மசாவ்க்கு எப்படி கிடைச்சது?

ஷின்ஷேன், கசாமா, மசாவ், போ, நேனி ஐவரும் நண்பர்கள். 8 வயது பிள்ளைகள். சிறுவயதில் இருந்தே ஒன்றாக படிப்பவர்கள். என்னதான் ஒற்றுமையாக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குணாதிசியம்.
 
உதாரணத்திற்கு ஷின்ஷேன் எதையும் விளையாட்டாக எடுத்துக் கொள்பவன். கசாமாவைப் போல் ஒருவனை கட்டாயம் உங்கள் வாழ்க்கையில் பார்த்திருப்பீர்கள். வகுப்பில் முதல் வரிசையில் அமர்ந்திருப்பான். ஆசிரியர் சொல்லும் பாடங்களை சரியாக படிப்பான். வீட்டில் அனைவரும் தன்னை நல்ல பையன் என சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பான்.
 
மசாவ் பயந்த சுபாவம் உடையவன், சிறு விஷயம் கூட அழ வைத்து விடும். பெரிதாக எதற்கும் ஆசைப்பட மாட்டான். தன்னால் முடியாத எதற்கும் முயற்சிக்க மாட்டான்.
 
போ தனிப்பிறவி. எந்த நேரமும் மூக்கில் ஒழுகும் சளியுடன் சுற்றிக் கொண்டிருப்பான். மற்ற பிள்ளைகள் டீவி பார்த்துக் கொண்டும் வீடியோகேம்ஸ் விளையாடிக் கொண்டும் இருக்கையில் ஆற்றங்கரையோரமாக விதவிதமான கூழாங்கற்களை சேர்ப்பதுதான் போ விற்கு பிடித்த பொழுதுபோக்கு.
 
நேனி சராசரி பெண் குழந்தை. பொம்மைகளை வைத்து விளையாடுவாள், நண்பர்களும் பொம்மை போல் தன் விருப்பப்படிதான் விளையாட வேண்டும் என்று விரும்புவாள்.மொத்த குழுமத்துக்கும் தான் தான் தலைவி என்று தனக்குத்தானே நம்பிக் கொண்டு இருப்பவள்.
 
இது வரை ஒவ்வொருவரின் குணங்களைப் பற்றியும் பார்த்தோம். அடுத்து கதைக்கு வருவோம்.
 
ஒரு நாள் நேனி பள்ளி மைதானத்தில் உடற்பயிற்சி செய்துக் கொண்டிருக்கிறாள். அடுத்த நாள் ஏதோ மல்யுத்தம் நடப்பது போலவும் அதற்கு தயாராவது போலவும் இருக்கிறது அவள் செய்கை. மற்ற நண்பர்கள் எதற்கு என விசாரிக்கவும் மார்க்கெட்டில் புதிதாக ஒரு 3டி வீடியோகேம் வந்திருப்பதாகவும் அதை வாங்கித்தர தனது அம்மாவை நிர்பந்திக்க பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறாள்.
 
அனைவரும் ஒவ்வொருவராக தாங்கள் எப்படி தங்களது பெற்றோரிடம் தங்களுக்கு வேண்டியதை வாங்குவோம் என்று சொல்கிறார்கள். சரி என்று ஒரு முடிவுக்கு வருகிறார்கள். என்னவென்றால் ஒவ்வொருவரும் தங்களது வழியில் முயல்வது, யார் வெற்றி பெற்று அந்த 3டி வீடியோகேமை வாங்குகிறார்காளோ அவர்களது வழியை மற்றவர்களுக்கு சொல்வது, அந்த வெற்றி பெறும் வழியை மற்றவர்கள் பயன்படுத்தி அனைவரும் அந்த வீடியோகேமை வாங்குவது என முடிவெடுக்கிறார்கள்,
 
முதலில் நேனி, தன் அம்மாவுடன் மார்க்கெட்டிற்கு வருபவள், அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் வீடியோகேமை காட்டி வாங்கித் தர சொல்கிறாள். அம்மா மறுத்ததும் தரையில் படுத்து உருள்கிறாள். அவள் என்னதான் உருண்டு பிரண்டாலும் அவள் அம்மா கொஞ்சம் கூட மசிவதில்லை. இதையெல்லாம் ஒளிந்து பார்க்கும் மற்ற நண்பர்கள் தங்களால் இந்த அளவு உருண்டு புரள இயலாது, மேலும் இந்த திட்டம் ஜெயிக்கவுமில்லை என கிளம்புகிறார்கள்.
 
அடுத்து மசாவ் முறை. மசாவ்வின் வழக்கமான பாணி என்னவென்றால் வீட்டில் சொல்லும் வேலைகளை எல்லாம் தட்டாமல் செய்வது, சொல்லாவிட்டாலும் இயன்ற வரை அம்மாவிற்கு உதவியாய் இருப்பது, இதனால் மனம் மகிழும் அவன் அம்மா மாதமாதம் அவன் கேட்கும் பொம்மையை வாங்கித் தருவார். ஆனால் இந்த மாதம் ஏற்கனவே ஒரு பொம்மை வாங்கி விட்டதால் இந்த வீடியோ கேம் கிடைக்காது என்று சொல்லி விடுகிறான்.
 
போ- வை கேட்க, எனக்குத்தான் இந்த வீடியோகேமில் ஆர்வமே இல்லையே, நான் எதற்காக முயற்சி செய்ய வேண்டும் என தெளிவாக விலகி விடுகிறான்.
 
கசாமாவின் பாணி ஏற்கனவே பார்த்தது போல் கஷ்டப்பட்டு படித்து முதல் மதிப்பெண் வாங்கி அவன் பெற்றோரை மகிழ்வித்து அந்த சமயத்தில் வேண்டியதை கேட்டுப் பெற்றுக் கொள்வது. அதே போல் முதல் மதிப்பெண் பெற்ற ரிப்போர்ட்டை எடுத்துக் கொண்டு சென்று தன் அம்மாவிடம் காட்டுகிறான். அவன் அம்மா மகிழ்ந்து அவனுக்காக வாங்கி வைத்திருக்கும் பரிசை கொடுக்கிறாள். ஆம் ஏற்கனவே ஒரு பரிசை வாங்கி விட்டதால் கசாமாவால் புதிதாக ஒரு பரிசை வாங்கித்தர சொல்ல முடிவதில்லை. முயற்சி தோல்வி.
 
ஷின்ஷேன் பெரிதாக ஜம்பம் அடித்துக் கொண்டு நான் கேட்டாலே வாங்கித் தந்து விடுவார்கள் என வசனம் பேசிவிட்டு, வீட்டிற்குள் சென்று வீங்கியத் தலையுடன் வருகிறான்.
 
யாருடைய முயற்சியுமே வெற்றி பெறவில்லை. சரி வேலையை பார்ப்போம் என பிரிந்து அவரவர் வீட்டிற்கு செல்கிறார்கள். மசாவ் வழக்கம் போல அம்மா செய்து கொண்டிருக்கும் வேலைக்கு உதவுகிறான். அந்த வேலை முடிந்ததும் அம்மா அவனுக்கு பரிசாக ஒரு பொருளைத் தருகிறார்கள். ஆம், அது அவர்கள் ஆர்வமாக திட்டமிட்ட அந்த 3டி வீடியோகேம் தான். மகிழ்ச்சிதான் , இருந்தும் எதற்கு இந்த பரிசு என கேட்க, அவன் அம்மா “நீ நல்ல பிள்ளையாக அம்மாவிற்கு உதவுகிறாய், அதற்காக” என்று சொல்கிறாள்.
 
அடுத்த நாள் பள்ளியில் அனைவரும் மசாவை சுற்று போடுகிறார்கள். “உண்மையை ஒழுங்கா சொல்லப் போறியா? இல்லையா? என்ன செஞ்சு, எப்படி அடம் பிடிச்சு அந்த வீடியோகேமை வாங்குன? நாங்க இவ்வளவு செஞ்சும் கேட்டும் கிடைக்கலை, உனக்கு எப்படி வாங்கி தந்தாங்க?” அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் தெரியாததாலும், அவர்கள் சுற்றி நின்று முறைப்பதையும் பார்த்து பயந்ததாலும் மசாவ் ஓவென்று அழ துவங்குகிறான்.
 
நிற்க. உங்களால் அவர்களின் கேள்விக்கு விடை சொல்ல முடியுமா? ஏதேனும் யூகிக்க முடிகிறதா?
 
மசாவ் அழுது கொண்டிருக்கும் அதே நேரத்தில், வீட்டில் அவன் அம்மா ஆர்வமாக அந்த வீடியோகேமை விளையாடிக் கொண்டிருந்தார்.
 
இப்போது புரிந்திருக்குமே… தான் விரும்பிய ஒன்றை மகன் பெயரை சொல்லி அவனுக்காக வாங்குவது போல் வாங்கி தந்து அவன் பள்ளி சென்ற பின் அவன் அம்மா விளையாடுகிறார்.
 
என்ன ஒரு ட்விஸ்ட்? முதல்முறை இப்படி இருக்கும் என்று நான் யூகிக்கவே இல்லை. சுஜாதா அடிக்கடி சொல்வார் “இறுதியாக முடிக்கையில் சுவாரசியமாக ஏதோ ஒன்றை சொல்லாத கதைகள் எளிதாக மறக்கப்படும்” என்று. எனக்கு இந்த இறுதிக்காட்சி ட்விஸ்ட் மிகவும் பிடித்திருந்தது. 
 
https://www.youtube.com/watch?v=7n57NGRtRI0 

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் பாம்பு வளர்ப்புத் தொழில்…!!

(ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை ஒரே கோர்வையா படித்தால் மட்டும் கடைசியில் உள்ள ஆச்சரியம் புரியும்)

குறைந்த முதலீட்டில்
அதிக லாபம் தரும்
பாம்பு வளர்ப்புத்
தொழில்…!!
கரு நாகப்பாம்பு வளர்ப்பது எப்படி
கரு நாகப்பாம்பு வளர்ப்பு தொழில்
வேகமாக
வளர்ந்து வருகிறது.
பண்ணை அமைத்து சிரத்தையுடன்
தொழிலில் ஈடுபட்டால்
லாபத்தை அள்ளலாம்
என்று ஈரோடு மாவட்டம்
பெருந்துறை யில்
‘ஸ்னேக் ஃபார்ம் இந்தியா’
நடத்திவரும் பீனிக்ஸ் பாலா
கூறுகிறார் .
2004ம் ஆண்டு 5
ஜோடி கரு நாகப்பாம்புகளுட
ன் பெருந்துறையில்
பண்ணை துவங்கினேன்.
அவை முட்டையிட
துவங்கியதும்
வேறொரு பண்ணையாளரிடம்
கொடுத்து குஞ்சு பொரிக்க
செய்து, அவற்றையும்
சேர்த்து வளர்த்தேன்.
கரு நாகப்பாம்பு வளர்ப்பையே முழு நேர
தொழிலாக மேற்
கொண்டேன். தமிழகத்தில்
கரு நாகப்பாம்பு எண்ணிக்கை குறைவு.
ஒப்பந்த அடிப்படையில்
கரு நாகப்பாம்புகளை வளர்க்க
விவசாயிகளிடம்
ஆர்வத்தை உருவாக்கினேன்.
சிரமம் இல்லாத
வளர்ப்பு முறை, அதனால்
கிடைக்கும்
வருமானத்தை பார்த்து இன்று தமிழகம்
முழுவதும் ஒப்பந்த
அடிப்படையிலும்,
சொந்தமாகவும்
ஆயிரக்கணக்கானோர் இந்த
தொழிலில்
ஈடுபட்டு வருகிறார்கள்.

சந்தை வாய்ப்பு!
கரு நாகப்பாம்புகளை விற்பனையாளர்கள்
நேரடியாகவே பண்ணைக்கு வந்து வாங்கிச்
செல்கின்றனர்.
அக்கம்பக்கத்தினர்
வீட்டுத்தேவைக்கும்,
பாம்பாட்டிகளும் சர்கஸ்
காரர்களும் வந்து வாங்கிச்
செல்வர்.
விசேஷங்களுக்கும்
வாங்கிச் செல்வார்கள்.
ஓட்டல்கள்,
உணவு விடுதிகளுக்கும்
நேரடியாக ஆர்டர்
பிடித்து சப்ளை செய்யலாம்.

பயன்கள்:
மற்ற பறவை,
விலங்கி னங்களை ஒப்பிடும்போது கரு நாகப்பாம்புவில்
கழிவு குறைவு.
முட்டை, விசம், இறைச்சி,
எண்ணெய் கிடைக்கிறது.
கரு நாகப்பாம்புகளின்
இறைச்சி மற்ற
இறைச்சிகளை விட
சுவையில்
தனித்தன்மை வாய்ந்தவை.
ஆடு, மாடு போன்ற
கால்நடைகள்தான்
சிவப்பு மாமிசம்
கொடுக்கும்.
சிவப்பு மாமிசம்
கொடுக்கும் பறவை இனம்
கரு நாகப்பாம்பு.
கரு நாகப்பாம்புகளை இறைச்சிக்கு வெளிநாடுகளில்
நல்ல வரவேற்பு உள்ளது.
4 முதல் 5
கிலோ எடை கொண்ட
கரு நாகப்பாம்புகளை இறைச்சிக்காக
வெட்டும்போது 1முதல் 2
கிலோ கொழுப்பு தனியாக
கிடைக்கும்.
கொழுப்பை காய்ச்சி எண்ணெய்
எடுக்கப்படுகிறது. 5
ஜோடி கரு நாகப்பாம்புகள்
வளர்த்தால் 1/2 முதல் 3/4
லிட்டர்
கரு நாகப்பாம்பு விசம்
கிடைக்கும்.
சுத்திகரிப்பு செய்து வலி நிவாரணி,
அழகு சாதன கிரீம்கள்
தயாரிக்க
பயன்படுத்தப்படு கிறது.
ஒரு கரு நாகப்பாம்பில் 6
சதுரஅடி தோல்
கிடைக்கும்.
மிருதுவாகவும், அதிக
வலுவாகவும் இருப்பதால்
செருப்பு, கைப்பை,
பர்ஸ்கள் செய்ய
பயன்படுத்தப்படுகிறது.
ஒரு கரு நாகப்பாம்புகளை வீட்டில்
வளர்ப்பதால் செல்வம்
பெருகும்
என்பது அவர்களது நம்பிக்கை.

கட்டமைப்பு
பண்ணை தொடங்க
குறைந்தது 5
ஜோடி கரு நாகப்பாம்பு குட்டிகள்
(ரூ.7500) வேண்டும்.
4அடி நீளம், 35 அடி அகல
இடம் வேண்டும்.
இடத்தை சுற்றி 5
அடி உயரம் கம்பி வேலி,
தீவனம் மழையில்
நனையாமல் இருக்க சிறிய
ஆஸ்பெஸ்டாஸ் ஷெட்,
தீவனம் வைக்க 2 பாத்திரம்,
10
மண்பாணை (இதற்கு செலவு ரூ.5
ஆயிரம்),
முட்டைகளை பொரிக்க
வைக்க இன்குபேட்டர்
(ரூ.3 லட்சம்), சீரான மின்
சப்ளைக்கு ஜெனரேட்டர்
(ரூ.1 லட்சம்)
போன்றவை வேண்டும்.

எங்கு வாங்கலாம்?
கரு நாகப்பாம்பு குட்டிகள்
மற்றும்
தீவனங்களை தமிழகம்
முழுவதும்
மாவட்டந்தோறும் உள்ள
பாம்பு பண்ணைகளில்
பெற்றுக் கொள்ளலாம்.
இன்குபேட்டர், ஹேச்சர்
மெஷின் ஐதராபாத்தில்
கிடைக்கும்.

குஞ்சுகள் தேர்வு
கரு நாகப்பாம்பு குட்டிகளை வாங்கும்போது பார்வை,
கேட்கும் திறன் சரியாக
உள்ளதா, நன்றாக
கடிக்கிறதா என்று பார்த்து வாங்க
வேண்டும்.
வருமானம்
3 மாத வயதுள்ள 5
ஜோடி கரு நாகப்பாம்பு குட்டிகள்
வளர்த்தால் 6
மாதத்துக்குள்
3கிலோ எடையுள்ள
கரு நாகப்பாம்புகள்
கிடைக்கும். 5
ஜோடி வளர்க்கும்போது 100
முட்டைகள் கிடைக்கும்.
இதன்மூலம் தரமான
நன்றாக கடிக்கக்கூடிய
வீரியமுள்ள 60 பாம்புகள்
கிடைத்தால்
அவற்றை விற்று ரூ.4.5
லட்சம் சம்பாதிக்கலாம். 6
மாதங்களுக்குப்
பிறகு ஒவ்வொரு மாதமும்
தலா ரூ 1.5 லட்சங்கள்
சம்பாதிக்கலாம்.

அனுக வேண்டிய
முகவரி :
ஃப்ராடு பாலா,
சீட்டிங் ல்காம்ப்ளெக்ஸ்
7th முட்டுச்சந்து
சென்னை 60000018
தொலை பேசி எண் :
இனிமேல்தான் வாங்க
வேண்டும்.

# ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் யப்ப்ப்ப்ப்ப்ப்
ப்ப்ப்ப்பாஅ, இந்த மக்கள
நம்ப
வக்கிறதுக்கு எவ்வளவு கஷ்டப்பட
வேண்டியிருக்கு.

அடுத்த பதிவில் ஒட்டகம்
மற்றும் அதன்
முட்டைகளை(ஆமாம் ஒட்டக முட்டைதான்) பராமரிப்பது எப்படி என்று பார்க்கலாம் (கண்டிப்பா எங்க நிறுவனத்தில் தான் முதலீடு செய்யனும் சரியா)

உலக அழிவிலிருந்து காப்பாற்றும் கேப்டன் விஜயகாந்த்- கலக்கல் காமெடி வீடியோ

அன்பர்களுக்கு வணக்கம், ஏற்கனவே பிரதமர் மன்மோகன் சிங்கை கேப்டன் கடத்தி இருந்தால் எப்படி இருக்கும் என்று வெளியிடப் பட்ட வீடியோவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து 2012ல் உலகம் அழியும் பொழுது கேப்டன் என்ன முடிவெடுப்பார் என்பதை நகைச்சுவையாக விளக்கும் வீடியோ இது.
இதில் நம்ம தல ‘அஜித்’, சிம்பு, ரஜினிகாந்த், அப்பப்ப பருத்திவீரன் கார்த்தி வந்து கலக்கறாங்க, எவ்வளவு டென்ஷன் ஆ இருந்தாலும் இந்த வீடியோவ பார்த்தாப் போதும், எல்லாத்தையும் மறந்து சிரிப்பிங்க.

சிரிச்சு முடிச்சதும் மறக்காம கமெண்ட் போடுங்க.