கொன்றாலும் பாவம், தின்றாலும் பாவம் – குறளுரை

“பார்க்கிற வரை பார்த்துட்டு சாமியாரா போயிடலாம்னு இருக்கேன்” இப்படி யாராவது சொல்லி கேட்டு இருக்கிங்களா? ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பாக, சரியாக சொல்ல வேண்டுமெனில் இப்போது இருக்கும் அளவு குருஜீக்கள் தலையெடுப்பதற்கு முன்பு. ஏன் அப்படி கேட்கறேன் என்றால் நித்யானந்தா பிரபலமாக ஆரம்பிக்கும் போதே சாமியார்கள் எனும் இனம் மறைந்து குருஜீக்கள் எனும் இனம் பெருக ஆரம்பித்தது. சாமியார்கள் என்னும் வார்த்தையே அதிகம் தென்படுவதில்லை. சாமியார்க்கும் குருஜிக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. சாமியார் அப்படின்னு சொல்லிக் கொள்வோர்களை அவ்வளவு சீக்கிரம் நெருங்க முடியாத மாதிரி இருக்கும். உதாரணத்துக்கு சொல்றேன். Continue reading “கொன்றாலும் பாவம், தின்றாலும் பாவம் – குறளுரை”

நீர் மேலாண்மையும் வேள்வியும் – குறளுரை

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அளவுக்கு, தமிழகத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் பிரபலம் இல்லை. ‘தூள்’ சினிமாவில் “திருப்பதியில் இலட்டுக்கு பதிலாக சந்திரபாபுநாயுடு ஜிலேபி போட சொல்லி விட்டார்” என்ற நகைச்சுவைக் காட்சிக்கு பிறகுதான் சந்திரபாபு நாயுடு இங்கு பலர் மனதில் ஆழமாக பதிவானார். சந்திரசேகரராவ் குறித்து தமிழ் ஊடகங்களும் பெரிதாக புகழும்படி எழுதுவதில்லை. கடைசியாக அவரைப் பற்றிய பெரிதாக வந்த செய்தி, திருப்பதி ஏழுமலையானுக்கு ஏற்கனவே வேண்டியபடி ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கநகைகளை காணிக்கையாக செலுத்தியது தான். இதை கேட்டதும் எனக்கும் இவரை திட்டி ஒரு பதிவோ மெமியோ போடலாம் என்று தான் தோன்றியது, அதிகம் லைக் வராது என்று விட்டு விட்டேன். Continue reading “நீர் மேலாண்மையும் வேள்வியும் – குறளுரை”

அறிவு என்றால் அது அனுபவமே – குறளுரை

ஒரு சீனக் கதை. ஒரு நாட்டில் மன்னர் இறந்து விட்டதால் சிறு வயதில், ஒரு 20 வயது என வைத்துக் கொள்வோமே, இளவரசனை மன்னனாக்கி விட்டார்கள். ஒரே மகன் என்பதால் செல்லமாக வளர்க்கப்பட்டவன். தாயும் அவன் சிறு வயதாக இருக்கையில் இறந்த விட்டபடியால் மன்னன் அவனை அவன் இஷ்டத்திற்கே வளர அனுமதித்து இருந்தார். கல்விக் கூட பெரிதாய் கற்கவில்லை. மன்னனாக பொறுப்பேற்றதும் தடால் புடால் உத்தரவுதான், நாடே அரசன் என்ன புதிதாக ஏதாவது உத்தரவு போடுவானா என்று பயப்படும் அளவிற்கு இருந்தது அவன் ஆட்சி நடத்தும் விதம். அவன் மோசமானவன் எல்லாம் இல்லை. முரட்டு வாதம் செய்பவன். நாட்டில் உணவு பஞ்சம் ஏற்பட்டது. Continue reading “அறிவு என்றால் அது அனுபவமே – குறளுரை”

ஒப்பீடும் சமாதானபடுத்துதலும் – குறளுரை

எளிதாக அனைத்தையும் விரும்பத் துவங்கும் அப்பாவியான மனம் அனைவரிடத்திலும் உண்டு. அது நமக்கு சரியானதா? ஒத்து வருமா? எதுவும் யோசிக்காமல் நேசிக்க துவங்கும். உதாரணத்திற்கு சிறு வயதில் நாம் ஆசைப்பட்டது அனைத்தும் சரியானதா? கிடைக்க கூடியதா? வீட்டின் நிலைமை தெரிந்துதான் ஆசைப்பட்டோமா? மாத சம்பளக்காரர்கள் நிலை எப்படியோ, ஆனால் வியாபாரம் செய்பவர்களுக்கு தெரியும் இந்த கவலை, ஒரு பண்டிகை அல்லது விசேஷ நேரத்தில் வருவதாக இருந்த பணம் வராமல் போய் விடும். அதற்காக பண்டிகையை நம்மாள் தள்ளியா போட முடியும்? குழந்தைகள் கேட்கையில் என்னிடம் பணம் இல்லை என்று நேரடியாக சொல்ல முடியுமா? தீபாவளி என்றால் வெடி வேண்டாம், ஆபத்து என்று தவிர்க்க பார்ப்பார்கள். “தவமாய் தவமிருந்து” படத்தில் சேரன் இந்த வலியை அருமையை படமாக்கி இருப்பார். Continue reading “ஒப்பீடும் சமாதானபடுத்துதலும் – குறளுரை”

உணவு வியாபார அரசியல் – குறளுரை

வியாபாரம் செய்வது ஒரு மிகப் பெரிய கலை. அனைவராலும் செய்து விட முடியாது. மற்ற திறமைகளை போல இதுவும் தனித்திறமை தான். வீட்டிற்கு அருகில் இருக்கும் பாய் மளிகை கடைக்கு சென்று ஏதாவது பொருள் கேட்டால் உடனே எடுத்து போட்டு “வேற?” என்று அழுத்திக் கேட்பார். எத்தனை பொருள் வாங்கினாலும் அவர் கேட்கும் தொனியில் அந்த “வேற” எனும் வார்த்தையே நீண்ட நாட்களாக வாங்க நினைத்து தள்ளிப் போட்டிருந்த பொருளை வாங்க வைத்து விடும். மிரட்டல் இல்லை. அது ஒரு மாதிரியான தொனி.

ஒரு பொருளை விற்பது தனி திறமை தான். ஆனால் அனைத்தும் வியாபாரம் ஆவது சரியா? உதாரணத்திற்கு ஒரு நகைச்சுவை துணுக்கு. அதிகம் கேட்டிருப்பீர்கள். ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மேலாளர், அவர் முதலாளியிடம் அவசரமாக ஓடுவார் “சார், நாம் விற்ற வீடுகளை சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்து விட்டது. பள்ளத்தில் வீடு கட்டி கொடுத்தது நம் தவறுதான். அவர்களுக்கு நஷ்ட ஈடாக ஏதாவது தரலாம், வாருங்கள்” என சொல்ல, அதற்கந்த முதலாளி “அட முட்டாளே, வீட்டை சுற்றி வெள்ளம் என்றால் எதற்கு நஷ்ட ஈடு தர வேண்டும்? படகு வியாபாரம் செய்வோம் வா” என்பார். Continue reading “உணவு வியாபார அரசியல் – குறளுரை”

அசைவமும் உயிர்சமநிலையும் – குறளுரை

“கரிசக்காட்டு பூவே” படத்தில் நெப்பொலியன், தன் தம்பி வினித்திற்கு எப்படி சாப்பிட வேண்டும் என்று சொல்லித் தருவதற்காக அக்கம் பக்கம் இலையில் வைத்திருந்த சாப்பாடு, கறித்துண்டுகளை எடுத்து சாப்பிட்டு காட்டுவார். அதன் பின் தான் சாப்பிட துவங்குவார். உழைக்கறவங்க இப்படித்தான் சாப்பிடனும் என்பார். அதை பார்த்துக் கொண்டு இருக்கும் விவேக் நொந்து போய் “இனி இந்த குடும்பத்துக்கு ஆடு கோழி எல்லாம் பத்தாது, ஒரு எருமை மாட்டைத்தான் அடிச்சு குழம்பு வைக்கனும்” என்பார். நகைச்சுவை காட்சிதான். பார்க்கும் போதெல்லாம் சிரிக்கத்தான் செய்வேன்.

ஆனால் கொஞ்சம் யோசித்து பாருங்கள். அசைவம் சாப்பிடுவது பெரிய குற்றம் இல்லைதான். ஆனால் ஒரு குடும்பத்தில் ஒருவன் மூன்று வேளையும் இரண்டு பேர் அளவுக்கு அசைவமாக சாப்பிட்டு தள்ளினால் அக்குடும்பம் என்னாகும்? மொத்த உலகத்தை ஒரு குடும்பமாக எடுத்துக் கொண்டால் அதில் பெருந்தீனி தின்பவனாக நான் சொல்வது சீனர்களை. இன்று கூட அவர்களை குறித்து ஒரு நகைச்சுவை துணுக்கு கண்ணில் பட்டது. கடவுள் ஆதாம் , ஏவாளை சீனர்களாக படைத்திருந்தால் ஆப்பிள் பழத்தை சாப்பிட சொல்வதற்கு முன்பு அந்த பாம்பை பிடித்து வறுத்து தின்று இருப்பார்கள் என்று. சீனர்கள் பூச்சிகள், பாம்புகள் என அனைத்தியும் சாப்பிடுவதற்கு பின்பும் ஒரு காரணம் இருக்கிறது. Continue reading “அசைவமும் உயிர்சமநிலையும் – குறளுரை”

பசுவதை அவசியமா? திருக்குறள் என்ன சொல்கிறது? – குறளுரை

உத்திர பிரதேசத்துக்கு சமீபத்தில் ஒரு துறவி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுருக்கார். அவர் பெயர் யோகி ஆதித்யநாத். என்னவொரு சிறப்பு என்றால் இவரும் நம் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை போல் முதலில் முதல்வராகி, அடுத்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட போகிறவர். இவர் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்ட நாளில் இருந்து ஒரே அதிரடிதான். பணமதிப்பு நீக்கம் செய்த அடுத்த நாளில் இருந்து ரிசர்வ் வங்கி செய்தது போல் தினம் ஒரு அறிவிப்பு. அதிலும் சமீபமாக அதிகம் பேரால் விமர்சிக்க கூடிய விஷயம் பசுவதை கூடங்களை மூட சொன்னது. Continue reading “பசுவதை அவசியமா? திருக்குறள் என்ன சொல்கிறது? – குறளுரை”

அதிகாரம் எனும் ஆயுதம் – குறளுரை

இரோம் ஷர்மிளா, சமீபத்தில் முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகளோடு, இவருடைய தேர்தல் முடிவும் இந்தியா முழுக்க ஆவலுடன் எதிர்பார்க்கப் பட்ட ஒன்றாக அமைந்தது. 100 வாக்குகள் கூட பெறாமல் தோற்று போனார். அவர் கடந்த 16 வருடங்களாக போராடினாலும் சமீபமாகத்தான் அதிகம் பேரின் கவனத்தை ஈர்த்தார். அதற்கு காரணம் தனது போராட்ட முறையை உண்ணாவிரதத்தில் இருந்து தேர்தல்களமாக மாற்றியது. அந்த பிரச்சனைக்குள் போக வேண்டாம். அவர் எதை எதிர்த்து போராடினார் என்பது குறித்து பேச வேண்டி இருக்கிறது. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தினை வாபஸ் பெற வேண்டும் எனப் போராடினார். Continue reading “அதிகாரம் எனும் ஆயுதம் – குறளுரை”

முள்ளை பிடிச்சாலும் முழுசாப் பிடி – குறளுரை

“ஆண்டவன் கட்டளை” விஜய் சேதுபதி நடித்த படம். அப்படத்தில் அவர் பொய் சொல்லி இலண்டன் போக முயற்சி செய்வார். அதற்காக வீசா வேண்டி விண்ணப்பித்திருக்கையில் எதற்காக இலண்டன் போகிறீர்கள் என்ற ஒரு கேள்வி கேட்கப்படும். அங்கு சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளது, அவற்றை பார்ப்பதற்காக போகிறேன் என்று சொல்லிக் கொடுத்த பொய்யை சரியாக சொல்லுவார். ஆனால் இந்தியாவில், தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய இடங்களை எல்லாம் இன்னும் பார்க்கவில்லை என்று உண்மையை சொன்னதால் முதலில் அவற்றை பார்த்து விட்டு வாருங்கள் என்று விசா விண்ணப்பத்தை நிராகரித்து விடுவார்கள்.

நீயா நானாவில் ஒரு தலைப்பு. இணையமும் கேட்ஜெட்டுகளும் நம் நேரத்தை தின்று நம்மை அடிமை ஆக்குகிறதா என்று. ஒவ்வொருவரும் சிறப்பாக பேசினார்கள். ஒருவர் ஆளுக்கொரு பக்கம் கேட்ஜெட்களோடு ஒதுங்கி விடுவதால் வீடே அமைதியாகி விட்டது. எனக்கும் மனைவிக்கும் இப்போதெல்லாம் சண்டையே வருவதில்லை என்று பெருமை பொங்க சொன்னதெல்லாம் கடந்து, கேட்ஜெட்டுகளை ஆதரித்து பேசியவர்கள் அணியில் அராத்துவிற்கு பரிசு தந்தார்கள். அராத்து சிறப்பாக பேசியதற்காக தரவில்லை. எந்த கேட்ஜெட்டாக இருந்தாலும் இணையவசதியாக இருந்தாலும் அதில் இருக்கும் சாதகமான அம்சங்களை முழுவதுமாக தெரிந்து அனுபவித்து பார்த்ததற்காக பரிசு என்று சொல்லியே தந்தார்கள்.

மேற்சொன்ன இரண்டு விஷயங்களுக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா என்று யோசித்து பாருங்கள். Continue reading “முள்ளை பிடிச்சாலும் முழுசாப் பிடி – குறளுரை”

சம்சாரிக்கு ஓகே சந்நியாசிக்கு நாட் ஓகே -குறளுரை

ஒவ்வொரு வருடமும் தமிழக அரசு பட்ஜெட் தாக்கம் செய்கிறது, இந்த வருடமும் வரியில்லா பட்ஜெட் தாக்கல் செய்தது. ஒரு வாரத்திற்கு முன்பு பெட்ரோலுக்கான VAT வரியையும், ஒரு வாரத்திற்கு பின் மதுபானங்களின் விலையில் 5% ம் உயர்த்தியது தனிக் கணக்கு. நம் பணத்தை வைத்து அப்படி என்னதான் செய்கிறார்கள் என்று கவனிக்க நேரமில்லாமல் இருக்கிறார்கள். அசல் பட்ஜெட்டையே கண்டுகொள்ளாத மக்களா வருடாவருடம் பாமக வெளியிடும் நிழல் பட்ஜெட்டை கவனிக்க போகிறார்கள். இந்தியாவில் கடந்த ஆண்டு வரை ஒரு பழக்கம் இருந்தது. ஒட்டு மொத்த நாட்டிற்கும் ஒரு பட்ஜெட், ரயில்வே துறைக்கு தனி பட்ஜெட், இந்த வருடம் இரண்டையும் இணைத்து விட்டார்கள். கடந்த வருடம் வரை எப்படி ரயில்வே தனி பட்ஜெட் போட்டதோ, அதே போல் 2008ல் இருந்து பாமக வெளியிடும் நிழல் பட்ஜெட்டில் விவசாயத்திற்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். Continue reading “சம்சாரிக்கு ஓகே சந்நியாசிக்கு நாட் ஓகே -குறளுரை”