முதல் முத்தம் – சிறுகதை

“என்னம்மா சொல்ற? ஹனிமூன் போரடிக்குதா?” உண்மையில் அதிர்ந்துவிட்டான் அருண். பின் யாரால் தான் அதிராமல் இருக்க முடியும்? திருமணமாகி ஒரு வாரம்தான் ஆகியுள்ளது. வீட்டில் பார்த்து செய்து வைத்த திருமணம் தான். தூரத்து உறவு என சொன்னார்கள். இருவருக்கும் சரியான வயது, சரியான வேலை, கைநிறைய சம்பளம், திருமண பேச்சை எடுத்து 2 மாதங்களுக்குள் தாலியே கட்டி முடிந்தாகி விட்டது. அவ்வளவு விரைவாக அனைத்தும் முடிந்திருந்தது. பார்த்த முதல் பெண்ணே அமையும் கொடுப்பினை அனைவருக்கும் அமையாது. அருணுக்கு அமைந்தது. உண்மையில் அருணுக்கு ஸ்ரீமதியிடம் பிடித்தது அவளது குழந்தைத்தனமான முகம் தான். பெண் பார்த்த அடுத்த நாளே நிச்சயம், 45 நாளில் திருமணம். அதிகம் சுற்ற முடியவில்லை என்றாலும் இருவரும் இடைப்பட்ட காலத்தில் பேசிக் கொண்டு தான் இருந்தார்கள்.

திருமணம் முடிந்து தேனிலவு என்ற பேச்சு வரும் பொழுது, யாரும் ஒத்துக்கொள்ளவில்லை. அந்த கலாச்சாரம் இன்னும் அவர்கள் குடும்பத்திற்குள் நுழையாமல் இருந்தது. தனியாய் அனுப்பவும் தயங்கினார்கள். அதனால் தொலைவாக வேண்டாமென்று பக்கத்தில் சொந்தபந்தங்கள் இருக்கும் ஊரான ஊட்டிக்கு அனுப்பினார்கள். முதல் இரண்டு நாள் சுற்றவும் கொண்டாடவும் நன்றாகத்தான் போனது. மூன்றாவது நாள்தான் ஸ்ரீமதி முகம் வாடிப்போய் இருந்தது. ஏன் இப்படி இருக்க என கேட்டதற்குத்தான் இந்த பதில். ஹனிமூன் போரடிக்கிறது என்றால் அவன் எப்படி எடுத்துக் கொள்வான், பாவம்.

Image result for pizza film

Continue reading “முதல் முத்தம் – சிறுகதை”

ஈதல் இசைபட வாழ்தல் – குறள்கதை

என்னடா, நானும் 4 நாளா பார்க்கறேன், ஆளே ஒரு மாதிரி இருக்க?

எப்படி இருக்கேன்?

தனியா உட்கார்ந்துக்கற? போனையே பார்த்துட்டுருக்க, மனசுக்குள்ள ஏதோ படம் ஓடற மாதிரி முகத்துல ரியாக்ஷனை மாத்திட்டே இருக்கியே? என்ன ஊருக்கு போனப்ப ஏதாவது சிக்கிருச்சா? இல்லை வீட்ல பார்த்து வச்சுட்டாங்களா? Continue reading “ஈதல் இசைபட வாழ்தல் – குறள்கதை”

புலியூர் முருகேசர்கள்

எழுத்தாளர்கள் தாக்கப்பட்டதாக செய்தி கேளவிப்பட்டால் அனைவரும் முதலில் கேட்பது “அப்படி என்ன எழுதுனார்?” என்றுதான், செய்தியை கேட்டவுடனே “அய்யய்யோ ஏங்க அது எப்படிங்க ஒரு எழுத்தாளரை போய் தாக்கலாம்?” என்று கேட்பவர்கள் மிக குறைவு.

ஏன் என்றால் எழுத்தாளர்கள் என்றால் ஒன்றும் பெரிய தேவதூதர்கள் பிம்பமெல்லாம் இந்தியாவில் கிடையாது, குறிப்பாக தமிழ்நாட்டில் முதல் மரியாதை நடிகர்களுக்குத்தான், அடுத்தது அரசியல்வாதிகளுக்கு, அடுத்தது தான் (பிரபல) எழுத்தாளர்களுக்கு… இவர்களுக்கெல்லாம் அடுத்த படிதான் சமூகத்திற்காக பணியாற்றுபவர்கள்.

இந்த நிலைமையில் எழுத்தாளர்கள் யாராயிருப்பினும் நேரடியாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தை எதிர்ப்பது முழு வேகத்தில் வாகனத்தோடு போய் சுவற்றில் முட்டுவதற்கு சமம், உடனே இது இந்தியா, எல்லோருக்கும் எழுத்துரிமை உண்டு என்று பொங்க வேண்டாம்…

எழுதுங்கள், சமூகத்தில் நடக்கும் அனைத்து அவலங்களுக்கும் எதிராய் எழுதுங்கள், வாசிக்கும் அனைவரும் ஆதரவளிக்கிறோம். ஆனால் ஒருவர் மீது குற்றம் சுமத்துவதற்கு அவரது சமூகத்தினுடைய அடையாளத்தை சொல்லியே ஆக வேண்டும் என்று அவசியமில்லையே??? 

இல்லை நான் யார் குற்றம் இழைத்தாலும் எதிர்வினையாற்றுவேன் என்றால் தினசரி நாளிதழ்களில் எழுதுங்கள், அதிலேயும் குறிப்பிட்ட சமூகத்தை பற்றி மட்டும்தான் எழுதுவேன் என்றால் எந்த வாசிப்பாளனும் ஆதரவு தெரிவிப்பதென்ன, உங்கள் எழுத்துக்களை வாசிக்க கூட மாட்டான் .

ஒரு வாசிப்பாளனாக எனது நிலைப்பாட்டை கூறிவிட்டேன், அடுத்து புலியூர் முருகேசன் எழுதிய சர்ச்சைக்குரிய கதையை படித்தேன், அவரிடம் கேட்க விரும்பிய கேள்விகள்

“பெருமாள் முருகன் பிரச்சனையே இன்னும் ஓயாத இந்த காலகட்டத்தில் என்ன அவசரம் இந்த கதைக்கு?”

“இந்த கதையின் மூலம் நீங்கள் சொல்ல வரும் கருத்து என்ன? வன்புணர்சசிகள் குறித்தான எதிர்வினைதான் உங்கள் கருப்பொருள் என்றால் அதற்கு அந்த சமூகத்தை குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டுமா?”

இது புனைவா? இல்லை நீங்கள் கண்ட கதையா? புனைவென்றால் நீங்கள் எழுதிருக்க வேண்டிய பத்திரிக்கையின் நிறம் மஞ்சள், கண்ட நிகழ்வென்றால் உங்கள் கரு இது போல் யாரும் செய்ய கூடாது என்பதை கூறியிருக்க வேண்டும், மாறாக இந்த் சமூகத்தினர் இப்படித்தான் இருக்கிறார்கள் என அனைவருக்கும் வெளிச்சம் போட்ட காட்டத்தான் முனைந்திருக்கிறிர்கள்.

உதாரணத்திற்கு பெண் பார்க்கும் நிகழ்வினை விவரிக்கும் இடத்தில் கூட அந்த சமூகத்தினர் பணத்தாசை பிடித்தவர்கள் என் ஏன் மொத்தமாக குறிப்பிட்டுள்ளீர்கள்?

மொத்தமாக சொல்ல வேண்டுமென்றால் உங்களிடம் வனமுறையை பிரயோகித்தது குற்றம்தான், ஆனால் வன்முறையை தூண்டும் விதமாக நீங்கள் எழுதியது பெருங்குற்றம்.

கற்பின் எல்லை

“அதெப்படிடா? அவனுக்கு கல்யாணம் ஆகி 2 குழந்தைங்க இருக்குன்னு தெரிஞ்சும் இந்த பொண்ணு அவன் கூட சுத்துது? தப்பில்லையா?”

நீண்ட நாட்கள் கழித்து தோழி ஒருத்தியுடன் பேசுகையில் இந்த கேள்வியை முன்வைத்தாள், நம்முடன் பழக்கமான மருத்துவத்துறையில் இருக்கும் நபர்களை சந்திக்கையில் பணத்தையும் நேரத்தையும் மிச்சம் பிடிக்க அவர்களிடம் நம் உடல்ரீதியான பிரச்சனைகளை கூறி அதற்கான ஆலோசனைகளை இலவசமாக பெற்றுக்கொள்வோம், அது போல என்னை சந்தித்து உரையாடுகையில் முக்கால்வாசி நண்பர்கள் கற்பு/காதல்/கள்ளக்காதல் குறித்த சந்தேகத்தையே முன்வைக்கிறார்கள்,

உண்மையில் சமூகத்தில் சாப்பாடு பிரச்சனை தீர்ந்த சாரருக்கு அடுத்த பிரச்சனையாய் முன் நிற்பது குடும்பத்தில் உள்ள பெண்களின் நடத்தை, கந்துவட்டி செய்பவனின் கவுரவமும் அவன் குடும்பத்து பெண்களின் நடத்தையில் தான் இருக்கிறது என நம்பும் சமுதாயம்…

இதை பற்றி பேசினால் ஆணாதிக்க பெண்ணாதிக்க குப்பைகளை கிளற வேண்டும், என் தோழி கூறிய நபருக்கு திருமணமாகி 7 வருடங்களாகிறது, 2 குழந்தைகள், நல்லபடியாக போன குடும்பவாழ்க்கைக்கு குறுக்கே அவருடன் பணிபுரியும் பெண் வந்தாள், அவரைப்பற்றி எல்லாம் தெரிந்தும் காதலிப்பதாக கூறி 3 மாதம் வற்புறுத்தி இப்போது இருவரும் ஜோடியாக உலாவுகின்றனர், இடையில் எல்லாம் முடிந்திருக்கும் என்பது எல்லாருடைய அனுமானம், அவர்களுடைய எதிர்கால திட்டம் பற்றி அவர்களை விட மற்றவர்கள் அதிகமாக சிந்திக்கின்றனர்.

என் தோழியின் கேள்வி “இது தப்பா? இல்லையா?” என்பதுதான்.அவளுக்கு ஒரு குட்டிக்கதை ஒன்று சொல்ல துவங்கினேன், முன்பொரு காலத்தில் ஜமதக்னி என்றொரு முனிவர் இருந்தார், அவர் மனைவி தர்மபத்தினி, தினமும் ஆற்றோரமாய் இருக்கும் மணலில் பானை செய்து ஆற்றில் நீர் எடுத்து வருவார், பத்தினி என்பதால் மண்பானை பாறையில் விழுந்தாலும் உடையாதவாறு உறுதியுடன் இருக்கும்.

ஒரு நாள் மண்பானை செய்து ஆற்றில் நீர் எடுக்கையில் மேல புஷ்பக விமானத்தில் பறந்து சென்ற 6pack கந்தர்வனை ஒரு கணம் பார்த்து மையல் கொள்கிறாள், அடுத்த கணமே உறுதியான மண்பானை ஆற்று நீரில் கரைந்து விடுகிறது, பதறிய தர்மபத்தினி கணவர் ஜமதக்னியிடம் வந்து விஷயத்தை அரைகுறையாய் சொல்ல, அவர் ஞானதிருஷ்டியில் நடந்ததை அறிந்து
“அடி சண்டாள சிறுக்கி, எப்பொழுது நீ கணவனை தவிர்த்து அடுத்த ஆண்மகனை ரசித்தாயோ அப்பொழுதே உன் கற்பு போய்விட்டது” எனக்கூறி அவர் மகன் பரசுராமரை கூப்பிட்டு தாயின் தலையை வெட்ட சொல்லிடுகிறார்.(தொடரும்)

இந்த கதையை கூறிவிட்டு அந்த காலத்தில் பெண்கள் வேற ஆண்களை பாரப்பதையே கற்புநெறி தவறுதல்னு சொன்னாங்க, நம்ம காலத்துல இதுமாதிரி சைட்டடிக்க கூடாதுன்னு பெண்கள்கிட்ட சொல்ல முடியுமா? அடுத்த வர தலைமுறை அவங்களுக்கான கற்போட எல்லையா குழந்தை பெத்துக்கறதை கூட சொல்லலாம். அதை தீர்மானிக்கற உரிமையை அவங்க கைகளில் கொடுத்து பல நாட்களாகி விட்டது.

என் தோழியிடம் இறுதியாக நான் சொன்னது “அவளை பொன்ற பெண்களால் கவர முடியாதவாறு உண் கணவரை பார்த்துக் கொள், அது மட்டும் தான் உன்னால் செய்யக்கூடிய கூடியது, அதற்கு மட்டும் தான் உனக்கு உரிமை உள்ளது”

நம்மால் வேறு என்ன செய்ய முடியும்?

சிம்புவின் CHENNAI ANTHEM

அன்பர்களுக்கு வணக்கம், ஏற்கனவே தனுஷின் கொலைவெறி வந்து ஹிட் ஆன காலகட்டத்தில் காதலுக்கென்று LOVE ANTHEM வெளியிட்டு தன் பக்கம் மக்களை திரும்ப செய்தவர் நடிகர் சிம்பு,

ஏற்கனவே இவரை பற்றிய கிசுகிசுக்களுக்கு பஞ்சமில்லை, தற்போது சத்தமில்லாமல் சென்னைக்கென “வந்தாரை வாழ வைக்கும் ஊரு” என ஆரம்பிக்கும் CHENNAI ANTHEM ஐ சத்தமில்லாமல் வெளியிட்டுள்ளார்.

அந்த பாடலை பார்க்க

பதிவு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

நண்பர்களுக்கு SMS இலவசமாக அனுப்பவும், இலவசமாக RECHARGE செய்யவும் புதிய இனைதளம்

வணக்கம் நண்பர்களே. என்னடா சினிமா விமர்சங்கள் தந்து கொண்டு இருக்கும் போது என்ன இது! என்று நினைக்கலாம். எல்லாம் ஒரு
மாற்றம் தான் சும்மா! இந்த பதிவானது உங்களுக்கு இலவசமாக மொபைல் ரிசார்ஜ் செய்ய உதவும் ஒரு நம்பகமான தளத்தை பற்றியது. இந்த தளத்தில் நமக்கு பல வசதிகளை இலவசமாக தந்துள்ளர்கள். உதாரணமாக சொல்ல போனால் நீங்கள் way 2 sms பயன்படுத்திக் கொண்டிருப்பிர்கள். அதை போலவே இந்த தளமும் உள்ளது. மற்றும் Amulyam என்ற தளத்தையும் பயன்படுத்தி இருப்பீர்கள். இந்த தளம் முதலில் ஓன்றை சொல்லி பின்பு செய்வதில்லை. ஆனால் நான் சொல்லும் தளம் மிக நம்பகமானது. நாம் இந்த தளத்துக்கு எந்த வேலையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் இணைந்தவுடன் உங்கள் கணக்கில் 2 இணைந்து விடும். நீங்கள் மற்றவரை இணைத்து விட்டால் உங்களுக்கு கமிசனாக 1 ருபாய் கிடைக்கும்.நீங்கள் நண்பர்களை இணைக்க எளிய வழிகள் உள்ளது. என்னிடம் பிளாக உள்ளதால் பதிவிட்டுள்ளேன். ஆனால் உங்களிடம் பிளாக் இல்லை என்றாலும் எளிதாக சம்பாரிக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் facebook , twitter, google+ போன்ற சமுக வலை தளங்களில் உங்களிம் ரெப்ரல் லிங்கை கொடுக்கும் போழுது அதன் மூலம் கண்டிப்பாக நீங்கள் சம்பாரிக்க முடியும். இதனை முயன்று பார்தால் நமக்கு நட்டம் இல்லை. இவர்களின் தளத்தில் தனியாக இணைய முடியாது. கண்டிப்பாக ரெப்ரல் தேவை. இந்த தளமானது ஆரம்பிக்க பட்டு சில மாதங்கள் தான் ஆகின்றது. இந்த தளத்தை அவர்கள் விளம்பர படுத்தவும் மற்றும் வாடிக்கையாளரை கவரவும் தான் அதிக அளவில் நமக்கு தருகின்றனர் என்று நினைக்கிறேன் இத் தளத்தில் நம்க்கு 10 ரூபாய் சேர்ந்தவுடன் இலவசமாக ரிசார்ஜ் செய்து கொள்ளலாம். எனக்கு கிடைத்தது 10 ருபாய் ஆனால் அதிஸ்டம் இருந்தால் தொகை 100 கூட மாறலாம். இப்பொழுதே இந்த தளத்தில் இணைந்து இலவச மழையில் நனைந்திடுங்கள்.

புதிய தகவல் : SMS அனுப்பினால் எவ்வளவு தருகிறார்கள் என்று சென்று பாருங்கள் அசந்து போவீர்கள்

ரீசார்ஜ் செய்ய இங்கு கிளிக் செய்யவும்http://ultoo.com/login.php?refererCode=89021E&flag=hide

கிஷோகர் IN பக்கங்கள்: மவனே தனுசு ! மாட்டினா செத்தடா

கிஷோகர் IN பக்கங்கள்: மவனே தனுசு ! மாட்டினா செத்தடா: டேய் வேணாம்டா! வலிக்கும்டா ஒரு சில ஜந்துக்கள் இருகுதுங்க இந்த உலகத்தில! ஓவர் நைட்ல புகழ்    வ ந்துட்டா போதும், தாங்க எப்பிடி இருந்தோம்…

பிரபல நடிகை- அனுஷ்கா கார் விபத்தில் படுகாயம்,

அன்பு நண்பர்களே ஒரு சோகமான செய்தி, “அருந்ததி” பட புகழ் அனுஷ்கா இன்று காலை ஹைதாராபாத்தில் சூட்டிங் முடிந்து ஏர்போர்ட்டுக்கு செல்லும் வழியில் கார் விபத்தில், கார் கவிழ்ந்து படு காயமடைந்தார்,உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டாலும் தலையில் பலத்த அடிபட்டிருக்கும் காரணத்தால் இன்னமும் அவசர சிகிச்சை பிரிவிலேயே வைக்கப் பட்டிருக்கிறார்.
அனுஷ்காவிற்கு வயது 30 ஐ தாண்டினாலும் இன்னமும் திருமணமாகதவர் என்பதும், தமிழ் மற்றும் தெலுங்கில் எண்ணற்ற ரசிகர்களை உடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நண்பர்களே சொல்வதற்கு வருத்தமாகா இருந்தாலும் அனைவருக்கும் முட்டாள் தின வாழ்த்துக்கள். ஹா ஹா ஹா.ஆயிரந்தாம் இருந்தாலும் அனுஷ்காக்கு ஒன்னுன்னா மனசு கேட்க மாட்டேங்குதுல்ல.

கோபப்படாமல் உங்கள் கருத்துக்களை பின்னுட்டமிடுங்கள்.