North by Northwest (1959)- Hitchcock Movie – விமர்சனம்

ஹிட்ச்காக்கை பலர் பயமுறுத்தும் விதமான படங்களை எடுப்பவர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் விறுவிறுப்பான படங்களை எடுப்பவர். இப்போது போல சத்தமாக இசையமைத்தோ, கேமராவை ஆட்டியோ பயமுறுத்துவது போல் கிடையாது. விறுவிறுப்பு வேண்டுமென்றால் நல்ல கதை வேண்டும், அதை விட முக்கியம் நல்ல திரைக்கதை வேண்டும். புத்தகமாகவோ, நாடகமாகவோ வெளிவந்து வெற்றி பெற்றிருப்பினும் சரி பிடித்திருந்தால் எங்கிருந்தாலும் கதையை எடுத்துக் கொள்வார். அதே போல் தன்னை விட திரைக்கதை எழுத தெரிந்தவர்கள் கிடைக்கும் பொழுது தேவையில்லாமல் அதில் மூக்கை நுழைக்காமல் வல்லுனர்களை வைத்து திரைக்கதை எழுதிக் கொள்வார். தனது மொத்த திறமையையும் இயக்கத்தில் காட்டுவார். அதனால்தான் 50 ஆண்டுகள் தொடர்ந்து வெற்றிப் படங்களை அவரால் தர முடிந்தது. நாமும் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அவர் படங்களை பேசிக் கொண்டிருக்கிறோம். Continue reading “North by Northwest (1959)- Hitchcock Movie – விமர்சனம்”

To Catch a Thief (1955)- Hitchcock Movie – விமர்சனம்

ஹிட்ச்காக் எம்ஜியார் போல நடிக்க வரும் நாயகிகளிடம் தொடர்ந்து இரண்டு படங்களுக்கு மொத்தமாக கால்சிட் வாங்கி வைத்துக் கொள்வார் போல் தெரிகிறது. ஏன் சொல்கிறேன் என்றால் அவர் வரிசையாக எடுக்கும் படங்களில் கவனிக்கையில் அடுத்தடுத்த இரண்டு படங்களுக்கு ஒரே கதா நாயகியை பயன்படுத்தும் பழக்கம் இருப்பது தெரியவருகிறது. கதா நாயகனைப் பற்றி கேட்டீர்களேயானால் மன்னிக்கவும் அதெல்லாம் என் கண்களில் படாது. சரி படத்திற்கு வருவோம். Continue reading “To Catch a Thief (1955)- Hitchcock Movie – விமர்சனம்”

THE INTERVIEW – விமர்சனம்

நம் நாட்டில் நடப்பது ஜனநாயக ஆட்சி முறை, அதனுடைய முழு வழிமுறைகள் அதாவது யார்யாருக்கு என்னென்ன அதிகாரம் உள்ளது என்று நம் அனைவருக்கும் தெரியாது, உதாரணமாக குடியரசு தலைவராய் இருப்பவரின் கடமையும் அதிகாரமும் நமக்கு முழுமையாய் தெரிந்திராத ஒன்று. அது போல அதிபர்கள் மூலம் ஆட்சி நடக்கும் நாட்டின் அதிகார பழக்கவழக்கங்கள் மற்றும் ஆட்சி நடத்தும் வழிமுறைகளை பற்றி நமக்கு சுத்தமாய் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கிட்டத்தட்ட மன்னராட்சி போலத்தான் அதிபர்களின் அதிகாரமும் இருக்கும். அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது அதிகப்பட்சம் வம்சாவழியினரைத்தான். இங்கு ஜனநாயக ஆட்சி முறையிலேயே வாரிசுகளுக்குத்தான் முன்னுரிமை எனும் பொழுது அங்கும் அப்படித்தான் இருக்கும். சரி நாம் படத்திற்கு வருவோம். உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்கா எந்த வித அச்சமும் இன்றி இருக்கின்றதா என்றால் இல்லை, ஏனேனில் அனைத்து நாடுகளின் சொந்த விவகாரங்களிலும் தலையிட்டு சுற்றியுள்ள அனைத்து திசைகளிலும் எதிரிகள் சூழ் வாழும் நாடு. அதன் முக்கிய எதிரியாய் இருக்கும் நாடு வட கொரியா. அந்த நாட்டின் அதிபராய் இருப்பவர் கிம் யங் ஜொங், உலகின் மிக இளைய அதிபர், 33 வயதுதான். யோசித்து பாருங்கள், படித்து முடித்தவுடன் தந்தையின் தொழிலை பார்த்து கொள்ள சொன்னாலே நண்பர்களை எல்லாம் பிரிந்து ஒரு புது உலகினுள் பிரவேசித்தது போல் இருக்கும். மிகவும் இள வயதில் நாட்டின் அதிபராக்கப்பட்டால்???

நம்பிக்கைக்குரியவர் என ஒருவரையும் அருகில் வைத்து கொள்ள முடியாது. அவரைப் பற்றி பலவிதமான மூட நம்பிக்கைகள் அரசாங்கத்தால் பரப்பப்படுகின்றன. அதிபர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் கடவுளின் வம்சாவளியினராய் நம்பப்படுவதால் அதிபருக்கு வேர்க்காது, அவர் சாப்பிடும் உணவுகளின் மூலம் கிடைக்கும் சக்திகளை தவிர்த்து மீதமாகும் எச்சங்கள் உடலினுள்ளேயே எரிக்கப்பட்டு விடுவதால் அவர் உடல் கழிவுகளை வெளியேற்ற தேவையில்லை. ஆதலால் அவருக்கு உடலில் கழிவுகளை வெளியேற்றும் உறுப்புகள் படைக்கப்படவில்லை. அவர் மரணத்திற்கு அப்பாற்பட்டவர். இப்படியெல்லாம் கட்டுக்கதைகள் திரிக்கப்பட்டு மக்கள், அதிபர் சொன்னால் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு மூளைச்சலவை செய்யப் பட்டு இருக்கிறார்கள்.

எல்லாம் சரி, இப்படி உச்சப்பட்ச அதிகாரம் மற்றும் ஆளுமை கொண்ட அதிபர் ஒரு முட்டாள்தனமான வெறிப்பிடித்த மிருகமாக இருந்தால்? உதாரணத்திற்கு ஹிட்லரை நினைத்துக் கொள்ளுங்கள். அமெரிக்காவை எப்படியாவது அழிக்க வேண்டும் என்ற வெறி இந்த இளம் அதிபருக்கு இருக்கிறது. அதற்காக அணு ஏவுகனைகளை தயாரிக்க முடிவு செய்கிறது இவர் தலைமையிலான அரசு, அதற்கான நிதியை சேர்ப்பதற்காக நாட்டின் மற்ற வளர்ச்சி திட்டங்களுக்கு ஞாயமாய் ஒதுக்கப்பட வேண்டிய நிதிகள் மறுக்கப்படுகின்றன. ஆதலால் நாட்டு மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும் அவர்களுக்கு மூன்று வேளையும் சாப்பிடுமளவுக்கு உணவு பொருட்கள் கூட மறுக்கப்படுகின்றன. இதற்கெல்லாம் காரணம் அமெரிக்கா தான் என மக்கள் நம்ப வைக்கப்படுகிறார்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இன்னொரு முனையில் அமெரிக்காவில் ஸ்கைலார்க் டூநைட் என்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி மிகவும் வெற்றிக்கரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதன் சிறப்பாக கருதப்படுவது மிகவும் பிரபலமான ஒருவரை வரச்செய்து, அவரை தூண்டி விட்டு எதேனும் உளறச்செய்து பரபரப்பை உருவாக்குவது. அந்த நிகழ்ச்சியில் முக்கியமானோர் இருவர், ஒருவர் அதை தொகுத்து வழங்கும் டேவ் ஸ்கைலார்க், மற்றொருவர் அதன் இயக்குனர் ஏரோன். இந்நிலையில் வட கொரிய நாட்டு அதிபர் ஒரு பேட்டியில் தான் ஸ்கைலார்க் டூநைட் நிகழ்ச்சியின் ரசிகன் என்றும், அதை தவறாமல் பார்ப்பதாகவும் சொல்கிறார். இதை கேள்விப்பட்டதும் அவரை பேட்டி எடுக்க இந்த நிகழ்ச்சியின் குழு விண்ணப்பிக்கிறது.

அனுமதி உண்டா இல்லையா என்பதை தெரிந்து கொள்வதற்காகவே ஏரோனை ஒரு குறிப்பிட்ட லாங்டியுட் லேட்டிடியுட் புள்ளிகள் சந்திக்கும் இடத்திற்கு வர சொல்கிறார்கள், அந்த இடம் சீனாவில் இருக்கிறது. காடு, மலை எல்லாம் ஏறி அந்த இடத்தை அடைந்து அனுமதி வாங்கி வருகிறார் ஏரோன். அடுத்த நாள் அவர்களது வீட்டிற்கு CIA வருகிறது.அந்த இளம் அதிபரின் கொடுமைகளை எல்லாம் கூறி, இந்த இருவரும் பேட்டி எடுக்க சென்று விட்டு வருவதற்குள் அப்படியே அதிபரை கொல்ல வேண்டும் என்று பணிக்கிறது. ஒரு வழியாக இருவரும் ஒப்புக்கொண்டு கிளம்புகிறார்கள். அங்கு சென்று பார்த்தால் உலகம் முழுவது பரவி இருக்கும் வதந்திகளை பொய்யாக்கும் விதத்தில் நாடே சுபிட்சமாய் இருக்கிறது, மக்கள் மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள், குழந்தைகள் கொழுகொழுவென்று திரிகிறார்கள். இதை எல்லாம் பார்த்த ஸ்கைலார்க் குழம்பி கொண்டிருக்கும் வேளையில் அதிபர் கிம், ஸ்கைலார்க்குடன் மிகவும் நெருங்கி பழகுகிறார். ஏனெனில் நண்பன் என்றும் யாரும் இல்லாதவருக்கு ஸ்கைலார்க்கின் குறும்புத்தனங்கள் மிகவும் பிடித்து போகிறது. இந்த சூழ்நிலையில் கொலை செய்யும் எண்ணத்தை ஸ்கைலார்க் கைவிட ஏரோனோ தாய்நாட்டின் கட்டளையை நிறைவேற்றியே தீருவேன் என அடம் பிடிக்க விறுவிறுப்பு கூடுகிறது. இதுவரை நான் கூறியது படத்தின் 50 சதவீதம் தான்.

வேறு ஒரு நாட்டிற்கு, அதுவும் அனுமதி இல்லாமல் வேறு நாட்டு பிரஜைகள் நுழைய கூட முடியாத நாட்டிற்கு சென்று அந்த நாட்டின் அதிபரை கொல்லவது என்பது எவ்வளவு பெரிய விசயம்? அதுவும் அதிபரை எந்நேரமும் பாதுகாவலர்கள் சூழ்ந்த வண்ணம் இருப்பார்கள். மேலும் நீங்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பிலேயே இருக்கிறீர்கள் எனும் பொழுது கொலைத்திட்டம் தீட்டி செயல்படுத்துவது என்பது இரண்டு மலைகளுக்கு இடையே கயிற்றின் மேல் நடப்பதை போன்றது. மிகவும் விறுவிறுப்பாகவும் அதே நேரம் கலாட்டாவாகவும் செல்லும் படம் இது. வித்தியாசமான கதைக்களம் என்பதால் எனக்கு பிடித்திருந்தது.

இந்த படத்தை வெளியிடுவதற்கு அமெரிக்காவை பல விதங்களின் வடகொரியா தடை கோரியது. கொலம்பியா பிக்சர்சின் பல படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இணையத்தில் வட கொரியாவினால் வெளியிடப்பட்டது. அந்த நிறுவனத்தின் இணையம் முடக்கப்பட்டது. அதன் பல ரகசியங்கள் வெளியிடப்படும் என்ற மிரட்டலுக்கு பின்னர் திரையிடல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பல மாதங்கள் கழித்து குறிப்பிட்ட அரங்குகளில் மட்டும் திரையிடப்பட்டது. இந்த படத்திற்கு வந்த நெருக்கடியே இதன் விளம்பரமாக மாறியது. அதன் பின்னர் வெளியிடப்பட்ட டீவிடி மூலம் நல்ல லாபம் கிடைத்ததாக கூறுகிறார்கள்.

உதயம் NH4 விமர்சனம்

அன்பர்களுக்கு வணக்கம், ஒரு படம் பிடிக்கலைன்னா கண்டிப்பா நான் விமர்சனம் எழுத மாட்டேன். எனக்கு அந்த படத்துல பிடிச்ச விஷயங்களைத்தான் விமர்சனங்கற பேர்ல எழுதுவேன். இன்னைக்கு நாம பார்க்க போற படம் உதயம் NH4.
http://songspk3.in/images/tamil/udhayam%20NH4.jpg
தியேட்டர் மேச்சேரி KS தான், 9 மணிக்கு முடிவு பண்ணி, சாப்பிட்டு பொறுமையா டீ சர்ட், லுங்கியோட வீட்லய தண்ணிர் பாட்டில் எடுத்துகிட்டு நடந்து நண்பனோட போனேன், டிக்கெட் 40 ரூபாய் தான், என்னா கரன்ட் போனா ஜெனரேட்டர்க்கு மாத்தறப்ப 2 நிமிஷம் காத்திருக்கனும்.
உள்ளே போறப்பவே சித்தார்த் அ போஸ்டர்ல பார்த்தேன், அப்படி எதை பார்த்து சமந்தா மயங்கி இருக்கும்? படம் ஆரம்பிச்சதும் உதய நிதி ஸ்டாலின் பேர் போட்டதுக்குலாம் 4 உடன் பிறப்புகள் கைத்தட்டுனாங்க, வெற்றி மாறன் பேருக்கு நான் ஒருத்தன் தான் கை தட்டுனேன்.
http://static.ibnlive.in.com/ibnlive/pix/sitepix/03_2013/ghiyt.jpg
படம் ஆரம்பிக்கும் போதே பொன்னை தூக்கறாங்க, நாடோடிகள் போலனு பார்த்தா ஏதோ மங்கத்தா ரேஞ்சுக்கு ஒழுங்கா கேட்காத மாதிரி ப்ளான் போட்டாங்க, சரி ஏதாவது புதுசா இருக்கும்னு பார்த்தேன், பழச கழுவி சுத்தமா கொடுத்துருக்காங்க.
கடைசி எக்சாம் முடிஞ்சதும் ஹீரோயின் அ பாத்ரூம் ஜன்னல் வழியா கடத்தறத யூகிக்க முடியாத செக்யுரிட்டி கார்ட்ஸ், ஹோலி பண்டிகைல நடு ரோட்ல கலர் பூசற மாதிரி, பப்ளிக் ஆ என்கவுன்டர் பன்ற போலிஸ் வில்லன், கண்டிப்பா லவ் ஸ்டோரினு தெரிஞ்சாலும் என்ன பன்ன போறாங்கனு நிமிர்ந்து உட்கார்ந்தேன். இன்டர்வெல் வரைக்கும் குனிய விடலை, செம ஸ்பீட்.
http://static.ibnlive.in.com/pix/slideshow/04-2013/tamil-friday-siddharths/tamilcropped4.jpg
ஹீரோயின் எங்கே போயிருப்பானு விசாரிக்க ஹீரோவோட நண்பனை கூட்டி வந்து விசாரிக்கறப்ப வர்ர ஃபிளாஷ்பேக் நல்லாதான் இருக்கு, எனக்கு ஒரு சந்தேகம், கடைசி பெஞ்ச் பையனுக்கு கிளாஷ்லயே சூப்பர் ஃபிகர் மாட்டுது, காரணம் அவர் மெச்சூர்ட் ஆ முறைச்சுகிட்டே இருக்கார்னு, நாங்க ஒரு 4 பேர் 4 வருசம் அப்படிதாங்க பெஞ்ச் அ தேய்ச்சோம், மனுசங்களாவே யாரும் மதிக்கலையே???????????
 http://www.jaffaa.com/wp-content/themes/arts-culture/timthumb.php?src=http://www.jaffaa.com/wp-content/uploads/2013/03/Udhayam-NH4-Movie-Stills-Siddharth-Udhayam-NH4-Latest-Photos-Siddharth-Udhayam-NH4-Photos-Udhayam-NH4-Latest-Hot-Pics.jpg&q=90&w=630&zc=1
போலிஸ் அ முட்டாள் அ காட்டாமா, முடிஞ்ச வரைக்கும் விரட்டி விரட்டி பைக், கார், ட்ரெய்ன்னு மாறுனாலும் தேடிப் பிடிச்சு ஹீரோயின் அ ஒத்தை கைய வச்சுகிட்டே இழுத்துட்டு போற வில்லன் செம கெத். அதுலயும் நடுவுல நடுவுல பொண்டாட்டி கிட்ட போன்ல சமாளிக்கறத பார்க்கறப்ப எங்க கேங்ல புதுசா கல்யாணமான பசங்களாம் நினைவுக்கு வந்துட்டு போறானுங்க.
செகன்ட் ஆஃப் தான் தெலுங்கு வாடை, ஆணி வச்சு ஜீப் அ நிறுத்தறது, RX100 அ பத்த வச்சு வெடிக்க வைக்கறதுனு கொஞ்சம் சீன் எனக்கு பிடிக்கலைப்பா. இருந்தாலும் செகன்ட் ஆஃப்ல ஃப்ளாஷ்பேக் நல்லா இருந்தது. பப்க்கு போற பொன்னுங்களை எப்படி அடிப்பாங்கனு இப்பதாங்க பார்க்கறேன். பரவாயில்லைங்க இந்த ஹீரோயின், ஹீரோகிட்ட ஒரு பாதுகாப்பை தான் எதிர்பார்க்குதாம், அப்படினு சொல்லிகிட்டே எதுக்கு ரூம்க்கு வந்து “I WANT TO KISS YOU, TO HAVE YOU, HUG YOU” னு வேற எதுக்கோ அடி போடுது.
http://static.ibnlive.in.com/pix/slideshow/04-2013/tamil-friday-siddharths/tamilcropped3.jpg
அப்பவும் ஹீரோ நல்லவனாவே இருக்கார், எனக்கு இருக்கறதுலயே பிடிச்ச டயலாக் “கதவை தட்டிட்டு வந்துருக்கலாம் இல்லை மச்சான்” தான், சீன் அ சொல்லிட்டா சப்புன்னு போயிரும், படத்துல பாருங்க.
போலிஸ் ஃபிளாஷ்பேக் அ கேட்டுட்டு இருக்கறப்ப டக்னு ஷாக் ஆகி “எப்புடுறா?”னு கேட்கற சீன்,
அந்த கான்ஸ்டபுள் ஹை பிட்ச் ல “எஸ் சார்” சொல்றது.
அப்பா, அம்மா காச வீணாக்க கூடாதுனு ஓசி சரக்குக்கு அலையற நண்பன், ஃபைன் கட்டாம இருக்க முறை போட்டு ஒருத்தனை குடிக்க விடாம் வண்டி ஓட்ட வைக்கறதுனு ரசிக்கறதுக்கும் நிறைய சீன் இருக்கு.
வெற்றி மாறனோட முத்திரைனு சொல்லனும்னா முதல் விஷயம் எங்கேயும் போரடிக்காத மேக்கிங், தேவையில்லாத வசங்களை பயன்படுத்தாதது, சைந்தவி, G.V.பிரகாஷ்கிட்ட ஜோடியா ஒரு பாட்டை வாங்குனது, க்ளைமாக்ஸ் லிப் கிஸ்ஸிக்காக ஹிந்தி ஹீரோயின்ன புக் பன்னது, பெங்களூர் தமிழ்ல எல்லாரையும் பேச வச்சது.
மணிமாறன்கிட்ட தனி முத்திரையா இந்த படத்துல என் கண்ணுக்கு எதுவும் படலை, வெற்றிமாறன் இல்லாம நீங்க தனியா படம் பன்னாதான் உங்க அடையாளம் வெளிய தெரிய வரும்.
மொத்தமா சொல்லனும்னா படம் பெருசா போரடிக்கலை, தமிழ் ல நான்லினியர் படங்கள் கம்மி, உற்சாக படுத்துவோம், பாட்டு நல்லாருக்கு, தியேட்டருக்கு போய் பார்க்கலாம், அதுக்குனு 100 ரூபாய்க்கு மேலலாம் டிக்கெட் வாங்கி பார்க்காதிங்க.
கருத்துக்களை சொல்லிட்டு போங்கப்பா…

2 CBI ஒரே பொன்னை காதலித்தால்?-THIS MEANS WAR திரை விமர்சனம்

அன்பர்களுக்கு வணக்கம், மீண்டும் கலகலப்பான காதல் படங்களை பார்க்க நினைத்து இன்றொரு படம் பார்த்தேன், ஆனால் படம் KNIGHT & DAY போல் ஆக்சன் காமெடி, ஆனால் கதைக்களம் சூப்பர். வாங்க நேரா படத்துக்கு போலாம்.
படத்தோட ஆரம்பத்துல 2 ஏஜென்ட்ஸ் ஒரு வில்லனை பிடிக்க போறாங்க, ஆரம்பத்துலயே பிடிச்சுட்டா அப்புறம் யார் க்ளைமாக்ஸ்ல வந்து பழி வாங்குவானு அவனை விட்டுட்டு அவன் சொந்தகாரங்க எல்லாரையும் போட்டு தள்ளிடறாங்க.
இந்த 2 ஏஜென்ட்ல ஒருத்தனுக்கு 7 வயசு பையன் இருக்கான், ஆனா வீட்டுகாரம்மா கூட செட் ஆகலை, புதுசா ஒரு பொன்னை தேடி நெட்ல அலையறான். இங்கதான் நம்ம ஹீரோயின் அறிமுகம், ஹீரோயின் வேற யாருமில்லை, நம்ம THERE’S SOMETHING ABOUT MARRY படத்துல நடிச்சவங்கதான். யாருக்குதான் ஆசை வராது.
இன்னொரு ஏஜென்ட் நம்மளை மாதிரி பிரம்மச்சாரினு சொல்லிகிட்டே ஊர்ல இருக்க எல்லார்கிட்டயும் கடலை போடற பார்ட்டி. ஒரு வினோதம் பாருங்க , 2 பேரும் சொல்லி வச்ச மாதிரி 2 ஹீரோவும் ஒரே நாள்ள ஹீரோயின் கூட கடலை போட்டு மனச பறி குடுத்துடறாங்க.
அடுத்த நாள் 2 பேருக்கும் ஒரு பொன்னு பின்னாடிதான் 2 பேரும் சுத்தறோம்னு தெரிஞ்சுருது.  வழக்கம்போல டீல் வச்சுக்கறாங்க, 2 பேரும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்க கூடாது, போட்டு குடுக்க கூடாது, செக்ஸ் வச்சுக்க கூடாதுனு ஜென்டில் மேன் அக்ரிமென்ட் லாம் போட்டுக்கறாங்க.
ஆனா கையில பவர் இருக்கறப்ப சும்மா இருக்க முடியுமா? 2 பேரும் தங்களோட சிபிஐ புத்தியையும், டெக்னாலஜியையும் பயன்படுத்தி ரகசியமா ஹீரோயினோட ஒவ்வொரு அசைவையும் கண்காணிச்சு ஒட்டு கேட்டு தங்களுக்கு சாதகமா பயன் படுத்திக்கறாங்க.
அதே நேரத்துல அடுத்தவன் காதலையும் கெடுத்துக்கறாங்க. இப்படியே போய்ட்டு இருந்தாலும் ஹீரோயின் நம்ம பிரம்மச்சாரி பையன்கிட்ட கவுந்துருது. 2 பேருக்குள்ள எல்லாமே முடிஞ்சுருது. இதனால பொறாமைலேயே இன்னொருத்தனும் நடத்திடறான்.
இப்பதான் வில்லன் பழி வாங்க வர்ரான், சாதாரணமா போலிஸ் தான் க்ளைமாக்ஸ்ல வரும், இது போலிஸ் லவ் ஸ்டோரிங்கறதால வில்லன் க்ளைமாக்ஸ்ல வந்து சண்டை போட்டு ஹீரொங்களை சேர்த்து வச்சுட்டு ஹீரோயின்களுக்கும் புத்திய வர வச்சுட்டு யார் பெத்த் புள்ளையோ அநியாயமா செத்துடுது?
க்ளைமாக்ஸ்ல ஒரு ட்விஸ்ட் இருக்கு, அதை படம் பார்த்து தெரிஞ்சுக்கங்க. படத்துல அங்கங்க ஆக்சன் வச்சுருக்காங்க, போரடிக்காம அதை முடிச்சுடறாங்க.
படம் ஆரம்பத்துலருந்து போரடிக்காம போய்கிட்டே இருக்கு, 2 நெருங்கிய நண்பர்கள்கிடையிலே ஒரு அழகான பொன்னு வந்தா என்ன ஆகும்னு செமயா சொல்லிருக்காங்க, ரசிச்சு சிரிச்சு பார்க்க வேண்டிய படம். மிஸ் பன்னிடாதிங்க.
படத்தோட ட்ரெய்லர்
மறக்காம கமெண்ட்டும், கீழே இருக்க பட்டன்களை அழுத்தி ஓட்டை போட்டுட்டு அப்படியே முக நூல்ல பகிர்ந்துக்கங்க.

திருடன் போலிஸ் ஆ நடிச்சா? -BLUE STREAK -திரை விமர்சனம்

அன்பர்களுக்கு வணக்கம், நம்ம ஊர் சினிமால எவ்வளவோ அதிசியங்களை பார்த்துருக்கோம். ரவுடி போலிஸ் ஆவார்(அஞ்சாதே), ட்ரக் அடிக்ட் மிலிட்டரி ஆபிசர் ஆவார் (வாரணம் ஆயிரம்). கேங்ஸ்டர் கடைசில நான் ஐபிஎஸ் ஆபிசர் நு சொல்லுவார்( போக்கிரி). இவங்களாம் போலிஸ் ஆகறதை சாதாரணமா சொல்லிருப்பாங்க. ஆனா திருடன் போலிஸ் ஆகாம கொஞ்ச நாளைக்கு போலிஸ் ஆ நடிக்க வேண்டி இருந்தா? (அதான் ரஜினிக்காந்த் “அன்புக்கு நான் அடிமை” படத்துல பன்னிட்டாரேனு நீங்க கேட்கறது புரியுது).
இன்னைக்கு நாம பார்க்கப் போற படம் BLUE STREAK. படத்தோட ஹீரோ நம்ம பேட் பாய்ஸ் படத்துல வருவாரே மார்ட்டின் அவர்தான். கதைப்படி அவர் ஒரு திருடன், இவருக்கு இந்த ரோல்தான் நல்லா சூட் ஆகுது.


 படத்தோட ஆரம்பத்துல ஒரு இடத்துல விலை மதிக்க முடியாத வைரத்த 3 பேர் சேர்ந்து திருடறாங்க, திருடனதும் அதுல ஒருத்தன் மத்தவங்களை கொன்னுட்டு தனியா அதை அடிக்க பார்க்குறான், ஆனா சன்டை முடியறதுக்குள்ள போலிஸ் வந்துருது. நம்ம ஹீரோவும் அப்ப கட்டிட்டு இருக்க ஒரு புது பில்டிங்கோட ஏர் கன்டிஷனர் பைப் ல அந்த வைரத்தை டேப் போட்டு ஒட்டி வச்சுட்டு போலிஸ்ல சரண்டர் ஆகிடறான்.
கொஞ்சம் வருசம் கழிச்சு ஜெயில்ல இருந்து வர ஹீரோ அந்த பில்டிங்க தேடிப் போய் பார்த்தா அது ஒரு போலிஸ் ஸ்டேசன். எப்படி இருக்கும்?, ஆனா அதை அப்படியே விட்டுட்டும் போக முடியாது, வைரம் கிடைச்சா லைஃப் செட்டெல்ட்.
யோசிக்கறார், நம்ம ஊரா இருந்தா உள்ள போக கறை வேட்டி கட்டலாம், அங்க வேற வழி இல்லை போலிஸ் ஆ தான் போகனும்னு திட்டம் போடறார்.
டூப்ளிகெட் ஐடி கார்ட், ட்ரான்ஸ்பர் ஆர்டர்னு ரெடி பன்னிகிட்டு ஒரு இன்ஸ்பெக்டர் ஆ அங்க போறார். ஆனா அவ்வளவு சுலபத்துல அந்த வைரத்தை எடுக்க முடியலை, போலிஸ் ஆயாச்சு, திருடனை பிடிக்கனுமே, போற இடத்துலலாம் திருட்டு மூளைய வச்சு எல்லாத்தையும் கண்டு பிடிக்கறார்.
தன்னோட திருட்டு ஃப்ரெண்ட் அ பார்க்கறப்ப அவன்கிட்ட நைஸ் ஆ பேசி, அடிச்சு பிடிக்கற மாதிரி நாடகம் ஆடறது செம. அந்த சீன் அ ரசிக்காம யாராலயும் இருக்க முடியாது. வைரத்தை எடுத்தா நேரங்கெட்டு போய் அது கஞ்சா ட்ரக்குக்கு உள்ள மாட்டிக்குது.
இப்ப வேற வழி இல்லை, அந்த கஞ்சா கேஸை யும் டீல் பன்னனும், பன்றார். இதுக்கு நடுவுல வைரத்துக்காக பழைய வில்லனும் வந்துடறான், அவனையும் சமாளிச்சு கஞ்சா க்ரூப்பையும் சமாளிச்சு, போலிஸ் டிபார்ட்மென்ட்டுக்குள்ள சண்டைய மூட்டி விட்டு எப்படி வைரத்தோட தப்பிக்கறாருங்கறதுதான் படத்தோட க்ளைமாக்ஸ்.
இந்த படத்துக்கு இந்த ஹீரோவ விட்டா வேற யாரும் செட் ஆகமாட்டாங்க. மனுசன் பின்னி பெடலெடுக்கறார். என்க்யுரி பன்றனு அக்யுஸ்ட் அ போட்டு பேயடி அடிக்கும் போது “நான் போலிஸ் இல்லை பொறுக்கி”னு பஞ்ச் பஞ்சா விட்டு பட்டைய கிளப்பறார். 
படம் செம ஆக்சன் காமெடி படம், படத்துல ஒவ்வொரு இடத்துலயும் வைரத்தை எடுக்க விடாம பிரச்சனை வரப்ப போலிஸ் ஆ நடிக்கற திருட்டு ஹீரோவோட ரியாக்சன் செம. எங்க போனாலும் போலிஸ் ரூல்ஸ் அ மதிக்காம, பன்னிட்டு அதுக்கு ஒரு விளக்கம் குடுக்கறது கெத்.
கண்டிப்பா படம் எல்லாருக்கும் பிடிக்கும், சிரிச்சுகிட்டே இருக்கலாம். படத்தோட ட்ரெய்லர்.
மறக்காம கமெண்ட் அ போட்டுட்டு தமிழ்10ல ஒரு ஓட்டு போட்டுருங்க.

கலக்கல் ACTION/COMEDY படம் பார்க்கனுமா?- KNIGHT AND DAY- திரை விமர்சனம்

அன்பர்களுக்கு வணக்கம், தொடர்ந்து ரொமெண்டிக் காமெடி படங்கள் மட்டும்தான் பார்க்கிறோம். சுத்தமா ஆக்சன் பக்கம் போறது இல்லைனு ஒரு படம் பார்த்தேன், என் நேரம் அதுவும் ரொமெண்டிக் காமெடிதான், கொஞ்சம் ஆக்சன் கலந்துருக்காங்க.படத்தோட பேர் “KNIGHT AND DAY”.

 

படத்துல நடிச்சவங்களாம் பெரிய ஸ்டாருங்கதான், ஹீரோ நம்ம மிஷின் இம்பாசிபுள் டாம் க்ருஸ் தான், ஹீரோயின் பேர் மனசுல நிக்க மாட்டேங்குது. ஆனா நான் அதிக படத்துல பார்த்துருக்கேன், சார்லஸ் ஏஞ்சல்ஸ் படத்துல கூட நடிச்சுருக்கு. சரி கதைக்கு வருவோம், கதைனு பெருசா எதுவும் இல்லை.
 படத்தோட ஆரம்பத்துல ஏர்போர்ட், ரகசியமா சுத்திமுத்தியும் பார்த்துட்டு ஏதோ திருட்டுத்தனம் பன்ற ஹீரோ, அவர்கிட்ட எதெச்சையா மோதி டச்சிங் டச்சிங்னு ஆரம்பிச்சு கடலை போடற ஹீரோயின், டிக்கெட் கிடைக்காம கழட்டிவிடப் படற ஹீரோயின் திரும்ப வேணும்னே ஃப்ளைட்டுக்குள்ள கொண்டு வரப் படறாங்க. அப்புறம் கடலை ஆரம்பிக்குது.
 
ஹீரோயின் ரெஸ்ட் ரூம் போற கேப்ல ஃபைட், விமானத்துல இருக்க எல்லாரையும் ஹீரோ கொன்னுடறார் பைலைட் உட்பட, அதை ஹீரொயின்கிட்ட எப்படி சொல்றதுனு கைல ஜீஸ் வச்சுகிட்டு வெய்ட் பன்றது, எதுவும் பேசாம ஹீரோயின் வந்து நச்சுன்னு கிஸ் அடிக்கறது செம சீன்.
அடுத்து ஹீரோயின் அ அவங்க வீட்ல கொண்டு போய் விட்டு யாராவது வந்து கேட்டா என்னை பத்தி சொல்லாத, அடிச்சு கூட கேட்பாங்க அப்பவும் சொல்லாதனு சொல்றார் வடிவேல் மாதிரி, என்ன காமெடினா ஹீரோயினுக்கு உண்மையிலேயே ஹீரோ யார்னு தெரியாது.
அடுத்து 2 ஆக்சன் சீனுக்கு அப்புறம் தனியா ஒரு தீவுல இருக்கும் போது ஹீரோ தான் ஒரு சீக்ரெட் ஏஜென்ட்ன்னும், ஒரு ஊருக்கே கரெண்ட் தர அளவுக்கு கெபாசிட்டி இருக்க சின்ன சைஸ் பேட்டரிக்காகத்தான் இவ்வளவு போராட்டமும்னு சொல்றார்.
 
அடுத்து கதைல நிறைய ஆக்சன், லவ் சீன் மாறி மாறி வந்துகிட்டு இருக்கு. ஒரு கட்டத்துல ஹீரோ செத்துட்டதா எல்லாரும் நினைக்கற அளவுக்கு ஒரு என்கவுன்டர் நடக்குது, அடுத்து ஹீரோவ தேடி ஹீரோயின் அலைஞ்சு அந்த பேட்டரி வில்லன் கைக்கு போய், நிறைய ஆக்சன் நடக்குது.
படம் முழுக்க எல்லா இடத்துலயும் காமெடி வச்சது பெரிய ப்ளஸ், லவ் சீனுக்குனு நீளமா வசனம் வைக்காதத பாராட்டியே ஆகனும், ஹீரோயின் தசாவதாராம் அசின் மாதிரி ஹீரோ சொல்றதை கேட்கறதே இல்லை. அது இஷ்டத்துக்கு பன்னுது. வயசானாலும் ஹீரோ ஹீரோயினுக்கு கெமிஷ்ட்ரி நல்லாதான் வேலை செய்யுது.
 
படம் நல்லாதான் எடுத்துருக்காங்க, ஏன் பெருசா ஹிட் ஆகலைனு தெரியலை. உங்களுக்கு ஏதாவது குறை தெரிஞ்சா பின்னூட்டத்துல தெரிவியுங்க.
படத்தோட ட்ரெய்லர்
மறக்காம கீழ தமிழ்10 ல ஓட்டு போட்டுருங்க.