வசையொழிய வாழ்வார் – குறளுரை

அதிகாரம்: புகழ் குறள் எண்:240
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய
வாழ்வாரே வாழா தவர்

உரை:
தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர்; புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர். Continue reading “வசையொழிய வாழ்வார் – குறளுரை”

அதிகாரம் 022 – ஒப்புரவறிதல்

குறள்: 211/1330

குமார், நாளைக்கு ரிவ்யூ மீட்டிங்க்கு பிரசன்டேஷன் ரெடி பண்ணியாச்சா?

ஆகிட்டுருக்கு சார், முடிஞ்சுரும்

லேட்டானாலும் கொஞ்சம் சிரமம் பார்க்காம முடிச்சுட்டு போயிருங்க

கண்டிப்பா சார்

இப்படி ஒவ்வொரு அலுவலகத்திலும் ஒரு அதிகாரி தன்னுடைய வேலையை தன் கீழ் வேலை பார்ப்போர் தலையில் கட்ட, அவர்களும் பின்னாடி ஏதேனும் செய்வார் என்ற நம்பிக்கையில் உதவி செய்வதாக நினைத்துக் கொண்டு செய்வார்கள்.

இன்னும் சிலர் அதிகாரிகள் கேட்காவிடிலும் தானாக சென்று செய்து தந்து ஜால்ரா அடிப்பார்கள். அவர்களது எதிர்பார்ப்பும் மேலதிகாரியின் குட்புக்கில் இருந்தால் இன்க்ரிமென்ட், புரமோஷனுக்கு உதவும் என்பதாகத்தான் இருக்கும்.

இது போன்ற நாம் செய்யும் உதவிக்கு பதிலாக ஒரு உதவி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதற்கு பெயர்தான் கைமாறு.

இன்னார்க்கு உதவி செய்வதால் நமக்கு எந்த பயனும் இல்லை, காலத்திற்கும் அவர் திருப்பி எதுவும் செய்ய வாய்ப்பில்லை என இருந்தால், நாம் உதவி செய்வோமா? அப்படி செய்ததுண்டா?

உதவி பெற்றவன் ஏமாற்றிவிட்டான், அதற்கான பிரதிபலனே எனக்கு இனி கிட்டாது. அவற்றை சொல்லலாமா? என கேட்காதீர்கள். நீங்கள் உதவி செய்யும் பொழுதே பிரதிபலனை எதிர்பாராமல் செய்திருக்க வேண்டும்.

எனக்கு தெரிந்து இதற்கு சரியான உதாரணம் மேகங்கள் தரும் மழைதான். அவை தரும் தண்ணீர் இல்லையேல் உயிரினங்கள் வாழ வழியேயில்லை என்ற பொழுதிலும், பதிலுக்கு அவை உயிர்களிடத்தில் எதையும் எதிர்பார்ப்பதில்லை. மனிதர்களும் மற்றவர்களுக்கு உதவும் பொழுது அப்படித்தான் கைம்மாறு எதுவும் எதிர்பார்க்காமல் உதவ வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றும் கொல்லோ வுலகு

Continue reading “அதிகாரம் 022 – ஒப்புரவறிதல்”

யாக்கை பொறுத்த நிலம் – குறளுரை

அதிகாரம்: புகழ் குறள் எண்:239
வசைஇலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்

உரை:
புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும். Continue reading “யாக்கை பொறுத்த நிலம் – குறளுரை”

இசையென்னும் எச்சம் – குறளுரை

எந்த ஒரு விஷயத்துலயும் மூனு இடம் இருக்கு. பாசிட்டிவ், நெகட்டிவ், நியுட்ரல் அதாவது நடுநிலைமை. இப்போ அரசியல்னு எடுத்துக்கங்க, ஆளுங்கட்சி, எதிர்கட்சி இல்லை நடுநிலை. ஒரு கிரிக்கெட் மேட்ச்னு எடுத்துகிட்டா ரெண்டு டீம்ல ஒண்ணு இல்லை பொதுவா விளையாட்டை இரசிக்கறவங்க. எல்லா நேரத்துலயும் நடுநலைல நின்னு சமாளிக்க முடியாது. சந்தானம் காமெடி மாதிரிதான் ஒன்னு தலன்னு வை, இல்லை தளபதின்னு வை, அது என்ன தல தளபதின்னு வச்சுருக்க?ன்னு அடிவிழற இடமும் இருக்கு. Continue reading “இசையென்னும் எச்சம் – குறளுரை”

புகழ்பட வாழாதார் – குறளுரை

ஒரு விளையாட்டுல ஜெயிக்கலாம், இல்லை தோற்கலாம், வெறுமனே வேடிக்கை மட்டும் பார்க்கக்கூடாதுன்னு சொல்லுவாங்க, அதெல்லாம் முன்ன? இப்ப அதெல்லாம் ஒத்து வருமா? சொல்லுங்க, இப்ப பார்க்கறதுக்கு யாரும் இல்லைன்னா யாராவது விளையாடுவாங்களா? இப்ப கிரிக்கெட் தவிர மத்த விளையாட்டுங்க விழுந்துட்டு இருக்கறதுக்கும் முக்கிய காரணம் பார்வையாளர்கள் குறைஞ்சுட்டு இருக்கறதுதானே. அதனால நானாவது விளையாண்டேன் நீ சும்மா வேடிக்கை மட்டும் தானே பார்த்தன்னு யாரையும் சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது. Continue reading “புகழ்பட வாழாதார் – குறளுரை”

இரப்பார்க்கே ஈதல் – குறள்கதை

ஹலோ கார்த்தி

சொல்லுடா

மச்சான் கொஞ்சம் அர்ஜென்ட், அவசரமா ஒரு 3000 எனக்கு டிரான்ஸ்பர் பன்னுடா, சேலரி போட்டதும் திருப்பி கொடுத்துடறேன்

சரிடா, அனுப்பறேன்
என்று சொன்ன கார்த்திக்கிற்கு சுரத்தேயில்லை. Continue reading “இரப்பார்க்கே ஈதல் – குறள்கதை”

ஈதல் இசைபட வாழ்தல் – குறள்கதை

என்னடா, நானும் 4 நாளா பார்க்கறேன், ஆளே ஒரு மாதிரி இருக்க?

எப்படி இருக்கேன்?

தனியா உட்கார்ந்துக்கற? போனையே பார்த்துட்டுருக்க, மனசுக்குள்ள ஏதோ படம் ஓடற மாதிரி முகத்துல ரியாக்ஷனை மாத்திட்டே இருக்கியே? என்ன ஊருக்கு போனப்ப ஏதாவது சிக்கிருச்சா? இல்லை வீட்ல பார்த்து வச்சுட்டாங்களா? Continue reading “ஈதல் இசைபட வாழ்தல் – குறள்கதை”

சாதலின் இன்னாதது – குறள்கதை

“ஏங்க, என்னங்க இது? இப்பவும் கண்ணை கசக்கிட்டு இருந்தா நல்லாவா இருக்கு?”

“கண் கலங்கிருச்சா?”

“ம்”

“பெரிய தப்பு பண்ணிட்டேன்”

மாதவனால் அழுகையை அடக்க இயலவில்லை. ஆண்கள் அழக்கூடாது என காலம்காலமாக சொல்லி வளர்க்கிறார்கள். எதற்கென்று தெரியவில்லை. ஒருவேலை பெண்களிடம் இருந்து பல உரிமைகளை பறித்ததற்காக அழுகின்ற உரிமையை எடுத்துக் கொண்டார்கள் போலும். ஆனாலும் அம்மாக்களிடமும் மனைவிகளிடமும் மனம் விட்டு அழுது தங்கள் ஆற்றாமையை தீர்க்கும் ஆண்கள் நிறைந்த உலகம் இது. அவர்களைப் போல மடி தந்து தாங்கும் உறவுகளிடம் மட்டுமே தங்கள் சுமைகளை ஆண்களால் இறக்கி வைக்க இயலும்.

“இன்னும் எத்தனை நாளைக்கு இதையே சொல்லிட்டிருப்பிங்க”

“இல்லம்மா, நான் அப்பா பேச்சை கேட்டுருக்கனும், தேவையில்லாம இருக்கற பணத்தை எல்லாம் கொண்டு போய் கண்டவன் கூட வியாபாரம் பன்றேன்னு விட்டுட்டு வந்துட்டேன்”

Continue reading “சாதலின் இன்னாதது – குறள்கதை”

தாமே தமியர் உணல் – குறள்கதை

நான் கல்லூரியில் படிக்கும் பொழுது நடந்தது…

அர்ரியர்ஸ் மட்டும் நடந்து கொண்டிருந்ததால் அன்று அறையில் தனியாக இருந்தேன். என்னிடம் சுத்தமாக பணம் இல்லை.

அழுக்கு துணிகளில் தேடிய பொழுது 10ரூபாய் கிடைத்தது. இது இரவு உணவுக்கு தாங்கும். நாளை அறைத்தோழன் ஒருவன் வருவான், அவனிடம் வாங்கி கொள்ளலாம் என்று இருந்தேன். Continue reading “தாமே தமியர் உணல் – குறள்கதை”

தோன்றுக புகழொடு – குறள் கதை

கொஞ்சம் நல்லா யோசிச்சு பாருங்க, ஓரளவுக்கு விவரம் தெரிஞ்சதும் முதல்ல என்னவா ஆகனும்னு ஆசைப்பட்டோம்? எப்படியும் சுத்தி இருக்கவங்க சொல்லி சொல்லி டாக்டராகனுங்கற ஆசை வந்துருக்கும், சினிமா பார்க்க ஆரம்பிச்ச கொஞ்ச நாள்ல நடிகனாகனும்னு அதுலயும் நடிச்சா ஹீரோதான்னு ஆசைப்பட்டுருப்போம். அப்புறம் போலிஸ், இந்த மூனுல கண்டிப்பா குறைஞ்சது ஒரு விஷயத்தை ஆசைப்படாம இருந்துருக்க மாட்டோம். இதெல்லாம் சின்ன வயசு ஆசைகள், நிச்சயம் நிறைவேறி இருக்கனும்னு ஆசை இல்லை. Continue reading “தோன்றுக புகழொடு – குறள் கதை”