ஊடுதல் காமத்திற்கு இன்பம் – குறள்கதை

“ஆமா, கீதாகிட்டதான் பேசுனேன். அதுக்கு என்ன இப்ப?”

“என்ன சிரிச்சு சிரிச்சு பேசறிங்க?”

“ஏன் நான் சிரிச்சு பேசுனா உனக்கென்ன?”

“என் பிரண்ட்கிட்ட உங்களுக்கென்ன சிரிப்பு வேண்டி கிடக்கு?”

“ஹேய் இதுல என்ன இருக்கு? ஜாலியா பேசுனா, சிரிச்சேன்”

“அவ பேசுவா, அவளுக்கு கல்யாணம் ஆகலை. உங்களுக்கு ஆகிருச்சு இல்லை. அப்புறம்?”

“இது என்னடி வம்பா போச்சு? கல்யாணம் ஆனா ஆம்பளைங்க யாரும் சிரிச்சு பேசக் கூடாதா?” Continue reading “ஊடுதல் காமத்திற்கு இன்பம் – குறள்கதை”

விடியாத இரவு வேண்டும் உன்னுடன் – குறள்கதை

இணையத்தில் மூழ்கி இருந்தான் பிரகாஷ். நீண்ட நாட்களுக்கு பிறகு கல்லூரி நண்பர்களின் குருப் உயிரோடு இயங்கிக் கொண்டிருந்தது. அனைவருக்கும் தெரியும், எந்த வாட்சப் குருப்பும் துவங்கிய 10 நாட்கள் ஆரோக்கியத்துடன் இருந்து, பின் படுத்த படுக்கையாகி “குட்மார்னிங், குட் நைட், பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என கடைசிகால மூச்சை விட்டு விட்டு கொஞ்சம் கொஞ்சமாய் கோமாவிற்கு போய், பின் அப்படியே இறந்து விடும். அடுத்து அதற்கு உயிர் வருவதற்காக ஏதாவது சிறப்புக் காரணம் தேவைப்படும். அது யாராவது நண்பன் ஒருவரின் திருமணத்திற்கு செல்ல திட்டமிடுதலாகத்தான் பெரும்பாலும் இருக்கும். இம்முறையும் அப்படித்தான். கல்லூரி நண்பன் ஒருவனின் திருமணத்திற்கு செல்வது குறித்து பேச துவங்கிய நண்பர்களுடன் நீண்ட நேரம் அரட்டை அடித்துக் கொண்டிருந்தான். Continue reading “விடியாத இரவு வேண்டும் உன்னுடன் – குறள்கதை”

என் அன்பு காதலா? எந்நாளும் கூடலா? – குறள்கதை

மல்லிக்கைப்பூவும் பட்டுப்புடவையும் சேர்ந்து தாக்கினால் என்னவாகும் ஆண் மனம்? தாங்குமா? காதல் என்னும் நீர்நிலை நிரம்பி காமம் என்னும் கரையை உடைக்க முட்டத் துவங்கும் தருணமாக அன்று அமைந்தது. வீட்டில் இருந்து ஒன்றாகத்தான் கிளம்பினார்கள். அப்போது கூட விமலுக்கு எதுவும் வித்தியாசமாக படவில்லை. மண்டபத்தில் தான் உள்ளுக்குள் ஏதோ மாற்றம் நிகழ்வதை உணர்ந்தான். திருமணம் என்பதே ஒரு கொண்டாட்ட நிகழ்வுதானே. அதிலும் நண்பர்களின் திருமணம் என்றால் எப்படி இருக்கும். இந்த திருமணத்தில் சிறப்பு என்னவென்றால் மணமக்கள் மோகன் – சுகன்யா முறையே விமல்-மதுமிதா தம்பதியின் நண்பர்கள். அதனால் மற்ற உறவினர்களின் விசேஷ நிகழ்விற்கு செல்வது போல் அல்லாமல் வழக்கத்தை விட மிகவும் உற்சாகமாய் கிளம்பினார்கள். Continue reading “என் அன்பு காதலா? எந்நாளும் கூடலா? – குறள்கதை”

ஊடலில் தோற்பவர் கூடலில் வெல்வார் – குறள்கதை

“இஷ்டம்னா இரு, இல்லை கிளம்பி உங்க அப்பா வீட்டுக்கு போயிடு”

“என்னை ஏன் போக சொல்றிங்க?”

“சரிம்மா, நீ இருந்துக்கோ, நான் போறேன்”

“எங்கே போறிங்க?”

“எங்கேயோ போறேன், உனக்கென்ன?”

“எனக்கென்னவா? ஏன் பேச மாட்டிங்க? எப்படியாவது என்னை விட்டு ஒழிஞ்சா போதும்னு ஆகிருச்சுல்ல?”

“நான் அப்படி சொன்னனா?”

“இதை தனியா வேற சொல்லனுமா? 2 வருசத்துலயே சலிச்சுட்டனா?” Continue reading “ஊடலில் தோற்பவர் கூடலில் வெல்வார் – குறள்கதை”

கூடலின் ஊடல் இன்பம் – குறள்கதை

“இனி என்கிட்ட வந்து வழியாத என்ன?”

“ஓகோ நான் வந்து வழியறனா? அப்ப நீ வந்து பேசறதுக்கு பேர் என்ன?”

“ஹேய் இங்க பாரு, இப்படியே பேச்சை வளர்த்துட்டு இருக்காதே, இவ்ளோ சொல்றனே உனக்கு உரைக்கலை, கிளம்பு”

“எனக்கு இது தேவைதான், இந்த பக்கம் வந்தனா செருப்பால அடி”

சில எல்லைகளை நாம் எல்லோரிடமும் கடப்பதில்லை. எப்படி துரோகம் செய்வதற்கு முதலில் நம்பிக்கையை சம்பாதிப்பது அவசியமோ, அது போல் தான் கோபம் காட்ட அவர் மீதான் உரிமையை சம்பாதித்திருக்க வேண்டும். நட்பில் முழு உரிமையும் ஆண் – பெண் இடையே அமைவது அபூர்வம். அப்படி அமைகையில் அந்த உறவு வேறு ஒன்றாக பரிணமித்திருக்கும். எனக்கும் அப்படித்தான் தோன்றியது. இதோ அபர்ணா, நான் தனிமையில் அப்பு என்று அழைப்பேன். அது வெளியாகி அனைவரும் கூப்பிட துவங்கி அவள் கடுப்பாகி இப்போதெல்லாம் நானே  கூப்பிடுவதே இல்லை. Continue reading “கூடலின் ஊடல் இன்பம் – குறள்கதை”

காதலியிடம் தோற்றல் இன்பம் – குறள்கதை

“பேசாதிங்க, இதே நான் செஞ்சுருந்தா என்ன பேச்சு பேசி இருப்பிங்க?”

“….”

“ஒருநாள் விடிஞ்சு கொஞ்ச நேரம் ஸீரோ வாட்ஸ் பல்ப ஆஃப் பண்ணாம விட்டதுக்கு என்ன குதிகுதிச்சிங்க?”

“…..”

“கேட்கறேன் இல்லை, பதில் சொல்லுங்க”

“அது அப்படி செஞ்சாதான் அடுத்த முறை மறக்காம இருப்பன்னு…” Continue reading “காதலியிடம் தோற்றல் இன்பம் – குறள்கதை”

ஊடல் இல்லையேல் கூடல் இல்லை – குறள்கதை

“ஏன்டா கல்யாணம் பன்னோம்னு இருக்கு மீனா”

“டேய் கல்யாணம் ஆகி ஒரு வருசம் கூட ஆகலை, அதுக்குள்ள என்னடா புலம்ப ஆரம்பிச்சுட்ட?”

“எப்படி நீ இத்தனை வருசம் கல்யாணம் பண்ணிட்டு இருக்க?”

சிரிப்புதான் வந்தது மீனாட்சிக்கு. தன்னை விட ஏழு வயது இளையவன், செல்லத்தம்பி. சில பிள்ளைகள் சிறுவயதில் சூட்டிகையாக இருப்பது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியாக இருக்கும். சற்று பெரியவனாக நன்கு படிப்பது பெருமையாக இருக்கும். மற்ற பிள்ளைகள் பார்க்காத கோணத்தில் விஷயங்களை அணுகுவதை பார்க்கையில் வியப்பாக இருக்கும். ஆனால் எப்படி வளர்ந்து இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு பெண்களை புரிந்துக் கொள்ள முடியாமல் தவிப்பதை பார்க்கையில் வேடிக்கையாக இருக்கும். Continue reading “ஊடல் இல்லையேல் கூடல் இல்லை – குறள்கதை”

நிலம் என்னுள் கலந்த நீர் அவள் – குறள் கதை

குழந்தை அழும் சத்தம் முதலில் கேட்கையிலேயே சேதுவிற்கு காதிற்குள் ஹாரன் அடிப்பதனை போல் இருந்தது. உலகில் சில ஓசைகளை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டிருக்கலாம். கடல் அலை, மழை பெய்யும் ஓசை, புல்லாங்குழல், மெலிதான குயில் கூவல் இப்படி பல உண்டு. சில நொடிகள் கூட கேட்க, தாங்க முடியாத ஓசைகளில் முதல் இடம் குழந்தையின் அழுகுரல் தான். அதை கேட்டுக் கொண்டு வேறு எந்த வேலையிலும் ஈடுபட முடியாது.

சேதுவிற்கு சுர்ரென்று கோபம் ஏறியது.

“ரம்யா, ரம்யா, என்ன பண்ணிட்டு இருக்க?” Continue reading “நிலம் என்னுள் கலந்த நீர் அவள் – குறள் கதை”

ஊடலின் துன்பம் கூடலுக்குதவும் – குறள்கதை

“தீபா, டேபிள் மேல வச்சுருந்த பேப்பர் எங்க?”

“எந்த பேப்பர்ங்க?”

“இன்னைத்து நியுஸ் பேப்பர்”

“அதான் படிச்சுட்டிங்களே”

“ஆமா, படிச்சுட்டேன். எங்க அது?”

“இப்பதான் எடைக்கு போட்டு பக்கெட் ஒண்ணு எடுத்தேன்”

“எடைக்கு போட்டியா? இப்பதானே வச்சுட்டு குளிக்க போனேன்” Continue reading “ஊடலின் துன்பம் கூடலுக்குதவும் – குறள்கதை”

ஊடுதல் ஆசைக்கு நன்று – குறள்கதை

“அவ கூப்டா நீ போய்டுவியா?”

“அப்படி இல்லை, எதெச்சையாதான் சேர்ந்து போனது”

“என்ன எதெச்சையா? ரெண்டு பேரும் சேர்ந்துதானே சாப்பிடுவோம், அப்புறம் ஏன் அவ கூட போன?”

“இன்னைக்கு நான் எடுத்து வரலை, அதான் நீ வரதுக்குள்ள கேண்டின்ல சாப்பாடு வாங்கிட்டு வந்துடலாம்னு போனேன்”

“வாங்கிட்டு வர வேண்டியதுதானே?”

“இல்லை, காயத்ரிதான் சீக்கிரம் சாப்பிட்ருவேன்னு கம்பெனிக்கு கூட உட்கார சொன்னா”

“அவ சொன்னா? நான் வெய்ட் பண்ணிட்டுருப்பேன்னு சொல்லிட்டு வர வேண்டியதுதானே?”

“சொன்னேன், பிளிஸ் பிளிஸ்னு கெஞ்சுனா” Continue reading “ஊடுதல் ஆசைக்கு நன்று – குறள்கதை”