குறள்: 31/1330
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு
உரை:
சிறப்பையும் செல்வத்தையும் தரும் அறத்தை விட வேறெதுவும் வேண்டாம் உயிர்க்கு.
குறள்: 32/1330
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு
உரை:
அறத்தினை விட மேன்மை தருவதறகும், அதனை மறத்தலை விட கேடு தருவதறகும் வேறெதுவுமில்லை.