புதிதாக வந்திருந்த நோக்கியா N series போனை வைத்து குறும்படம் எடுக்க முயற்சித்த காலம் அது. இப்போது நினைத்தால் பேசாமல் அவரிடமே கற்று இருக்கலாம் என்று தோன்றுகிறது. Continue reading “அனைவருக்கும் பொதுவானது யோகா – குறளுரை”

எது தவம்? – குறளுரை

அஷ்டமாசித்துகள் பற்றி கேள்வி பட்டதுண்டா? கரிமா, லகிமா, மகிமா என 8 சித்துகள். உண்மையா பொய்யா என தெரியவில்லை. பள்ளி பருவத்தில் “தியானம்” என்ற ஒரு புத்தகம். எதெச்சையாக கையில் கிடைத்தது. அதில் இந்த சித்துகளை பற்றி விளக்கி கூறியிருக்கவும் மனதில் மிகவும் ஆர்வம் அதிகரித்தது. எதற்கு தேவையில்லாமல் படித்து கஷ்டப்பட்டு தேர்வெழுதி நல்ல மதிப்பெண் வாங்கி, போராடி நல்ல வேலைக்கு சென்று சம்பளத்திற்கு நாயாய் வேலை பார்க்க வேண்டும்? பேசாமல் எட்டில் ஏதாவது ஒரு சித்து வசமானால் கூட சாப்பாட்டிற்கு பஞ்சம் இருக்காதே என்று ஒரு யோசனை வந்தது. ஆம், பள்ளி பருவத்தில் என்ன பெரிய இலட்சியம் இருக்கும்?

Continue reading “எது தவம்? – குறளுரை”

ஒரு கன்னத்தை அடித்தால் மறுகன்னத்தை காட்டலாமா? – வள்ளுவர் பார்வையில்

இணையத்தில் தேடுபொறியில் “அரேபியாவில் ஆடு மேய்த்தவர்” என தேடி பாருங்கள். ஒருவர் வருவார். அவர் யாரென்றால் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று ஏமாந்து அங்கு இருக்கும் சில மிருகங்களிடம் அடிமையாக சிக்கிக் கொண்டு ஆடு மேய்த்து கஷ்டப் பட்டவர். ஒரு வழியாக இந்தியா வந்த பின் சும்மா இருக்கவில்லை. தன்னை போல யாரும் ஏமாந்து விடக் கூடாது என்பதற்காக தன் பெட்டியில் அனைவரும் படிக்கும் வண்ணம் “அரேபியாவில் ஆடு மேய்த்தவன்” என எழுதி வைத்து விழிப்புண்ர்வினை ஏற்படுத்துகிறார். யாரேனும் அவரைப் போல் அடிமையாக சிக்கிக் கொண்டால் அவர்களை மீட்க அவர்களது குடும்பத்தினருக்கு உதவுகிறார்.

ஒரு படத்தில் வடிவேலு சாலையில் சென்று கொண்டிருப்பார். அங்கு இரு அண்ணன் தம்பி சண்டையிட்டுக் கொண்டிருக்க, விலக்க போய் வாய் உடைக்கப் பட்டு வருவார். வடிவேலை முன்பே எச்சரித்து தடுத்திருக்க கூடிய ஒருவர் தடுக்காமல் விட்டதற்கு காரணமாக “ஏற்கனவே என் வாய் உடைஞ்சு போய்தான் உட்கார்ந்துருக்கேன்” என்பார். அதாவது “எனக்கே உடைஞ்சுருச்சு. உன்னை மட்டும் எதுக்கு காப்பாத்தனும்?” என்பது போல Continue reading “ஒரு கன்னத்தை அடித்தால் மறுகன்னத்தை காட்டலாமா? – வள்ளுவர் பார்வையில்”

நல்லவங்களை ஆண்டவன் ஏன் சோதிக்கிறான்? – குறளுரை

“நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான், ஆனா கை விட மாட்டான், கெட்டவங்களுக்கு நிறைய கொடுப்பான், ஆனா கை விட்ருவான்” நல்ல வசனம் இல்லையா? பாலகுமாரன் எழுதியது, பாட்ஷா படத்திற்காக. உண்மையா இது? உண்மைதான். வெறுமனே நல்லவர்களுக்கு சிரமப்படாமல் கொடுத்தால் அதற்கு மதிப்பிருக்காது. சோதனையும் சிரமங்களும் உழைப்பும் தான் மிகப்பெரிய அடையாளமாகும். சென்ற தலைமுறையில் துருபாய் அம்பானி மிகவும் புத்திசாலித்தனமாக உழைத்து அடைந்த இடத்தை அதற்கு முன்பு கைவசம் வைத்திருந்த டாட்டாவின் வாரிசுகள் கஷ்டபட்டா அந்த இடத்திற்கு வந்தார்கள்? இப்போது அந்த இடத்தை அடைய அதானி போராடி உழைத்துக் கொண்டிருக்கிறார். தற்போது முதலிடத்தில் இருக்கும் அம்பானி சகோதரர்கள் உழைப்பது அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக என்றாலும், இந்த இடத்தை பெறுவது அவர்களுக்கு கடினமாகவா இருந்தது? ஏற்கனவே அவரது தந்தை துருபாய் ஏற்படுத்தி வைத்திருந்த அரியாசனம் தானே அது. Continue reading “நல்லவங்களை ஆண்டவன் ஏன் சோதிக்கிறான்? – குறளுரை”