Teacher’s Diary (2014) – விமர்சனம்

முகம் பார்க்காத காதல் கதைகள் பல வந்துவிட்டன. ஆனால் அவற்றில் நிச்சயம் ஏதேனும் ஒரு வகையில் அவர்களுக்குள் பழக்கம் இருப்பது போலத்தான் வரும். கடிதம்,தொலைபேசி,இணையம் என ஏதாவது ஒரு வகையில் பழகுவார்கள். அப்படி எதுவும் இல்லாமல் ஒருவர் தங்கி இருந்த இடத்தில் வந்து தங்கும் ஒரு பெண், கொஞ்சம் கொஞ்சமாக அவரை பற்றி அறிந்துக் கொண்டு, காதலித்துக் கொண்டே அவரை தேடும் கதையாக சார்லி இருந்தது. கிட்டத்தட்ட அதே கருவைக் கொண்டு, முற்றிலும் வேறு களத்தில் ஒருவர் விட்டுச் சென்ற உணர்ச்சிகளின் நினைவுகள் மூலம் காதலிப்பவர்களின் கதைதான் இந்த படம் “Teacher’s Diary”. உண்மையில் ஒருவர் வாழ்க்கையில் நடந்த கதையும் கூட… Continue reading “Teacher’s Diary (2014) – விமர்சனம்”

Midnight in Paris (2011) – விமர்சனம்

வாழ்க்கை மிகவும் சிக்கலானது, மனம் அதனை விட சிக்கலானது. தற்போது கையில் இருக்கும் எதனையும் மனம் முழுமையாக நேசிக்காது. தொலைவில் இருக்கும் ஒன்றினைத்தான் விரும்பும். குறிப்பாக எது சாத்தியமில்லையோ அதைத்தான் அதிகம் விரும்பும். ஒரு உதாரணத்திற்கு கேட்கிறேன். நீங்கள் வாழும் ஊர் உங்களுக்கு பிடித்திருக்கலாம். வீடு, குடும்பம், சமூகம் அனைத்தும் பிடித்திருக்கலாம். நீங்கள் வாழும் காலம் உங்களுக்கு பிடித்திருக்கிறதா? சிறுவயதில் கருப்பு வெள்ளையில் படங்களை பார்க்கும் பொழுது அந்த காலத்தில் வாழ்ந்தால் எப்படி இருக்கும் என யோசித்திருக்கிறீர்களா? இல்லையா? குறைந்த பட்சம் வரலாற்று நாவல்களை படிக்கையில் கூட ஆசைப் பட்டதில்லையா? இல்லை என்றால் உங்களுக்கு இதற்கு மேல் படிப்பதற்கு ஒன்றுமில்லை. ஆசைப்பட்டதுண்டு என்றால் தொடருங்கள். Continue reading “Midnight in Paris (2011) – விமர்சனம்”

Two Countries (2015) – விமர்சனம்

கனடாவில் புதிதாய் திருமணமான இந்திய தம்பதியினர், அவர்கள் திட்டமிடாமலேயே அவர்களது முதல் இரவு தள்ளி போய்க் கொண்டிருக்கிறது. முதலில் சண்டைக்கோழியாய் முட்டிக் கொள்ளும் இருவரும் கொஞ்சம் கொஞ்சமாய் ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்ள துவங்குகிறார்கள். தங்களுக்குள் தோன்றிய காதலை இரகசியமாகவே வைத்துக் கொள்கிறார்கள். ஒருநாள் இருவரும் மது அருந்துகிறார்கள். அன்று அவர்களை மீறி தாம்பத்யம் நடந்து விடுகிறது. கிட்டத்தட்ட “மாலை நேரத்து மயக்கம்” போலவே வருகிறதா? ஒரு சின்ன மாற்றம் காட்சியில். பொழுது விடிகிறது. மனைவி கண் விழிக்கையில் கணவன் ஜன்னலை ஒட்டித் திரும்பி நின்றுக் கொண்டிருக்கிறான். தனது ஆடைகள் முழுவதும் களையப் பட்டிருப்பதில் இரவு என்ன நடந்திருக்கும் என யூகித்துக் கொண்டு கணவனிடம் கேட்கிறாள். Continue reading “Two Countries (2015) – விமர்சனம்”

100 Days with Mr. Arrogant – விமர்சனம்

ஒரு படம் வந்து வெற்றி பெற்றால் அதன் பாதிப்பு தொடர்ச்சியாக வரும் அனைத்து படங்களிலும் இருக்கும். உதாரணத்திற்கு மதுரையை மையமாக வைத்து ஒரு படம் வந்து ஓடி விட்டால், தொடர்ந்து அதே பாணியில் படங்கள் எடுப்பார்கள், அதே போல் அம்மன், பேய் வகையறா படங்கள். தமிழ் சினிமாவினை போலத்தான் உலக சினிமாக்களும், கொரியனில் “My Little Bride” படம் வந்து பெரிய அளவில் வெற்றி பெற்றதும் அதன் சாயலில் பல படங்கள் வந்தன. அதில் குறிப்படத்தக்க ஒரு படம் தான் 100 Days with Mr. Arrogant. இதில் என்ன விஷேசம் என்றால் முதலில் இது ஒரு கொரியன் இணைய இதழில் தொடராக வெளிவந்த கதை, இரசிகர்களிடையே பெரிய வரவேற்பு இருந்ததும் படமாக எடுக்கப்பட்டு வெளிவந்தது. Continue reading “100 Days with Mr. Arrogant – விமர்சனம்”

Charlie (2015 Malayalam film) – விமர்சனம்

நான் கோவையில் வேலைக்கு சேர்ந்த புதிதில் எனக்கென ஒரு கேபின் ஒதுக்கினார்கள், அதில் நான் வருவதற்கு முன்பாக செந்தில் என்று ஒருவர் இருந்திருக்கிறார். அவரை குறித்து எனக்கு அதிகம் பரிட்சியமில்லை. ஆனால் நாள் போக போக, உடன் வேலைப் பார்ப்பவர்களும், மாணவர்களும் அதிகம் எனது செயல்கள் செந்திலைப் போலவே இருப்பதாக கூறினார்கள். எனக்குள் யார் அது? என்னை போலவே? என்றொரு கேள்வியுடன் அவரைக் குறித்த செய்திகளை அதிகம் கவனத்துடன் கேட்கலானேன். பின்னர் ஒரு விழாவில் இருவரும் சந்தித்து கொண்டோம். அவருக்கும் என்னை பற்றிய தகவல்கள் “அவரை போலவே செயல்படுகிறேன்” என்பது சென்றிருக்கிறது. பின்பு நல்ல நண்பர்களானோம். எதற்கு இதனை கூறுகிறேன் என்றால் முகம் பார்க்காமல், பழகாமலேயே ஒருவர் நம் வாழ்வில் வந்து விடுவார் என்பதற்கு என் வாழ்வில் நிகழ்ந்த ஒரு உதாரணத்தை சொல்கிறேன், அவ்வளவுதான். இதனை முகம் பார்க்காமல் காதலிப்பதோடு குழப்பிக் கொள்ளக் கூடாது, அதில் முகம் பார்க்கவில்லை என்றாலும் கடிதத்திலோ, தொலைபேசியிலோ, இணையம் வாயிலாகவோ இருவரும் பழகிக் கொள்கிறார்கள். ஒருவருடன் எந்த விதத்திலும் பழகாமல், அவர் நம் வாழ்க்கையில் நுழைந்தால் எப்படி இருக்கும்? Continue reading “Charlie (2015 Malayalam film) – விமர்சனம்”

Love in Magic (2005) – விமர்சனம்

சில ஆண்களை பார்த்திருப்பீர்கள், அவர்களுக்கு பெண்கள் என்றால் மிகவும் பிடிக்கும், அதிலும் வெறுமனே இரசிப்பதோடு நில்லாமல் படுக்கைக்கு கொண்டு செல்ல விரும்புவார்கள். அதற்காக தேவைப்பட்டால் காதல் என்ற ஒன்றையும் உபயோகிக்க தயங்க மாட்டார்கள், காரியம் முடிந்து, சலித்த பின்னர், அப்பெண்ணை விடுத்து அடுத்த பெண்ணை நோக்கி சென்று விடுவார்கள். இது போன்ற ஆண்களை ப்ளேபாய் என்று சொல்வதுண்டு. இதே போல பெண்களும் இருக்கிறார்கள். ஆனால் பெண்கள் அனைவருக்கும் தனியே இரசிகர்கள் இருப்பதால் தனியாக யாரையும் சொல்வதில்லை. இந்த வகை ஆண்கள் அனைவரும் திட்டமிட்டு பெண்களை மயக்கி, ஏமாற்றி கூட்டிச் சென்று வெட்டி தின்பவர்கள் அல்ல. அவர்களுக்கு விதவிதமான பெண்களுடன் பழகுவது பிடிக்கும், அது தவறான ஒன்றாக நினைக்க மாட்டார்கள்.

நமது நாட்டில் இருக்கும் கற்பு என்னும் ஒரு கலாச்சாரம் இதனை தவறு என சொல்கிறது. உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் இந்த கலாச்சாரத்தினால் பெண்களுக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது, அடிமைத்தனம் தான் மிஞ்சும், இதைக் குறித்து வேறு பதிவில் விரிவாக பேசுவோம். இப்படி யோசியுங்கள், இப்பொழுது நம் நாட்டில் எப்படி திருமணத்திற்கு எத்தனை பேருடன் சுற்றினாலும் பெரிய பிரச்சனை இல்லை எனும் நிலைக்கு முன்னேறி இருக்கிறோமோ, அதே போல் எத்தனை பேருடன் உறவு கொண்டிருந்தாலும் பிரச்சனை இல்லை என்ற நிலை வந்தால் மேற்சொன்ன ப்ளேபாய் ஆண்கள் என்ன செய்வார்கள்? அவரவர்கள் திருமணத்தை குறித்து கவலைப்படும் வரை, கண்ணில் படுவோரை கவிழ்ப்பார்கள். இத்தகைய ஆண்களுக்கு காதல் வந்தால் எப்படி இருக்கும்? எளிதாக ஒரு பெண்ணுடன் படுக்கை வரை இணைய வாய்ப்பு கிடைப்பவனுக்கு எந்த சூழலில் காதல் வரும்? யூகிக்க முடிகிறதா? அப்படியான ஒரு கதைக்களம் தான் Love in Magic. Continue reading “Love in Magic (2005) – விமர்சனம்”

Everybody Has Secrets (2004) – விமர்சனம்

“ஒரு செடியில் ஒரு பூ உதிர்ந்தாலும் இன்னொரு பூ பூக்கும், ஆனால் உதிர்ந்த பூ மறுபடியும் ஒட்டாது. சிலருக்கும் காதல் பூ போல, சிலருக்கு காதல் செடி போல” பூவே உனக்காக படத்தில் வரும் பிரபலமான வசனம், அதன் தொடர்ச்சியாக ஒன்றை சேர்த்துக் கொள்ளலாம். “செடிகளில் ஒரே நேரத்தில் பல பூ பூக்கும்”, இப்போதைய இணைய யுகத்தில் பலருக்கு காதல் இப்படித்தான். முதலில் வாழ்வில் காதல் வந்தால் ஒருவர் மீதுதான் ஒரு முறைதான் வரும் என்றார்கள், பின்னர் ஒருவர் போனால் இன்னொருவரை காதலிக்கலாம் என்றார்கள், இப்போது ஒரே நேரத்தில் எத்தனை பேரை வேண்டுமானாலும் காதலித்துக் கொள்ளலாம், அது அவரவர் திறமையை பொருத்தது என்கிறார்கள்.

சுற்றிலும் யாரும் இல்லை, நீங்கள் மட்டும் தான் இதை படித்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்களே உங்களை மதிப்பிடுங்கள், எத்தனை சதவீதம் உங்கள் காதலி/லனுக்கோ, வாழ்க்கை துணைக்கோ நேர்மையாக இருக்கிறீர்கள். நான் வெறுமனே அழகாய் இருந்தால் பார்ப்பேன் என்கிறீர்களா? சரி, ஏன் பார்க்கீறீர்கள்? பிடித்திருப்பதால் தானே? ஒருவேளை உங்களுக்கு பிடித்த அந்த பெண்ணை(அ)ஆணை உங்களால் கவர முடியும் என்றாலும் வேண்டாம் என்று விலகி இருப்பீர்களா? அய்யோ என் வாழ்க்கை துணைக்கு தெரிந்தால் அவ்வளவு தான் என பதறுகிறீர்களா? சரி இப்படி ஒரு வாய்ப்பு தரப்படுகிறது என வைத்துக் கொள்வோம், நீங்கள் என்ன தவறு செய்தாலும் உங்கள் துணைக்கு தெரியப் போவதுமில்லை, தெரிந்தாலும் கோபப்படமாட்டார் என்று இருந்தால் என்ன செய்வீர்கள்? Continue reading “Everybody Has Secrets (2004) – விமர்சனம்”

My Sassy Girl (2001) – விமர்சனம்

என் வாழ்க்கையில் இப்படி எல்லாம் நடக்கும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை, ஒரு பெண் வந்த பின் இவ்வளவு மாறுமா? அவளை சந்தித்த 3 நாட்களில் 2 இரவு அவளுடன் தங்கி விட்டேன், 2 முறை சிறையிலும் தங்கி விட்டேன், இன்பத்தையும் தருகிறாள், துன்பத்தையும் தருகிறாள்.

முதல் நாள் அம்மா கூறியது போல் ஒழுங்காக கிளம்பி சித்தி வீட்டிற்கு சென்றிருக்க வேண்டும். கிளம்பித்தான் சென்றேன். இரயில் நிலையத்தில் தான் அவளை பார்த்தேன். பார்த்ததுமே எனக்கு பிடித்திருந்தது. கொஞ்சம் நகர்ந்தால் தண்டவாளத்தில் விழுவது போல் நின்றிருந்தாள். நான்தான் நகர்த்தி விட்டேன். அப்பொழுது தான் அவள் குடித்திருந்தது தெரிந்தது. குடிப்பழக்கம் தவறென சொல்ல மாட்டேன், எனக்கும் உண்டு, ஆனால் ஒரு பெண், குடித்து விட்டு தனியாக வருவது என்னை பொருத்த வரையில் வித்தியாசமாக இருந்தது. Continue reading “My Sassy Girl (2001) – விமர்சனம்”

My Little Bride (2004) – விமர்சனம்

மனிதர்களில் பலருக்குள் பல விஷயங்கள் ஒரே மாதிரி இருக்க வாய்ப்புண்டு, ஒரே உருவம், ஒரே படிப்பு, ஒரே வேலை என பல விஷயங்களில் ஒரே மாதிரி இருக்கும் வாழ்க்கையில் ஒரு விஷயம் மட்டும் தனித்துவமாக இருக்கும். திருமண வாழ்க்கை. இந்த விஷயத்தில் மட்டும் அனைவரும் வேறுபடுவர். பெண் பார்ப்பதில் துவங்கி, திருமணம் முடிந்து, குழந்தகள் வரும் வரை நடப்பதை வைத்தே பல கதைகள் எழுதலாம், அவ்வளவு சுவாரசியங்கள் இருக்கும். பின் இல்லாமலா? ஆண்-பெண் உறவை விட மனித வாழ்வில் வேறென்ன பெரிதாய் சுவாரசியம் தரும் விஷயம் இருக்க கூடும்?

விவரம் தெரிந்த பின், அனைவருக்குமே தங்களது திருமணங்களை குறித்த ஆசைகளும் கற்பனைகளும் பூக்க துவங்கும். ஆனால் நாம் நினைத்தது போலவே நிகழ்ந்து விட்டால் என்ன வாழ்க்கை? அதிலென்ன சுவாரசியம்? நாம் எதிர்பார்க்காத இடத்திலிருந்து வரும் துணைதான் நம் வாழ்க்கையை விறுவிறுப்பாக்குபவர். சிலருக்கு திருமணம் மிகவும் எதிர்பார்க்காத வண்ணம் நிகழும். பக்கத்து வீட்டிலேயே இருந்து கூட சம்பந்தம் அமையும், உடன் படித்தவர்களுடன் வீட்டில் பார்த்து வைக்கப்பட்டும் நிகழும். நண்பர்களின் திருமணக்கதைகள்தான் எவ்வளவு சுவாரசியமானவை. எதிர்பார்க்காத கணத்தில் நிகழும் திருமணமும் சுவாரசியம் தான். Continue reading “My Little Bride (2004) – விமர்சனம்”

காதலும் கடந்து போகும் – விமர்சனம்

காதல் கடக்காத வாழ்வு அமைந்திருந்தால் நீங்கள் துரதிர்ஷ்டசாலிகளே. ஒருதலையாகவாவது காதல் உங்களை கடக்கும். காதல் என்றால் திரைப்படங்களில் வருவது போல் கண்டதும் ஒருவருக்கு காதல் பொங்கி, மற்றவரிடம் வரவழைப்பதற்காக போராடுவதை சொல்லவில்லை. இயல்பாக நம் வாழ்வில் ஒருவர் மீது நமக்கே தெரியாமல் வருவது. இருவருக்குமே அது போல் இயல்பாய் காதல் வந்தால் எப்படி இருக்கும்?

இருவருமே சமமாக, அதாவது படிப்பில், அழகில், அந்தஸ்தில் சமமாக இருக்கும் பொழுது வருவதில் சுவாரசியம் என்ன இருந்துவிட போகிறது? ஏற்றத்தாழ்வு இருக்கும் இருவரிடையே வரும் காதலில் தான் சுவாரசியம், மீண்டும் சொல்கிறேன், கண்டதும் வரும் காதலில் என்ன சுவாரசியம்? இப்போது படத்திற்கு வருவோம்.

Continue reading “காதலும் கடந்து போகும் – விமர்சனம்”